"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Swastikasana – ஸ்வஸ்திகாசனம்

ஸ்வஸ்திகா (Swastika) என்றால் வளமையான அல்லது மங்களகரமான என்று பொருள். இந்த ஆசனம் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும், வளத்தையும் தருவதால் Swastikasana – ஸ்வஸ்திகாசனம் எனப் பெயர் பெற்றது.

ஸ்வஸ்திகாசனத்தை பார்ப்பதற்கு முன்னால் முதலில் ”யோகா ஆசனம்’‘ என்றால் என்னவென்று பார்ப்போம்.

Yoga – யோகா

யோகா” மற்றும் “யோகாசனம்” என்பது இந்தியாவில் நம் முன்னோர்களாகிய ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட உடல் மற்றும் மனவளக்கலை பயிற்சியாகும்.

பண்டைய ரிஷிகளாலும், முனிவர்களாலும், யோகிகளாலும் உருவாக்கப்பட்ட இந்த பயிற்சி பிற வகையான உடற்பயிற்சிகளைவிட மேன்மையானது.

உடற்பயிற்சிக்கும் யோகாசனப் பயிற்சிக்கும் நிறையவே வித்தியாசங்கள் உள்ளன.

பொதுவாக யோகா என்றால் மக்களிடையே ஒரு தவறான கருத்து நிலவுகிறது. யோகா பயிற்சி என்பது ஒருவிதமான உடற்பயிற்சி என்ற வரையறைக்குள்ளாகவே அதை வைத்து பலர் பார்க்கின்றனர். அது உண்மைதான் என்றாலும்கூட யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல அதில் மனதிற்கான பயிற்சியும் அடங்கியுள்ளன.

உடற்பயிற்சியானது உடலின் அனைத்து உறுப்புகளும் இரும்புபோல் வலிமையாவதற்கு மட்டுமே பயிற்சி அளிக்கிறது. அதனாலேயே அதன் பயிற்சிகள் யாவும் அதிகம் பளு உள்ள பயிற்சிகளாகவும், வேகமான அசைவுகளாகவும் அமைகின்றன.

உடலின் உள்ளே சில உறுப்புகள் மிருதுவான தன்மையுடன் இருந்தால்தான் அவைகளால் சிறப்பாக பணியாற்ற முடியும். ஆனால் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் மென்மையாக இருக்க வேண்டிய உள்ளுறுப்புகளையும் இறுக வைத்து விடுகின்றன இந்த உடற்பயிற்சிகள்.

Swastikasana - Auspicious Pose.

மென்மையாகவும், துவளும் தன்மையுடனும் இருக்கவேண்டிய பல உள்ளுறுப்புகள் கடினமானப் பயிற்சியின் மூலம் இறுக்கப்பட்டு அதன் இயல்பான இயக்கங்கள் பாதிக்கப்படுவது குறித்து அது பெரிதும் கவலைப்படுவதில்லை.

எனவேதான் கடினமான உடற்பயிற்சியில் ஈடுபடுகிறவர்கள் முதுமைக்காலங்களில் பல ஆபத்தான நோய்களில் துன்புறுவதைக் காண்கிறோம்.

ஆனால் யோகாசனப்பயிற்சியானது உடற்பயிற்சியைப்போல் உடலை இறுக்குவதில்லை. மாறாக உடலை நன்கு துவளும் தன்மையுடன் வைக்கிறது.

சிறுகுழந்தைகளின் உடல் எவ்வாறு ரப்பர் போல் வளையும்தன்மை பெற்றுள்ளதோ அதே தன்மைக்கு உங்கள் உடலைக்கொண்டு வருகிறது. எனவே முதுமையிலும் உடல் இளமையும் சுறுசுறுப்பும் பெற்று திகழ்கிறது.

இன்று அதன் மேன்மை கருதி இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பட்டிதொட்டிகளுக்கு எல்லாம் வேகமாக பரவி வருகிறது. இன்று வெளிநாட்டினர் அதன் மேன்மை உணர்ந்து யோகாவை விரும்பி கற்கின்றனர்.

இன்று மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள்தான் பலபேர்களுடைய வாழ்க்கையில் நிம்மதியின்மையை தருகின்றன என்பதனை நாம் பார்க்கின்றோம். அவ்வாறானவர்கள் யோகாசனம் செய்வதை தம் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வாக கொண்டுவரும் பட்சத்தில் மன அழுத்தம் மற்றும் மன சோர்விலிருந்து எளிதில் விடுபட முடியும்.

