Balasana - பாலாசனம். உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும், நோயின்றி இயங்க வேண்டுமெனில் உடலுக்கு முறையான பராமரிப்பு தேவை. உடலிலுள்ள கழிவுப் பொருட்கள் முறையாக அவ்வப்போது நீக்கப்பட்டாலே முழு ஆரோக்கியம் கிடைத்துவிடும். நம் உடலில் சேரும் கழிவுப்பொருட்கள் மற்றும் இரத்தத்தில் தேக்கமடையும் கழிவுப் பொருட்களை அவ்வப்போது நீக்கப்பட வேண்டுமெனில் எளிமையான உடற்பயிற்சிகள் உடலுக்கு அவசியம். அப்படியான பயிற்சிகளில் யோகாசனப் பயிற்சியே சிறந்தது எனலாம். ஏனெனில் உடலை மென்மையாக மசாஜ் செய்வதின் மூலம் உடலை துவளும் தன்மைக்கு கொண்டு வருவதால் அனைத்து உறுப்புகளுக்கும் புதிய இரத்தம் பாய்ந்து அதன் இயக்கத்தை சீராக்கி உடலை ஒரு ஆரோக்கியமான சூழ்நிலைக்கு கொண்டு செல்கிறது. இது உடலை பிற பயிற்சிகளைப் போல் இறுகச் செய்வதில்லை. எனவே அனைத்து உறுப்புகளுக்கும் தடையில்லாமல் இரத்தம் பாய்ந்து ஆரோக்கியத்திற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது. நாம் இன்று இங்கு பார்க்கப்போவது மன அழுத்தத்தை போக்கும் ”பாலாசனம்” (Balasana) என்னும் பயிற்சியைப் பற்றித்தான். வாருங்கள் பார்க்கலாம். Balasana - பாலாசனம் - அடிப்படைத் தகவல்கள் பெயர் - Balasana. தமிழில் - பாலாசனம். சமஸ்கிருதம் - Balasana. ஆங்கிலம் - Child pose. வேறுபெயர்கள் Wide Child pose. Prasarita Balasana. Extended Child pose. Utthita Balasana. Tadpole Pose. Shishu Asana. ஆசனத்தின் நிலை - Prone, Abdomen. பயிற்சியின் கடின தன்மை - Beginner. உடல் கோணம் - Forward-Bend, Stretch, Restorative. பயிற்சிக்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை ஒரு சிறு குழந்தை எப்படி தன் முதல் அரவணைப்பிற்காக ”அம்மா” என்னும் வார்த்தையை தேர்ந்தெடுக்கிறதோ அது போல தன் ஆரோக்கியத்திற்காகவும், மன அழுத்தத்தை போக்கிக் கொள்வதற்காகவும் இயற்கையாகவே அதன் உள்ளுணர்வின் கட்டளைக்கேற்ப அது முதலில் தேர்ந்தெடுக்கிற பயிற்சி எதுவென்றால் அது இனி நாம் பார்க்கப் போகும் பயிற்சியைத்தான். ”பாலப் பருவம்” என்றால் குழந்தைப் பருவத்தைக் குறிக்கும். குழந்தை முதலில் அமர்வதற்கு தேர்தெடுக்கும் ஒரு ஆரோக்கியமான இருக்கை முறையை நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பயின்றுகொள்ள வலியுறுத்துவதால் இதற்கு Balasana - பாலாசனம் என்று பெயர். பாலாசனம் என்றால் குழந்தை முதன்முதலாக எப்படி உட்காருமோ அப்படி உட்காரும் முறை என்று பொருள். இந்த ஆசனத்தை செய்வது மிக எளிது. இது மன அழுத்தத்தை நீக்கும் அற்புத ஆசனம் எனலாம். இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதற்கு முன்னால் ஒன்றை கவனத்தில் கொள்ளவேண்டியது மிக மிக அவசியம். இந்த ஆசனம் வஜ்ராசனத்தில் அமர்ந்த நிலையில் பயிற்சி செய்யப்படுகிறது. எனவே, இந்த ஆசனத்தை கற்றுக்கொள்வதற்கு