Vajrasana - Thunderbolt Pose வஜ்ராசனம் ”வஜ்ராசனம்” (Vajrasana - Thunderbolt Pose)... நாம் இந்த பதிவில் "வஜ்ராசனம்" என்னும் ஆசனத்தைப்பற்றித்தான் பார்க்க இருக்கின்றோம்.பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடிய ஆசனம் இது. "வஜ்ரம்" என்றால் ”வைரம்” என்று பொருள். இதனை தொடர்ந்து பயிற்சி செய்து வருவதினால் வைரம் போல் உடல் உறுதி பெறும் என்பதினால்... ??? ... இதற்கு ”வஜ்ராசனம்” (Vajrasana - Thunderbolt Pose) என்று பெயர். எளிமைக்குப் பின்னால்தான் இனிமையும், வலிமையும் இருக்கும் என்பார்கள். அந்த கூற்று இந்த ஆசனத்திற்கு மிகவும் பொருந்தும். என்னய்யா கதை விடுற... சும்மா காலை மடக்கிக்கொண்டு உட்காருவதினாலேயே உடல் வைரம்போல் உறுதியாகிவிடுமா?!... யாரு காதுல பூ சுத்துற என்கிறீர்களா?... உண்மைதான்... உங்கள் சந்தேகமும் நியாயமானதுதான். ஆனால், இந்த பயிற்சி எப்படி உங்கள் உடலை வைரம் பாய்ந்த தேக்குமரம் போல் மாற்றுகிறது என்னும் சூட்சுமத்தை அறிந்து கொண்டீர்கள் என்றால் ஒருகணம் ஆச்சரியப்பட்டு போவீர்கள். அந்த சூட்சுமம் வேறு எங்கும் இல்லை உங்கள் இதயத்தில்தான் உள்ளது... ஆம் ... உங்கள் உடலில் அமைந்துள்ள "இரண்டாவது" இதயத்தில்... இன்னாது ... "இரண்டாவது இதயமா"?.. ஆம்... இரண்டாவது இதயமேதான்... முதலாவது இதயம் இடுப்புக்கு மேலே நெஞ்சாங்குழியில் அமைந்துள்ளது என்றால் இந்த இரண்டாவது இதயமானது இடுப்புக்கு கீழே அமைந்துள்ளது. Soleus muscle சோலியஸ் தசை ஆம். இடுப்புக்கு கீழே மிக பருமனான வடிவில் "சோலியஸ் தசை" (Soleus) என்று ஒன்று உள்ளது அல்லவா? இன்னாது.. சோலியஸ்.. ஸா (Soleus)... இன்னாடா இது நைனா புதுசு புதுசா இங்கிலீஸ் எல்லாம் பேசுது... கொஞ்சம் தமிழிலும் செப்பண்டி என்கிறீர்களா... அதாங்க... இடுப்புக்கு கீழே இரு கால்களின் முழங்கால் பகுதியில் "கணுக்கால் தசை" அல்லது "கெண்டைக்கால் தசை" என்று ஒன்று உள்ளது தெரியுமா? அதுதான் "இரண்டாவது இருதயம்". ஆம்,... இதுவும் இருதயம் போலத்தான் செயல்படுகிறது. இன்னாது நைனா சொல்ற... கெண்டைக்கால் தசை இருதயம் போல் செயல்படுகிறதா?... எல்லா விலங்குகளுக்கும் அப்படித்தானா?.. ஆம்,... கெண்டைக்கால் தசை இருதயம்போல்தான் செயல்படுகிறது... ஆனால் எல்லா விலங்குகளுக்கும் அல்ல... மனிதனுக்கு மட்டும்தான்... மனிதனுக்கு மட்டும்தான் இந்த "கெண்டைக்கால் தசை" என்னும் அமைப்பே அமைந்துள்ளது ... பிற விலங்குகளுக்கு இல்லை. ஏன் பிற விலங்குகளுக்கு இல்லாத இந்த விஷேச அமைப்பு மனிதர்களுக்கு மட்டும் உள்ளது? மனிதனை தவிர ஏனைய விலங்குகள் தரைக்கு கிடைமட்டமாக வளர்பவை. தலைமுதல் வால் வரையில் உள்ள உறுப்புகள் அனைத்தும் அதன் கால்கள் தவிர தலை, கழுத்து, வயிறு, இடுப்பு என அனைத்தும் இதயம் இருக்கும் அதே