"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Janu sirsasana – ஜானு சிரசாசனம்

நாம் நம் தளத்தில் தொடர்ந்து பல யோகாசன பயிற்சிகளை பார்த்து வருகின்றோம். இந்த பதிவில் Janu sirsasana – ஜானு சிரசாசனம் என்னும் அற்புதமான ஒரு ஆசனத்தைப் பற்றிதான் பார்க்க இருக்கின்றோம்.

ஜானு சிரசாசனம் (Janu sirsasana – Head On Knee Pose) என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். “ஜானு” என்பது சமஸ்கிருதத்தில் முழங்கால்களைக் குறிக்கும். “சிரசு” என்பது தலையை குறிக்கும். இந்த ஆசனமானது தலையைக்கொண்டு முழங்கால்களை தொடுவதாக அமைவதால் “ஜானு சிரசாசனம்” (Janu sirsasana Pose) என அழைக்கப்படுகிறது.

”பட்சி மோத்தாசனம்” போல்தான் இதுவும் பயிற்சி செய்ய வேண்டுமென்றாலும் இதில் ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில் பஸ்திமோத்தாசனத்தில் இரண்டு கால்களும் நீட்டப்பட்டு பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இதில் ஒருகால் நீட்டி மற்றொரு காலை  மடக்கியபடி பயிற்சி செய்தல் வேண்டும்.

Janu sirsasana - Head On Knee Pose. while Sitting.
janu sirsasana -while-Sitting

இந்த ஜானு சிரசானம் பயிற்சியை தொடர்ந்து செய்வதால் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். கணையம், கல்லீரல், மண்ணீரல் முதலியன சிறப்பாக பணிபுரியும்.

இந்த பதிவில் ”ஜானு சிரசாசனம்” (Janu sirsasana) என்னும் ஆசனத்தை எப்படி பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்.

யோக பயிற்சி செய்ய முற்படுவோர் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அது என்னவெனில் ஒரு குறிப்பிட்ட யோக பயிற்சியை செய்ய முற்படும் போது இந்த பயிற்சி செய்ய நம்முடைய உடல் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமா என்பதனை முதலில் கவனிக்க வேண்டும்.

ஏனெனில், சில யோகாசனங்கள் உடலை நன்கு வளைத்து பயிற்சி செய்யும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால், எல்லோருடைய உடல்களும் நெகிழும் தன்மையுடன் இருக்காது. அப்படி வளையும் தன்மையற்ற உடல்நிலை உள்ளவர்கள் தங்களின் உடலுக்கு ஏற்ற எளிய ஆசனங்களையே தேர்ந்தெடுத்து செய்து வர வேண்டும்.

கடினமான ஆசனங்களை செய்ய முயற்சி மேற்கொண்டால் அது உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

எனவே முதலில் எளிமையான ஆசனங்களை செய்து உடல் நெகிழும் தன்மை பெற்ற பின் கடின ஆசனங்களை செய்ய முன் வர வேண்டும்.

Janu sirsasana - Head On Knee Pose

இந்த பதிவில் சொல்லப்படும் ”ஜானு சிரசாசனம்” (Janu sirsasana) என்னும் ஆசனமானது அனைவரும் எளிதாக பயிற்சிசெய்யும் வகையில் அமைந்துள்ள ஆசனம் அன்று. சிலருக்கு எளிதாக இருக்கலாம். பலருக்கு கடினமாக இருக்கலாம்.

எனவே, பயிற்சி செய்வதற்கு எளிதாக உள்ள வேறு சில ஆசனங்களை சிலகாலம் பயிற்சி செய்து உடல் நன்கு துவளும் தன்மையை பெற்றபின் இந்த “ஜானு சிரசாசனத்தை” பயிற்சி செய்ய முன்வரலாம்.

பெயர் – Janu sirsasana.

தமிழில் – ஜானு சிரசாசனம்.

சமஸ்கிருதம் – Janu sirsasana.

ஆங்கிலம் – Head On Knee Pose.

வேறுபெயர்கள் – Head To Knee Forward Bend, Seated Head To Knee Pose, Head On Knee Forward Bend.

ஆசனத்தின் நிலை – Sitting, Hand-To-Feet.

பயிற்சியின் கடின தன்மை – Intermediate.

உடல் கோணம் – Forward Bend, Side Bend, Twist, Stretch.

ஒரு விரிப்பின் மீது இரு கால்களையும் நேராக நீட்டியபடி நிமிர்ந்து உட்காரவும். பின் இரு கால்களையும் ”V” வடிவில் விரித்து வைக்கவும். பின் வலதுகாலை மடித்து உள்ளங்கால் இடது காலின் தொடையில் அழுந்தும்படியாக மடித்து வைக்கவும்.

Janu sirsasana - Head On Knee Pose. Postur.

பின்னர் இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி அப்படியே தலைக்கு மேலாக மெதுவாக நீட்டி அதன்பின் உடலை முன்னோக்கி வளைத்து இரு கைகளாலும் இடது காலின் பாதத்தை தொடவும்.

