ஆசனங்களில் மிகவும் சிறப்புப் பெற்றது Bhujangasana - புஜங்காசனம் எனலாம். சூரிய நமஸ்காரம் பயிற்சியில் இதனுடைய பங்களிப்பும் மிக அதிகம். ஆண், பெண் முதற்கொண்டு சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் எளிதாக இப்பயிற்சியை மேற்கொள்ள முடியும். “புஜம்” என்றால் தோள்பட்டையை சுற்றியுள்ள பகுதிகளைக் குறிக்கும் சொல். இந்த ஆசனம் செய்யும்போது இடுப்புக்கு மேல் உள்ள தேகத்தின் எடை முழுமையையும் புஜமே தாங்குவதாலும், இந்த ஆசனத்தின் மூலம் புஜம் விஷேச பலத்தை பெறுவதாலும் இதற்கு "புஜங்காசனம்" (Bhujangasana - Cobra Pose) என்று பெயர். ஆனால், இந்த "புஜங்காசனம்" என்னும் பெயர்க் காரணத்திற்கு வேறு ஒரு கதையும் சொல்லப்படுகிறது. வடமொழியில் “புஜங்கம்” என்பது ஊர்ந்து செல்லும் பாம்பைக் குறிக்கிறதாம். இந்த ஆசனத்தில் அமரும்போது நம் மார்பு, கழுத்து, தலை முதலியனவற்றின் அமைப்பு "நல்லபாம்பு" படம் எடுத்து நிற்பது போல தோற்றமளிப்பதால் இதற்கு “புஜங்காசனம்” என்று பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த பாம்பு கதைகளெல்லாம் சரியானதாகப்படவில்லை. இது பின்னாளில் நம்மவர்கள் ஏற்படுத்திய புனைவு கதைகளாக இருக்கலாம். ஏனெனில் கடவுளர்களின் தோள்மீது (புஜம் மீது) ஊர்ந்து செல்வதால் அந்த பாம்பை மட்டும்தான் வடமொழியில் "புஜங்கன்" என அழைக்கிறார்களாம். புதருக்குள் செல்லும் பாம்புகளுக்கெல்லாம் "புஜங்கன்" என்று பெயரில்லையாம். எனவே புதர்களுக்கு இடையே செல்லும் பாம்பு மட்டுமே நிஜம் என்பதாலும், புஜத்திற்கு மேல் ஊர்ந்து கொண்டிருப்பதாக சொல்லும் பாம்புகளெல்லாம் வெறும் கற்பனை கதாபாத்திரங்கள் என்பதால்... கற்பனை கதைகளை புறந்தள்ளி நாம் நிஜத்தை மட்டுமே இங்கு பார்க்க இருப்பதால் புஜங்காசனம் பெயருக்கு கூறப்படும் கற்பனை புனைவு பாம்பு கதையை புறம்தள்ளி விடுவோம். ஆனால், இந்த ஆசனத்தில் நம்முடைய உடல் இருக்கும்போது பார்ப்பதற்கு நல்லபாம்பு படம் எடுப்பது போன்ற தோற்றத்தில் அமைந்திருப்பதால் "நல்லபாம்பு ஆசனம்" என்று பொருள்படும்படி ஆங்கிலத்தில் "Cobra Pose" என்றே அழைக்கப்படுகிறது. புஜங்காசனம் - அடிப்படைத் தகவல்கள் பெயர் - Bhujangasana. தமிழ் - புஜங்காசனம். சமஸ்கிருதம் - Bhujangasana. ஆங்கிலம் - Cobra Pose. வேறுபெயர்கள் - Serpent Pose. ஆசனத்தின் நிலை - Prone, Abdomen பயிற்சியின் கடின தன்மை - Beginner. உடல் கோணம் - Back-Bend. இந்த புஜங்காசனத்தில் “அர்த்த புஜங்காசனம்” என்றும் ஒரு பயிற்சி உள்ளது. “அர்த்த” என்றால் பாதி என்று அர்த்தம். “அர்த்த புஜங்காசனம்” என்றால் “பாதி புஜங்காசனம்” என்று பொருள். பெயருக்கேற்ப புஜங்காசனத்தைவிட இதனை பயிற்சி செய்வது எளிதானது. எனவே, புஜங்காசனம் செய்வது கடினமாக இருப்பதாக உணர்பவர்கள் முதலில் இந்த அர்த்த புஜங்காசனத்தை பயிற்சிசெய்து கைகள் மற்றும் தோள்பட்டைகள் நன்கு பலம் பெற்றபின் “புஜங்காசனம்” பயிற்சியை தொடங்கலாம். இந்த “அர்த்த புஜங்காசனம்” பயிற்சியை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை அறிந்துகொள்ள கீழேயுள்ள பேனர் லிங்க் ஐ கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம். Ardha Bhujangasana - அர்த்த புஜங்காசனம் - Personality Fittingஇந்த பயிற்சியில் உடலின் பகுதியை வயிறு தாங்க மீதி