"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Uttanasana – உத்தனாசனம்

Uttanasana – உத்தனாசனம். சித்தர்கள் நமக்களித்த அரும்பெரும் பொக்கிஷங்களில் ஒன்று “யோகக்கலை”. உடலை வளப்படுத்துவதற்கு பல்வேறு பயிற்சிகள் உள்ளது என்றாலும் உடலையும் மனதையும் ஒருசேர வளப்படுத்தும் திறன் இந்த யோகக்கலைக்கு மட்டுமே உண்டு.

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரையமுடியும். அதுபோல் உடல் என்ற ஒன்று இருந்தால்தான் வாழ்க்கை என்னும் ஓவியத்தை அழகாக தீட்டிப்பார்க்க முடியும்.

Continue the practice for - Uttanasana. Standing Forward Bend Pose

வாழ்வியல் ஓவியத்தை தீட்டிப்பார்க்க உடல் என்ற ஒன்று இருந்தால் மட்டும் போதாது அதில் உறுதியும், ஆரோக்கியமும் நிலைத்திருக்க வேண்டியது அவசியம்.

உடலுக்கு உறுதியையும், ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்த பலவகையான யோக ஆசன பயிற்சிகள் இருந்தாலும் அவைகளில் நாம் இப்போது பார்க்கப்போகும் “உத்தனாசனம்” (Uttanasana) மிக முக்கியமானது.

இந்த பயிற்சியானது முன்பு பார்த்த “பாத ஹஸ்தாசனம்” (Patha Hastasana – Hand to Foot Pose) போன்றதுதான் என்றாலும் அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசப்பட்டது மட்டுமல்லாமல் கொஞ்சம் கடினமானதும் கூட.

ஏனெனில் பாத ஹஸ்தாசனத்தில் உடலை முன்னோக்கி வளைத்து கை விரல்களால் கால் பெருவிரலை அல்லது தரையை தொட்டால் போதுமானது. ஆனால் இந்த உத்தனாசனத்தில் உடலை இன்னும் அதிகமாக முன்னோக்கி மடித்து உள்ளங்கைகளை தரையில் ஊன்றவேண்டும். எனவே பாத ஹஸ்தாசனத்தில் நன்கு தேர்ச்சி பெற்றபின்பு இந்த உத்தனாசனத்தை பயிற்சி செய்வது சிறப்பு.

பாத ஹஸ்தாசனத்தைப்பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்புக்கான பேனர் ( Banner) ஐ உங்கள் விரல்களால் மெல்ல தட்டுங்கள்…. திறக்கப்படும்…

Uttanasana – உத்தனாசனம் – அடிப்படைத் தகவல்கள்

பெயர் – Uttanasana.

தமிழ் – உத்தனாசனம்.

சமஸ்கிருதம் – Uttanasana.

ஆங்கிலம் – Standing Forward Fold Pose.

வேறுபெயர்கள் – Standing Forward Bend Pose, Intense Stretch Pose, Intense Forward Stretch, Hand To Leg Pose.

ஆசனத்தின் நிலை – Standing.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Forward Bend, Stretch, Inversion.

சரி, இனி இந்த உத்தனாசனத்தை பயிற்சி செய்வது எப்படி என்பதனை பார்ப்போம்.

Uttanasana – உத்தனாசனம் – செய்முறை

இரண்டு கால்களையும் சேர்த்து வைத்துக்கொண்டு விரிப்பின்மீது நேராக நிமிர்ந்து நிற்கவும்.

இரண்டு கைகளையும் காதுகளை ஒட்டினாற்போல மேல்நோக்கி நேராக உயர்த்தவும். மூச்சை மெதுவாக வெளியே விட்டபடியே இடுப்பை வளைத்து முன்னோக்கி குனிய வேண்டும்.

அவ்வாறு குனியும்போது இடுப்பை மட்டுமே முன்னோக்கி வளைக்க வேண்டுமேயொழிய கால்களை வளைக்காமல் விரைப்பாகவே வைத்துக்கொள்ள வேண்டும்.

Continue the practice for - Uttanasana. Forward-Bend Pose

இரண்டு உள்ளங்கைகளையும் இரு கால்களின் பக்கவாட்டில் தரையில் ஊன்றவும்.

மூச்சை இயல்பாக விடலாம். அல்லது மூச்சை நன்றாக இழுத்து அடக்கி வைத்தும் கொள்ளலாம்.

15 முதல் 20 வினாடிகள் இதே நிலையில் இருந்துவிட்டு அதன்பின் மூச்சை வெளிவிட்டபடியே மெதுவாக நிமிரவும்.

பத்து அல்லது 20 வினாடி ஓய்வுக்குப்பின் மீண்டும் முன்போலவே செய்யவும்.

இவ்வாறு திரும்ப திரும்ப 7 முதல் 8 தடவை இந்த பயிற்சியை செய்யலாம்.

