"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Dhanurasana – தனுராசனம்

இந்த பதிவில் வில்லாதி வில்லனான Dhanurasana – தனுராசனம் பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம். தனுசை கையில் வைத்துக்கொண்டு உதட்டையும் கடித்துக்கொண்டு ஒரு தினுசாக ஆட்டம்போடும் மன்மதனை உங்களுக்கு தெரியும்தானே?!!. காதலின் கடவுள். பேரழகனும் கூட.

இந்த மன்மதனைப்பற்றி அனைவருமே காமனாக தெரிந்து வைத்திருப்பீர்கள்.

Dhanurasana Cupid.

மன்மதனின் ஆயுதம் எதுவென்று தெரியுமல்லவா?!… (மன்மதனின் ஆயுதம் என்ற உடனேயே “கத்திசண்டை”யை கற்பனை செய்துகொள்ளாதீர்கள்)

காமனின் ஆயுதம் “கரும்புவில்”…

(இப்போது கரும்புவில்லை தூக்கி கடாசிவிட்டு “வானவில்லை” வைத்திருப்பதாக கேள்வி)

அதில் தொடுப்பதற்காக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள சில மலர்க்கணைகள்.

இந்த இரண்டும்தான் மன்மதனுடைய ஆயுதங்கள்…

ஆனால்,… இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு இவன் பண்ணுகிற அட்ராசிட்டி வேலைகள் இருக்கிறதே… அப்பப்பா…

பண்டைய காலங்களில் சிட்டிசன்களை காதல் வலையில் மட்டுமே சிக்க வைத்துக் கொண்டிருந்தவனுக்கு என்னாச்சோ தெரியவில்லை… தற்போது சில நூறு வருடங்களாகவே காதலர்களை ரோமியோக்களாக மாற்றி காம வலையில் வீழ்த்திக்கொண்டிருக்கின்றான்….

அதுகூட பரவாயில்லை… ஆனால், இப்போதோ அண்மைக்காலங்களில் அந்த ரோமியோக்களையும் காமியோக்களாக மாற்றி “போக்சோ”வில் (POCSO) உள்ளே தள்ளுவதையே வாடிக்கையாக வைத்திருக்கின்றான்…

அத்தோடு நிறுத்திக்கொள்ளாமல் “வானவில் சேட்டை”கள் வேறு… (செத்தாண்டா சேகரு) கரும்புவில் வைத்திருந்த கையில் இப்போது இருப்பதோ “வானவில்”…

Avana nee Vadivelu Dhanurasana

அதுசரி,.. இரும்பு அடிக்கிற இடத்துல “ஈ”க்கு என்ன வேலை என்பது போல் யோகாசனம் படிக்கும் இடத்தில் மன்மதனின் சேட்டைகளை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன?! என கேக்கிறீர்களா?

அவசியம் இருக்கிறது…

இந்த தனுராசனத்தை நீங்கள் பயிற்சி செய்து கொண்டிருக்கும்போதே மன்மத ராசா கரும்பு வில்லில் மலர்கணைகளை தொடுத்தப்படியே செய்யும் சேட்டைகளை நீங்களே அனுபவபூர்வமாக பார்க்கலாம்…

சரி… மன்மதனின் காதல் சேட்டைகளைப்பற்றி பயிற்சியின் போது நீங்களே நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நாம் “தனுராசனம்” பற்றி மட்டும் பார்ப்போம்.

பெயர் – Dhanurasana.

தமிழில் – தனுராசனம்.

சமஸ்கிருதம் – Dhanurasana.

ஆங்கிலம் – Bow Pose.

வேறுபெயர்கள் – Dhanur asana.

ஆசனத்தின் நிலை

  • Prone
  • Abdomen
  • Hand-To-Feet

பயிற்சியின் கடின தன்மை – Biginner.

உடல் கோணம் – Back-Bend, Stretch.

exercise for - Dhanurasana.

