"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Bhujangasana – புஜங்காசனம்

ஆசனங்களில் மிகவும் சிறப்புப் பெற்றது Bhujangasana – புஜங்காசனம் எனலாம். சூரிய நமஸ்காரம் பயிற்சியில் இதனுடைய பங்களிப்பும் மிக அதிகம். ஆண், பெண் முதற்கொண்டு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் எளிதாக இப்பயிற்சியை மேற்கொள்ள முடியும்.

“புஜம்” என்றால் தோள்பட்டையை சுற்றியுள்ள பகுதிகளைக் குறிக்கும் சொல். இந்த ஆசனம் செய்யும்போது இடுப்புக்கு மேல் உள்ள தேகத்தின் எடை முழுமையையும் புஜமே தாங்குவதாலும், இந்த ஆசனத்தின் மூலம் புஜம் விஷேச பலத்தை பெறுவதாலும் இதற்கு “புஜங்காசனம்” (Bhujangasana – Cobra Pose) என்று பெயர்.

ஆனால், இந்த ஆசனத்தில் நம்முடைய உடல் இருக்கும்போது பார்ப்பதற்கு நல்லபாம்பு படம் எடுப்பது போன்ற தோற்றத்தில் அமைந்திருப்பதால் “நல்லபாம்பு ஆசனம்” என்று பொருள்படும்படி ஆங்கிலத்தில் “Cobra Pose” என்றே அழைக்கப்படுகிறது.

பெயர் – Bhujangasana.

தமிழ் – புஜங்காசனம்.

சமஸ்கிருதம் – Bhujangasana.

ஆங்கிலம் – Cobra Pose.

வேறுபெயர்கள் – Serpent Pose.

ஆசனத்தின் நிலை – Prone, Abdomen

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Back-Bend.

இந்த புஜங்காசனத்தில் “அர்த்த புஜங்காசனம்” என்றும் ஒரு பயிற்சி உள்ளது. “அர்த்த” என்றால் பாதி என்று அர்த்தம். “அர்த்த புஜங்காசனம்” என்றால் “பாதி புஜங்காசனம்” என்று பொருள். பெயருக்கேற்ப புஜங்காசனத்தைவிட இதனை பயிற்சி செய்வது எளிதானது.

Ardha bhujangasana - Half Cobra Pose.

எனவே, புஜங்காசனம் செய்வது கடினமாக இருப்பதாக உணர்பவர்கள் முதலில் இந்த அர்த்த புஜங்காசனத்தை பயிற்சிசெய்து கைகள் மற்றும் தோள்பட்டைகள் நன்கு பலம் பெற்றபின் “புஜங்காசனம்” பயிற்சியை தொடங்கலாம்.

இந்த “அர்த்த புஜங்காசனம்” பயிற்சியை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை அறிந்துகொள்ள கீழேயுள்ள பேனர் லிங்க் ஐ கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

சரி,… இனி மார்புகளுக்கும் புஜங்களுக்கும் வலிவு சேர்க்கும் ஆசனமான புஜங்காசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்.

முதலில் குப்புற படுத்துக் கொள்ளவும். கால்களை இணைத்து நேராக வைத்துக்கொள்ளவும். உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்கும்படி வைக்கவும். தலைமுதல் கால்வரை ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.

Bhujangasana - Cobra Pose step by step.

இரண்டாவதாக, இரண்டு முழங்கைகளையும் மடித்து இடுப்பிற்கு அருகில் தரையில் ஊன்றவும்.

அதன்பின் இடுப்பு தரையில் படிந்திருக்க இடுப்பிற்கு மேல் மார்பு, கழுத்து, தலை இவைகளை தரையிலிருந்து மூச்சினை மெதுவாக உள்ளுக்கு இழுத்தவாறே மேல்நோக்கி உயர்த்தவும்.

Bhujangasana - Cobra Pose girl

இந்த நிலையில் சில வினாடிகள் அப்படியே இருக்கவும். மூச்சை இயல்பாக விடவும்.

