Virabhadrasana first type - வீரபத்ராசனம். யோகாசனமும், உடற்பயிற்சியும் ஒன்றா? என்றால் இரண்டும் வெவ்வேறானவை. இரண்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. உடற்பயிற்சியானது உடலுக்கு மட்டுமே பயிற்சியளிக்கக்கூடியது. உடலை கரடுமுரடாக்கி அதன் இயக்கத்தை சிக்கலாக்கும் தன்மை படைத்தது. ஆனால், யோகாசனப் பயிற்சியானது உடலின் அத்தனை திசுக்களையும் இதமாக மசாஜ் செய்து தேகத்தை மென்மையாக்குகிறது. இதனால் தேகத்திற்கு வனப்பும் இளமையும் மேலிடுகிறது. உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் சேர்த்தே பயிற்சி அளிக்கும் வண்ணம் யோகாசனப் பயிற்சியானது உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதை புரிந்து கொள்ள வேண்டுமெனில் ஒன்றை சொல்லலாம். அதாவது குழந்தையின் தாய் குழந்தைக்கு வெறும் உணவு மட்டும் ஊட்டுவதில்லை. உணவோடு சேர்த்து ”தாய்ப்பாசம்” என்னும் அன்பையும் சேர்த்து ஊட்டியே வளர்க்கிறாள். அப்படி உணவையும் தாய்ப்பாசத்தையும் சேர்த்து கொடுத்து வளர்த்தால்தான் அந்த குழந்தை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வளரும் அல்லவா?!. அதைப்போலவே ஆரோக்கியம் மேம்பட வேண்டுமெனில் உடலுக்கு மட்டும் பயிற்சியளித்தால் போதாது. உள்ளத்திற்கும் சேர்த்தே பயிற்சி அளித்தால்தான் அது ஒரு முழுமையான ஆரோக்கியமாக பயிற்சியாக இருக்க முடியும். இந்த உண்மையை உணர்ந்து கொண்ட நம் முனிவர்களும், யோகிகளும் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒருசேர பயிற்சியளிக்க உருவாக்கித் தந்த கலையே ”யோகக்கலை” எனலாம். அவ்வாறு உடல், மனம் இரண்டையும் வளப்படுத்தும் ஆசனத்தில் ஒன்றை இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். அதுதான் "வீரபத்திர ஆசனம் 1". வாருங்கள் பார்க்கலாம். Virabhadrasana first type - அடிப்படைத் தகவல்கள் பெயர் - Virabhadrasana first type. தமிழில் - வீரபத்ராசனம் முதல் வகை. சமஸ்கிருதம் - Virabhadrasana first type. ஆங்கிலம் - Warrior Pose first type. வேறுபெயர்கள் - Warrior 1 Pose, Warrior 1. ஆசனத்தின் நிலை - Standing. பயிற்சியின் கடின தன்மை - Beginner. உடல் கோணம் - Stretch, Twist, Strength. Virabhadrasana first type - வீரபத்ராசனம் - பெயர்காரணம் ஆசனத்தை பயிற்சி செய்வது எப்படி என்று பார்ப்பதற்கு முன்னால் இதற்கு ஏன் "வீரபத்ராசனம்" என்று பெயர் வந்தது என்பதனை அறியவேண்டுமல்லவா? அதையும் கொஞ்சம் பார்ப்போம் வாருங்கள்... உலகத்தையே கட்டிக் காப்பவர் சிவன். சிவபெருமானின் மனைவி தாட்சாயிணி. அந்த தாட்சாயிணியை பெற்றெடுத்தவர் தட்சன்... ஆதலால் தட்சன் இப்போது சிவபெருமானின் மாமனார்... சின்ன வயதிலிருந்தே தட்சனுக்கு கர்வம் கொஞ்சம் ஜாஸ்தி. அது அவருடைய பிறவி புத்தி. இப்போது மருமகனாக சிவபெருமானே வந்துவிட்டார்... கர்வத்துக்கு சொல்லவா வேண்டும்?!. கர்வம் ஆணவமாக மாறி உச்சந்தலைக்கே ஏறி ஊழித்தாண்டவம் ஆடியது. மனுஷன் யாரையுமே மதிப்பதில்லை. (எதற்காக மதிக்க வேண்டும்... சிவபெருமானின் மாமனார்னா சும்மாவா?!) யாரையும் மதிக்கக்கூடாது என்று முடிவெடுத்தபிறகு எதிரில் நிற்பவர் யாராக இருந்தா நமக்கென்ன... கடவுளாகத்தான் இருக்கட்டுமே... ஐ.... யாம்... டோண்ட்... கேர்.... தட்சன் ஒரு