"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Vrikshasana – விருட்சாசனம்

Vrikshasana – விருட்சாசனம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது சான்றோர் வாக்கு. நோயற்ற ஆரோக்கிய பெருவாழ்வை பெற நம் முன்னோர்கள் நமக்கு அளித்த இரு பெரும் பொக்கிஷங்கள்தான் மருத்துவமும், யோக பயிற்சியும் ஆகும்.

நாம் நம் பதிவில் அவ்வப்போது மருத்துவம் மற்றும் யோக பயிற்சிகள் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பயிற்சி செய்வதற்கு எளிய அதேவேளையில் உடலுக்கு அதிக அளவில் நன்மை செய்யக்கூடிய யோக பயிற்சி ஒன்றை பார்க்க இருக்கிறோம். 

நாம் இன்றைய பதிவில் பார்க்கப்போகும் பயிற்சி “விருட்சாசனம்” (Vrikshasana).

Vrikshasana - Tree Pose RED girl

“விருட்சம்” என்பது சமஸ்கிருத சொல். அதற்கு தமிழில் “மரம்” என்றுபொருள்.

விருட்சாசனம் என்றால் மரம்போல் நிற்கும் ஆசனம் என்று பொருள்.

பெயர் – Vrikshasana.

தமிழில் – விருட்சாசனம்.

சமஸ்கிருதம் – Vrikshasana.

ஆங்கிலம் – Tree Pose.

வேறுபெயர்கள் – Vrksasana, Vriksasana.

ஆசனத்தின் நிலை – Standing, One-Legged.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Balance, Stretch, Strength.

இது சிரசாசனத்திற்கு மாற்று ஆசனம். அதாவது “சிரசாசனம்” செய்தபின் அதற்கு அடுத்த ஆசனமாக செய்யவேண்டிய மிக முக்கியமான ஆசனம்.

ஏனெனில்,.. சிரசாசனம் செய்வதின் மூலம் கண்கள் மற்றும் தலைப்பகுதியில் தேங்கும் குருதி மீண்டும் உடலெங்கும் பரவ இந்த விருட்சாசனம் உதவி செய்கிறது.

எனவே, சிரசாசனம் செய்தபின் அதற்கு அடுத்த ஆசனமாக தேர்ந்தெடுத்து செய்ய வேண்டிய ஆசனம் இது ஆகும். சிரசாசனம் செய்து முடித்த உடன் அதற்கு அடுத்த ஆசனமாக இதனை கண்டிப்பாக செய்தால்தான் சிரசாசனத்தின் முழுப்பலனும் கிடைக்கும். ஆகையால் இந்த ஆசனத்தை சிரசாசனத்தின் மாற்று ஆசனம் என குறிப்பிடுகின்றனர்.

சிரசாசனத்தின் மாற்று ஆசனமான இந்த விருட்சாசனத்தைப்பற்றி தெரிந்துகொள்வதற்கு முன்னால் ஆசனங்களிலேயே தலையாய ஆசனமான சிரசாசனத்தைப்பற்றியும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டியது அவசியமல்லவா?!…

சிரசாசனத்தைப்பற்றி தெரிந்துகொள்ள அடுத்து கொடுக்கப்பட்டுள்ள விஷீவல் லிங்கை (visual link preview) தட்டுங்க…

சரி.. இனி விருட்சாசனம் பயிற்சி செய்யும் முறைபற்றி பார்ப்போம்…

ஒரு விரிப்பின்மீது இரு கால்களையும் சேர்த்துவைத்து கைகளை தொங்கவிட்டபடி நேராக நிற்கவும். அதன்பின் வலதுகாலை ஊன்றி இடதுகாலை மடித்து அதன் பாதத்தை வலதுகாலின் தொடைமீது அல்லது முழங்கால் மீது பதித்து இரண்டு கைகளையும் தலைக்கு மேல்தூக்கி கும்பிட்டபடி வைக்கவும்.

பின் மெதுவாக மூச்சை உள்ளுக்கு இழுத்தபடியே வலது குதிகாலை மேலே தூக்கியபடி கால்விரல்களை தரையில் ஊன்றியபடி பத்து வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரை  நிற்கவும். மூச்சை இயல்பாக விடவும். பார்வை நேராக இருக்க வேண்டும்.

