Utkatasana - உட்கட்டாசனம் Utkatasana - உட்கட்டாசனம். உங்கள் வீடு சாலைகளின் ஓரங்களில் அமைந்துள்ளதா? அப்படியென்றால் இந்த காட்சியை நீங்கள் கண்டிப்பாக பார்த்திருக்கலாம். அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு எழுந்து (முறைக்காதீர்கள் இன்று ஒருநாள் மட்டும் சூரிய உதயத்தை பார்ப்பதற்காவது எழுந்து உட்காருங்கள்) சாலையை எட்டிப் பார்த்தீர்கள் என்றால் வயது வித்தியாசம் இல்லாமல் பலபேர் அரைக்கால் டவுசர் போட்டுக்கொண்டு காதில் எதையோ மாட்டிக்கொண்டு எங்கோ அவசரமாக நடந்து சென்று கொண்டிருப்பார்கள். அவர்களை தடுத்து நிறுத்தி எங்கே இவ்வளவு அவசரமாக சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால் தெரியவில்லை என்பார்கள். கொஞ்சம் வற்புறுத்தி கேட்டால் டாக்டர்தான் இப்படி நடக்க சொன்னதாகவும், நடந்தால் ”ஹார்ட் அட்டாக்” வராது என்று அறிவுறுத்தியதாகவும் சொல்வார்கள். சரி.. உங்கள் டாக்டர் எத்தனை நாள் இப்படி ”பை பாஸ்” ரோட்டில் நடக்க சொன்னார் என்றால் பதில்கூற தெரியாது. டாக்டரிடமே கேட்டோம் என்றால் ”பைபாஸ் சர்ஜரி” செய்யும் வரை ”பைபாஸ் ரோட்” டில் நடக்க வேண்டும் என்பார். (போங்கடா நீங்களும் உங்க ”அட்வைஸ்”ம்). சிறிது காலத்திற்கு பிறகு அதிகமாக நடந்ததால் மூட்டு எலும்பு தேய்ந்து விட்டதாக கூறி அதற்கு தனியாக ஒரு கால் மூட்டு பெல்ட்டும்.. மூட்டுவலி தீர வலிநிவாரண மாத்திரையும் எக்ஸ்ட்ராவாக லிஸ்ட்டில் ஏறும் என்பது வேறு கதை. பைபாஸ் ரோட்டில் நடப்பதால் இன்னும் ஒரு பிரச்சனை இருக்கிறது. பிரேக் பிடிக்காமல் பின்னால் வரும் ஆட்டோ, மினி பஸ் முதலியன இப்பவே நம்மை பைபாஸ் சர்ஜரிக்கு அனுப்பி வைத்து விடுமோ என்று பயம் வேறு. இதற்கு வேறு தீர்வே இல்லையா? கண்டிப்பாக இருக்கிறது. இரண்டாவது இருதயம் - சோலியஸ் மேலே குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் அனைத்தும் "சும்மா" ஒரு நகைச்சுவைக்காக சொல்லப்பட்டவையே. உண்மையிலேயே அதிகாலையில் வேகமாக நடைப்பயிற்சி செய்வதால் இருதயத்திற்கு அது அதிக அளவில் நன்மை பயக்கும். நம் உடலில் ஒரே ஒரு இருதயம்தான் இருக்கிறது என்றுதானே நீங்கள் நினைத்து கொண்டிருக்கிறீர்கள்.... அதுதான் இல்லை... இரண்டாவது இருதயம் ஒன்றும் உள்ளது. இதனுடைய வேலையே இருதயத்திற்கு இரத்தத்தை பம்ப் செய்து அனுப்புவதுதான். இந்த இரண்டாவது இருதயமானது ஒழுங்காக வேலை செய்தால் மார்புக்கூட்டில் இருக்கும் முதன்மையான இருதயத்திற்கு வேலைப்பளு குறையும். அதன் ஆரோக்கியமும் கூடும். இந்த இரண்டாவது இருதயம் ஒழுங்காக வேலை செய்யவேண்டுமெனில் கைகால்களை நன்றாக வீசி நடக்க வேண்டும். அப்படி நடைப்பயிற்சி செய்தால் இதயத்தின் ஆரோக்கியம் கூடும். "ஹார்ட் அட்டாக்" வராது. இந்த இரண்டாவது இருதயத்தை முறையாக இயக்குவதற்காகத்தான் டாக்டர்கள் நடக்கச் சொல்கிறார்கள். அதெல்லாம் இருக்கட்டும்... அதற்கும் இந்த