பகுதியைத்தான் புஜம் தாங்குகின்றன எனவே Ardha Bhujangasana - அர்த்த புஜங்காசனம் என பெயர். சரி,... இனி மார்புகளுக்கும் புஜங்களுக்கும் வலிவு சேர்க்கும் ஆசனமான புஜங்காசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம். Bhujangasana - புஜங்காசனம் - செய்முறை முதலில் குப்புற படுத்துக் கொள்ளவும். கால்களை இணைத்து நேராக வைத்துக்கொள்ளவும். உள்ளங்கால்கள் மேல்நோக்கி இருக்கும்படி வைக்கவும். தலைமுதல் கால்வரை ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும். இரண்டாவதாக, இரண்டு முழங்கைகளையும் மடித்து இடுப்பிற்கு அருகில் தரையில் ஊன்றவும். அதன்பின் இடுப்பு தரையில் படிந்திருக்க இடுப்பிற்கு மேல் மார்பு, கழுத்து, தலை இவைகளை தரையிலிருந்து மூச்சினை மெதுவாக உள்ளுக்கு இழுத்தவாறே மேல்நோக்கி உயர்த்தவும். இந்த நிலையில் சில வினாடிகள் அப்படியே இருக்கவும். மூச்சை இயல்பாக விடவும். பின் மார்பையும், தலையையும் மூச்சை மெதுவாக வெளியில் விட்டபடி கீழே கொண்டு வந்து தரையை தொடவும். கைகளை தலைக்கு மேல் நேராக நீட்டவும். சில வினாடிகள் ஓய்வுக்கு பின் மீண்டும் முன்போல் செய்யவும். https://youtu.be/fOdrW7nf9gw இந்த பயிற்சியை 5 அல்லது 6 தடவை திரும்ப திரும்ப செய்யவும். பயிற்சியின் பலன்கள் இந்த புஜங்காசன பயிற்சியானது ஆண், பெண் என இரு பாலருக்கும் வலிமை சேர்க்கும் பயிற்சி என்றே சொல்லவேண்டும். இதனை பெண்கள் தொடர்ந்து செய்துவர நல்ல கட்டுக்கோப்பான மார்பையும், உடல் வனப்பையும் பெறமுடியும். இதனை தொடர்ந்து பயிற்சி செய்து வர முதுகுவலி நீங்குவதோடு தொப்பையும் கரையும். மேலும் இது மார்பை விரிவடைய செய்வதோடு இதயம் நுரையீரலை பலப்படுத்தி, ஆஸ்துமாவையும் குணமாக்கும். பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள், மலட்டுத்தன்மை மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனையையும் குணப்படுத்தும். முதுகெலும்பு நன்கு வளையும் தன்மையைப் பெறும். மார்பு நன்கு விரிவடையும். விலா எலும்புகள் உறுதியாகும். கூன் விழுந்த முதுகு நேராகும். முதுகுவலி, கழுத்துவலி குணமாகும். கழுத்து எலும்பு தேய்ந்து விட்டதாகச் சொல்லி சிலர் ”கழுத்து பட்டை” கட்டிக்கொண்டு வலம் வருகிறார்கள் அல்லவா, இந்த ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் பட்டைக்கே பட்டை நாமம் போட்டு விடலாம். மேலும், இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துகொண்டுவர இருதயம், நுரையீரல் பலமடையும். ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, இதய கோளாறுகள் நீங்கும். ஜீரணசக்தியை அதிகரிப்பதோடு வயிற்றிலுள்ள கொழுப்பையும் கரைக்கும். நன்கு பசி உண்டாகும். முக்கிய குறிப்புகள் இந்த ஆசனமானது இடுப்பு, முழங்கால்கள், விலா எலும்புகள், தோள்கள், முழங்கைகள், மணிக்கட்டுகளின் மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் மேற்கண்ட உறுப்புகளில் எதாவது வலிகளோ காயங்களோ இருக்கும் பட்சத்தில் இந்த ஆசனத்தை செய்தல்கூடாது. அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்களும், அதிக அளவில் குடல்வாயு பிரச்சனையால் வாடுபவர்களும், ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களும் இந்த ஆசனத்தை செய்ய முன்வர வேண்டாம். வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.