அவ்வாறு உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற்சியளிக்கக்கூடிய ஆசனங்களில் தியானம் செய்வதற்கும் மனதிற்கு அமைதியை தரக்கூடியதுமான ஆசனம் ஒன்றினைத்தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்..

நாம் இப்போது பார்க்கப்போவது “ஸ்வஸ்திகாசனம்”. இது மூச்சு பயிற்சி என்னும் பிரணாயாமம் பயில்வதற்கும், தியானம் பயில்வதற்கும் ஏற்றதொரு ஆசனம். வாருங்கள் பார்க்கலாம்…

Swastikasana – ஸ்வஸ்திகாசனம் – அடிப்படை தகவல்கள்

பெயர் – Swastikasana.

தமிழில் – ஸ்வஸ்திகாசனம்.

சமஸ்கிருதம் – Swastikasana.

ஆங்கிலம் – Auspicious Pose.

வேறுபெயர்கள் – Svastikasana.

ஆசனத்தின் நிலை – Sitting.

பயிற்சியின் கடினத்தன்மை – Beginner.

உடல் கோணம் – Meditative, Stretch.

பத்மாசனத்தில் உட்காருவது போல்தான் இதிலும் உட்காரவேண்டும். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் பத்மாசனத்தில் இரண்டு பாதங்களும் தொடைகள் மீது மலர்ந்தபடி இருக்கும். ஆனால் ஸ்வஸ்திகாசனத்தில் இரு பாதங்களும் கெண்டைக்காலுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கப்பட்டிருக்கும்.

சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்…

Swastikasana - Auspicious Pose. girl

முதலில் விரிப்பில் உட்கார்ந்து இரண்டு கால்களையும் நேராக நீட்டிக்கொள்ளுங்கள்.

வலது காலை மடித்து பாதங்களை இடது தொடை மீது வைக்காமல் தொடையின் பக்கவாட்டில் படும்படி வைக்கவும். அதேபோல் இடது காலை மடக்கி இரண்டு கைகளால் மெதுவாக பிடித்து தூக்கி பாதங்களை வலது கெண்டைக் கால்களுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கவும்.

கைகள் இரண்டையும் முழங்கால் மீது சின் முத்திரை பிடித்தபடி வைக்கவும்.

முதுகு கூன்விழாமல் நேராக நிமிர்ந்து உட்காரவும். கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்தால் அது கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

மூச்சை மெதுவாக நன்கு இழுத்து ஒரே சீராக சுவாசிக்கவும்.

5 நிமிடம் இந்த ஆசனத்தில் உட்காரவும். அதன்பின் கால்களை மாற்றி செய்யவும். இது தியானம் செய்வதற்கு ஏற்ற நல்லதொரு ஆசனம். தியானத்தில் அமரும் பட்சத்தில் 5 லிருந்து 20 நிமிடங்கள் வரை உட்காரலாம்.

பயிற்சியின் பயன்கள்

பத்மாசனத்திற்கான முழு பலன்களும் இந்த பயிற்சியிலும் கிடைப்பதோடு முழங்கால் நன்கு வலுப்பெற்று மூட்டு வலிகள் நீங்கும். கால்வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். முதுகெலும்பும் பலம் பெறும். நுரையீரல் வளம் பெறும். உடல் இறுக்கத்தை குறைத்து நெகிழ்வு தன்மையை அதிகரிக்கிறது.

தியானம் பயில மிக சிறந்த ஆசனம் இது. மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நுரையீரலின் திறனை அதிகப்படுத்தி நரம்புமண்டலத்தை பலப்படுத்துகிறது. முதுகெலும்பை நேராக்க உதவுகிறது. உணவு செரிமானத்தையும் அதிகரிக்கிறது.

முழங்கால், இடுப்பு, முதுகு அல்லது கணுக்கால்களில் வலியோ அல்லது காயங்களோ உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது.

கர்ப்பிணி பெண்கள் இந்த பயிற்சியை ஆரம்ப காலகட்டத்தில் ஓரிரு மாதங்கள் செய்யலாம். அதன்பின் தவிர்த்தல் வேண்டும். சில கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப கட்டத்திலிருந்தே கால்களில் வீக்கம் காணப்படும். அப்படியானவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது.

இந்த ஆசனமானது மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து சிந்தனையை கூர்மைப்படுத்துவதால் பிரணாயாமம், தியானத்திற்கு ஏற்றது.