ஆசனத்திற்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா? இந்த ஆசனமானது அந்த இரண்டாவது இருதயத்தைப் பலப்படுத்துகிறது. அதிலுள்ள தசைகள், நரம்புகள் மற்றும் திசுக்கள் அனைத்தையும் வலிமையாக்குகிறது. இதனால் நீங்கள் குறைந்த தூரம் நடந்தாலே அதிக பலனை பெறமுடியும். எனவேதான் நடைபயிற்சி செய்யும் அனைத்து அன்பர்களுக்கும் இந்த "உட்கட்டாசனம்" பயிற்சி மிகவும் அவசியம் என இங்கு வலியுறுத்தப்படுகிறது. இதோ நான் சொல்லப்போகும் பயிற்சியை உங்கள் வீட்டிற்குள்ளேயே தினம் காலை, மாலை 5 நிமிட நேரம் பயிற்சி செய்யுங்கள். அதன்பின் பூங்காவில் அல்லது தெருக்களில் நடந்து பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும். ஆம்,... 2 Km நடந்தாலே 5 km நடந்ததற்கான பலன் கிடைப்பதை நீங்கள் காணலாம். அதுசரி, அதென்ன "இரண்டாவது இருதயம்" என கேட்கத்தோன்றுகிறது அல்லவா?... அந்த இரண்டாவது இருதயத்தைப்பற்றி ”வஜ்ராசனம்” (Vajrasana - Thunderbolt Pose) என்னும் யோகப் பயிற்சியில் விரிவாகக் கொடுத்துள்ளேன். ஏனென்றால், இந்த உட்கட்டாசனத்தைப்போல் வஜ்ராசனமும் இரண்டாவது இருதயமான "சோலியஸ் தசை" (Soleus) யை வலுப்படுத்தும் திறனைக்கொண்டுள்ளது. எனவே, இந்த இரண்டாவது இருதயமான "சோலியஸ் தசை" (Soleus) யைப்பற்றி தெரிந்துகொள்ள இங்கிருந்தபடியே வஜ்ரானத்திற்குள் செல்ல.. நீங்கள் தினமும் நடந்து போகும் பைபாஸ் ரோட்டின் இடையே குறுக்கிடும் "ஷார்ட்கட் ரோடு"போன்று "ஷார்ட்கட் லிங்க்" கொடுத்துள்ளேன்... கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷீவல் லிங்க் (visual link) தான் ஷார்ட்கட் லிங்க். நீங்கள் உங்கள் விரல்களால் அதன்மேல் சட்டுன்னு தட்டி... பட்டுன்னு போங்க.... Vajrasana - Thunderbolt Pose - Personality Fitting"வஜ்ரம்" என்றால் ”வைரம்” என்று பொருள். இதனை தொடர்ந்து பயிற்சி செய்து வருவதினால் வைரம் போல் உடல் உறுதி பெறும் என்பதினால்... ??? ... இதற்கு ”வஜ்ராசனம்” (Vajrasana - Thunderbolt Pose) என்று பெயர். பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடிய ஆசனம் இது. நாம் இப்போது இந்த பதிவில் இங்கே பார்க்கப்போவது "உட்கட்டாசனம்" - Utkatasana என்னும் நாற்காலி ஆசனம் (Chair pose). இது கால்கள், இடுப்பு, தோள்கள் மற்றும் இரண்டாவது இருதயம் எனப்படும் "சோலியஸ் தசை"யையும் பலப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமல்லாது முதுகெலும்பை பலப்படுத்தவும் உதவுகிறது. வாருங்கள் பார்க்கலாம்... Basic information - அடிப்படைத் தகவல்கள் பெயர் - Utkatasana. தமிழில் - நாற்காலி ஆசனம். சமஸ்கிருதம் - Utkatasana. ஆங்கிலம் - Chair pose. வேறுபெயர்கள் - Fierce Pose, Awkward Pose. ஆசனத்தின் நிலை - Standing. பயிற்சியின் கடின தன்மை - Intermediate. உடல் கோணம் - Forward-Bend, Stretch, strength, Balance. ஒரு நாற்காலியில் உட்காருவதுபோல் பாவனை