பயிற்சியின் பலன்கள்

இப்பயிற்சியால் இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால், முதுகு, தோள்பட்டை, கைகள் என அனைத்து உறுப்புகளும் வலிமை பெறுகின்றன.

வெளி உறுப்புகள் மட்டுமல்லாது வயிற்றிலுள்ள உள்ளுறுப்புகளும் இப்பயிற்சியால் நன்கு அழுத்தப்பட்டு பலம் பெறுகின்றன. குறிப்பாக சிறுகுடல், பெருங்குடல், கணையம், கல்லீரல், பித்தப்பை முதலியன வலிமை பெறுகின்றன.

Continue the practice for - Uttanasana. Standing-Forward-Bend

இப்பயிற்சியால் மலச்சிக்கல் நீக்குவதோடு ஜீரணசக்தியும் மேம்படுகின்றன.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளையும் சரிசெய்கின்றன.

கழுத்து, இடுப்பு, முதுகில் பிரச்சனை உள்ளவர்கள் இப்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

இதயநோய் உள்ளவர்களும் அதிக அளவில் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களும் இப்பயிற்சியை செய்யும்போது மிக கவனமாக பயிற்சி செய்யவேண்டியது அவசியம்.

அர்த்த உத்தானாசனம் – Ardha Uttanasana

ஆரம்பத்தில் சொல்லப்பட்ட “பாதஹஸ்தாசனம்” (Patha Hastasana – Hand to Foot Pose) என்னும் பயிற்சியில் நன்கு தேர்ச்சி பெற்றபின் இந்த உத்தாசனம் பயிற்சியில் ஈடுபட்டால் பழகுவதற்கு எளிதாக இருக்கும். எனவே பாத ஹஸ்தானத்தில் நன்கு தேர்ச்சி பெற்றபின் இதனை பயில்வது சிறப்பு.

ஆனால், இந்த “பாதஹஸ்தாசனம்” செய்வதற்கும் உடல் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை கடினமாக உள்ளதாக உணர்பவர்கள் ”அர்த்த உத்தானாசனம்” (Ardha Uttanasana – Upward Forward Fold Pose) என்னும் பயிற்சியை செய்துவரலாம்.

”அர்த்த” என்றால் ”பாதி” என்று அர்த்தம். ”அர்த்த உத்தானாசனம்” (Ardha Uttanasana – Upward Forward Fold Pose) என்றால் ”பாதி உத்தானாசனம்” என்று பொருள்.

இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ள உத்தானாசனம் (Uttanasana) பயிற்சியில் இடுப்பிலிருந்து உடல் இரண்டாக முழுமையாக மடிக்கப்படும்.

ஆனால், இந்த அர்த்த உத்தானாசனம் பயிற்சியில் இடுப்பிலிருந்து உடலை முன்னோக்கி முழுமையாக வளைக்காமல் பாதி அளவில் வளைத்து செய்யும் பயிற்சி என்பதால் இது ”அர்த்த உத்தானாசனம்” (Ardha Uttanasana – Upward Forward Fold Pose) எனப் பெயர் பெற்றது.

உடலை முழுமையாக வளைத்து பயிற்சி செய்யும் உத்தானாசனம் செய்வதற்கு பலருக்கு உடல் எடுத்த எடுப்பிலேயே ஒத்துழைப்பதில்லை ஆதலால் இந்த “அர்த்த உத்தானாசனம்” பயிற்சியை தொடர்ந்து பலநாட்கள் பயிற்சி செய்து அதன்பின் “பாதஹஸ்தாசனம்” சில மாதங்கள் பயிற்சி செய்துவிட்டு அதன்பின்பு “உத்தானாசனம்” செய்ய முயற்சி செய்யலாம்.

“அர்த்த உத்தானாசனம்” பயிற்சியை செய்வது எப்படி என்று திகைக்கிறீர்களா?!!!… கவலைவேண்டாம்… கீழே கொடுக்கப்பட்டுள்ள பேனர் (Banner) மீது உற்சாகத்துடன் ஒரு தட்டுதட்டுங்கள்…. அர்த்த உத்தானாசனம் உங்கள் கண்முன்னால் விரியும்…

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால், முதுகு, தோள்பட்டை, கைகள் என அனைத்து உறுப்புகளும் வலிமை பெறுகின்றன.

உள்ளுறுப்புகளான சிறுகுடல், பெருங்குடல், கணையம், கல்லீரல், பித்தப்பை முதலியன வலிமை பெறுகின்றன. இப்பயிற்சியால் மலச்சிக்கல் நீக்குவதோடு ஜீரணசக்தியும் மேம்படுகின்றன.

பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளையும் சரிசெய்கின்றன என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் கழுத்து, இடுப்பு, முதுகில் பிரச்சனை உள்ளவர்கள் இப்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களும் இப்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

இதயநோய், இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் இப்பயிற்சியை செய்யும்போது மிக கவனமாக பயிற்சி செய்யவேண்டியது அவசியம் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “இதயநோய்” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுக்கலாம். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!