பிரணாயாமம், தியானப் பயிற்சிக்காக பத்மாசனம் (Padmasana – Kamalasana), சித்தாசனம் ஆகிய ஆசனங்களில் உட்காருபவர்கள் அதில் உட்காருவது சிரமம் என உணர்ந்தால் ஸ்வஸ்திகாசனத்தை தேர்ந்தெடுக்கலாம். இதுவும் சிரமமாக உள்ளதாக உணர்ந்தால் இருக்கவே இருக்கிறது சுகாசனம்.

ஆம்,… சுகாசனத்தில் ஜம்மென்று உட்கார்ந்துவிட வேண்டியதுதான்.

Swastikasana – ஸ்வஸ்திகாசனம் பற்றி தெரிந்துகொண்ட நீங்கள் “பத்மாசனம்” பற்றியும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள்தானே!!!..

அனைவராலும் உச்சரிக்கப்படும் மிகவும் பிரபலமான ஆசனம்தான் இந்த பத்மாசனம்..

மூச்சு பயிற்சி என்னும் பிரணாயாமம் பயில்வதற்கும், தியானம் பயில்வதற்கும் ஏற்றதொரு பிரபலமான ஆசனம்.

நாம் இந்த பதிவில் பார்த்த ஸ்வஸ்திகாசனமும் பிரணாயாமம் பயில்வதற்கும், தியானம் பயில்வதற்கும் ஏற்றதொரு ஆசனம்தான்.

பார்ப்பதற்கு பத்மாசனமும், ஸ்வஸ்திகாசனமும் ஒன்றுபோலவே காணப்படும். ஆனால், ஒரு வித்தியாசம் என்னவென்றால் ஸ்வஸ்திகாசனத்தில் இரு பாதங்களும் கெண்டைக்காலுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கப்பட்டிருக்கும். ஆனால் பத்மாசனத்தில் இரண்டு பாதங்களும் தொடைகள் மீது மலர்ந்தபடி இருக்கும்.

ஸ்வஸ்திகாசனத்தில் உட்காருவதைவிட பத்மாசனத்தில் உட்காருவது கொஞ்சம் கடினம்தான் என்றாலும் பத்மாசனத்தையும் பழகி வைத்திருப்பது உங்களுக்கு பெருமையல்லவா!!…

பத்மாசனத்தைப்பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பேனர் (Banner) ஐ முரட்டுத்தனமாக அழுத்தாமல் ஒரு மலரை தொடுவதுபோல மெதுவாக வருடிக்கொடுங்கள்.. அடுத்த நொடியே உங்கள் கண்முன்னால் பத்மாசனமானது தாமரை மலரைப்போல மலருவதை நீங்களே பார்க்கலாம்.

>> பத்மாசனம் – Padmasana <<

ஸ்வஸ்திகாசனத்தோடு ஒப்பிடும்போது பத்மாசனம் செய்வது என்பது உண்மையிலேயே கடினமான விஷயம்தான். அவர்களின் உடல் அமைப்பும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். எனவே பத்மாசனத்திற்கு உடல் ஒத்துழைக்கவில்லை என்றால் நீங்கள் தாராளமாக ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துகொண்டு தியானப்பயிற்சியில் ஈடுபடலாம்.

தியானப் பயிற்சியோடு பிரம்மச்சரியமும் அனுஷ்டிக்கவேண்டும் என ஆசைப்படுகிறீர்களா? அப்படியென்றால் ஸ்வஸ்திகாசனத்திற்கு பதிலாக நீங்கள் சித்தாசனத்தை தேர்ந்தெடுக்கலாம்.

இந்த சித்தாசனமானது ஸ்வஸ்திகாசனத்தைப்போல் எளிமையானதுதான் என்றாலும் அதைவிட இது ஒருபடிமேல். ஏனெனில் இது உங்களை பிரம்மச்சரியத்தில் நிலைபெற்றிருக்கச் செய்யும்.

எனவே பிரமச்சரியம் கடைபிடிக்க வேண்டும் என்று விருப்பம் கொள்கிறவர்கள் சித்தாசனத்தில் உட்கார்ந்து தியானம் பயிலலாம்.

சரி, சித்தாசனம் பயிற்சி செய்வது எப்படி என கேட்கிறீர்களா?… கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷீவல் லிங்கை ஐ கிளிக்குங்க.. சித்தாசனத்தில் சித்தி பெறுங்கள்.

>> சித்தாசனம் – Siddhasana<<

எங்களுக்கு பிரம்மச்சரியமெல்லாம் தேவையில்லை. கஷ்டமே இல்லாமல் சுகமாக உட்கார்ந்தால் போதும் என நினைக்கிறீர்களா?!!.

