"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Pirai Asana – பிறையாசனம்

Pirai Asana – பிறையாசனம். மனித உடல் நோயின்றி வாழ கடின உழைப்பு அவசியம். முன்பெல்லாம் அனைவருக்குமே கடின உழைப்பு இருந்தது. இதனால் ஆரோக்கியமும் குறைவில்லாமல் இருந்தது. ஆனால் இப்போதோ உழைப்பு என்றாலே அது பலபேருக்கு கடினமானதாக இருப்பதால் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகிவிட்டது.

எனவே இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் திரும்ப பெறவேண்டுமெனில் உழைப்புக்கு பதிலாக வேறு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இங்கேதான் நமக்கு கைகொடுக்க வருகிறது உடற்பயிற்சி.

Continue the practice for - Pirai Asana. Arc of the Moon Pose.

பரபரப்பும் மன அழுத்தமும் மலிந்துகிடக்கும் இவ்வேளையில் வெறும் உடலுக்கு மட்டும் பயிற்சி அளிப்பதோடு நிறுத்திவிடாமல் மனதிற்கும் பயிற்சியளிக்க வேண்டியிருப்பதால் இக்கட்டான இந்த சூழ்நிலையில் நமக்கு கைகொடுக்க வருகிறது யோகாசன பயிற்சிகள்.

யோகாசன பயிற்சியில் பல கடினமான பயிற்சிகள் இருந்தாலும் ஆரம்பக்கட்ட பயிற்சியாளர்கள் பயிற்சி செய்வதற்கென சில எளிமையான பயிற்சிகளும் உள்ளன. முதன்முதலாக பயிற்சியில் ஈடுபடுபவர்கள் அப்படியான எளிமையான ஆசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்வது சிறப்பு. அவற்றில் ஒன்றுதான் நாம் இப்போது பார்க்கப்போகும் “பிறையாசனம்” (Pirai Asana) என்னும் பயிற்சியாகும்.

இந்த பயிற்சி செய்யும்போது நம்முடைய உடல் வடிவம் “மூன்றாம் பிறை” போன்ற வடிவில் காணப்படுவதால் இது “பிறையாசனம்” என பெயர் பெற்றது.

வாருங்கள் பிறையாசனம் பயிற்சி செய்யும் விதத்தை தெரிந்து கொள்ளலாம்.

பெயர் – Pirai Asana.

தமிழில் – பிறையாசனம்.

சமஸ்கிருதம் – Pirai Asana.

ஆங்கிலம் – Arc of the Moon Pose.

வேறுபெயர்கள் –

ஆசனத்தின் நிலை – Standing.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Back-Bend, Stretch.

இரு கால்களுக்கிடையேயும் சுமார் இரண்டு அடி இடைவெளி இருக்கும்படி கால்களை அகட்டி வைத்துக்கொண்டு நேராக நிற்கவும். பின் இரு கைகளையும் தலைக்கு மேலாக நேராக உயர்த்தவும்.

Continue the practice for - Pirai Asana.  Arc of the Moon Pose.

அதன்பின் கைகளையும் உடலையும் மூச்சை உள்ளுக்கிழுத்தபடியே பின்னால் மெதுவாக வளைக்கவும். இந்நிலையில் உள்ளங்கை மேலே பார்த்தபடி இருக்கட்டும். 20 வினாடிகள் இதே நிலையில் இருக்கவும். மூச்சை இயல்பாக விடவும்.

சுமார் 20 வினாடிகள் கழித்து உடலை நேராக்கவும். சில வினாடிகள் ஓய்வுக்குப்பின் மீண்டும் முன்போலவே உடலை பின்னோக்கி வளைத்து பயிற்சி எடுக்கவும்.

இந்த ஆசனத்தை இரண்டு அல்லது மூன்று தடவை பயிற்சி செய்யவும்.

இதற்கு மாற்று ஆசனமாக விளங்குவது “பாத ஹஸ்தாசனம்“ (Patha Hastasana). எனவே பிறையாசன பயிற்சி முடிந்தவுடன் அடுத்த ஆசனமாக பாதஹஸ்த்த ஆசனம் செய்தல் வேண்டும்.

பாதஹஸ்த்த ஆசனம் செய்வது எப்படி என்று ஆறிய ஆர்வமான இருக்கின்றது அல்லவா?!!…

உங்களுக்காகவே அடுத்து கொடுக்கப்பட்டுள்ள “விஷீவல் லிங்க்” (visual link preview) ஐ கிளிக்குங்க… பாத ஹஸ்தாசனத்துக்குள்ள என்டர் ஆகுங்க…

பயிற்சியின் பலன்கள்

இந்த பிறையாசன பயிற்சியால் முதுகுவலி, கழுத்துவலி நீங்குவதோடு முதுகுத்தண்டு நன்கு நெகிழும் தன்மையை பெறுகிறது. இருதயம் மற்றும் நுரைஈரலிலுள்ள தசைகள் நன்கு இழுக்கப்பட்டு இரத்த ஓட்டத்தைப் பெறுவதால் இரு உறுப்புகளும் நன்கு வலிமையை பெறுகின்றன.

இப்பயிற்சியால் உடம்பின் இரத்த அழுத்தம் சீராகிறது. சுவாசமண்டலத்தின் இயக்கம் மேம்படுகிறது. முதுகெலும்பு வளையும் தன்மையை பெறுகிறது. இதனால் முதுகு மற்றும் இடுப்பு பலம் பெறுகின்றன.

உடலிலுள்ள அத்தனை நாடிநரம்புகளும் தூண்டப்படுவதால் அனைத்து உறுப்புகளுக்கும் சுத்தமான இரத்தம் பரவி உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. இளமை மேலிடும். கூன்முதுகு நிமிரும்.

மார்புக்கூடுகள் விரிந்து நுரையீரல், சுவாச உறுப்புகள் சுறுசுறுப்படைந்து பலம் பெறுவதால் ஆஸ்துமா பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடமுடியும்.

மேலும், இப்பயிற்சி இடுப்புக்கு நல்ல வனப்பையும், வலிமையையும் அளிக்கக்கூடியது.

நம்மால் எவ்வளவு பின்னால் உடலை வளைக்க முடியுமோ அவ்வளவு வளைத்தால் போதுமானது. முதுகில் வலி ஏற்படும் அளவில் உடலை வளைத்தல்கூடாது.

ஆரம்பத்தில் இதனை பயிற்சி செய்ய கடினமானதாக இருக்கலாம். தொடர்ந்து பயிற்சி செய்ய எளிதானதாக மாறும்.

இந்த ஆசனம் பயிலும்போது கால்மூட்டுகள் வளையாமல் இருக்கவேண்டியது அவசியம்.

கழுத்து பிரச்சனை மற்றும் தோள் வலி, முதுகுவலி, இடுப்புவலி, கால்வலி உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்வதை தவிர்க்கவேண்டும்.

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக முதுகுவலி, கழுத்துவலி நீங்குவதோடு முதுகுத்தண்டு நன்கு நெகிழும் தன்மையை பெறுகிறது.

இப்பயிற்சியால் கூன் விழுந்த முதுகு நிமிரும்.

மார்புக்கூடுகள் விரிந்து நுரையீரல், சுவாச உறுப்புகள் சுறுசுறுப்படைந்து பலம் பெறுவதால் ஆஸ்துமா பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடமுடியும் என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் கழுத்து பிரச்சனை மற்றும் தோள் வலி, முதுகுவலி, இடுப்புவலி, கால்வலி உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்வதை தவிர்க்கவேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “கழுத்துவலி” பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுக்கலாம். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!