செய்வதுதான் இந்த ஆசனத்தின் நிலை. இந்த ஆசனம் (Utkatasana) பார்ப்பதற்கு எளிதானது போல் உங்களுக்கு காட்சி தரலாம். ஆனால் நிஜம் அப்படியல்ல... நாற்காலியில் உட்காருவது எளிதுதான். ஆனால் இல்லாத நாற்காலியில் உட்காருவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல. யாருமே இல்லாத டீ கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறோம் என்று தெரியாமலேயே டீ ஆற்றுவது எவ்வளவு வலி தரும் நிகழ்வோ அப்படியானதுதான் இதுவும். சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்.... உட்கட்டாசனம் - செய்முறை முதலில் நேராக நிமிர்ந்து நிற்கவும். பின் இரு கால்களுக்கும் இடையில் 1 அடி இடை வெளி இருக்கும்படி கால்களை விரித்து வைக்கவும். இரு கைகளையும் கிடைமட்டமாக முன்னோக்கி நேராக நீட்டவும். பின் உடலை மெதுவாக கிழிறக்கி நாற்காலியில் உட்காருவது போல் உட்காரவும். முன்பக்கமாக உடலை வளைக்கக் கூடாது. முதுகு நேராக மேல்நோக்கி இருக்க வேண்டும். இயல்பாக மூச்சு விடவும். இதே நிலையில் 10 முதல் 30 வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக நேராக நிமிர்ந்து நிற்கவும். சில வினாடிகள் ஓய்வு எடுத்தபின் மீண்டும் முன்போல செய்யவும். இதேபோல் 4 அல்லது 5 தடவை இப்பயிற்சியை மேற்கொள்ளலாம். பயிற்சியின் பலன்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்துகொண்டு வந்தீர்களானால் உங்கள் உடலின் உள்கட்டமைப்பு அத்தனையும் பலம் பெறும் என்பதில் சந்தேகமில்லை. இந்த பயிற்சியானது உங்கள் தசைகளை அற்புதமாக வலுப்படுத்துகிறது. கால் மூட்டுகளையும் பலப்படுத்துகிறது. இடுப்பு, முதுகெலும்பு, தோள்பட்டைகளை பலப்படுத்துகிறது. கால்வலி, முழங்கால் வலி, குதிகால் வலிகளை நீக்குகிறது. வயிற்றுப்பகுதிகளில் உள்ள நாளமில்லா சுரப்பிகளை தூண்டும். 5 நிமிடம் இப்பயிற்சியை செய்தபின் வெறும் 2 Km மட்டுமே நடைபயிற்சி செய்யுங்கள். 5km நடைப்பயிற்சி செய்ததற்கான பலனை பெறுவீர்கள். இன்னும் கூடுதலான நன்மைகளையும் பெறமுடியும். இதனுடன் இதயத்திற்கு வலிமை சேர்க்கும் சில எளிய யோக பயிற்சிகளையும் மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்துவர இரண்டு விதமான ”பைபாஸ்” ம் தேவைப்படாததோடு அனைத்து விதமான இதய நோய்களையும் தவிர்த்து விட முடியும். இந்த பயிற்சியால் படிப்படியாக தொப்பையையும் குறைக்க முடியும். விளையாட்டு வீரர்களுக்கு அதுவும் குறிப்பாக ஓட்டப்பந்தய வீரர்களுக்கு இந்த பயிற்சி ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை. முக்கிய குறிப்புகள் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்தல் வேண்டும். உயர் இரத்த அழுத்தம், தலைசுற்றல் போன்ற உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்த்தல் வேண்டும். உடலில் காயம் பட்டுள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்த்தல் நலம்.