"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Ardha Matsyendrasana – அர்த்த மத்ஸ்யேந்திராசனம்

Ardha Matsyendrasana – அர்த்த மத்ஸ்யேந்திராசனம். உடலுக்கும் மனதிற்கும் ஒருசேர சக்தியூட்டுவது யோகாசனப் பயிற்சி எனலாம். பிற உடற்பயிற்சிகள் உடலுக்கு மட்டுமே பயிற்சியளிப்பன. ஆனால் யோகாசனப் பயிற்சியோ உடல், மனம் இரண்டையும் ஒருசேர இயக்குவதால் யோக பயிற்சியின் வாயிலாக உடல் வலிமையையும், மன வலிமையையும் பெற முடியும் என்பது திண்ணம்.

யோகாசனப் பயிற்சியானது வெளி உறுப்புகளைவிட உள் உறுப்புகளிலேயே தன் ஆளுமையை அதிகம் செலுத்துவதால் குன்றாத இளமையையும் மங்காத ஆரோக்கியத்தையும் தருகிறது.

யோகாசனப் பயிற்சியை ஒருவர் தொடர்ந்து பயின்றுவர நீடித்த ஆயுளையும், ஆரோகியத்தையும் ஒருசேர பெறுவர் என்பது திண்ணம். அவ்வாறான அற்புத பலனை தரக்கூடிய ஒரு ஆசனத்தை பற்றி இப்போது இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

Ardha Matsyendrasana

மத்ஸ்யேந்திரர்” (Matsyendranath) என்பவர் ஒரு தலைசிறந்த யோகி. அவர் பலவித ஆசனங்களை கற்று தேர்ந்தவர். அவர் ஒரு குறிப்பிட்ட ஆசனத்தில் அதிக அளவு நன்மை இருப்பதாக உணர்ந்தார். அதனால் அந்த யோகாசனத்தின் சிறப்புக்கருதி தன் மாணவர்களுக்கு அதனை போதித்தார். தொடர்ந்து அதனை பயிற்சி செய்துவர மாணவர்களை பணித்தார்.

எனவே, பின்னாளில் அவருடைய பெயராலேயே அந்த ஆசனமானது “மத்ஸ்யேந்திராசனம்” (Matsyendrasana) என அழைக்கப்பட்டுவருகிறது.

மத்ஸ்யேந்திராசனத்தில் உடல் இதற்கு மேலும் திருக்க முடியாது என்ற அளவிற்கு அதிக அளவில் திருகிய நிலையில் காணப்படும். அதனாலேயே அது “பூரண மத்ஸ்யேந்திராசனம்” என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பதிவில் “பூரண மத்ஸ்யேந்திராசனம்” (Poorna Matsyendrasana) பற்றி பார்க்கப்போவதில்லை. அதற்கு பதிலாக பாதி அளவு திருகிய நிலையில் உட்காரும் “அர்த்த மத்ஸ்யேந்திராசனம்” (Ardha Matsyendrasana) பற்றியே பார்க்கப் போகிறோம்.

பெயர் – Ardha Matsyendrasana.

தமிழ் – அர்த்த மத்ஸ்யேந்திராசனம்.

சமஸ்கிருதம் – Ardha Matsyendrasana.

ஆங்கிலம் – Half Lord of the Fishes Pose.

வேறுபெயர்கள்

  • Bound Half Lord of the Fishes Pose
  • Baddha Ardha Matsyendrasana

ஆசனத்தின் நிலை – Sitting, Binding.

பயிற்சியின் கடின தன்மை – Intermediate.

உடல் கோணம் – Twist, Stretch.

Ardha Matsyendrasana fm

“அர்த்த” என்றால் “பாதி” என்று பொருள். “அர்த்த மத்ஸ்யேந்திராசனம்” என்றால் பாதி அளவு மட்டுமே திருக்கப்பட்ட நிலையில் உட்காரும் மத்ஸ்யேந்திராசனம் என்று பொருள்.

பாதி மத்ஸ்யேந்திராசனம் என்றாலும் பல நோய்களையும் பாழாக்கும் திறன் படைத்தது.

இவ்வாசனமானது இடுப்புவலி, முதுகுவலி மற்றும் நரம்புத் தளர்ச்சி (Nervous Breakdown) போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதில் சிறப்பு பெற்றது. இந்த ஆசனத்தை முறையாக பயிற்சி செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.

முதலில் விரிப்பில் நேராக உட்கார்ந்து இரு கால்களையும் முன்னோக்கி நேராக நீட்டிக்கொள்ளவும். பின் இடதுகாலை வலது காலின் தொடைப்பகுதிக்கு கீழ்வரும்படி மடக்கிக்கொள்ளவும். அதன் பின் வலது காலை இடதுகாலின் வெளிப்புறத்தில் கொண்டுவந்து முழங்கால் நேராக மேல் நோக்கி இருக்கும்படி மடக்கி ஊன்றவும்.

வலதுகால் பாதத்தை இடதுகையால் பிடித்துக்கொண்டு வலதுகையை பின்புறமாக ஊன்றிக் கொள்ளவும். பின் இடுப்பின் மேல் பாகத்தை வலது பக்கமாய் மெதுவாக திருக்கவும். முதுகு நேராக இருக்கவேண்டியது முக்கியம். மூச்சை இயல்பாக விடவும்.

