"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Titli Asana – தித்லி ஆசனம்

Titli Asana – தித்லி ஆசனம். இன்று யோகாசனப் பயிற்சியானது உலக மக்களிடையே தனிக்கவனம் பெற்று வருகிறது. பல இளம் வயதினர் அழகை மேம்படுத்தவும் ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் யோக பயிற்சியை நாடுகின்றனர்.

யோகாசனப் பயிற்சியானது அழகையும், ஆரோக்கியத்தையும் மட்டுமல்ல. உடலிலுள்ள நாடி, நரம்புகளையெல்லாம் சுத்தப்படுத்தும் வேலையையும் செய்வதால் மன அமைதியையும், நல்ல சிந்தனையையும் தரவல்லது.

இந்த பதிவில் மன அமைதியை தரக்கூடிய அதே  வேளையில் ஆரோக்கியத்தையும் தரக்கூடிய ”தித்லி” ஆசனம் என்னும் பத்ராசனத்தைப்பற்றியும் அதை பயிற்சி செய்யும் முறையை பற்றியும்தான் பார்க்க இருக்கின்றோம்.

“Titli” என்றால் “வண்ணத்துப்பூச்சி” (Butterfly) என்று பொருள். வண்ணத்துப்பூச்சி என்றால் சாதாரண வண்ணத்துப்பூச்சி அல்ல “வண்ணமயமான வண்ணத்துப்பூச்சி” என்று பொருள்.

Titli asana - Butterfly Pose.

மேலே நீங்கள் பார்க்கும் படத்தில் உள்ளதுதான் Titli Asana – தித்லி ஆசனம்.

அந்த ஆசனத்தை கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் முழங்கால்கள் இரண்டும் தரையில் படியாமல் வண்ணத்துப்பூச்சியின் இறக்கைபோல சிறிது உயர்ந்து இருப்பதை பார்க்கலாம். இதனால்தான் இதனை “வண்ணத்துப்பூச்சி இருக்கை” என்று அழைக்கின்றனர்.

இதற்கு “செருப்பு தைப்பவரின் ஆசனம்” என்று மற்றொரு பெயரும் உள்ளது!.

செருப்பு தைப்பவர்களை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?.. அவர்கள் செருப்பு தைக்கும்போது இந்த ஆசனத்தில்தான் அமர்ந்திருப்பார்கள்..

Cobbler Pose.

செருப்பு தைப்பவரை ஆங்கிலத்தில் “Cobbler” என்று குறிப்பிடுகின்றனர். எனவேதான் இந்த ஆசனத்தை “செருப்பு தைப்பவரின் ஆசனம்” என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் “Cobbler Pose” என குறிப்பிடுகின்றனர்.

இதனை “பத்ராசனம்” எனவும் குறிப்பிடுகின்றனர்… “பத்ரா” என்றால் “அதிர்ஷ்டம்” அல்லது “மங்களகரமானது” என்று பொருள். பத்ராசனம் என்றால் “மங்களகரமான இருக்கை” என்று பொருள்.

சரி, இனி இந்த தித்லி ஆசனத்தை எப்படி பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்…

Titli Asana – தித்லி ஆசனம் – அடிப்படைத் தகவல்கள்

பெயர் – Titli Asana.

தமிழ் -தித்லி ஆசனம், பத்ராசனம்.

சமஸ்கிருதம் – Titli Asana – Bhadrasana.

ஆங்கிலம் – Butterfly Pose.

வேறுபெயர்கள்

  • Cobbler Pose
  • Bhadrasana

ஆசனத்தின் நிலை – Meditation Pose, Seated Pose.

பயிற்சியின் கடின தன்மை – Advanced.

உடல் கோணம் – Meditative, Stretch.

ஒரு கெட்டியான விரிப்பின் மீது இரண்டு கால்களையும் நீட்டியபடி உட்காரவும். அதன்பின் இரு உள்ளங்கால்களையும் ஒன்றாக சேர்த்து கும்பிட்டது போன்ற நிலையில் வைத்து இரண்டு முழங்கால்களையும் மடித்து உங்கள் இடுப்புக்கு அருகில் கொண்டு வாருங்கள். குதிகால்கள் பிறப்புறுப்பை தொட்ட நிலையில் இருக்கவும்.

dog vadivelu angry
dog friends
Titli asana - testicles totally damaged

இரண்டு கை விரல்களையும் ஒன்றாக கோர்த்து இரண்டு பாதங்களையும் ஒன்றாக இணைத்து பிடித்துக்கொள்ளவும். இந்த நிலையில் முழங்கால்கள் தரையில் படிந்தபடி இருக்கவேண்டும். இந்த நிலையில் உங்கள் முதுகு கூன் விழாமல் நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

இந்த பயிற்சி செய்யும்போது முழங்கால்கள் தரையில் படியாமல் வண்ணத்துப்பூச்சியின் இறக்கைபோல சிறிது உயர்ந்து இருப்பதை பார்க்கலாம். அதற்காக கவலைப்பட வேண்டாம்.

வண்ணத்துப்பூச்சி இறக்கைகளை மேலும் கீழும் மெதுவாக அசைக்கும் அல்லவா?!அதுபோல மெதுவாக இரு தொடைப்பகுதிகளை மேலும் கீழுமாக 10 முதல் 15 தடவை அசைத்து அசைத்து கொஞ்சம் கொஞ்சமாக தரையில் பதிக்க முயற்சி செய்துவர சில மாத பயிற்சிக்குப்பின் கால்கள் தரையில் படிய ஆரம்பிக்கும்.

கால்களை மேலும் கீழும் அசைக்கும் பயிற்சியின்போது பட்டாம்பூச்சிகள் அதன் இறக்கைகளை அசைப்பது போன்ற ஒரு தோற்றத்தை தருவதால்தான் இந்த ஆசனத்தை “வண்ணத்துபூச்சி இருக்கை” (Butterfly Pose) என அழைக்கின்றனர்.

