"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Balasana – பாலாசனம்

Balasana – பாலாசனம். உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், நோயின்றி இயங்க வேண்டுமெனில் உடலுக்கு முறையான பராமரிப்பு தேவை. உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் முறையாக அவ்வப்போது நீக்கப்பட்டாலே முழு ஆரோக்கியம் கிடைத்துவிடும்.

நம் உடலில் சேரும் கழிவுப்பொருட்கள் மற்றும் இரத்தத்தில் தேக்கமடையும் கழிவுப் பொருட்களை அவ்வப்போது நீக்கப்பட வேண்டுமெனில் எளிமையான உடற்பயிற்சிகள் உடலுக்கு அவசியம்.

அப்படியான பயிற்சிகளில் யோகாசனப் பயிற்சியே சிறந்தது எனலாம். ஏனெனில் உடலை மென்மையாக மசாஜ் செய்வதின் மூலம் உடலை துவளும் தன்மைக்கு கொண்டு வருவதால் அனைத்து உறுப்புகளுக்கும் புதிய இரத்தம் பாய்ந்து அதன் இயக்கத்தை சீராக்கி உடலை ஒரு ஆரோக்கியமான சூழ்நிலைக்கு கொண்டு செல்கிறது.

இது உடலை பிற பயிற்சிகளைப் போல் இறுகச் செய்வதில்லை. எனவே அனைத்து உறுப்புகளுக்கும் தடையில்லாமல் இரத்தம் பாய்ந்து ஆரோக்கியத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

Continue the practice for - Balasana yoga

நாம் இன்று இங்கு பார்க்கப்போவது மன அழுத்தத்தை போக்கும் ”பாலாசனம்” (Balasana) என்னும் பயிற்சியைப் பற்றித்தான். வாருங்கள் பார்க்கலாம்.

பெயர் – Balasana.

தமிழில் – பாலாசனம்.

சமஸ்கிருதம் – Balasana.

ஆங்கிலம் – Child pose.

வேறுபெயர்கள்

  • Wide Child pose.
  • Prasarita Balasana.
  • Extended Child pose.
  • Utthita Balasana.
  • Tadpole Pose.
  • Shishu Asana.

ஆசனத்தின் நிலை – Prone, Abdomen.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Forward-Bend, Stretch, Restorative.

ஒரு சிறு குழந்தை எப்படி தன் முதல் அரவணைப்பிற்காக ”அம்மா” என்னும் வார்த்தையை தேர்ந்தெடுக்கிறதோ அது போல தன் ஆரோக்கியத்திற்காகவும், மன அழுத்தத்தை போக்கிக் கொள்வதற்காகவும் இயற்கையாகவே அதன் உள்ளுணர்வின் கட்டளைக்கேற்ப அது முதலில் தேர்ந்தெடுக்கிற பயிற்சி எதுவென்றால் அது இனி நாம் பார்க்கப் போகும் பயிற்சியைத்தான்.

Continue the practice for - Balasana baby

”பாலப் பருவம்” என்றால் குழந்தைப் பருவத்தைக் குறிக்கும். குழந்தை முதலில் அமர்வதற்கு தேர்தெடுக்கும் ஒரு ஆரோக்கியமான இருக்கை முறையை நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பயின்றுகொள்ள வலியுறுத்துவதால் இதற்கு Balasana – பாலாசனம் என்று பெயர்.

பாலாசனம் என்றால் குழந்தை முதன்முதலாக எப்படி உட்காருமோ அப்படி உட்காரும் முறை என்று பொருள். இந்த ஆசனத்தை செய்வது மிக எளிது. இது மன அழுத்தத்தை நீக்கும் அற்புத ஆசனம் எனலாம்.

இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதற்கு முன்னால் ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டியது மிக மிக அவசியம். இந்த ஆசனம் வஜ்ராசனத்தில் அமர்ந்த நிலையில் பயிற்சி செய்யப்படுகிறது. எனவே, இந்த ஆசனத்தை கற்றுக்கொள்வதற்கு முன்னால் வஜ்ராசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டியது அவசியம்.

