ஸ்வஸ்திகா (Swastika) என்றால் வளமையான அல்லது மங்களகரமான என்று பொருள். இந்த ஆசனம் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும், வளத்தையும் தருவதால் Swastikasana - ஸ்வஸ்திகாசனம் எனப் பெயர் பெற்றது. ஸ்வஸ்திகாசனத்தை பார்ப்பதற்கு முன்னால் முதலில் ”யோகா ஆசனம்’‘ என்றால் என்னவென்று பார்ப்போம். Yoga - யோகா "யோகா" மற்றும் "யோகாசனம்" என்பது இந்தியாவில் நம் முன்னோர்களாகிய ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட உடல் மற்றும் மனவளக்கலை பயிற்சியாகும். பண்டைய ரிஷிகளாலும், முனிவர்களாலும், யோகிகளாலும் உருவாக்கப்பட்ட இந்த பயிற்சி பிற வகையான உடற்பயிற்சிகளைவிட மேன்மையானது. உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன. பொதுவாக யோகா என்றால் மக்களிடையே ஒரு தவறான கருத்து நிலவுகிறது. யோகா பயிற்சி என்பது ஒருவிதமான உடற்பயிற்சி என்ற வரையறைக்குள்ளாகவே அதை வைத்து பலர் பார்க்கின்றனர். அது உண்மைதான் என்றாலும்கூட யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல அதில் மனதிற்கான பயிற்சியும் அடங்கியுள்ளன. உடற்பயிற்சியானது உடலின் அனைத்து உறுப்புகளும் இரும்புபோல் வலிமையாவதற்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறது. அதனாலேயே அதன் பயிற்சிகள் யாவும் அதிகம் பளு உள்ள பயிற்சிகளாகவும், வேகமான அசைவுகளாகவும் அமைகின்றன. உடலின் உள்ளே சில உறுப்புகள் மிருதுவான தன்மையுடன் இருந்தால்தான் அவைகளால் சிறப்பாக பணியாற்ற முடியும். ஆனால் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் மென்மையாக இருக்க வேண்டிய உள்ளுறுப்புகளையும் இறுக வைத்து விடுகின்றன இந்த உடற்பயிற்சிகள். மென்மையாகவும், துவளும் தன்மையுடனும் இருக்கவேண்டிய பல உள்ளுறுப்புகள் கடினமானப் பயிற்சியின் மூலம் இறுக்கப்பட்டு அதன் இயல்பான இயக்கங்கள் பாதிக்கப்படுவது குறித்து அது பெரிதும் கவலைப்படுவதில்லை. எனவேதான் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் முதுமைக்காலங்களில் பல ஆபத்தான நோய்களில் துன்புறுவதைக் காண்கிறோம். ஆனால் யோகாசனப்பயிற்சியானது உடற்பயிற்சியைப்போல் உடலை இறுக்குவதில்லை. மாறாக உடலை நன்கு துவளும் தன்மையுடன் வைக்கிறது. சிறுகுழந்தைகளின் உடல் எவ்வாறு ரப்பர் போல் வளையும்தன்மை பெற்றுள்ளதோ அதே தன்மைக்கு உங்கள் உடலைக்கொண்டு வருகிறது. எனவே முதுமையிலும் உடல் இளமையும் சுறுசுறுப்பும் பெற்று திகழ்கிறது. இன்று அதன் மேன்மை கருதி இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பட்டிதொட்டிகளுக்கு எல்லாம் வேகமாக பரவி வருகிறது. இன்று வெளிநாட்டினர் அதன் மேன்மை உணர்ந்து யோகாவை விரும்பி கற்கின்றனர். இன்று மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள்தான் பலபேர்களுடைய வாழ்க்கையில் நிம்மதியின்மையை தருகின்றன என்பதனை நாம் பார்க்கின்றோம். அவ்வாறானவர்கள் யோகாசனம் செய்வதை தம் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வாக கொண்டுவரும் பட்சத்தில் மன அழுத்தம் மற்றும் மன சோர்விலிருந்து எளிதில் விடுபட முடியும். அவ்வாறு உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற்சியளிக்கக்கூடிய ஆசனங்களில் தியானம் செய்வதற்கும் மனதிற்கு