தனுசு என்றால் ”வில்”. இந்த ஆசனத்தில் இருக்கும்போது நம்முடைய உடல் வில் போன்ற அமைப்பில் இருப்பதால் இது ”தனுராசனம்” (Dhanurasana) என பெயர் பெற்றது.

இது மிகவும் அற்புதமான ஆசனம். சந்தோஷங்களை அள்ளித்தரும் ஆசனம்.

வாருங்கள் தனுராசனத்தின் அற்புதங்களை அறிந்துகொள்வோம்.

இந்த பயிற்சியை நீங்கள் இன்றே பிள்ளையார் சுழி போட்டு தொடங்கிவிட்டால் போதும்… அடுத்த வினாடியே உங்களிடமிருந்து முதுமை முகம்காட்ட விரும்பாமல் தொங்க போட்டுக்கொண்டே வெளியேறிவிடும்… அந்த வெற்றிடத்தை நிரப்ப இளமை “தந்தனத்தோம்”…. “திந்தனத்தோம்” என பாடிக்கொண்டே புறவாசல் வழியாக உள்ளே புகுந்துவிடும்.

ஆம்,… இந்த பயிற்சியின் மூலம் உங்களின் முதுகுத்தண்டு நன்கு துவளும் தன்மையைப் பெறும். இதனால் இளமை மேலிடும். சுறுசுறுப்பு பெருகும். முதுகு கூன் விழுவதிலிருந்து தடுக்கப்படும். உடலின் உள்ளுறுப்புகளான இதயம், நுரையீரல் முதலியன வலுப்பெறும்.

Dhanurasana. fm

இவ்வளவு நன்மைகளைக் கொண்டுள்ளதாலேயே இது எனக்கு மட்டுமல்ல ஆசன பயிற்சிகளில் ஈடுபடும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஆசனமும் கூட.

இது ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் அற்புதமான ஆசனம் என்றாலும்கூட இதை பயிற்சி செய்து முடிக்கும் வரையில் கை, கால்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் “வடைபோச்சே” கதைதான்… கூடவே சேலம் “செல்வராஜ் சித்த வைத்திய சாலை”க்கு சென்று தாத்தாவின் ஆலோசனைகளைப் பெறவேண்டி இருக்கும்… அம்புட்டுதான் சொல்வேன்…

Salem Sivaraj Siddha Vaithiyasalai

சரி… இனி தனுராசனத்திற்கு வருவோம்… தனுராசனத்தினால் மார்பு வலிமை பெறும். ஆண்மையை பலப்படுத்துவதுடன் பாலியல் சார்ந்த அனைத்து உறுப்புகளையும் வலுப்படுத்தும், கூன் முதுகை நிமிரச்செய்து இளமையைக் கொடுக்கும்.

தனித்துவம் வாய்ந்த இந்த தனுராசனத்தை எப்படி பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்.

தனுராசனம் – செய்முறை

விரிப்பின்மீது கவிழ்ந்த நிலையில் நேராக படுக்கவும். கைகள் இரண்டையும் உடலை ஒட்டினாற்போல் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். அதன்பின் இரு கால்களையும் மடக்கி இடது கையால் இடது கணுக்காலையும், வலது கையால் வலது கணுக்காலையும் பிடித்துக்கொள்ளவும். மார்பு பகுதி, கழுத்து, தலை முதலியவற்றை மேல்நோக்கி தூக்கி முதுகை வில்போல் வளைக்கவும்.

குறிப்பாக வயிற்றுப்பகுதி, இடுப்பு தரையில் படும்படியும், வயிறு இடுப்பு தவிர்த்து உடலின் பிற உறுப்புகள் அப்படியே வில்போல் வளைந்து இருக்கும்படியும் உடலை அமைத்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் இருக்கும்போது மூச்சை அடக்குதல் கூடாது. இயல்பாக மூச்சு விடுங்கள்.

இந்நிலையில் 10 முதல் 30 வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். பின் 10 அல்லது 15 வினாடி ஓய்வுக்கு பின் மீண்டும் இப்பயிற்சியை மேற்கொள்ளவும்.