யாகம் நடத்தினார். யாக நிகழ்சிகளில் கலந்து கொள்வதற்காக மரியாதை நிமித்தமாக மருமகன் என்ற வகையில் சிவபெருமானை அழைக்கவேண்டுமல்லவா?!... அதானய்யா உலக வழக்கம்... ஆனால் தட்சன் அழைக்கவில்லை. அழைத்தால் சிவனுக்கு மரியாதை கொடுத்ததுபோல் ஆகிவிடுமே?... நாமதான் யாருக்குமே மரியாதை கொடுப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டோமே... மருமகனாவது மண்ணாங்கட்டியாவது... நமக்கு ஈகோதான் முக்கியம்... (அப்படி போடு அருவாள) சிவபெருமானுக்கு அழைப்பில்லாமலேயே யாகம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. இது தாட்சாயிணியின் காதுகளை எட்டியது. வெகுண்டெழுந்து விட்டார். மதியாதார் தலைவாசல் மிதிக்கவேண்டாம் என்று தடுத்த சிவனையும் மீறி நியாயம் கேட்க யாகம் நடக்கும் இடத்திற்கே சென்றுவிட்டார் தாட்சாயிணி. தந்தையிடம் நியாயம் கேட்டு லபோதிபோ என்று கோபத்தைக் கொப்பளித்தார். சிவபெருமானுக்கே மரியாதையை கொடுப்பதில்லை என்று முடிவுகட்டியபிறகு அவன் பொண்டாட்டி தாட்சாயிணிக்கு மட்டும் எப்படி மரியாதையை கொடுக்க முடியும்... அவள் சிவனின் பொண்டாட்டியா இருந்தா என்ன? அல்லது ஆயாக்கடை போண்டா, டீயா இருந்தா நமக்கென்ன? நமக்கு கொள்கைதானய்யா முக்கியம். எனவே, மகளென்றும் பாராமல் எகிறினார்... வார்த்தையால் குதறினார்... "இறந்தவர்களின் மண்டையோட்டை திருவோடாக கொண்டு உடுக்கை அடித்து ஒருவாய் சோற்றுக்காக ஓடேந்தி திரியும் பிச்சைக்காரப்பயல்தானே உன் புருஷன். அந்த பிச்சைக்காரனின் மனைவியாகிய உனக்கு மரியாதையெல்லாம் இங்கு கொடுக்க முடியாது ஓடிவிடு"... என்று தட்சன் தாட்பூட் என்று எகிற... அவமானத்தால் தாட்சாயிணி கூனிக்குறுக... இவ்வளவு அவமானத்திற்குப் பிறக்கும் நாம் வாழ்வதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்த தாட்சாயிணியோ யாகத்தீயில் தன்னை மாய்த்துக்கொள்ள முனைய... இந்த களேபரத்தையெல்லாம் சிவலோகத்தில் இருந்தபடி நெற்றிக்கண் சிவக்க கோபத்தில் பார்த்துக் கொண்டிருந்தார் சிவன். குணமாக இருக்கும்போதே உடுக்கை கலைவதை பற்றியெல்லாம் யோசனை செய்யாமல் உடுக்கையை குலுக்கிக்கொண்டே காலை தூக்கியபடி மானம் போவதை பற்றிக்கூட கவனிக்காமல் தாண்டவம் ஆடுபவர்தான் அவர்... இப்போது கோபத்தில் வேறு இருக்கிறார்... மனுஷனுக்கு "பிளட் பிரஷர்" (Blood pressure) வேறு இருக்கிறது... கூடவே "லோ சுகரும்" (ஹைப்போகிளைசீமியா - Hypoglycemia) இருப்பதாக சொல்கிறார்கள்... சொல்லவா வேண்டும்... கோபத்தில் நெஞ்சுவலியே வரும் அளவுக்கு "பிளட் பிரஷர்" தாறுமாறாக ஏற... ருத்ர தாண்டவமே ஆடிவிட்டார். ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா ஆட்டத்தில் கலைந்த ஜடாமுடியை ஆவேசமாக தரையில் ஓங்கி அடிக்க... ஓங்கி அடிச்சா அது ஒன்றரை டன் வெயிட் அல்லவா!!... அடித்த வேகத்தில் அந்த ஒன்றரை டன் வெயிட்டும் இரண்டாக "ஸ்பிளிட்" ஆகிவிட... அதில் ஒரு முக்கால் டன் எடை "பத்திரகாளி"யாக உருவெடுக்க அடுத்த முக்கால் டன் எடை வீரபத்திரனாக எழுந்து நின்றது... எழுந்து நின்ற உடனேயே "வீரபத்திரன்" வீராவேசமாக கர்ஜிக்க... வீரபத்திரனின் வீரத்தை கண்டு பக்கத்தில் நின்ற பத்திரகாளியே பயத்தில் பதறிப்போக... அந்த கர்ஜிப் ஒலியால் களேபரமாகக் கிடந்த