"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Ardha Bhujangasana – அர்த்த புஜங்காசனம்

Ardha Bhujangasana – அர்த்த புஜங்காசனம்

Ardha Bhujangasana – அர்த்த புஜங்காசனம். யோகாசனங்களில் அனைத்து வயதினரும் எளிதாக கற்றுக்கொள்ள முடியாத, பயிற்சி செய்வதற்கு மிகவும் கடினமாக உள்ள ஆசனங்கள் பல இருக்கின்றன. பலருடைய உடல் கடினமான ஆசனங்களை செய்வதற்கு வளைந்து கொடுப்பதில்லை.

ஆனால், அதே வேளையில் அனைவராலும், அனைத்து வயதினராலும் எளிதாக செய்யக்கூடிய ஆசனங்களும் நிறைய இருக்கின்றன.

எனவே வயதானவர்கள் மற்றும் உடல் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை குறைவாக இருப்பவர்கள் கடின ஆசனங்களை பயில முயற்சி செய்து பல உடல் பிரச்சனைகளை வருவித்துக் கொள்வதை விட மிக எளிதாக இருக்கும் யோகாசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்துவருவதே சிறப்பு.

நோயற்ற ஆரோக்கிய வாழ்க்கையை விரும்புபவர்கள் தினந்தோறும் காலை அல்லது மாலை அல்லது இரு வேளைகளும் சில எளிய வகையான ஆசனங்களை தேர்ந்தெடுத்து அவற்றை தொடர்ந்து பயிற்சி செய்து வரலாம். அப்படியான ஒரு எளிய ஆசனத்தைப் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

ஆம்,… நாம் இப்போது குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் என அனைவராலும் எளிதில் பயிற்சி செய்யும் விதமாக அமைந்துள்ள எளிய ஆசனமான ”அர்த்த புஜங்காசனம்” (Aardha Bhujangasana) பற்றிதான் இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம்…

வாருங்கள் பார்க்கலாம்…

Ardha Bhujangasana – அடிப்படைத் தகவல்கள்

பெயர் – Ardha Bhujangasana.

தமிழில் – அர்த்த புஜங்காசனம்.

சமஸ்கிருதம் – Ardha Bhujangasana.

ஆங்கிலம் – Half Cobra Pose.

வேறுபெயர்கள்

  • Salamba Bhujangasana.
  • Sphinx Pose.
  • Baby Cobra Pose.
  • Niravalasana.
  • Yin yoga Sphinx Pose.

ஆசனத்தின் நிலை – Prone, Forearms, Abdomen.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Back-Bend.

Ardha Bhujangasana

“புஜம்” என்றால் தோள்பட்டையை சுற்றியுள்ள பகுதிகளைக் குறிக்கும் சொல். ஆசனம் செய்யும்போது இடுப்புக்கு மேல் உள்ள உடலின் பளு முழுவதையும் புஜமே தாங்குவதால் அதற்கு “புஜங்காசனம்” என்று பெயர்.

ஆனால்,.. இங்கு நாம் பார்த்துக் கொண்டிருப்பது புஜங்காசனம் அல்ல. மாறாக “அர்த்த புஜங்காசனம்” பற்றி பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

புஜங்காசனம்” பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள “விஷீவல் லிங்க்” (visual link) என்னும் தொடுக்கை உங்கள் விரல்களால் சொடுக்கவும்…

Ardha Bhujangasana – அர்த்த புஜங்காசனம்

“அர்த்த” என்றால் “பாதி” என்று பொருள். புஜங்காசனத்தைப்போல உடலின் பளு முழுவதையும் புஜம் தாங்குவதில்லை. பகுதியைத்தான் புஜம் தாங்குகின்றன. மீதி பாதியை வயிறு தாங்குகின்றன. எனவே பாதி பளுவை மட்டுமே புஜம் தாங்குவதால் இதற்கு “பாதி புஜங்காசனம்” அதாவது “அர்த்த புஜங்காசனம்” (Ardha Bhujangasana) என பெயர் பெறுகிறது.

Continue the practice for Ardha Bhujangasana

அர்த்த புஜங்காசனம் – செய்முறை

முதலில் ஒரு விரிப்பில் இரு கால்களையும் ஒன்று சேர்ந்தாற்போல நேராக நீட்டி குப்புற படுக்கவும். இரு கைகளையும் தோள்பட்டைக்கு இணையாக கிடைமட்டமாக வைக்கவும்.

பின் இரு கைகளின் உள்ளங்கைகளையும் தலையின் அருகில் இரு பக்கங்களிலும் வைத்து கழுத்தை நிமிர்த்தி தலையை மெதுவாக மேலே தூக்கவும். வயிற்றிலிருந்து தலைவரை உடல் மேலெழும்பியபடி இருக்கவேண்டும்.

Ardha Bhujangasana male

முழங்கை மற்றும் உள்ளங்கைகள் தரையில் படிந்தபடி இரு கைகளும் ” ட”  வடிவத்தில் இருக்க வேண்டும். இரு கால்களின் மேல் பாதங்களும் தரையில் படர்ந்தபடி இருக்க வேண்டும். இந்த ஆசனத்தில் 15 முதல் 20 வினாடிகள் இருந்து பழைய நிலைக்கு திரும்பவும். இந்த ஆசனத்தை 5 அல்லது 6 தடவை பயிற்சி செய்யவும்.

”அர்த்த புஜங்காசனம்” (Ardha Bhujangasana) என்னும் இந்த ஆசனமானது சுவாசக்கோளாறு உட்பட மார்பு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் சீர் செய்வதோடு மலச்சிக்கலையும் நிவர்த்தி செய்யும் வல்லமை கொண்டது.

இது முதுகெலும்பையும், தோள்பட்டையையும் வலுவாக்கும். மார்பு மற்றும் வயிறு பலம் பெறும். சுவாசக்கோளாறுகளை சரி செய்யும். மலச்சிக்கல் விலகும்.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

சிறிய இடையை விரும்பும் பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய ஆசனம் இது. ஏனென்றால் எவ்வளவு பெரிய “தடி” இடையாக இருந்தாலும் அதை “பிடி” இடையாக மாற்றும் திறன் இதற்கு உண்டு.

இதனுடன் எளிமையான வேறு சில ஆசனங்களையும் சேர்த்து பயிற்சி செய்து வர “பிடி” இடையும் “கொடி” இடையாக மாற அதிக வாய்ப்பு உண்டு.

எது எப்படியோ… ஒவ்வொரு தடவையும் ஆசனப் பயிற்சியை நிறைவு செய்யும்போது கடைசி ஆசனமாக ”சவாசனம்”  கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!