"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Ardha Bhujangasana – அர்த்த புஜங்காசனம்

நாம் இந்த பதிவில் Ardha Bhujangasana – அர்த்த புஜங்காசனம் என்னும் பயிற்சி செய்வதற்கு எளிதான ஆசனம் ஒன்றைத்தான் பார்க்கப்போகின்றோம். யோகாசனங்களில் அனைத்து வயதினரும் எளிதாக கற்றுக்கொள்ள முடியாத, பயிற்சி செய்வதற்கு மிகவும் கடினமாக உள்ள ஆசனங்கள் பல இருக்கின்றன. பலருடைய உடல் கடினமான ஆசனங்களை செய்வதற்கு வளைந்து கொடுப்பதில்லை.

ஆனால், அதே வேளையில் அனைவராலும், அனைத்து வயதினராலும் எளிதாக செய்யக்கூடிய ஆசனங்களும் நிறைய இருக்கின்றன.

எனவே வயதானவர்கள் மற்றும் உடல் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை குறைவாக இருப்பவர்கள் கடின ஆசனங்களை பயில முயற்சி செய்து பல உடல் பிரச்சனைகளை வருவித்துக் கொள்வதை விட மிக எளிதாக இருக்கும் யோகாசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்துவருவதே சிறப்பு.

Ardha Bhujangasana

நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கையை விரும்புபவர்கள் தினந்தோறும் காலை அல்லது மாலை அல்லது இரு வேளைகளும் சில எளிய வகையான ஆசனங்களை தேர்ந்தெடுத்து அவற்றை தொடர்ந்து பயிற்சி செய்து வரலாம். அப்படியான ஒரு எளிய ஆசனத்தைப் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

ஆம்,… நாம் இப்போது குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என அனைவராலும் எளிதில் பயிற்சி செய்யும் விதமாக அமைந்துள்ள எளிய ஆசனமான ”அர்த்த புஜங்காசனம்” (Aardha Bhujangasana) பற்றிதான் இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்…

வாருங்கள் பார்க்கலாம்…

பெயர் – Ardha Bhujangasana.

தமிழில் – அர்த்த புஜங்காசனம்.

சமஸ்கிருதம் – Ardha Bhujangasana.

ஆங்கிலம் – Half Cobra Pose.

வேறுபெயர்கள்

  • Salamba Bhujangasana.
  • Sphinx Pose.
  • Baby Cobra Pose.
  • Niravalasana.
  • Yin yoga Sphinx Pose.

ஆசனத்தின் நிலை – Prone, Forearms, Abdomen.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Back-Bend.

Ardha Bhujangasana male

“புஜம்” என்றால் தோள்பட்டையை சுற்றியுள்ள பகுதிகளைக் குறிக்கும் சொல். ஆசனம் செய்யும்போது இடுப்புக்கு மேல் உள்ள உடலின் பளு முழுவதையும் புஜமே தாங்குவதால் அதற்கு “புஜங்காசனம்” என்று பெயர்.

ஆனால்,.. இங்கு நாம் பார்த்துக் கொண்டிருப்பது புஜங்காசனம் அல்ல. மாறாக “அர்த்த புஜங்காசனம்” பற்றி பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

புஜங்காசனம்” பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள “விஷீவல் லிங்க்” (visual link) என்னும் தொடுக்கை உங்கள் விரல்களால் சொடுக்கவும்…

“அர்த்த” என்றால் “பாதி” என்று பொருள். புஜங்காசனத்தைப்போல உடலின் பளு முழுவதையும் புஜம் தாங்குவதில்லை. பகுதியைத்தான் புஜம் தாங்குகின்றன. மீதி பாதியை வயிறு தாங்குகின்றன. எனவே பாதி பளுவை மட்டுமே புஜம் தாங்குவதால் இதற்கு “பாதி புஜங்காசனம்” அதாவது “அர்த்த புஜங்காசனம்” (Ardha Bhujangasana) என பெயர் பெறுகிறது.

