"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Utkatasana – உட்கட்டாசனம்

Utkatasana – உட்கட்டாசனம். உங்கள் வீடு சாலைகளின் ஓரங்களில் அமைந்துள்ளதா? அப்படியென்றால் இந்த காட்சியை நீங்கள் கண்டிப்பாக பார்த்திருக்கலாம்.

அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு எழுந்து (முறைக்காதீர்கள் இன்று ஒருநாள் மட்டும் சூரிய உதயத்தை பார்ப்பதற்காவது எழுந்து உட்காருங்கள்)  சாலையை எட்டிப் பார்த்தீர்கள் என்றால் வயது வித்தியாசம் இல்லாமல் பலபேர் அரைக்கால் டவுசர் போட்டுக்கொண்டு காதில் எதையோ மாட்டிக்கொண்டு எங்கோ அவசரமாக நடந்து சென்று கொண்டிருப்பார்கள்.

அவர்களை தடுத்து நிறுத்தி எங்கே இவ்வளவு அவசரமாக சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால் தெரியவில்லை என்பார்கள். கொஞ்சம் வற்புறுத்தி கேட்டால் டாக்டர்தான் இப்படி நடக்க சொன்னதாகவும், நடந்தால் ”ஹார்ட் அட்டாக்” வராது என்று அறிவுறுத்தியதாகவும் சொல்வார்கள்.

Utkatasana - Chair pose. Walking exercises

சரி..  உங்கள் டாக்டர் எத்தனை நாள் இப்படி ”பை பாஸ்” ரோட்டில்  நடக்க சொன்னார் என்றால் பதில்கூற தெரியாது.

டாக்டரிடமே கேட்டோம் என்றால் ”பைபாஸ் சர்ஜரி” செய்யும் வரை ”பைபாஸ் ரோட்” டில் நடக்க வேண்டும் என்பார். (போங்கடா நீங்களும் உங்க ”அட்வைஸ்”ம்).

சிறிது காலத்திற்கு பிறகு அதிகமாக நடந்ததால் மூட்டு எலும்பு தேய்ந்து விட்டதாக கூறி அதற்கு தனியாக ஒரு கால் மூட்டு பெல்ட்டும்.. மூட்டுவலி தீர வலிநிவாரண மாத்திரையும் எக்ஸ்ட்ராவாக லிஸ்ட்டில் ஏறும் என்பது வேறு கதை.

பைபாஸ் ரோட்டில் நடப்பதால் இன்னும் ஒரு பிரச்சனை இருக்கிறது. பிரேக் பிடிக்காமல் பின்னால் வரும் ஆட்டோ, மினி பஸ் முதலியன இப்பவே நம்மை பைபாஸ் சர்ஜரிக்கு அனுப்பி வைத்து விடுமோ என்று பயம் வேறு.

இதற்கு வேறு தீர்வே இல்லையா?

கண்டிப்பாக இருக்கிறது.

இரண்டாவது இருதயம் – சோலியஸ்

அதெல்லாம் இருக்கட்டும்… அதற்கும் இந்த ஆசனத்திற்கும் என்ன சம்பந்தம் என கேட்கிறீர்களா? இந்த ஆசனமானது அந்த இரண்டாவது இருதயத்தைப் பலப்படுத்துகிறது. அதிலுள்ள தசைகள், நரம்புகள் மற்றும் திசுக்கள் அனைத்தையும் வலிமையாக்குகிறது. இதனால் நீங்கள் குறைந்த தூரம் நடந்தாலே அதிக பலனை பெறமுடியும்.

எனவேதான் நடைபயிற்சி செய்யும் அனைத்து அன்பர்களுக்கும் இந்த “உட்கட்டாசனம்” பயிற்சி மிகவும் அவசியம் என இங்கு வலியுறுத்தப்படுகிறது.

இதோ நான் சொல்லப்போகும் பயிற்சியை உங்கள் வீட்டிற்குள்ளேயே தினம் காலை, மாலை 5 நிமிட நேரம் பயிற்சி செய்யுங்கள். அதன்பின் பூங்காவில் அல்லது தெருக்களில் நடந்து பாருங்கள். உங்களுக்கே வித்தியாசம் தெரியும். ஆம்,… 2 Km நடந்தாலே 5 km நடந்ததற்கான பலன் கிடைப்பதை நீங்கள் காணலாம்.

அதுசரி, அதென்ன “இரண்டாவது இருதயம்” என கேட்கத்தோன்றுகிறது அல்லவா?…

அந்த இரண்டாவது இருதயத்தைப்பற்றி ”வஜ்ராசனம்” (Vajrasana – Thunderbolt Pose) என்னும் யோகப் பயிற்சியில் விரிவாகக் கொடுத்துள்ளேன். ஏனென்றால், இந்த உட்கட்டாசனத்தைப்போல் வஜ்ராசனமும் இரண்டாவது இருதயமான “சோலியஸ் தசை” (Soleus) யை வலுப்படுத்தும் திறனைக்கொண்டுள்ளது.

எனவே, இந்த இரண்டாவது இருதயமான “சோலியஸ் தசை” (Soleus) யைப்பற்றி தெரிந்துகொள்ள இங்கிருந்தபடியே வஜ்ரானத்திற்குள் செல்ல.. நீங்கள் தினமும் நடந்து போகும் பைபாஸ் ரோட்டின் இடையே குறுக்கிடும் “ஷார்ட்கட் ரோடு”போன்று “ஷார்ட்கட் லிங்க்” கொடுத்துள்ளேன்…

கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷீவல் லிங்க் (visual link) தான் ஷார்ட் கட் லிங்க். நீங்கள் உங்கள் விரல்களால் அதன்மேல் சட்டுன்னு தட்டி… பட்டுன்னு போங்க….