சரி,… இனி பயிற்சியை தொடர்ந்து பார்ப்போம்…

பயிற்சியின் போது மூச்சை மெதுவாக நேர்த்தியாக ஒரே சீராக சுவாசிக்கவும். மனதையும் அமைதியாக வைத்திருங்கள். தோள்களையும் தளர்வாக வைத்திருங்கள்.

இந்த ஆசனத்தில் 2 நிமிடங்கள் இருக்கவும்.

இந்த பயிற்சியை திரும்ப திரும்ப 2 முதல் 5 தடவை செய்து வரவும்.

இந்த பத்ராசனம் (Bhadrasana) என்னும் Titli Asana – தித்லி ஆசனம் தொடர்ந்து செய்வதால் என்ன பலன்களெல்லாம் கிடைக்கும் என கேட்கிறீர்களா?..

உங்கள் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே இதில் பலன்கள் கிடைக்கின்றன.

”சங்கடம் போக்க சம்மணம் இடுங்கள்” என்று ஒரு பழமொழி உண்டு.. உண்மைதான்… தித்லி ஆசனம் பயிற்சியால் சங்கடங்கள் அகலும். முக்கியமாக மனதிற்கு அமைதியை கொடுத்து மகிழ்ச்சியைப் பெருக்குகின்றன.

இடுப்பு மற்றும் கணுக்கால்களின் நெகிழ்வு தன்மையை மேம்படுத்துகின்றன. கால் தசைகள் மற்றும் முதுகு பகுதிகளை வலுப்படுத்துகிறது.

குதிகால், முழங்கால், தொடை பகுதிகள் நன்கு பலம் பெறும். கால் நரம்புகள் புத்துணர்வு பெறும். பலபேர் முழங்கால் மூட்டுவலியால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு இது சிறந்த ஆசனம் எனலாம்.

Titli asana - Butterfly Pose. girl

இந்த ஆசனத்தில் உடலை நேராக நிமிர்த்தி மூச்சை இழுத்து ஒரே சீராக நேர்த்தியாக விடுவதால் நுரையீரல் வலுபெறுகின்றன. முதுகெலும்புகள் பலம் பெறுகின்றன. வயிற்றின் உள்ளுறுப்புகள் நன்கு வேலை செய்ய தூண்டுகின்றன.

ஆண், பெண்களின் மலட்டுத்தனம் நீங்கும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை நிவர்த்தி செய்கிறது. வயிற்று வலிகளையும் தணிக்கிறது. அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தையும், பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தையும் மேம்பட செய்கிறது. இயற்கையாக பிரசவம் நடப்பதற்கு வழியையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.

ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிகளை இது மசாஜ் செய்வதால் அவற்றின் ஆரோக்கியம் மேம்பட்டு செயல்பாடுகள் அதிகரித்து விந்தணுக்களை பெருக்குகிறது. இந்த ஆசனம் செய்யும்போது இதனுடன் “தனுராசனம்” (Dhanurasana) என்னும் ஆசனத்தையும் செய்துகொண்டுவர ஆண்மை பன்மடங்கு அதிகரிக்கும்.

முக்கிய குறிப்பு

மூட்டுவலி, முழங்கால் மூட்டுவலிகளை வராமல் தடுக்கும் திறன் இதற்கு உண்டு என்பது உண்மைதான் என்றாலும், கணுக்கால்கள், முழங்கால்கள், இடுப்பு ஆகியவைகளில் வலிகளோ, வீக்கங்களோ, காயங்களோ, தசைபிடிப்புகளோ இருக்கும் சமயங்களில் இந்த ஆசனத்தை செய்தல்கூடாது.

இந்த ஆசனம் பெண்களுக்கு இயற்கையாக பிரசவம் நடப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு இந்த ஆசனத்தை செய்யவே கூடாது. அது கரு சிதைவுக்கு வழிவகுத்துவிடும்.

கருத்தரித்து நான்கைந்து மாதங்களுக்கு பின் இந்த பயிற்சியை செய்யலாம் என்றாலும் வயிறு, இடுப்பு, தொடைகள் மற்றும் கால்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுத்தல் கூடாது. தொடர்ந்தாற்போல அதிக நேரம் உடலை வருத்தி இதனை பயிற்சி செய்தலும் கூடாது. அது ஆபத்தில் முடியலாம்.

கர்ப்ப காலத்தில் அடிக்கடி தலைசுற்று, மயக்கம் உட்பட பல அசௌகரியங்களை சந்திக்கும் பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கலாம்.

உங்களுக்கு சிறுநீரகத்தில் பிரச்னை உள்ளதா?… அப்படி என்றால் இந்த ஆசனம் செய்வதை தவிருங்கள்.

மூட்டுவலி அழற்சி, முடக்குவாதம் உள்ளதா?… அப்படி என்றால் இந்த ஆசனம் செய்வதை தவிருங்கள்.

நீங்கள் சமீபத்தில்தான் முழங்கால், இடுப்பு அல்லது முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டீர்களா?… அப்படி என்றால் இந்த ஆசனம் உங்களுக்கானது அல்ல.

அதிகமான உடல்வலி மட்டுமல்லாமல் சிறிய காயங்களால் கூட உங்களின் பெருங்காயம் அதிக அளவில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறதா?!.. அப்படி என்றால் அது சரியாகும்வரை இந்த ஆசனத்தை கொஞ்சம் தள்ளிப் போடலாமே?…

அதுபோல இதய பிரச்சனை உள்ளவர்களும் தொடர்ந்தாற்போல நெடுநேரம் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!