முன்னால் வஜ்ராசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டியது அவசியம். எனவே, வஜ்ராசனம் செய்வது எப்படி என்பதனை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷீவல் லிங்க் (visual link) ஐ தட்டுங்க... மொதல்ல வஜ்ராசனத்தைக் கற்றுக்கொள்ளுங்க... Vajrasana - வஜ்ராசனம் - Personality Fittingவஜ்ரம் என்றால் வைரம் என்று பொருள். இதனை பயிற்சி செய்து வருவதினால் வைரம் போல் உடல் உறுதி பெறும் என்பதால் Vajrasana - வஜ்ராசனம் என்று பெயர். சரி, வஜ்ராசனத்தை கத்துக்கிட்டீங்களா?!!... இனி இந்த பாலாசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்.... பாலாசனம் - செய்முறை இரண்டு கால்களையும் மடக்கி வஜ்ராசனத்தில் அமர்வது போல முழங்கால்கள் மீது அமரவும். அதன்பின் இரண்டு கைகளையும் முன்னோக்கி நீட்டி குழந்தைகள் படுப்பதுபோல நெற்றி தரையில் படும்படி குனியவும். மூச்சை சீராக விடவும். இதே நிலையில் 15 முதல் 20 வினாடிகள் அமரவும். பிறகு மெதுவாக நேராக நிமிர்ந்து உட்காராவும். சில வினாடிகள் ஓய்வுக்குப்பின் மீண்டும் முன்போல் பயிற்சி எடுக்கவும். 5 அல்லது 6 தடவை பயிற்சி செய்யலாம். https://youtu.be/QD2QLyIYpWU Balasana - பாலாசனம் - பயிற்சியின் பலன்கள் இது மன அழுத்தத்தை நீக்குகிறது. இதய துடிப்பு மற்றும் சுவாசத்தை சீராக்குகிறது. தண்டுவட நரம்புகளுக்கு வலிமை கொடுக்கிறது. முதுகு வலியை குணப்படுத்துகிறது. முழங்கால் வலியை நீக்குகிறது. உணவு செரிமானம் ஆகும் திறனை அதிகரிக்கிறது. தொப்பையை நீக்குகிறது. வயிற்றுக் கோளாறுகளை போக்குகிறது. கால் முட்டி முதல் பாதம் வரை பலத்தைக் கொடுக்கிறது. உடலின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. நரம்புமண்டலத்தை தூண்டி பதட்டம் மற்றும் மனச்சோர்வை குறைக்கிறது. உணர்சிகளை சமநிலைப்படுத்துகிறது. முக்கிய குறிப்புகள் முழங்கால், கணுக்கால், தோள்கள் மற்றும் மணிக்கட்டுகளில் காயங்கள் எதாவது ஏற்பட்டிருந்தால் இந்த பயிற்சியில் ஈடுபட வேண்டாம். கடுமையான மூட்டுவலி (Joint Pain) இருந்தாலும் இந்த பயிற்சியினை தவிர்க்கவும். இடுப்பு மற்றும் வயிறு பகுதிகளில் அறுவை சிகிச்சை செய்திருந்தாலும் இந்த யோகாசனத்தை தவிர்க்கவும். கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும். குழந்தை பிரசவித்த பின்பும்கூட சில மாதங்கள் இந்த ஆசனத்தை பயிற்சி செய்தல் கூடாது. இந்த பாலாசனத்தைப்போலவே சிசுபாலாசனம் (Shishupalasana - Hindolasana) என்று ஒரு பயிற்சியும் உள்ளது. இதுவும் உடலுக்கு அதிக நன்மைகளை பெற்றுத்தரும் பயிற்சிதான். இப்பயிற்சியைப்பற்றி தெரிந்துகொள்ள அடுத்துள்ள விஷீவல் லிங்க் (visual link) ஐ உங்கள் விரல்களால் கிளிக் செய்யுங்கள். Shishupalasana - சிசுபாலாசனம் - Personality Fittingசிசு என்றால் குழந்தை என்று பொருள். Shishupalasana - சிசுபாலாசனம் என்றால் குழந்தையை தாலாட்டுவது போன்ற பாவனையில் இருப்பது என்று பொருள்.