எனவே, வஜ்ராசனம் செய்வது எப்படி என்பதனை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷீவல் லிங்க் (visual link) ஐ தட்டுங்க… மொதல்ல வஜ்ராசனத்தைக் கற்றுக்கொள்ளுங்க…

>> Vajrasana – வஜ்ராசனம் <<

சரி, வஜ்ராசனத்தை கத்துக்கிட்டீங்களா?!!… இனி இந்த பாலாசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்….

இரண்டு கால்களையும் மடக்கி வஜ்ராசனத்தில் அமர்வது போல முழங்கால்கள் மீது அமரவும். அதன்பின் இரண்டு கைகளையும் முன்னோக்கி நீட்டி குழந்தைகள் படுப்பதுபோல நெற்றி தரையில் படும்படி குனியவும்.

Continue the practice for female Pose Or Balasana

மூச்சை சீராக விடவும். இதே நிலையில் 15 முதல் 20 வினாடிகள் அமரவும். பிறகு மெதுவாக நேராக நிமிர்ந்து உட்காராவும். சில வினாடிகள் ஓய்வுக்குப்பின் மீண்டும் முன்போல் பயிற்சி எடுக்கவும். 5 அல்லது 6 தடவை பயிற்சி செய்யலாம்.

இது மன அழுத்தத்தை நீக்குகிறது. இதய துடிப்பு மற்றும் சுவாசத்தை சீராக்குகிறது. தண்டுவட நரம்புகளுக்கு வலிமை கொடுக்கிறது.

முதுகு வலியை குணப்படுத்துகிறது. முழங்கால் வலியை நீக்குகிறது.

உணவு செரிமானம் ஆகும் திறனை அதிகரிக்கிறது. தொப்பையை நீக்குகிறது. வயிற்றுக் கோளாறுகளை போக்குகிறது. கால் முட்டி முதல் பாதம் வரை பலத்தைக் கொடுக்கிறது.

உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. நரம்புமண்டலத்தை தூண்டி பதட்டம் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது. உணர்சிகளை சமநிலைப்படுத்துகிறது.

முழங்கால், கணுக்கால், தோள்கள் மற்றும் மணிக்கட்டுகளில் காயங்கள் எதாவது ஏற்பட்டிருந்தால் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டாம்.

கடுமையான மூட்டுவலி (Joint Pain) இருந்தாலும் இந்த பயிற்சியினை தவிர்க்கவும். இடுப்பு மற்றும் வயிறு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் இந்த யோகாசனத்தை தவிர்க்கவும்.

கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும். குழந்தை பிரசவித்த பின்பும்கூட சில மாதங்கள் இந்த ஆசனத்தை பயிற்சி செய்தல் கூடாது.

சிசுபாலாசனம் – Shishupalasana

இந்த பாலாசனத்தைப்போலவே சிசுபாலாசனம் (Shishupalasana – Hindolasana) என்று ஒரு பயிற்சியும் உள்ளது. இதுவும் உடலுக்கு அதிக நன்மைகளை பெற்றுத்தரும் பயிற்சிதான்.

இப்பயிற்சியைப்பற்றி தெரிந்துகொள்ள அடுத்துள்ள விஷீவல் லிங்க் (visual link) ஐ உங்கள் விரல்களால் கிளிக் செய்யுங்கள்.

>> சிசுபாலாசனம் – Shishupalasana <<

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக தண்டுவட நரம்புகளுக்கு வலிமை கொடுப்பதாக பார்த்தோம்.

மேலும் முதுகு வலியை குணப்படுத்துகிறது. முழங்கால் வலியை நீக்குகிறது.

வயிற்றுக் கோளாறுகளை போக்குகிறது. கால் முட்டி முதல் பாதம் வரை பலத்தைக் கொடுக்கிறது என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் முழங்கால், கணுக்கால், தோள்கள் மற்றும் மணிக்கட்டுகளில் காயங்கள் எதாவது ஏற்பட்டிருந்தால் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டாம்.

கடுமையான மூட்டுவலி (Joint Pain) இருந்தாலும் இந்த பயிற்சியினை தவிர்க்கவும். இடுப்பு மற்றும் வயிறு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் இந்த யோகாசனத்தை தவிர்க்கவும்.

கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “முதுகு வலி” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல…. நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!