தலை இடது காலின் முட்டியை தொட்டபடி இருக்கவேண்டும். இதே நிலையில் 10 முதல் 15 வினாடிகள் இருந்துவிட்டு பின் இரு கைகளையும் நீட்டியபடியே தலைக்கு மேலாக தூக்கி பின் இரு கைகளையும் உடலின் பக்கவாட்டில் மெதுவாக இறக்கி சகஜநிலைக்கு வரவும்.

அதன்பின் கால்களை மாற்றி அதாவது வலது காலை நீட்டி இடதுகாலை மடித்து முன்போலவே செய்யவும்.

இதே போல் 3 முதல் 5 தடவை செய்து வரலாம்.

இது அற்புதமான பலன்களை வாரி வழங்கும் சிறப்பான ஆசனம் எனலாம்.

இந்த பயிற்சியால் தொடை மற்றும் தொடை எலும்புகள், முதுகு மற்றும் முதுகு எலும்புகள் பலம் பெறுகின்றன. விலா எலும்புகள், தோள்கள் மற்றும் கழுத்துகளும் பலம் பெறுகின்றன. அதுமட்டுமல்லாது வயிறு மற்றும் இடுப்பிலுள்ள தசைகளையும் வலுப்படுத்துகின்றன. நெகிழ்வு தன்மையையும் அதிகரிக்கிறது.

கணையம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், கருப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் முதலிய உள்ளுறுப்புகளை அழுத்தி அவைகளை செம்மையாக வேலை செய்ய தூண்டுகின்றன.

அஜீரணம், வாயுத்தொல்லை, உப்புசம் முதலிய அனைத்து வயிறு சார்ந்த பிரச்னைகளையும் நிவர்த்தி செய்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இந்த பயிற்சியில் முதுகெலும்பு நன்கு வளைக்கப்படுவதால் உடல் நன்கு நெகிழும் தன்மை அடைவதோடு இளமை மேலிடும். இனப்பெருக்க உறுப்புகள் பலம்பெறுகின்றன. விந்து பலவீனத்தை நீக்கி ஆண்மை குறைபாட்டை சரிசெய்கிறது.

இப்பயிற்சியில் அடிவயிறு நன்கு உள்நோக்கி அழுத்தப்படுவதால் உறுதியாக தொந்தி கரையும்.

தூக்கமின்மை, சோர்வு முதலியன நீங்கும். உயர் இரத்த அழுத்தத்திற்கு இது சிறந்த தீர்வாக அமையும்.

பெண்களுக்கும் இது ஒரு அற்புதமான ஆசனம் எனலாம். ஏனெனில் இப்பயிற்சியை பெண்கள் தினமும் தவறாமல் செய்து வந்தால் மாதவிலக்கு சம்பந்தமாக வரக்கூடிய அத்தனை பிரச்சனைகளும் நீங்கும்.

முதுகு அல்லது முழங்கால்களில் வலிகளோ அல்லது காயங்களோ இருந்தால் இந்த பயிற்சியை தவிர்த்து விடவும். ஆஸ்துமா, குடலிறக்க நோயால் பாதிப்படைந்துவருபவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவேண்டும்.

இந்த ஆசனத்தின் மற்றொரு வகையான “பட்சி மோத்தாசனம்” என்னும் ஆசனத்தை பயிற்சி செய்வது எவ்வாறு என்பதனை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷீவல் லிங்க் ஐ கிளிக்குங்க.

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக தொடை மற்றும் தொடை எலும்புகள், முதுகு மற்றும் முதுகு எலும்புகள் பலம் பெறுகின்றன. விலா எலும்புகள், தோள்கள் மற்றும் கழுத்துகளும் பலம் பெறுகின்றன. வயிறு மற்றும் இடுப்பிலுள்ள தசைகளையும் வலுப்படுத்துகின்றன.

கணையம், கல்லீரல், மண்ணீரல், சிறுநீரகம், கருப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல் முதலிய உள்ளுறுப்புகளை அழுத்தி அவைகளை செம்மையாக வேலை செய்ய தூண்டுகின்றன.

அஜீரணம், வாயுத்தொல்லை, உப்புசம் முதலிய அனைத்து வயிறு சார்ந்த பிரச்னைகளையும் நிவர்த்தி செய்து செரிமானத்தை மேம்படுத்துகிறது.

இந்த பயிற்சியால் இனப்பெருக்க உறுப்புகள் பலம்பெறுகின்றன. விந்து பலவீனத்தை நீக்கி ஆண்மை குறைபாட்டை சரிசெய்கிறது.

இப்பயிற்சியில் அடிவயிறு நன்கு உள்நோக்கி அழுத்தப்படுவதால் உறுதியாக தொந்தி கரையும்.

தூக்கமின்மை, சோர்வு முதலியன நீங்கும். உயர் இரத்த அழுத்தத்திற்கு இது சிறந்த தீர்வாக அமையும்.

பெண்களுக்கு மாதவிலக்கு சம்பந்தமாக வரக்கூடிய அத்தனை பிரச்சனைகளும் நீங்கும் என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் முதுகு அல்லது முழங்கால்களில் வலிகளோ அல்லது காயங்களோ இருந்தால் இந்த பயிற்சியை தவிர்த்து விடவும்.

ஆஸ்துமா, குடலிறக்க நோயால் பாதிப்படைந்துவருபவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “உப்புசம்” என்னும் பிரச்சனையைப்பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுக்கலாம். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!