"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Utthita Padmasana – உத்தித பத்மாசனம்

இன்றைய பதிவில் நாம் உத்தித பத்மாசனம் என்னும் ஆசனத்தைப்பற்றிதான் பார்க்க இருக்கின்றோம். பத்மாசனம் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?… அதனுடைய “அப்டேட் வெர்சன்”தான் இந்த Utthita Padmasana – உத்தித பத்மாசனம்.

”உத்தித” என்றால் சமஸ்கிருதத்தில் “உயர்த்துதல்” அல்லது “தூக்குதல்” என்று பொருள்.

பத்மாசன நிலையில் இருந்தபடியே உடலை தரையில் இருந்து மேலே உயர்த்துவதால் இந்த ஆசனம் “உத்தித பத்மாசனம்” (Utthita Padmasana) என அழைக்கப்படுகிறது.

தரையில் உட்கார்ந்தபடி செய்வது பத்மாசனம் என்றால் அதே பத்மாசனத்தை அந்தரத்தில் செய்தால் அதுவே ”உத்தித பத்மாசனம்” ஆகும்.

“Elevated” என்றால் ஆங்கிலத்தில் “உயர்த்தப்பட்ட” என்று அர்த்தம். எனவேதான் ஆங்கிலத்தில் இது “உயர்த்தப்பட்ட தாமரை ஆசனம்” என்று பொருள்படும்படி “Elevated lotus Pose” என அழைக்கப்படுகிறது.

Scale Pose - Tulasana.

இதனை சமஸ்கிருதத்தில் “துலாசனம்” (துலாம் +ஆசனம்) எனவும் அழைக்கின்றனர். “துலாம்” என்பது தராசை குறிக்கும். இந்த ஆசனத்தில் இருக்கும்போது உடலின் அமைப்பு பார்ப்பதற்கு பொருள்களை எடை போடும் “தராசு” போல் இருப்பதால் இதனை சமஸ்கிருதத்தில் “துலாசனம்” எனவும். தமிழில் “தராசு ஆசனம்” எனவும் அழைக்கின்றனர். “தராசு” ஆங்கிலத்தில் “ஸ்கேல்” (Scale) என்று அழைக்கப்படுகிறதல்லவா அதனால் இந்த ஆசனம் ஆங்கிலத்தில் “Scale Pose” என குறிப்பிடப்படுகிறது.

இதற்கு சமஸ்கிருதத்தில் இன்னும் ஒரு பெயரும் இருக்கிறது. அதுதான் “Utpluthih asana” (உட்ப்ளுதிஹ் ஆசனம்). “உட்ப்ளுதிஹ்” என்றால் சமஸ்கிருதத்தில் “தூக்குதல்” அல்லது “வேரோடு பிடுங்குதல்” என்று பொருள். இந்த ஆசனத்தில் மொத்த உடலும் இரு கைகள் மூலம் மேலே தூக்கப்படுவதால் இதற்கு “உட்ப்ளுதிஹ் ஆசனம்” (Utpluthih asana) என்று பெயர்.

பெயர் – Utthita Padmasana.

சமஸ்கிருதம் – Tulasana. (துலாசனம்), Utpluthih asana (உட்ப்ளுதிஹ் ஆசனம்).

ஆங்கிலம் – Scale Pose.

வேறுபெயர்கள் – Elevated lotus Pose.

ஆசனத்தின் நிலை – Sitting.

பயிற்சியின் கடின தன்மை – Intermediate.

உடல் கோணம் – Strength, Balance.

இந்த ஆசனம் பழகுவது கொஞ்சம் கடினம் என்றாலும் இந்த ஆசனத்தை முறையாகப் பயிற்சி செய்வதால் உடல் தேக்கு போல் வலிமையாகும் என்பது உறுதி. பத்மாசனத்தில் நன்கு பயிற்சி பெற்ற பின்பே இந்த ஆசனத்தை செய்ய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

Continue the practice for - Utthita Padmasana - Tulasana girl

மேலும் இந்த ஆசனம் பத்மாசன நிலையில் உட்காருவதால் இடுப்பு, தொடைகள், மூட்டு, முழங்கால்கள் அனைத்தும் பலமாகும். இந்த ஆசனம் செய்வது ஆரம்பத்தில் கொஞ்சம் கடினம் என்றாலும் முறையாகப் பயிற்சி செய்வதால் அடையும் பலனோ ஏராளம்.

சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்….

முதலில் பத்மாசனத்தில் முதுகு வளையாமல் நேராக நிமிர்ந்து உட்காரவும்.

[“பத்மாசனம்” செய்வது எப்படி என்பதனை ”பத்மாசனம்” என்ற தலைப்பின் கீழ் காண்க. அல்லது, இந்த கட்டுரையின் முடிவில் தரப்பட்டுள்ள சுட்டியை சுட்டி (visual link preview) இங்கிருந்தே நேராக பத்மாசனத்திற்கு செல்லுங்கள்].

பத்மாசனத்தில் நேராக அமர்ந்த பின் இரு கைகளையும் இரு கால்களின் பக்கவாட்டில் விரல்கள் முன்பக்கம் இருக்குமாறு ஊன்றவும்.

