ஜெயிஷ்டிகாசனம் – Jyestika asana. நோயணுகாமல் உடலைக் காப்பதில் உடற்பயிற்சிக்கு பெரும் பங்கு உண்டு. அவ்வாறான பயிற்சிகளில் உடலின் வெளி உறுப்புகளை மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளையும் இதமாக மசாஜ் செய்து உடலை நோயணுகாமல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் ஆசனங்களே சிறப்பானது எனலாம். ஆசனங்களில் செய்வதற்கு கடினமான ஆசனங்கள் பல இருந்தாலும் அனைவராலும் எளிதில் பயிலும் யோகாசனங்களும் பல இருக்கின்றன. அவைகளுள் ”ஜெயிஷ்டிகாசன”மும் (Jyestika asana) ஒன்று. Jyestika asana குப்புற படுத்துக்கொண்டு செய்யப்படும் இந்த ஆசனமானது மிக எளிது. ஆனால் பலனோ மிக பெரியது. பொதுவாக தொந்தியுடன் கூடிய பருமனான உடலைக் கொண்டவர்களால் எந்த பயிற்சியையும் செய்ய முடியாது. அவ்வாறான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் ”ஜெயிஷ்டிகாசனம்” (Jyestika asana) செய்வதின் மூலம் அதிகப்படியான தொப்பையைக் குறைத்து சீரான உடலமைப்பைப் பெறமுடியும். இனி ஜெயிஷ்டிகாசனம் பயிற்சி செய்வது எப்படி என்பதனை பார்ப்போம்.. செய்முறை. முதலில் விரிப்பில் நெற்றி தரையில் தொடும்படி குப்புற படுக்கவும். இரண்டு கால்களையும் சிறிது அகட்டி வைத்துக் கொள்ளலாம். குதிகால்கள் மேல் நோக்கியும் மேல் பாதங்கள் தரையில் படிந்தபடியும் இருக்கட்டும். இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து தலையின் பின்பகுதியில் வைக்கவும். கையின் மூட்டுப் பகுதி தரையில் படும்படி இருக்கவும். மூச்சை இயல்பாக விடவும். இந்த நிலையில் சிலநிமிடங்கள் இருக்கவும். பின் இயல்பான நிலைக்கு வரவும். பலன்கள். இது பார்ப்பதற்கும் பயிற்சி செய்வதற்கும் எளிதான ஆசனமாக இருந்தாலும் உடல் பருமனானவர்களுக்கு இதன் பலன்களோ அற்புதமானது. கடினமான ஆசனங்களை பயிற்சி செய்ய முடியாதவர்கள் எளிதான ஆசனங்களுடன் இந்த பயிற்சியையும் தொடர்ந்து செய்வதினால் முக்கியமாக வயிற்றிலுள்ள கொழுப்புகள் கரைந்து தொந்தி குறையும். வயிற்றுப்பகுதி தட்டையாகும். முதுகு வலியை குணப்படுத்தும். கழுத்து இறுக்கம் நிவர்த்தியாகும். இது எல்லாவற்றையும் விட மன அழுத்தத்தை போக்கும்.