Continue the practice for Ardha Bhujangasana

அர்த்த புஜங்காசனம் – செய்முறை

முதலில் ஒரு விரிப்பில் இரு கால்களையும் ஒன்று சேர்ந்தாற்போல நேராக நீட்டி குப்புற படுக்கவும். இரு கைகளையும் தோள்பட்டைக்கு இணையாக கிடைமட்டமாக வைக்கவும்.

பின் இரு கைகளின் உள்ளங்கைகளையும் தலையின் அருகில் இரு பக்கங்களிலும் வைத்து கழுத்தை நிமிர்த்தி தலையை மெதுவாக மேலே தூக்கவும். வயிற்றிலிருந்து தலைவரை உடல் மேலெழும்பியபடி இருக்கவேண்டும்.

முழங்கை மற்றும் உள்ளங்கைகள் தரையில் படிந்தபடி இரு கைகளும் ” ட”  வடிவத்தில் இருக்க வேண்டும். இரு கால்களின் மேல் பாதங்களும் தரையில் படர்ந்தபடி இருக்க வேண்டும். இந்த ஆசனத்தில் 15 முதல் 20 வினாடிகள் இருந்து பழைய நிலைக்கு திரும்பவும்.

இந்த ஆசனத்தை 5 அல்லது 6 தடவை பயிற்சி செய்யவும்.

”அர்த்த புஜங்காசனம்” (Ardha Bhujangasana) என்னும் இந்த ஆசனமானது சுவாசக்கோளாறு, ஆஸ்துமா உட்பட மார்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சீர் செய்வதோடு மலச்சிக்கலையும் நிவர்த்தி செய்யும் வல்லமை கொண்டது.

இது முதுகெலும்பையும், தோள்பட்டையையும் வலுவாக்கும். மார்பு மற்றும் வயிறு பலம் பெறும். சுவாசக்கோளாறுகளை சரி செய்யும். மலச்சிக்கல் விலகும்.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

சிறிய இடையை விரும்பும் பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம் இது. ஏனென்றால் எவ்வளவு பெரிய “தடி” இடையாக இருந்தாலும் அதை “பிடி” இடையாக மாற்றும் திறன் இதற்கு உண்டு.

இதனுடன் எளிமையான வேறு சில ஆசனங்களையும் சேர்த்து பயிற்சி செய்து வர “பிடி” இடையும் “கொடி” இடையாக மாற அதிக வாய்ப்பு உண்டு.

எது எப்படியோ… ஒவ்வொரு தடவையும் ஆசனப் பயிற்சியை நிறைவு செய்யும்போது கடைசி ஆசனமாக ”சவாசனம்”  கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

இந்த ஆசனம் அடிவயிற்றுப் பகுதிகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துவதால் கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக இந்த ஆசனத்தை செய்தல்கூடாது.

சமீபத்தில் முதுகுதண்டு, இதயம், வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்தல்கூடாது.

முதுகெலும்பு வட்டு விலகல் (Herniated Disc / Slip Disc), ஸ்பான்டிலைடிஸ் (Spondylitis) மற்றும் கடுமையான முதுகு காயம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவேண்டும்.

வயிற்றுப்புண் (Peptic Ulcer), குடல்காசநோய் (Intestinal TB) மற்றும் குடலிறக்கம் (Hernia) உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக சுவாசக்கோளாறு, ஆஸ்துமா நிவர்த்தியாகும்.

இது முதுகெலும்பையும், தோள்பட்டையையும் வலுவாக்கும். மார்பு மற்றும் வயிறு பலம் பெறும். மலச்சிக்கல் விலகும்.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளும் நீங்கும் என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் முதுகுதண்டு, இதயம், வயிறு, இடுப்பு ஆகிய பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்தல்கூடாது.

முதுகெலும்பு வட்டு விலகல் (Herniated Disc / Slip Disc), ஸ்பான்டிலைடிஸ் (Spondylitis) மற்றும் கடுமையான முதுகு காயம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் கண்டிப்பாக இந்த ஆசனத்தை செய்தல்கூடாது.

வயிற்றுப்புண் (Peptic Ulcer), குடல்காசநோய் (Intestinal TB) மற்றும் குடலிறக்கம் (Hernia) உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “குடல்காசநோய்” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!