"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Padmasana – பத்மாசனம்

Padmasana – பத்மாசனம் அல்லது Kamalasana – கமலாசனம் என்றால் ”தாமரை ஆசனம்” என்று பொருள்.

“பத்மம்” என்றால் தாமரையை குறிக்கும். ”கமலம்” என்றாலும் தாமரையைத்தான் குறிக்கும். எனவே இந்த ஆசனம் ”பத்மாசனம்” என்றும், ”கமலாசனம்” (Padmasana – Kamalasana) என்றும் அழைக்கப்படுகிறது.

Padmasana - Kamalasana.

மேலேயுள்ள படத்தைப் பாருங்கள்…. மடக்கி வைக்கப்பட்டிருக்கும் இரு கால்களும் பார்ப்பதற்கு தாமரை பூவின் இதழை போன்ற வடிவத்தில் இருக்கிறதல்லவா!… அதனால்தான் இந்த ஆசனத்திற்கு ”பத்மாசனம்” மற்றும் ”கமலாசனம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தியானம், ப்ராணாயாமம் என்னும் மூச்சு பயிற்சி செய்வதற்கு பெரும்பாலானவர்கள் இந்த ஆசனத்தையே தேர்ந்தெடுக்கின்றனர். அந்த அளவிற்கு மனதை ஒருமுகப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுக்கும் அற்புதமான ஆசனம்.

சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்….

பெயர் – Padmasana – Kamalasana.

தமிழ் – பத்மாசனம் – கமலாசனம்.

சமஸ்கிருதம் – Padmasana.

ஆங்கிலம் – Lotus Pose.

வேறுபெயர்கள் – தாமரை ஆசனம்.

ஆசனத்தின் நிலை – Sitting.

பயிற்சியின் கடின தன்மை – Intermediate.

உடல் கோணம் – Restorative, Meditative, Pranayama.

ஒரு விரிப்பின் மீது இரண்டு கால்களையும் நீட்டியபடி உட்காரவும். முதலில் வலதுகாலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி இடது தொடைமீது வைக்கவும்.

அதே போல் இடதுகாலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக வலது தொடைமீது வைக்கவும். பிறகு முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும்.

இரண்டு முழங்கால்களும் தரையை தொட்டபடி இருக்கவேண்டும். கைகள் இரண்டையும் முழங்கால்மீது சின்முத்திரை பிடித்தபடி வைக்கவும். மூச்சை நன்கு இழுத்து அதே வேளையில் மெதுவாக நேர்த்தியாக ஒரேசீராக சுவாசிக்கவும்.

Padmasana - Kamalasana. step by step

இது சொல்வதற்கு எளிதாக தோன்றலாம். ஆனால் செய்வதற்கு கொஞ்சம் கஷ்டம்தான். முழங்கால்களும், பாதங்களும் ஆரம்பத்தில் விண்ணென்று வலிக்கும். தொடர்ந்து பயிற்சியெடுக்க வலி மறையும்.

இந்த ஆசனத்தில் 5 நிமிடங்கள் இருக்கவும். ஆரம்பக்கட்டத்தில் 5 நிமிடம் இருப்பது கடினமாக இருக்கலாம். ஓரிரு நிமிடங்கள் ஆரம்பத்தில் இருக்கப் பழகி படிப்படியாக 5 நிமிடங்கள் இருக்க பயிற்சி எடுக்கவும்.

5 நிமிடம் பயிற்சி முடிந்த பின் ஒவ்வொரு காலாக கைகளால் பிடித்து கீழே இறக்கி வைக்கவும். பின் முன்போல் கால்களை நேராக நீட்டிக் கொள்ளவும். சில வினாடிகள் ஓய்வு எடுத்தபின் காலை மாற்றி போட்டு பயிற்சி எடுக்கவும்.

அதாவது வலது காலை மடிப்பதற்கு பதிலாக இப்பொழுது இடது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக வலது தொடைமீது வைக்கவும். அதன்பின் வலதுகாலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும்.

இதே நிலையில் 5 நிமிடங்கள் இருக்கவும். முதுகு வளையாமல் நேராக இருக்க வேண்டியது மிக முக்கியம் என்பதனை கவனத்தில் கொள்ளவும்.

இந்த ஆசனத்தை தொடர்ந்து பயின்றுவர முழங்கால்கள் நன்கு வலுப்பெறும். முழங்காலில் மூட்டுவலிகள் நீங்கும். குதிகால் நரம்புகள் பலம் பெறும். கால் வலி மற்றும் முதுகு வலிகள் குணமாகும். இது செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதால் ஜீரணசக்தி அதிகரித்து சுறுசுறுப்பு உண்டாகும். வயிற்றுவலி நீங்கும். தொந்தி கரையும்.

இது முதுகுத்தண்டு மற்றும் வயிற்றுப்பகுதிகளை வலுப்படுத்துகிறது.

தியானம் செய்வதற்கு ஏற்ற ஆசனம். தியானம் செய்வதற்கு இந்த ஆசனம் கடினமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் ஸ்வஸ்திகாசனம், வஜ்ராசனம் போன்ற எளிதாக அமரக்கூடிய ஆசனங்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வரலாம்.

முதுகுத்தண்டு மற்றும் கால் மூட்டுகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்தல்கூடாது. முழங்கால்கள் அல்லது கணுக்கால்களில் காயம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்த்தல் வேண்டும்.

கால்கள் அதிகம் வலி எடுத்தால் உடனே ஆசனத்தை கலைத்துவிட்டு கால்களை நீட்டி ஓய்வு எடுக்கவும். முதலில் கால்களில் வலி ஏற்படாத அளவிற்கு மிக குறைந்த நேரம் ஆசனத்தில் இருக்க பழகிவிட்டு அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கால அளவை அதிகப்படுத்தவும்.

இதையும் தெரிஞ்சுக்கோங்க

மேற்குறிப்பிட்டுள்ள ஸ்வஸ்திகாசனம், வஜ்ராசனம் பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள “விஷீவல் லிங்கை” (visual link preview) அதாவது பேனர் (Banner) மீது லேசாக தட்டுங்கள். திறக்கப்படும்.

>> ஸ்வஸ்திகாசனம் – Swastikasana <<

>> வஜ்ராசனம் – Vajrasana <<

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக இந்த ஆசனத்தை தொடர்ந்து பயின்றுவர முழங்கால்கள் நன்கு வலுப்பெறும்.

கால் வலி மற்றும் முதுகு வலிகள் குணமாகும்.

இது செரிமான மண்டலத்தை மேம்படுத்துவதால் ஜீரணசக்தி அதிகரித்து சுறுசுறுப்பு உண்டாகும். வயிற்றுவலி நீங்கும். தொந்தி கரையும்.

இது முதுகுத்தண்டு மற்றும் வயிற்றுப்பகுதிகளை வலுப்படுத்துகிறது என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் முதுகுத்தண்டு மற்றும் கால் மூட்டுகளில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்தல்கூடாது.

முழங்கால்கள் அல்லது கணுக்கால்களில் காயம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்த்தல் வேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “கால் வலி” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுக்கலாம். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!