உயர அளவிலேயே அதே வரிசைக்கோட்டில் கிடைமட்டத்திலேயே அமைந்துள்ளன. எனவே, அனைத்து உறுப்புகளுக்கும் இரத்தத்தை பம்ப் செய்து அனுப்புவதில் இதயத்திற்கு பெரிய அளவில் சிரமம் எதுவும் இருப்பதில்லை. ஆனால், மனிதனின் உடலானது பிற விலங்குகளைப்போல பூமிக்கு கிடைமட்டமாக இருப்பதில்லை. மாறாக பூமியிலிருந்து நேர் மேல்நோக்கிய வண்ணம் அமைந்துள்ளன. மனித உடலின் அமைப்பின்படி இதயத்திற்கு நேர் மேலே கழுத்து, தலை மற்றும் அதைசார்ந்த மூளை போன்ற உறுப்புகள் அமைந்துள்ளன. மேற்கண்ட உறுப்புகளுக்கு தேவையான குருதிகளை பம்ப் செய்து அனுப்புவது இதயத்திற்கு சிரமமான விஷயம்தான் என்றாலும் எப்படியோ கொஞ்சம் சிரமப்பட்டு சமாளித்துவிடுகிறது. ஆனால், இதயத்திற்கு கீழ்பகுதியில் அமைந்துள்ள வயிறு முதற்கொண்டு கால் பாதங்கள் வரையுள்ள உறுப்புகளுக்கு குருதியை பம்ப் செய்து அனுப்புவதுதான் இதயத்திற்கு இமாலய சிரமத்தை கொடுக்கிறது. புவிஈர்ப்பு விசை Gravity Force மேலிருந்து சுத்திகரிக்கப்பட்ட இரத்தத்தை கீழே பம்ப் செய்து அனுப்புவதில் இருதயத்திற்கு சிரமம் எதுவும் இருப்பதில்லை. ஆனால் கீழே அனுப்பப்பட்ட இரத்தத்தை திரும்பவும் மேல்நோக்கி இழுப்பதில்தான் இதயத்திற்கு மிகப்பெரிய சிரமமே உள்ளது. காரணம் "புவிஈர்ப்பு விசை" (Gravity Force). சிரமம் என்றால் சாதாரண சிரமம் இல்லை... யானையை கட்டி மேல்நோக்கி இழுத்தால் அது எவ்வளவு பெரிய கஷ்டத்தை தருமோ அதைவிட ஒருபடி அதிகமான கஷ்டத்தை இருதயத்திற்கு கொடுக்கிறது. உடலிலுள்ள மொத்த இரத்தத்தையும் புவிஈர்ப்பு விசையானது கீழ்நோக்கி மிக வலுவாக இழுக்க,.. அந்த புவியீர்ப்பு விசையையும் எதிர்த்து இரத்தத்தை மேல்நோக்கி இழுப்பதென்பது இருதயத்திற்கு சாதாரண விசயமில்லை. உடலிலுள்ள குருதியை புவிஈர்ப்பு விசையானது கீழ்நோக்கி இழுக்க... இதயம் அதே குருதியை புவிஈர்ப்புக்கு எதிராக மேல்நோக்கி இழுக்க... உண்மையிலேயே இது "லப்டப்" என்று அடிக்கும் இதயத்தை "பக்பக்" என்று பதறவைத்துவிடுகிறது... ஆம்,... இது கொஞ்சம் இதயத்தை பதறவைக்கும் விஷயம்தான் என்றாலும்,... எப்படியோ சமாளித்துவிடுகிறது... உயிர் வாழவேண்டுமே... சமாளித்துதானே ஆகவேண்டும். உங்களிடம் இருப்பது வலிமையான இதயமாக இருந்தால் டபுள் O.K... ஆனால் கொஞ்சம் பலவீனமான இதயமாக இருந்தால்?!... இதயத்தின் நிலைமையானது "பெப்பே" என்று ஆகிவிடும் அல்லவா. இங்குதான் இருதயத்திற்கு கைகொடுக்க வருகிறது "கணுக்கால் தசை" என்று சொல்லப்படும் "கெண்டைக்கால் தசை". ஆம்,... புவிஈர்ப்புவிசையை சமாளித்து குருதியை மேல்நோக்கி இழுக்க இதயம் தட்டுத்தடுமாறி... முக்கி முனகிக்கொண்டு இருக்க... இந்த நிலைமை இப்படியே ஒரு நாள் முழுக்க நீடித்தால் விரைவிலேயே இதயம் சோர்வடைவதோடு சில வருடங்களிலேயே