கவலையை விடுங்கள் உங்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் “சுகாசனம்”.

சுகாசனம் என்பது வேறொன்றும் இல்லை… நாம் சாதாரணமாக சம்மணம் போட்டு உட்காருகிறோமல்லவா அதுதான் சுகாசனம்.

“சம்மணம்போட சங்கடம் இல்லை” என்று ஒரு பழமொழியும் உண்டு. எனவே, எளிமையான இந்த சுகாசனத்தை எப்படி பயிற்சி செய்வது என்பதனை அறிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷீவல் லிங்க் (visual link preview) என்னும் பேனர் (Banner) ஐ ஒரு தட்டு தட்டுங்க சுகாசனத்தில் ஜம்முன்னு உட்காருங்க…

>> சுகாசனம் – Sukhasana <<

சுகாசனம் பற்றிய குறிப்பு

சுகாசனத்தில் உட்கார்ந்து தியானம் பயிற்சி செய்வது ஒரு சுகமான அனுபவம்தான் என்றாலும் இந்த சுகாசனத்தில் ஒரு பிரச்சனை உள்ளது. அது என்ன பிரச்சனை என்றால்… இதில் உட்காரும்போது உடலுக்கு எந்தவிதமான கஷ்டமுமில்லாமல் சுகமான உணர்வை தருவதால் பலருக்கு தியானத்தின்போது தூக்கத்தை தருவித்துவிடும் என்பது ஒரு மைனஸ் பாயிண்ட்.

மற்றொரு பிரச்சனை என்னவென்றால் பத்மாசனத்தைப்போல இது உங்கள் உடலை அதாவது உட்காரும் இடத்தை தரைத்தளத்துடன் உறுதியாக இறுக்கி வைப்பதில்லை என்பதால் ஆரம்பத்தில் நீங்கள் நிமிர்த்து நேராக உட்கார்ந்து இருந்தாலும்கூட நேரம் செல்லச்செல்ல படிப்படியாக உங்கள் உடலை முன்னோக்கி சரிய செய்துவிடும் என்பது இரண்டாவது மைனஸ் பாயிண்ட்.

எனவே ஆரம்ப பயிற்சிக்கு மட்டும் சுகாசனத்தை பயிற்சி செய்துவிட்டு அதன்பின் ஸ்வஸ்திகாசனம், சித்தாசனம் அல்லது பத்மாசனத்திற்கு தாவிவிடுவது சிறப்பு.

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக முழங்கால் நன்கு வலுப்பெற்று மூட்டு வலிகள் நீங்குகிறது. கால்வலி, முதுகுவலி குணமாகிறது. முதுகெலும்பும், நரம்புமண்டலமும் பலம் பெறுகிறது. நுரையீரலும் வளம் பெறுகிறது. உணவு செரிமானத்தையும் அதிகரிக்கிறது என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் முழங்கால், இடுப்பு, முதுகு அல்லது கணுக்கால்களில் வலியோ அல்லது காயங்களோ உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது.

கர்ப்பிணி பெண்கள் இந்த பயிற்சியை ஆரம்ப காலகட்டத்தில் ஓரிரு மாதங்கள் செய்யலாம். அதன்பின் தவிர்த்தல் வேண்டும். சில கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப கட்டத்திலிருந்தே கால்களில் வீக்கம் காணப்படும். அப்படியானவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களில் “மூட்டு வலிகள்” பற்றிய அடிப்படை விஷயங்களை பார்க்கலாம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுத்து நிறுத்தும். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

4 thoughts on “Swastikasana – ஸ்வஸ்திகாசனம்

  1. ஸ்வஸ்திகாசனம் பற்றிய இந்த விளக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. யோகா என்பது உடல் மற்றும் மனதின் ஒருங்கிணைந்த பயிற்சி என்பதை இது நன்கு விளக்குகிறது. இந்த ஆசனம் மூலம் உடல் நலத்தையும் மன அமைதியையும் பெற முடியும் என்பது மிகவும் ஊக்கமளிக்கிறது. யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை இந்த உரை மூலம் மேலும் புரிந்துகொள்ள முடிகிறது. ஸ்வஸ்திகாசனத்தை பயிற்சி செய்வதன் மூலம் எவ்வாறு முழுமையான ஆரோக்கியத்தை அடைய முடியும்? German news in Russian (новости Германии)— quirky, bold, and hypnotically captivating. Like a telegram from a parallel Europe. Care to take a peek?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!