Artha Sirsasana - அர்த்த சிரசாசனம். உடலிற்கும் மனதிற்கும் நலம் பயக்கும் பலவிதமான யோக ஆசனங்களை நாம் அவ்வப்போது தொடர்ந்து பார்த்து வருகிறோம். முந்தைய பதிவில் மூளைக்கு வளம் சேர்க்கும் சிரசாசனத்தைப்பற்றி தெளிவாகப் பார்த்தோம். ஆனால் அந்த சிரசாசனத்தை அனைவரும் எளிதாக பயில்வது சாத்தியமில்லை. ஆசன பயிற்சியில் பலவருடம் தொடர்ந்து தேர்ச்சி பெற்றவர்களாலேயே சிரசாசனத்தை பிழையின்றி பயில முடியும். ஆனால், நாம் இப்போது பார்க்கப்போகும் ஆசனமானது அனைவராலும் எளிதாக பயிற்சி செய்யக்கூடியதாகவே அமைந்துள்ளது. சிரசாசனம் பயிற்சி செய்ய விருப்பமுள்ளவர்கள் ஆரம்பத்தில் நாம் இப்போது பார்க்கப்போகும் ஆசனத்தில் நன்கு தேர்ச்சிபெற்றபின் சிரசாசனம் செய்ய தொடங்கலாம். இதுவும் சிரசாசனம் போலவேதான் என்றாலும் அதில் பாதி. நாம் இப்போது பயிற்சி செய்யப்போகும் ஆசனத்தின் பெயர் “அர்த்த சிரசாசனம்” (Half Headstand). அர்த்த சிரசாசனம் - அடிப்படைத் தகவல்கள். பெயர் - Artha sirsasana. தமிழில் - அர்த்த சிரசாசனம். சமஸ்கிருதம் - Artha sirsasana. ஆங்கிலம் - Half Headstand pose on forearms. வேறுபெயர்கள் - Artha sirsasana on forearms, Upward Facing Staff Pose. ஆசனத்தின் நிலை - Prone, Forearms, Head and shoulders, Toe Balances, Arm Balances. பயிற்சியின் கடின தன்மை - Intermediate. உடல் கோணம் - Inversion, Stretch, Strength, Forward-Bend. “அர்த்த” என்பது வடமொழிச்சொல். இதற்கு பாதி என்று பொருள். “சிரசு” என்றால் தலை என்று பொருள். எனவே அர்த்த சிரசாசனம் (Artha Sirsasana) என்றால் “பாதி சிரசாசனம்” என்று பொருள்படும். சிரசாசனத்தில் முழு உடலும் மேல்நோக்கியபடி அமைந்திருக்கும். ஆனால் இந்த அர்த்த சிரசாசனத்தில் தலையிலிருந்து இடுப்புவரை மட்டுமே மேல்நோக்கி இருக்கும் எனவேதான் இது பாதி சிரசாசனம் என்னும் பொருள்படும்படி “அர்த்த சிரசாசனம்” என அழைக்கப்படுகிறது. சரி,.. இனி இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை பார்ப்போம். Artha Sirsasana - அர்த்த சிரசாசனம் - பயிற்சி முறை கெட்டியான ஜமுக்காளத்தை நான்காக மடித்துப்போட்டு அதன்மேல் மண்டியிட்டு உட்காரவும். இரு கைகளின் விரல்களையும் பிணைத்து உள்ளங்கைகள் உங்களை நோக்கியிருக்கும் படி விரிப்பின்மீது அமைக்கவும். தலையை அந்த இரு உள்ளங்கைகளுக்கும் இடையில் தரையில் ஊன்றி இரு கைகளையும் தலையின் இரு பக்கங்களிலும் முட்டுக்கொடுத்து மூச்சை உள்ளுக்கு இழுத்து நிறுத்திக்கொண்டே இடுப்பை மேல்நோக்கி உயர்த்தவும். இரு கால்களையும் ஒருசேர வைக்கவும். இப்போது உங்கள் உடல் பார்ப்பதற்கு முக்கோண வடிவில் இருக்கும். உங்கள் உடலின் முழு பளுவும் இரு கைகளும், இரு கால்களும் தாங்கியபடி இருக்கவேண்டும். கண்களை மூடிக்கொண்டு மூச்சை சீராக விடவும். 30 வினாடிகள் இதே நிலையில் இருந்து அதன்பின் கால்களை மடக்கி இயல்புநிலைக்கு வந்து முன்புபோல் மண்டியிட்டு உட்காரவும். தரையிலிருந்து தலையை தூக்கும் போது மெதுவாக தூக்கவும். வேகமாக தூக்கினால் சிலருக்கு தலைச்சுற்று ஏற்படலாம். சில வினாடிகள் ஓய்வுக்குப்பின் மீண்டும் முன்போல் இதே பயிற்சியை செய்யவும். https://youtu.be/3SP8O6-tbXc இப்பயிற்சியை திரும்ப திரும்ப 3 முதல் 7 தடவைகள்வரை செய்துவரலாம். பயிற்சியின் பலன்கள் இப்பயிற்சியால் தலைப்பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மூளை சுறுசுறுப்பு பெற்று ஞாபகசக்தி அதிகரிக்கிறது. எனவே இது மாணவர்களுக்கான ஒரு சிறந்த பயிற்சியாக கருதப்படுகிறது. தலைசார்ந்த அனைத்து நோய்களும் நீங்குவதுடன் கண், காது, மூக்கு சார்ந்த பிரச்சனைகள் நீங்குவதுடன் கண்களும் கூர்மையடைகின்றன. தலை, கழுத்து பகுதிகளில் அமைந்துள்ள பிட்யூட்டரி (Pituitary gland) மற்றும் தைராய்டு (Thyroid gland) சுரப்பிகளுக்கு செல்லும் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதால் உடலிலுள்ள பிரச்சனைகள் அனைத்தும் அகலுவதுடன் உடலும் சுறுசுறுப்படைகின்றன. இப்பயிற்சியால் மூளையின் செயல்பாடு அதிகரிப்பதோடு கழுத்து, கை, கால், தோள் மற்றும் முதுகெலும்புகள் வலிமையடைகின்றன. இருதயம் மற்றும் நுரையீரல்களின் செயல்பாடுகளும் அதிகரிக்கின்றன. கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதுடன் முடி உதிர்தலை தடுத்து நிறுத்துகின்றன. முக்கிய குறிப்புகள் ஆண், பெண் இருபாலரும் இப்பயிற்சியை செய்துவரலாம் என்றாலும் தலையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள், அதிக உடல் எடை உள்ளவர்கள், இரத்த அழுத்த கோளாறு உள்ளவர்கள், கண்நோய், காதுவலி, பல்வலி முதலியவைகளால் அவதியுறுபவர்கள், படபடப்பாக உணர்பவர்கள், கழுத்து மற்றும் முதுகுத்தண்டில் பிரச்சனை உள்ளவர்கள் இப்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும் இதய நோய் உள்ளவர்களும் இந்த பயிற்சியை கவனமாக கையாளவேண்டும்.