அமைதியை தரக்கூடியதுமான ஆசனம் ஒன்றினைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.. நாம் இப்போது பார்க்கப்போவது “ஸ்வஸ்திகாசனம்”. இது மூச்சு பயிற்சி என்னும் பிரணாயாமம் பயில்வதற்கும், தியானம் பயில்வதற்கும் ஏற்றதொரு ஆசனம். வாருங்கள் பார்க்கலாம்... Swastikasana - ஸ்வஸ்திகாசனம் - அடிப்படை தகவல்கள் பெயர் - Swastikasana. தமிழில் - ஸ்வஸ்திகாசனம். சமஸ்கிருதம் - Swastikasana. ஆங்கிலம் - Auspicious Pose. வேறுபெயர்கள் - Svastikasana. ஆசனத்தின் நிலை - Sitting. பயிற்சியின் கடினத்தன்மை - Beginner. உடல் கோணம் - Meditative, Stretch. ஸ்வஸ்திகாசனம் - செய்முறை பத்மாசனத்தில் உட்காருவது போல்தான் இதிலும் உட்காரவேண்டும். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் பத்மாசனத்தில் இரண்டு பாதங்களும் தொடைகள் மீது மலர்ந்தபடி இருக்கும். ஆனால் ஸ்வஸ்திகாசனத்தில் இரு பாதங்களும் கெண்டைக்காலுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கப்பட்டிருக்கும். சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்... முதலில் விரிப்பில் உட்கார்ந்து இரண்டு கால்களையும் நேராக நீட்டிக்கொள்ளுங்கள். வலது காலை மடித்து பாதங்களை இடது தொடை மீது வைக்காமல் தொடையின் பக்கவாட்டில் படும்படி வைக்கவும். அதேபோல் இடது காலை மடக்கி இரண்டு கைகளால் மெதுவாக பிடித்து தூக்கி பாதங்களை வலது கெண்டைக் கால்களுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கவும். கைகள் இரண்டையும் முழங்கால் மீது சின் முத்திரை பிடித்தபடி வைக்கவும். முதுகு கூன்விழாமல் நேராக நிமிர்ந்து உட்காரவும். கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்தால் அது கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மூச்சை மெதுவாக நன்கு இழுத்து ஒரே சீராக சுவாசிக்கவும். https://youtu.be/O_Rn5hU9nHM 5 நிமிடம் இந்த ஆசனத்தில் உட்காரவும். அதன்பின் கால்களை மாற்றி செய்யவும். இது தியானம் செய்வதற்கு ஏற்ற நல்லதொரு ஆசனம். தியானத்தில் அமரும் பட்சத்தில் 5 லிருந்து 20 நிமிடங்கள் வரை உட்காரலாம். பயிற்சியின் பயன்கள் பத்மாசனத்திற்கான முழு பலன்களும் இந்த பயிற்சியிலும் கிடைப்பதோடு முழங்கால் நன்கு வலுப்பெற்று மூட்டு வலிகள் நீங்கும். கால்வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். முதுகெலும்பும் பலம் பெறும். நுரையீரல் வளம் பெறும். உடல் இறுக்கத்தை குறைத்து நெகிழ்வு தன்மையை அதிகரிக்கிறது. தியானம் பயில மிக சிறந்த ஆசனம் இது. மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நுரையீரலின் திறனை அதிகப்படுத்தி நரம்புமண்டலத்தை பலப்படுத்துகிறது. முதுகெலும்பை நேராக்க உதவுகிறது. உணவு செரிமானத்தையும் அதிகரிக்கிறது. முக்கிய குறிப்புகள் முழங்கால், இடுப்பு, முதுகு அல்லது கணுக்கால்களில் வலியோ அல்லது காயங்களோ உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது. கர்ப்பிணி பெண்கள் இந்த பயிற்சியை ஆரம்ப காலகட்டத்தில் ஓரிரு மாதங்கள் செய்யலாம். அதன்பின் தவிர்த்தல் வேண்டும். சில கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப கட்டத்திலிருந்தே