பின் மார்பையும், தலையையும் மூச்சை மெதுவாக வெளியில் விட்டபடி கீழே கொண்டு வந்து தரையை தொடவும். கைகளை தலைக்கு மேல் நேராக நீட்டவும். சில வினாடிகள் ஓய்வுக்கு பின் மீண்டும் முன்போல் செய்யவும்.

இந்த பயிற்சியை 5 அல்லது 6 தடவை திரும்ப திரும்ப செய்யவும்.

பயிற்சியின் பலன்கள்

இந்த புஜங்காசன பயிற்சியானது ஆண், பெண் என இரு பாலருக்கும் வலிமை சேர்க்கும் பயிற்சி என்றே சொல்லவேண்டும். இதனை பெண்கள் தொடர்ந்து செய்துவர நல்ல கட்டுக்கோப்பான மார்பையும், உடல் வனப்பையும் பெறமுடியும்.

இதனை தொடர்ந்து பயிற்சி செய்து வர முதுகுவலி நீங்குவதோடு தொப்பையும் கரையும். மேலும் இது மார்பை விரிவடைய செய்வதோடு இதயம் நுரையீரலை பலப்படுத்தி, ஆஸ்துமாவையும் குணமாக்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், மலட்டுத்தன்மை மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனையையும் குணப்படுத்தும்.

முதுகெலும்பு நன்கு வளையும் தன்மையைப் பெறும். மார்பு நன்கு விரிவடையும். விலா எலும்புகள் உறுதியாகும். கூன் விழுந்த முதுகு நேராகும். முதுகுவலி, கழுத்துவலி குணமாகும்.

கழுத்து எலும்பு தேய்ந்து விட்டதாகச் சொல்லி சிலர் ”கழுத்து பட்டை” கட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள் அல்லவா, இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் பட்டைக்கே  பட்டை நாமம் போட்டு விடலாம்.

மேலும், இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துகொண்டுவர இருதயம், நுரையீரல் பலமடையும். ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, இதய கோளாறுகள் நீங்கும். ஜீரணசக்தியை அதிகரிப்பதோடு வயிற்றிலுள்ள கொழுப்பையும் கரைக்கும். நன்கு பசி உண்டாகும்.

இந்த ஆசனமானது இடுப்பு, முழங்கால்கள், விலா எலும்புகள், தோள்கள், முழங்கைகள், மணிக்கட்டுகளின் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் மேற்கண்ட உறுப்புகளில் எதாவது வலிகளோ காயங்களோ இருக்கும் பட்சத்தில் இந்த ஆசனத்தை செய்தல்கூடாது.

அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களும், அதிக அளவில் குடல்வாயு பிரச்சனையால் வாடுபவர்களும், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்ய முன்வர வேண்டாம்.

வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக முதுகுவலி நீங்குவதோடு தொப்பையும் கரையும். மேலும் இது மார்பை விரிவடைய செய்வதோடு இதயம் நுரையீரலை பலப்படுத்தி, ஆஸ்துமாவையும் குணமாக்குகிறது. நுரையீரல் அழற்சி (நிமோனியா), இதய கோளாறுகள் நீங்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், மலட்டுத்தன்மை மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனையையும் குணப்படுத்தும்.

முதுகெலும்பு நன்கு வளையும் தன்மையைப் பெறும். விலா எலும்புகள் உறுதியாகும். கூன் விழுந்த முதுகு நேராகும். முதுகுவலி, கழுத்துவலி குணமாகும் என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் இடுப்பு, முழங்கால்கள், விலா எலும்புகள், தோள்கள், முழங்கைகள், மணிக்கட்டுகளின் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் மேற்கண்ட உறுப்புகளில் எதாவது வலிகளோ காயங்களோ இருக்கும் பட்சத்தில் இந்த ஆசனத்தை செய்தல்கூடாது.

இரத்த அழுத்தம் உள்ளவர்களும், குடல்வாயு பிரச்சனையால் வாடுபவர்களும், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்ய முன்வர வேண்டாம் என்பதனையும் அறிந்தோம்.

வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “நுரையீரல் அழற்சி (நிமோனியா)” பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுக்கலாம். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!