சிவலோகமே கணநேரத்தில் கப்சிப்பானது என்றால் வீரபத்திரனின் வீரத்தை பார்த்துக் கொள்ளுங்களேன். இவன்தான் தட்சனின் ஆணவத்தை அடக்க சரியான ஆள் என முடிவெடுத்த சிவன்... தட்சனின் யாகத்தையும், அவனின் ஆணவத்தையும் அழித்தொழித்து வெற்றியுடன் திரும்பி வா மகனே என வெற்றித்திலகமிட்டு அனுப்பி வைத்தார். ஆவேசமாக யாகசாலைக்கு சென்ற வீரபத்திரன் ஒரு காலை தரையில் ஊன்றி மற்றொரு காலை சிவபெருமானைப் போலவே மானம் போகுமளவிற்கு தலைக்கு மேல்வரை தூக்கி... (செத்தாண்டா சேகரு) யாகத்தீயை ஓங்கி ஒரு மிதி மிதிக்க.... மிதித்த வேகத்தில் இடுப்பில் கட்டியிருந்த அரைஞாண் கயிறு அறுந்து யாகத்தீயில் விழ.... யோகசாலை சோகசாலை ஆனது. மேலேயுள்ள படத்தில் கோப ஆவேஷத்தில் வீரபத்திரன் நிற்கும் பொசிஷனை பார்த்தீர்களா? அதே பொசிஷனில் நம்முடைய ஆசனமும் இருப்பதால் இதற்கு "வீரபத்திர ஆசனம்" என பெயர் வைத்துவிட்டார்கள். புரிஞ்சுதா.. சரி,.. இனி இந்த வீரபத்திராசனத்தைப் பற்றி பார்ப்போம். இந்த வீர பத்திராசனத்தில் 1,2,3 என மூன்று வகையான பொசிஷன்கள் (வகைகள்) உள்ளன். அதில் முதல் வகையான ”வீரபத்ராசனம் முதல் வகை” யைப்பற்றித்தான் (Virabhadrasana first type of pose) இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். மற்ற இரண்டு வகைகளான ”வீரபத்ராசனம் வகை 2”, ”வீரபத்ராசனம் வகை 3” ஆசனங்களை வேறொரு தனிப்பதிவில் பார்க்கலாம். சரி, இனி ”வீரபத்ராசனம் முதல் வகை” ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்.... வீரபத்ராசனம் முதல் வகை - செய்முறை Virabhadrasana first type - வீரபத்ராசனம். முதலில் இரு கால்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு நேராக நிற்கவும். அதன் பின் இரு கால்களையும் பக்கவாட்டில் மூன்று அல்லது மூன்றரை அடி இடைவெளி இருக்கும் அளவிற்கு அகட்டி வைக்கவும். இரு கைகளையும் மேல் நோக்கி குவித்து கும்பிட்டவாறு வைக்கவும். பின் வலது பாதத்தை வலது பக்கமாகத் திருப்பி உங்கள் உடலையும் வலது பக்கமாகத் திருப்பிக் கொள்ளுங்கள். மெல்ல வலது காலை படத்தில் உள்ளவாறு மடக்கி தொடைப்பகுதி தரைக்கு இணையாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். இடது கால் நேராக அதே நேரம் சாய்வாக இருக்க வேண்டும். 10 அல்லது 15 வினாடிகள் இதே நிலையில் இருந்துவிட்டு உடலை நேராக்கவும். கைகளை கீழே இறக்கவும். https://youtu.be/kkGY3xBnaGc அடுத்து வலது பக்கம் செய்தது போல் இடது பக்கம் செய்யவும். இவ்வாறு மாற்றி மாற்றி 4 முதல் 8 தடவை செய்யவும். பயிற்சியின் பலன்கள் பயிற்சி செய்வதற்கு மிக எளிதான இந்த ஆசனத்தை தினம்தோறும் பயிற்சி செய்து வர உடலின் விறைப்புத்தன்மையை மாற்றி நெகிழும் தன்மைக்கு கொண்டுவரும். மேலும் கால்கள் வலுப்பெறும், முழங்கால் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும். கழுத்து வலி, இடுப்பு வலி நீங்கும். கொழுப்பு கரைந்து தொந்தி மறையும். உடல் இறுக்கத்தை நீக்கி இளகிய தன்மையை நல்கும். மனது வளம் பெறும். இது உடலின் விறைப்புத் தன்மையை நீக்கி முதுகை நெகிழச்செய்து உடலை இளகிய தன்மையில் வைத்திருக்கும். முழங்கால் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்வதோடு கால்களையும் நன்கு வலுப்படுத்தும்.