இது சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் பயிற்சி செய்வதென்பது கடினம். ஏனெனில் ஒரு காலில் நிற்கும்போது உடல் சமநிலையில் இருந்து நழுவி உடல் தள்ளாடும். கீழே விழும் சூழ்நிலை ஏற்படலாம். எனவே உடலின் சமநிலையை பேண இதனை சில நாட்கள் சுவரின் அருகில் நின்று பயிற்சி செய்து வரலாம்.

Vrikshasana - Tree Pose female.

சிலவார பயிற்சிக்குபின் சுவரின் உதவி இல்லாமல் இதனை செய்ய பழகிக்கொள்ளுங்கள்.

சரி,.. வலதுகாலை ஊன்றி இடதுகாலை மடித்து அதன் பாதத்தை வலதுகாலின் தொடைமீது அல்லது முழங்கால் மீது பதித்து இரண்டு கைகளையும் தலைக்கு மேல்தூக்கி கும்பிட்டபடி 30 வினாடிகள் நின்றபின் மூச்சை மெதுவாக வெளியேவிட்டபடி குதிகாலை மெதுவாக கீழே இறக்கி நேராக நிற்கவும். கைகளையும் கீழே இறக்கி சகஜ நிலைக்கு வரவும்.

பத்து விநாடி ஓய்வுக்கு பிறகு இதே பயிற்சியை இடதுகாலில் செய்யவும்.

அதாவது இடதுகாலை ஊன்றி வலதுகாலை மடித்து அதன் பாதத்தை இடது தொடையில் அல்லது முழங்கால் மீது வைத்து இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்ட நிலையில் வைக்கவும். அதன்பின் மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து இடதுகாலின் குதிகாலை மேலே தூக்கியபடி கால்விரல்களை தரையில் ஊன்றியபடி வைத்து விரல்களால் பேலன்ஸ் செய்து நிற்க முயற்சிக்கவும். மூச்சை இயல்பாக விடவும்.

இவ்வாறு 10 வினாடி நின்று அதன்பின் மூச்சை வெளியே விட்டபடியே இடது குதிகாலை இறக்கி சகஜ நிலைக்கு வரவும். கைகளை கீழே இறக்கவும். இது ஒரு சுற்று.

இவ்வாறு இரு கால்களையும் மாற்றி மாற்றி 5 சுற்று பயிற்சி செய்யவும்.

இப்பயிற்சியால் மன ஒருமைப்பாடு அதிகரிக்கும்.

கால்கள், இடுப்பு, முதுகு, தொடை, பிட்டம் பலப்படும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். கால்களிலுள்ள தசைகள் வலிமை பெறும்.

மேலும் இது முதுகுவலி – யை குணப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது இப்பயிற்சியானது சுத்த இரத்தம் உடல்முழுக்க பரவ வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது. மேலும் கணையத்தின் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.

செரிமானத்தை தூண்டுகிறது. பசியின்மையை நீக்குகிறது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது.

முழங்கால், கணுக்கால், பாதங்கள், கால்விரல்களில் காயங்களோ, வலிகளோ இருந்தால் இந்த ஆசனத்தை செய்ய முயற்சிக்கவேண்டாம்.

இடுப்பு, முதுகெலும்புகளில் வலிகள் இருந்தாலும் இந்த பயிற்சியை தவிர்க்கவும்.

தலைவலி, ஒற்றை தலைவலி, மூட்டுவலி உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். கர்ப்பிணி பெண்களும் இந்த பயிற்சியை தவிர்க்கவேண்டும்.

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக கால்கள், இடுப்பு, முதுகு, தொடை, பிட்டம் பலப்படும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். முதுகுவலி குணமாகும்.

கணையத்தின் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.

செரிமானத்தை தூண்டுகிறது. பசியின்மையை நீக்குகிறது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் இடுப்பு, முழங்கால், கணுக்கால், பாதங்கள், கால்விரல்களில் காயங்களோ, வலிகளோ இருந்தால் இந்த ஆசனத்தை செய்ய முயற்சிக்க வேண்டாம் என்பதையும் பார்த்தோம்.

தலைவலி, ஒற்றை தலைவலி, மூட்டுவலி உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

கர்ப்பிணி பெண்களும் இந்த பயிற்சியை தவிர்க்கவேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “நரம்புத்தளர்ச்சி” பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுக்கலாம். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!