இதேபோல் திரும்ப திரும்ப 5 அல்லது 6 தடவை இந்த ஆசனத்தை பயிற்சி எடுக்கவும்.

இந்த Dhanurasana – தனுராசனம் ஒரு அற்புதமான ஆசனம். இதனை தொடர்ந்து செய்துவர வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். அஜீரணமும், மலச்சிக்கலும் நீங்கும்.

மார்பு விரிந்து பலம் பெறும். கை, கால், இடுப்பு அத்தனையும் பலம் பெறும். முதுகு வலி வராமல் பாதுகாப்பு கொடுக்கும்.

மார்புச்சளி, சைனஸ், ஆஸ்துமா, ஈசினோபீலியா, இருமல் போன்ற பிரச்சனைகளை நீக்கும்.

சிறுநீரகம் சுறுசுறுப்பாக வேலை செய்யும். சிறுநீரக கோளாறு அகலும். முதுகுவலி நீங்கும். தொப்பை, ஊளைச்சதை முற்றிலும் குறையும். இளமையும், சுறுசுறுப்பும் உண்டாகும். வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஆண்மை பெருகும். குன்றாத அழகும், மங்காத அறிவும் உண்டாகும்.

யோகாசனப் பயிற்சியில் “மாற்று ஆசனம்” என்னும் பதம் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு வருவதை நீங்கள் கேட்டிருக்கலாம்..

ஆசன பயிற்சியில் ஈடுபடும் ஒவ்வொருவரும் அதில் வரக்கூடிய “மாற்று ஆசனம்” என்றால் என்ன என்பதனை தெரிந்து வைத்துக்கொள்ளுதல் மிக மிக அவசியமாகும்.

“மாற்று ஆசனம்” என்றால் “மாறுபட்ட ஆசனம்” என்பது பொருள்.

அதாவது ஒரு ஆசனம் செய்யும்போது உடல் எந்த கோணத்தில் இருக்கின்றதோ அதற்கு மாறுபட்ட கோணத்தில் அதற்கு அடுத்து செய்யும் ஆசனம் இருக்கவேண்டும்.

அதாவது, தனுராசனத்தை எடுத்துக்கொண்டால் உடல் வெளிப்புறமாக வளைவதைக் காணலாம். அதாவது முதுகெலும்பானது வில் போல் வெளிப்பக்கமாக வளைகிறது.

இதற்கு அடுத்து செய்யும் ஆசனத்திலும் முதுகு வெளிப்புறமாக வளைக்கப்பட்டால் முதுகெலும்பு சோர்வடையலாம். தொடர்ந்து ஒவ்வொரு ஆசனத்திலும் முதுகெலும்பு வெளிப்புறமாகவே வளைக்கப்பட்டு கொண்டிருந்தால் எலும்பு தேய்மானம், நரம்பு சுளுக்கு, சதைகள் கன்றிப்போதல், பயிற்சியின் முடிவில் வலி, பயிற்சியில் ஆர்வமின்மை… இன்னும் பல பிரச்சனைகள், பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

எனவே, முதல் ஆசனத்தில் உடல் வெளிப்புறமாக வளைக்கப்பட்டால் அடுத்து செய்யும் இரண்டாவது ஆசனத்தில் உடல் உள்புறமாக வளைக்கப்பட வேண்டும். 3 வதாக செய்யப்படும் ஆசனத்தில் உடல் வலப்பக்கமாக மட்டும் திருகப்பட்டால் 4 வதாக செய்யப்படும் ஆசனத்தில் உடல் இடப்பக்கமாக திருகப்படவேண்டும். 5 வதாக செய்யப்படும் ஆசனமானது கால்கள் இரண்டும் மடிக்கப்பட்டு உட்கார்ந்து செய்யப்படும் ஆசனம் எனில் 6 வதாக செய்யப்படும் ஆசனம் கால்கள் இரண்டும் நீட்டப்பட்ட நிலையில் செய்யப்படும் ஆசனமாக இருத்தல் வேண்டும்.