செயலிழந்து விடும் அபாயமும் இருப்பதால்... அதை தவிர்க்கும் பொருட்டும்.... இதயத்திற்கு சப்போர்ட் செய்யும் விதமாகவும் இடுப்பிற்கு கீழே உள்ள இரத்தத்தை தோள்கொடுத்து மேலே உந்தித்தள்ளும் வேலையை "கெண்டைக்கால்தசை" செய்கிறது... "தோள் கொடுப்பான் தோழன்" என்பது போல இரத்தத்தை மேல்நோக்கி உந்தித்தள்ளும் வேலையை இது செய்வதால் இதயத்திற்கு வேலைப்பளு குறைகிறது... இதனால் இதயம் கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடுகிறது. இதனால் அதன் ஆயுளும் கூடுகிறது. எனவேதான் இந்த கெண்டைக்கால்தசையை "இரண்டாவது இருதயம்" என்று குறிப்பிடுகின்றோம். அப்பாடா... இந்த செய்தியை கேட்டபிறகுதான் மனசுக்கு கொஞ்சம் நிம்மதியா இருக்கு. இனி இதயத்திற்கும் கவலையில்லை... எனக்கும் கவலை இல்லை என்று காலை நீட்டிப்போட்டுக்கொண்டு உட்கார்ந்து விட்டீர்களென்றால் இந்த இரண்டாவது இதயம் வேலை செய்யாது. ஐயையோ அப்படியா... இந்த இரண்டாவது இதயம் வேலைசெய்ய என்ன செய்யவேண்டும் என்கிறீர்களா?... வேலை செய்யவேண்டும்... ஆம்... இரண்டாவது இதயம் வேலைசெய்ய வேண்டுமென்றால் முதலில் நீங்கள் வேலை செய்யவேண்டும். கை கால்களை ஆட்டி குனிந்து நிமிர்ந்து நன்கு வேலை செய்ய வேண்டும்... இதயத்தசைகளைப்போல இதிலுள்ள தசைகள் சுயமாக துடிக்காது என்பதால் கால்களை நன்கு அசைப்பதின் மூலமாகத்தான் இதனை இயங்கச்செய்ய முடியும். கணுக்கால் தசை - கெண்டைக்கால் தசை கெண்டைகால் தசை நன்கு அசைந்து கொடுத்தால்தான் குருதியை மேல்நோக்கி உந்தித்தள்ளும். முதல் இதயத்திற்கும் நல்லதொரு சப்போர்ட்டாக இருக்கும்... அதற்கு கைகால்களை நன்கு அசைத்து வேலை செய்ய வேண்டும். ஐயையோ... என்னால் குனிந்து நிமிர்ந்தெல்லாம் வேலை செய்ய முடியாதே.... ஹார்ட் பேசண்ட் வேற என்கிறீர்களா.... கவலை வேண்டாம்... தினந்தோறும் காலையும் மாலையும் நன்றாக கைகளை வீசி இரண்டு மூன்று கிலோமீட்டராவது வேகமாக நடந்து நடைபயிற்சி செய்யுங்கள். இரண்டாவது இதயம் வேலைசெய்ய ஆரம்பித்துவிடும். முதல் இதயமும் நிம்மதிப்பெருமூச்சு விடும். ஹார்ட் அட்டாக்கும் வராது.... ஆயுளும் கூடும்... இப்போது புரிகிறதா?!... ஹார்ட் பேசண்ட் நபர்களை நம் டாக்டர்கள் ஏன் அதிகாலையிலேயே நடக்கச் சொல்கிறார்கள் என்று... முதலில் வியர்வை சொட்ட சொட்ட உழைக்கச் சொல்லுவார்கள்... அதற்கு நீங்கள் சரிப்பட்டு வரமாட்டீர்களென்றால்.... வேகமாக நடக்கச் சொல்லுவார்கள்... அவ்வளவுதான். சரி... இன்றிலிருந்து வேகமாக நான் நடக்கப்போகிறேன்.... இனி எனக்கு ஹார்ட் அட்டாக் போன்ற இதயம் சம்பந்தமான வியாதிகள் எதுவும் வராதுதானே என்கிறீர்களா?... அங்குதான் ஒரு பிரச்சனை உள்ளது... இன்னாது நைனா அது... என்கிறீர்களா? "கெண்டைகால் தசை" இரண்டாவது இருதயம் என்பதெல்லாம் சரிதான். அது