கால்களில் வீக்கம் காணப்படும். அப்படியானவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது. இந்த ஆசனமானது மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து சிந்தனையை கூர்மைப்படுத்துவதால் பிரணாயாமம், தியானத்திற்கு ஏற்றது. பிரணாயாமம், தியானப் பயிற்சிக்காக பத்மாசனம் (Padmasana - Kamalasana), சித்தாசனம் ஆகிய ஆசனங்களில் உட்காருபவர்கள் அதில் உட்காருவது சிரமம் என உணர்ந்தால் ஸ்வஸ்திகாசனத்தை தேர்ந்தெடுக்கலாம். இதுவும் சிரமமாக உள்ளதாக உணர்ந்தால் இருக்கவே இருக்கிறது சுகாசனம். ஆம்,... சுகாசனத்தில் ஜம்மென்று உட்கார்ந்துவிட வேண்டியதுதான். ******* Swastikasana - ஸ்வஸ்திகாசனம் பற்றி தெரிந்துகொண்ட நீங்கள் "பத்மாசனம்" பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள்தானே!!!.. அனைவராலும் உச்சரிக்கப்படும் மிகவும் பிரபலமான ஆசனம்தான் இந்த பத்மாசனம்.. மூச்சு பயிற்சி என்னும் பிரணாயாமம் பயில்வதற்கும், தியானம் பயில்வதற்கும் ஏற்றதொரு பிரபலமான ஆசனம். நாம் இந்த பதிவில் பார்த்த ஸ்வஸ்திகாசனமும் பிரணாயாமம் பயில்வதற்கும், தியானம் பயில்வதற்கும் ஏற்றதொரு ஆசனம்தான். பார்ப்பதற்கு பத்மாசனமும், ஸ்வஸ்திகாசனமும் ஒன்றுபோலவே காணப்படும். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவென்றால் ஸ்வஸ்திகாசனத்தில் இரு பாதங்களும் கெண்டைக்காலுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கப்பட்டிருக்கும். ஆனால் பத்மாசனத்தில் இரண்டு பாதங்களும் தொடைகள் மீது மலர்ந்தபடி இருக்கும். ஸ்வஸ்திகாசனத்தில் உட்காருவதைவிட பத்மாசனத்தில் உட்காருவது கொஞ்சம் கடினம்தான் என்றாலும் பத்மாசனத்தையும் பழகி வைத்திருப்பது உங்களுக்கு பெருமையல்லவா!!... பத்மாசனத்தைப்பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பேனர் (Banner) ஐ முரட்டுத்தனமாக அழுத்தாமல் ஒரு மலரை தொடுவதுபோல மெதுவாக வருடிக்கொடுங்கள்.. அடுத்த நொடியே உங்கள் கண்முன்னால் பத்மாசனமானது தாமரை மலரைப்போல மலருவதை நீங்களே பார்க்கலாம். Padmasana - பத்மாசனம் - Personality Fittingபத்மம், கமலம் இரண்டுமே தாமரையைத்தான் குறிக்கும். எனவே இந்த ஆசனம் Padmasana - பத்மாசனம் என்றும், கமலாசனம் என்றும் அழைக்கப்படுகிறது. பத்மாசனம், ஸ்வஸ்திகாசனம் இந்த இரண்டுமே சிலருக்கு பயிற்சி செய்வது கடினமாக இருக்கலாம். அவர்களின் உடல் அமைப்பும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அப்படியானவர்கள் தியானம் பயில்வதற்கு சுகாசனத்தில் உட்காரலாம். சுகாசனம் என்பது வேறொன்றும் இல்லை... நாம் சாதாரணமாக சம்மணம் போட்டு உட்காருகிறோமல்லவா அதுதான் சுகாசனம். "சம்மணம்போட சங்கடம் இல்லை" என்று ஒரு பழமொழியும் உண்டு. எனவே, எளிமையான இந்த சுகாசனத்தை எப்படி பயிற்சி செய்வது என்பதனை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷீவல் லிங்க் (visual link preview) என்னும் பேனர் (Banner) ஐ ஒரு தட்டு தட்டுங்க சுகாசனத்தில் ஜம்முன்னு உட்காருங்க... Sukhasana - சுகாசனம் - Personality Fittingநாம் சாதாரணமாக சம்மணம் போட்டு உட்காருகிறோமல்லவா அதுவே Sukhasana - சுகாசனம். அதாவது சம்மணம் போட்டுகொண்டு ஜம்மென்று உட்காரவேண்டியதுதான்.