அப்படி செய்யப்பட்டால்தான் அந்த பயிற்சி பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படுத்தாத ஆரோக்கியமான பயிற்சியாக அமையும். இதனையே “மாற்று ஆசனம்” என்பர்.

தனுராசனத்தின் சிறந்த மாற்று ஆசனமான “ஹாலாசனம்” மற்றும் “பச்சிமோத்தாசனம்” பற்றி அறிந்துகொள்ள ஆசையா!!.. அப்படியென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள பேனர் (Banner) ஐ உங்கள் சுண்டுவிரல்களால் மெல்லமா தட்டுங்க…

>> பச்சிமோத்தாசனம் – Paschimottanasana <<

முக்கிய குறிப்புகள்

இந்த தனுராசனம் ஒரு அற்புதமான ஆசனம்தான் என்றாலும், அனைவருக்கும் பயிற்சி செய்வதற்கு ஏற்ற ஆசனம் அல்ல.

சமீபத்தில் வயிறு மற்றும் முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.

இதயநோயாளிகள் இதனை பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

அடிக்கடி தலைசுற்றல், ஒற்றை தலைவலியால் அவதியுறுபவர்கள் இந்த ஆசனத்தை முயற்சி செய்ய வேண்டாம்.

முதுகெலும்பு, முழங்கால்கள், இடுப்பு இவைகளில் காயம் உள்ளவர்கள் இதனை பயிற்சி செய்தல் கூடாது.

உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குடலிறக்கத்தால் அவதிப்படுபவர்கள், வயிற்றில் புண் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது.

இந்த பயிற்சியில் ஆணுறுப்பு மற்றும் விதைகள் தரையோடு தரையாக நன்றாக அழுத்தப்படும் என்பதால் விரைவாதம், விதைவீக்கம் உள்ளவர்கள் இப்பயிற்சியை தவிர்க்கவும்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் இப்பயிற்சியை தவிர்க்கவும். கர்ப்பமான பெண்களும் இப்பயிற்சி செய்வதை தவிர்த்தல் வேண்டும். குழந்தை பெற்ற பின்பு 3 மாதங்கள் வரையில் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக அஜீரணமும், மலச்சிக்கலும் நீங்குகின்றன.

மார்பு, கை, கால், இடுப்பு அத்தனையும் பலம் பெறும். முதுகு வலி வராமல் பாதுகாப்பு கொடுக்கும்.

மார்புச்சளி, சைனஸ், ஆஸ்துமா, ஈசினோபீலியா, இருமல் போன்ற பிரச்சனைகளை நீக்கும்.

சிறுநீரக கோளாறு அகலும். தொப்பை, ஊளைச்சதை முற்றிலும் குறையும். ஆண்மை பெருகும் எனவும் பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் அடிக்கடி தலைசுற்றல், ஒற்றை தலைவலியால் அவதியுறுபவர்கள், இதயநோயாளிகள், வயிறு மற்றும் முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.

முதுகெலும்பு, முழங்கால்கள், இடுப்பு இவைகளில் காயம் உள்ளவர்கள் இதனை பயிற்சி செய்தல் கூடாது.

உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குடலிறக்கத்தால் அவதிப்படுபவர்கள், வயிற்றில் புண் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது என்பதனையும் பார்த்தோம்.

இந்த பயிற்சியில் ஆணுறுப்பு மற்றும் விதைகள் தரையோடு தரையாக நன்றாக அழுத்தப்படும் என்பதால் விரைவாதம், விதைவீக்கம் உள்ளவர்கள் இப்பயிற்சியை தவிர்க்கவும்.

பெண்கள் மாதவிடாய் காலங்களில் இப்பயிற்சியை தவிர்க்கவும். கர்ப்பமான பெண்களும் இப்பயிற்சி செய்வதை தவிர்த்தல் வேண்டும். குழந்தை பெற்ற பின்பு 3 மாதங்கள் வரையில் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “விதைவீக்கம்” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!