சரியாக இயங்கினால் இரத்தத்தை பம்ப் செய்து இதயத்திற்கு ஒத்தாசையாக இருக்கும் என்பதும் உண்மைதான்.... ஆனால் அந்த கெண்டைக்கால் தசையானது ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதனை பார்க்க வேண்டாமா?! அதிலுள்ள நரம்புகளெல்லாம் துடிப்பாக இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டாமா?!... கெண்டைகால் தசையிலுள்ள நரம்புகள் மற்றும் திசுக்கள் அனைத்தும் ஆரோக்கியமாகவும் வஜ்ரம் போல் வலிமையாகவும் இருந்தால்தானே இருதயத்தையும் வலிமையாக வைத்திருக்கும்... கூடவே உடலையும் வைரம் பாய்ந்த தேக்குமரம்... இல்லை... இல்லை... வைரம் பாய்ந்த வேங்கை மரம்போன்று வைத்திருக்கும்... அதைத்தான் செய்கிறது இந்த "வஜ்ராசனம்". ஆம். கெண்டைக்கால் தசைகளை வலுப்படுத்துகிறது. அதிலுள்ள நரம்புகளை முறுக்கேற்றுகிறது... இரண்டாவது இருதயத்தை சீராக வேலைசெய்ய தூண்டுகிறது... அதனால் உங்களின் இதயமும் குதூகலமடைகிறது... விளைவு.... உடல் முழுவதும் சுத்தமான இரத்தம் பரவுகிறது... அதன் காரணமாக உடலும் வைரம் பாய்ந்த வேங்கையாக மாறுகிறது... இப்போது சொல்லுங்கள்... இரண்டாவது இதயமான "கெண்டைக்கால் தசை"களை வலிமையாக்கும் இந்த ஆசனத்திற்கு "வஜ்ராசனம்" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது சரிதானே?!!... Vajrasana - Thunderbolt Pose - Basic information வஜ்ராசனம் - அடிப்படைத் தகவல்கள் பெயர் - Vajrasana. தமிழில் - வஜ்ராசனம். சமஸ்கிருதம் - Vajrasana. ஆங்கிலம் - Thunderbolt Pose. வேறுபெயர்கள் Adamantine Pose. Diamond Pose. Blowing In Firm Pose. ஆசனத்தின் நிலை - Sitting. பயிற்சியின் கடின தன்மை - Beginner. உடல் கோணம் - Stretch, Restorative. இது உடலை உறுதி செய்வதற்கு மட்டுமல்ல மனதை திடம்கொள்ள செய்வதற்கும் ஏற்றது. அதனால் இது தியானம் பயில்வதற்கும், மூச்சு பயிற்சி என்று சொல்லப்படும் பிரணாயாமம் செய்வதற்கும் ஏற்ற ஆசனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடலை வளைத்து செய்யப்படும் பிற கடினமான ஆசனங்களை செய்ய முடியாத வயதானவர்கள் இந்த ஆசனத்தை செய்துவரலாம். இதனால் முழங்கால்கள் நன்கு வலுப்பெறும். கால்கள் தரையில் உறுத்தாத அளவிற்கு கனமான ஜமுக்காள விரிப்பின் மீது அமர்ந்து இப்பயிற்சியை செய்யவேண்டும். சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்.... Practice of Vajrasana வஜ்ராசனம் செய்முறை Vajrasana - Thunderbolt Pose. முதலில் ஒரு கனமான ஜமுக்காளத்தை நான்காக மடித்து போட்டு அதன் மேல் இரு கால்களையும் முன்னால் நேராக நீட்டி உட்காருங்கள். அதன்பின் முதலில் இடது காலையும் பின் வலது காலையும் மடக்கி கால்களின் மேல் உடலை நேராக நிமிர்த்தி கால்களில் வலி எதுவும் ஏற்படாத வகையிலும், உறுத்தாத வகையிலும் வசதியாக உட்காருங்கள். இரு கால்களின் உள்ளங்கால்கள் மேல்நோக்கியும் இரு கால்களின் பெருவிரலும் ஒன்றையொன்று தொட்டபடியும் இருக்க வேண்டும். இரு கைகளையும் இரு தொடைகளின் மீது சின்முத்திரை செய்தோ அல்லது சாதாரண நிலையிலோ வைத்து கொள்ளலாம். மூச்சை நிதானமாக ஆழமாக இழுத்து விடவும். 