Ardha Matsyendrasana female

10 முதல் 30 வினாடிகள் இதே நிலையில் அமர்ந்து இருக்கவும். பின் மெதுவாக இயல்பு நிலைக்கு வரவும். பின் சில வினாடி ஓய்வுக்குப்பின் கால்களை மாற்றி மறுபக்கம் இதுபோல் பயிற்சி செய்யவும்.

இதேபோல் கால்களை மாற்றி மாற்றி திரும்ப திரும்ப இப்பயிற்சியை இரண்டு மூன்று தடவை செய்யவும்.

கழுத்து மற்றும் தோள்களுக்கு சிறந்ததொரு பயிற்சியை கொடுக்கிறது. மேலும் முதுகு, இடுப்பு, கால்களை வலுப்படுத்துகிறது. முதுகெலும்புகள் நன்கு நெகிழ்வு தன்மை பெறுவதோடு நல்ல பலத்தைப் பெறுகின்றன. 

வயிற்று தசைகளை வலு பெற செய்வதோடு அஜீரணத்தை நீக்கி ஜீரண சக்தியையும் அதிகப்படுத்துகின்றன.

நரம்பு தளர்ச்சியை குணமாக்குகின்றன.

இதயம், கல்லீரல், நுரையீரல், மண்ணீரல், சிறுநீரகம் முதலியன நன்கு பலம் பெறுகின்றன.

தொந்தி குறையும். குடல்கள் நன்கு இரத்த ஓட்டம் பெறுவதோடு ஜீரண மண்டலமும் நன்கு வலிமை பெறும். மலச்சிக்கல் நீங்கும். நீரழிவு குணமாகும்!

பெண்களுக்கு மாதவிடாய் அசௌகரியங்களை போக்குகின்றன. குறிப்பாக மாதவிடாய் சூழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக மன அமைதியை கொண்டுவரும் அற்புதமான ஆசனம்.

கடுமையான முதுகு அல்லது கழுத்துவலி உள்ளவர்கள் இந்த பயிற்சியை தவிர்க்க வேண்டும். உள்ளுறுப்புகளில் எதாவது வலி இருப்பதாக உணர்ந்தால் பயிற்சியை தவிர்க்கவும்.

மூட்டு வலி உள்ளவர்களும், பலவீனமான மூட்டுகளை கொண்டுள்ள முதியவர்களும் இந்த பயிற்சியை கைவிட்டு வேறு எளிமையான பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்துவரலாம்.

மூலநோய், குடலிறக்கம், வயிற்றுப்புண் (Stomach Ulcers) உள்ளவர்கள் இப்பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.

கர்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்.

வக்ராசனம் – Vakrasanam

சரி, இந்த பதிவில் “அர்த்த மத்ஸ்யேந்திராசனம்” (Ardha Matsyendrasana) பற்றி தெரிந்து கொண்டீர்கள்தானே?!.. ஆனால் இதே உடல் கோணத்தில் அதாவது பொசிஷனில் (Sitting Position) மற்றொரு ஆசனமும் உள்ளது. உடல் கோணங்களில் அதாவது அமரும் நிலையில் சில மாற்றங்களுடன்…

ஆம்… நாம் இப்போது பார்த்த “அர்த்த மத்ஸ்யேந்திராசனம்” என்னும் ஆசனத்தில் இடது மற்றும் வலது கால்களை வலது, இடது தொடைப்பகுதிக்கு கீழ்வரும்படி மடக்கிக்கொள்கிறீர்களல்லவா?!!… ஆனால் நான் இப்போது சொல்லப்போகும் ஆசனத்தில் அப்படி கால்களை மடக்க வேண்டியதில்லை. இந்த ஒன்றுமட்டும்தான் இரு ஆசனங்களுக்கும் உள்ள வேறுபாடு.

அது என்ன ஆசனம் தெரியுமா?…

அதுதான் “வக்ராசனம்”.

நீங்கள் இந்த “வக்ராசனம்” (Vakrasanam) என்னும் அற்புதமான ஆசனத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள ஆவல் கொள்கிறீர்கள்தானே… கவலைவேண்டாம்… கீழே கொடுக்கப்பட்டுள்ள “பேனர்” (Banner) ஐ லேசாக தட்டினாலே போதும். உங்களை வக்ராசனம் இருக்கும் ஏரியாவுக்கே அழைத்து செல்லும்….

>> வக்ராசனம் – Vakrasanam <<

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக கழுத்து, தோள்கள், முதுகு, இடுப்பு, கால்களை வலுப்படுத்துகிறது.  உள்ளுறுப்புகளான இதயம், கல்லீரல், நுரையீரல், மண்ணீரல், சிறுநீரகம் முதலியன நன்கு பலம் பெறுகின்றன.

ஜீரண சக்தியையும் அதிகப்படுத்துகின்றன. நரம்பு தளர்ச்சியை குணமாக்குகின்றன.

தொந்தி குறைந்து குடல்கள் நன்கு இரத்த ஓட்டம் பெற்று ஜீரண சக்தி பெருகும். மலச்சிக்கல் நீங்கும்.

நீரழிவு குணமாகின்றன.

பெண்களுக்கு மாதவிடாய் அசௌகரியங்களை போக்குகின்றன என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் கடுமையான முதுகுவலி, கழுத்துவலி, மூட்டு வலி உள்ளவர்கள் இந்த பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

மூலநோய், குடலிறக்கம், வயிற்றுப்புண் (Stomach Ulcers) உள்ளவர்கள் இப்பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.

கர்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “மூலநோய்” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்..

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!