Utthita Padmasana - Tulasana

பின் பத்மாசன நிலையில் இருந்தபடியே கைகளை ஊன்றிய நிலையில் மூச்சை உள்ளிழுத்தபடி உடலை மெதுவாக மேலே தூக்கவும். உடல் நிமிர்ந்த நிலையில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். சிறிது நேரம் இதே நிலையில் இருக்கவும். மூச்சை ஆழமாக இழுத்து சுவாசிக்கவும்.

அதன் பின் மெதுவாக உடலை கீழே இறக்கவும். சில விநாடி ஓய்வுக்குப்பின் மீண்டும் பயிற்சி எடுக்கவும். இந்த ஆசனத்தை 3 அல்லது 5 தடவை செய்யலாம்.

ஆரம்பத்தில் 5 விநாடி நேரம் இதே நிலையில் இருக்கப் பழகி அதன்பின் 30 முதல் 40 விநாடி நேரம் இருக்க பயிற்சி எடுக்கவும்.

உத்தித பத்மாசனம் செய்வதால் மணிக்கட்டு, இரு கைகள், கை விரல்கள், உள்ளங்கை, தோள்பட்டை, மூட்டு பகுதிகள், முதுகெலும்பு, இடுப்பு, பிட்டம், தொடைகள், முழங்கால்கள், வயிறு, வயிற்று தசைகள் பலம் அடைகின்றன.

ஜீரண உறுப்புகள் வளம் பெறுவதோடு வாயு தொல்லையும் நீங்குகின்றன.

இப்பயிற்சிமூலம் ஜீரணமண்டலம் அதிகம் அழுத்தப்பட்டு இரத்த ஒட்டம் அதிகரிப்பதால் ஜீரண சக்தி அதிகரிக்கும். குடலிறக்கம் தடுக்கப்படும். கைகளின் தசைகளுக்கும் எலும்புகளுக்கும் அதிக வலுவைத்தரும். வயிற்று தசைகள் இறுக்கப்பட்டு தொந்தி மறையும்.

அதுமட்டுமல்ல ஜீரண உறுப்புகள் மற்றும் இதயம், சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து உள்ளுறுப்புகளும் வலிமைபெறும்.

கைகள், தோள்கள், மணிகட்டுகளில் சுளுக்கு, தசைபிடிப்பு மற்றும் காயங்கள் எதாவது இருந்தால் இந்த ஆசனத்தை பயிற்சி செய்ய வேண்டாம்.

முதுகு, இடுப்பு, மார்பு பகுதிகளில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

உடலின் மொத்த எடையையும் கைகளே தாங்குவதால் பலவீனமான கைகள் மற்றும் எலும்புகளை கொண்டவர்கள் தயவு செய்து இதனை செய்ய முயற்சிக்க வேண்டாம்.

தூக்கமின்மையால் அவதியுறுபவர்கள், எப்போதும் பதட்டமாகவே இருப்பவர்கள் இந்த ஆசனத்தை செய்யும்போது மிகவும் கவனமுடன் இருக்கவேண்டும். ஏனென்றால் இந்த ஆசனம் செய்யும்போது விரைவான சுவாசம் ஏற்படலாம். அந்த சமயத்தில் மனம் அமைதியாக இல்லாவிட்டால் எதிர்மறையான பலன்களை உண்டாக்கலாம்.

ஆரம்பத்தில் சொன்னதுபோல பத்மாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற பின்பு உத்தித பட்மாசனத்தை பயிற்சி செய்ய முன்வரவும்.

பத்மாசனம் – Padmasana

பத்மாசனத்தைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா?!… கீழேயுள்ள “விஷீவல் லிங்கை” (visual link preview) அதாவது பேனர் (Banner) மீது லேசாக தட்டுங்கள். நீங்கள் தட்டுகிற அந்த தட்டு இங்கிருந்தே கமலாசனம் என்று அழைக்கப்படும் பத்மாசனத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும்… எஞ்ஜாய்…

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக மணிக்கட்டு, இரு கைகள், கை விரல்கள், உள்ளங்கை, தோள்பட்டை, மூட்டு பகுதிகள், முதுகெலும்பு, இடுப்பு, பிட்டம், தொடைகள், முழங்கால்கள், வயிறு, வயிற்று தசைகள் பலம் அடைகின்றன.

அதுமட்டுமல்ல சுவாசம் சம்பந்தப்பட்ட அனைத்து உள்ளுறுப்புகளும் வலிமைபெறுகின்றன. இதயம் இதம் பெறுகின்றன.

ஜீரண உறுப்புகள் வளம் பெறுவதோடு வாயு தொல்லையும் நீங்குகின்றன. குடலிறக்கமும் தடுக்கப்படுகின்றன.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் கைகள், தோள்கள், மணிகட்டுகளில் சுளுக்கு, தசைபிடிப்பு மற்றும் காயங்கள் எதாவது இருந்தால் இந்த ஆசனத்தை பயிற்சி செய்ய வேண்டாம்.

முதுகு, இடுப்பு, மார்பு பகுதிகளில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “மணிகட்டு சுளுக்கு” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுக்கலாம். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!