5 நிமிடம் இதே நிலையில் அமரலாம். பார்ப்பதற்கு எளிதான ஆசனமாக தெரிந்தாலும் உடலுக்கு அற்புத பலன் கொடுக்கும் ஆசனம் என்றே சொல்ல வேண்டும். பொதுவாக இது தியானம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. Benefits of Training பயிற்சியின் பலன்கள் ஒருவரின் ஆரோக்கியம் என்பது அவரின் ஜீரண சக்தியின் திறனைப் பொறுத்தே அமையும். இந்த ஆசனம் ஜீரணசக்தியின் ஆற்றலை மேம்படுத்தும் என்பதால் ஆரோக்கியமும் மேம்படும். உடல் உறுதி பெறும். முதுகுத்தண்டு வலிமை பெறும். தொடை, முழங்கால், கணுக்கால், இடுப்புப் பகுதிகள் வளம் பெரும். வயிற்றுப்பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மலச்சிக்கல், அஜீரணம் அண்டாது. பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளை தீர்த்து வைக்கின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டாவது இதயமான கெண்டைக்கால் தசைகளை வலுப்படுத்துகிறது. மேலும்,... இதற்கு மனதை ஒருமுகப்படுத்தும் திறன் இருப்பதால் தியானப் பயிற்சி மற்றும் பிரணாயாமம் என்னும் மூச்சு பயிற்சி செய்வதற்கும் இது பயன்படுகிறது. இந்த வஜ்ராசனத்தைப்போலவே சோமாசனம், ஸ்வஸ்திகாசனம், கமலாசனம் என்று சொல்லப்படும் பத்மாசனம் முதலிய ஆசனங்களும் தியானப் பயிற்சி மற்றும் பிரணாயாமம் என்னும் மூச்சு பயிற்சி செய்வதற்கு ஏற்ற ஆசனங்களே. Important note முக்கியக் குறிப்புகள் இந்த பயிற்சியில் முழங்கால்களே மொத்த உடல் எடைகளையும் தாங்குவதால் முட்டி வலி, முழங்கால் வலி, கணுக்கால் வலி, முதுகு வலி, இடுப்பு வலி, முட்டி தேய்மானம், பாதங்களில் வலிகள் இருப்பவர்கள் இப்பயிற்சியை தவிர்க்கவும். குடலிறக்கம், குடல் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். கால்களில் அதிக வலி ஏற்படும்படி இப்பயிற்சியை செய்ய வேண்டாம். குறிப்பு :- ஆரம்பத்தில் சொன்னதுபோல இந்த வஜ்ராசனம் தியானப் பயிற்சி மற்றும் பிரணாயாமம் என்னும் மூச்சு பயிற்சி செய்வதற்குக்கு மிகவும் ஏற்றது. வஜ்ராசனத்தை போலவே பத்மாசனம், சித்தாசனம், சோமாசனம், ஸ்வஸ்திகாசனம், கோமுகாசனம், சுகாசனம் ஆகியவைகளும் தியானப் பயிற்சி மற்றும் பிரணாயாமம் என்னும் மூச்சு பயிற்சி செய்ய அமருவதற்கான சிறந்த ஆசனங்களே!. மேற்படி ஆசனங்களைப் பற்றி தெரிய வேண்டுமெனில் அந்தந்த ஆசனங்களுக்கான லிங்க் (Link) கீழே கொடுக்கப்படுள்ளது. அதனை சொடுக்கி (கிளிக் செய்து) தெரிந்து கொள்ளுங்கள்.