நாம் இப்போது இந்த பதிவில் இங்கே பார்க்கப்போவது “உட்கட்டாசனம்” – Utkatasana என்னும் நாற்காலி ஆசனம் (Chair pose).

இது கால்கள், இடுப்பு, தோள்கள் மற்றும் இரண்டாவது இருதயம் எனப்படும் “சோலியஸ் தசை”யையும் பலப்படுத்த உதவுகிறது. அதுமட்டுமல்லாது முதுகெலும்பை பலப்படுத்தவும் உதவுகிறது.

வாருங்கள் பார்க்கலாம்…

Utkatasana – உட்கட்டாசனம் – அடிப்படைத் தகவல்கள்

பெயர் – Utkatasana.

தமிழில் – நாற்காலி ஆசனம்.

சமஸ்கிருதம் – Utkatasana.

ஆங்கிலம் – Chair pose.

வேறுபெயர்கள் – Fierce Pose, Awkward Pose.

ஆசனத்தின் நிலை – Standing.

பயிற்சியின் கடின தன்மை – Intermediate.

உடல் கோணம் – Forward-Bend, Stretch, strength, Balance.

ஒரு நாற்காலியில் உட்காருவதுபோல் பாவனை செய்வதுதான் இந்த ஆசனத்தின் நிலை.

இந்த ஆசனம் (Utkatasana) பார்ப்பதற்கு எளிதானது போல் உங்களுக்கு காட்சி தரலாம். ஆனால் நிஜம் அப்படியல்ல… நாற்காலியில் உட்காருவது எளிதுதான். ஆனால் இல்லாத நாற்காலியில் உட்காருவது என்பது அவ்வளவு சுலபமானது அல்ல.

Utkatasana - Chair pose.

யாருமே இல்லாத டீ கடையில் யாருக்கு டீ ஆற்றுகிறோம் என்று தெரியாமலேயே டீ ஆற்றுவது எவ்வளவு வலி தரும் நிகழ்வோ அப்படியானதுதான் இதுவும்.

சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்….

முதலில் நேராக நிமிர்ந்து நிற்கவும். பின் இரு கால்களுக்கும் இடையில் 1 அடி இடை வெளி இருக்கும்படி கால்களை விரித்து வைக்கவும். இரு கைகளையும் கிடைமட்டமாக முன்னோக்கி நேராக நீட்டவும்.

Utkatasana - Chair pose. kids

பின் உடலை மெதுவாக கிழிறக்கி நாற்காலியில் உட்காருவது போல் உட்காரவும். முன்பக்கமாக உடலை வளைக்கக் கூடாது. முதுகு நேராக மேல்நோக்கி இருக்க வேண்டும். இயல்பாக மூச்சு விடவும்.

இதே நிலையில் 10 முதல் 30 வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக நேராக நிமிர்ந்து நிற்கவும். சில வினாடிகள் ஓய்வு எடுத்தபின் மீண்டும் முன்போல செய்யவும்.

இதேபோல் 4 அல்லது 5 தடவை இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

பயிற்சியின் பலன்கள்

இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்துகொண்டு வந்தீர்களானால் உங்கள் உடலின் உள்கட்டமைப்பு அத்தனையும் பலம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த பயிற்சியானது உங்கள் தசைகளை அற்புதமாக வலுப்படுத்துகிறது. கால் மூட்டுகளையும் பலப்படுத்துகிறது. இடுப்பு, முதுகெலும்பு, தோள்பட்டைகளை பலப்படுத்துகிறது.

கால்வலி, முழங்கால் வலி, குதிகால் வலிகளை நீக்குகிறது.

வயிற்றுப்பகுதிகளில் உள்ள நாளமில்லா சுரப்பிகளை தூண்டும்.

5 நிமிடம் இப்பயிற்சியை செய்தபின் வெறும் 2 Km மட்டுமே நடைபயிற்சி செய்யுங்கள். 5km நடைப்பயிற்சி செய்ததற்கான பலனை பெறுவீர்கள். இன்னும் கூடுதலான நன்மைகளையும் பெறமுடியும்.

இதனுடன் இதயத்திற்கு வலிமை சேர்க்கும் சில எளிய யோக பயிற்சிகளையும் மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்துவர இரண்டு விதமான ”பைபாஸ்” ம் தேவைப்படாததோடு அனைத்து விதமான இதய நோய்களையும் தவிர்த்து விட முடியும்.

இந்த பயிற்சியால் படிப்படியாக தொப்பையையும் குறைக்க முடியும்.

விளையாட்டு வீரர்களுக்கு அதுவும் குறிப்பாக ஓட்டப்பந்தய வீரர்களுக்கு இந்த பயிற்சி ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.

வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம், தலைசுற்றல் போன்ற உடல் நல பிரச்சனைகள் உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்த்தல் வேண்டும். உடலில் காயங்களால் பதிக்கப்பட்டுள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்த்தல் நலம்.

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக உங்கள் தசைகளை அற்புதமாக வலுப்படுத்துகிறது. கால் மூட்டுகளையும் பலப்படுத்துகிறது. இடுப்பு, முதுகெலும்பு, தோள்பட்டைகளை பலப்படுத்துகிறது.

கால்வலி, குதிகால்வலி மற்றும் முழங்கால் வலிகளை நீக்குகிறது.

வயிற்றுப்பகுதிகளில் உள்ள நாளமில்லா சுரப்பிகளையும் தூண்டுகிறது என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் கர்ப்பிணி பெண்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம், தலைசுற்றல் மற்றும் உடலில் காயம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “குதிகால்வலி” பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!