"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Ardha Uttanasana – அர்த்த உத்தானாசனம்

”அர்த்த” என்றால் ”பாதி” என்று அர்த்தம். ”Ardha Uttanasana – அர்த்த உத்தானாசனம்” என்றால் ”பாதி உத்தானாசனம்” என்று பொருள்.

உத்தானாசனம் (Uttanasana) என்னும் பயிற்சியில் இடுப்பிலிருந்து உடல் இரண்டாக முழுமையாக மடிக்கப்படும்.

ஆனால், இந்த அர்த்த உத்தானாசனம் பயிற்சியில் இடுப்பிலிருந்து உடலை முன்னோக்கி முழுமையாக வளைக்காமல் பாதி அளவில் வளைத்து செய்யும் பயிற்சி என்பதால் இது ”Ardha Uttanasana – அர்த்த உத்தானாசனம்” (Upward Forward Fold Pose) எனப் பெயர் பெற்றது.

உடலை முழுமையாக வளைத்து பயிற்சி செய்யும் உத்தானாசனம் செய்வதற்கு பலருக்கு உடல் எடுத்த எடுப்பிலேயே ஒத்துழைப்பதில்லை. அப்படியானவர்கள் இந்த அர்த்த உத்தானாசனம் பயிற்சியை தொடர்ந்து பலநாட்கள் பயிற்சி செய்து அதன்பின் உத்தானாசனம் செய்ய முயற்சி செய்யலாம்.

பெயர் – Ardha Uttanasana.

தமிழில் – அர்த்த உத்தானாசனம்.

சமஸ்கிருதம் – Ardha Uttanasana.

ஆங்கிலம் – Upward Forward Fold Pose.

வேறுபெயர்கள் – Half Standing Forward Bend, Half Forward Fold Pose, Half Intense Stretch Pose, Halfway lift Pose, Intense half Stretch Pose.

ஆசனத்தின் நிலை – Standing.

பயிற்சியின் கடின தன்மை – Intermediate.

உடல் கோணம் – Standing, Forward Fold, Forward bend.

Ardha Uttanasana – அர்த்த உத்தானாசனம் – செய்முறை

Ardha Uttanasana – அர்த்த உத்தானாசனம். இதில் இருவகையான நிலைகள் இருக்கின்றன. அவை

  1. உத்தானாசனம் போன்ற நிலை.
  2. அர்த்த உத்தானாசனம்.
Ardha Uttanasana.

முதலில் உத்தானாசனம் நிலைக்கு சென்று அதன்பின் அர்த்த உத்தானாசனம் நிலைக்கு வரவேண்டும்.

எவ்வாறெனில் முதலில் இரு கால்களையும் சிறிதளவு அகட்டி வைத்துக் கொண்டு கைகளை உடலை ஒட்டியபடி வைத்து நேராக நிற்கவும்.

Ardha Uttanasana – yoga

அதன் பின் இரு கைகளையும் மூச்சை உள்ளிக்கிழுத்தபடியே தலைக்கு மேல் நேராக உயர்த்தவும் . பின் மூச்சை வெளியே விட்டபடியே  இடுப்பின் மேல்பகுதி உடலை முன்னோக்கி வளைத்து கைகளால் பாதத்தின் முன் தரையை தொடவும். இந்த நிலை ஓரளவிற்கு உத்தாசனம் போன்றது. இந்த நிலையிலிருந்தே அர்த்த உத்தானாசன நிலைக்கு செல்லவேண்டும்.

எவ்வாறெனில், பாதத்தின் முன் வைத்துள்ள இரு கைகளையும் மூச்சை உள்ளுக்கிழுத்தபடியே மேலே மெதுவாக தூக்குவதோடு இடுப்பையும் உயர்த்தி இடுப்பின் மேல் பகுதி உடலும் கைகளும் தரைக்கு கிடைமட்டமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். மூச்சை இயல்பாக விடவும்.

இதே நிலையில் 15 முதல் 30 வினாடிகள் இருந்தபின் மூச்சை வெளியே விட்டபடி நேராக நிமிர்ந்து இயல்பு நிலைக்கு வரவும்.

இதை திரும்ப திரும்ப 5 அல்லது 6 தடவை செய்துவரவும்.

இதனால் முதுகு பலம் பெறும். முதுகெலும்பு உறுதியாகும். முதுகு தசைகள், பிட்ட தசைகள், கழுத்து தசைகள் வலுப்பெறும். தோள்பட்டை, கணுக்கால் , முழங்கால்கள், தொடைகள் மற்றும் பாதங்கள் வலுவாகும்.

உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா நிவர்த்தியாகும்.

குடலின் இயக்கத்தை எளிதாக்கி செரிமானத்தை அதிகரிக்கிறது. தொப்பையை கட்டுப்படுத்துகிறது.

முதுகு வலி உள்ளவர்கள், தொடை எலும்புகளில் காயம் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்ய முன்வர வேண்டாம். கழுத்தில் வலி மற்றும் பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கலாம். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இந்த பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் பிரச்சனைக்கு இது நல்லதொரு தீர்வை தரும் என்றாலும் இந்த பயிற்சியை செய்யும்போது தலை சுற்றுவது போல் உணர்ந்தால் தொடர்ந்து இதனை பயிற்சி செய்வதை தவிர்த்தல் வேண்டும்.

மாதவிலக்கு உள்ள காலங்களில் பெண்கள் இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதை தவிர்க்கவும். கர்ப்பிணி பெண்கள் நான்காவது மாதங்களுக்குப்பின்பு இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

எந்த ஒரு யோகாசன பயிற்சியையும் பயிற்சிசெய்ய முயலும்போது உடலில் அதிக அளவில் வலி ஏற்பட்டால் அந்த பயிற்சியை வலுக்கட்டாயமாக செய்ய முயற்சி செய்தல் கூடாது. அப்படி பயிற்சி செய்ய முற்பட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம்.

எளிமையாக இருக்கும் பயிற்சியை முதலில் செய்து உடல் வலிமை பெற்றபின் கொஞ்சம் கொஞ்சமாக பிற கடின பயிற்சிகளை செய்ய முன்வர வேண்டும்.

யோகாசன பயிற்சிகள் முடித்தபின் பயிற்சியால் இறுக்கப்பட்ட தசைகளை பழையபடி தளர்வுநிலைக்கு கொண்டுவரவேண்டும். எனவே, இதற்கு கடைசி ஆசனமாக “சவாசனம்” (சாந்தி ஆசனம்) கண்டிப்பாக செய்தபின்பே அன்றைய பயிற்சியை முடிக்கவேண்டும்.

இந்த சவாசனத்தை பயிற்சி செய்வது எப்படி என்பதனை அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள விஷீவல் சுட்டியை தட்டுங்க…

நோய்களை தெரிந்துகொள்வோம்

நாம் ஒவ்வொரு பதிவின் முடிவிலும் சம்பந்தப்பட்ட ஆசனங்கள் குணப்படுத்தும் பலவிதமான நோய்களில் ஒரு குறிப்பிட்ட நோயைப்பற்றியான அடிப்படை விஷயங்களை பார்த்து வருகின்றோம்.

இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் பலன்களாக முதுகு பலம் பெறும். முதுகெலும்பு உறுதியாகும். முதுகு தசைகள், பிட்ட தசைகள், கழுத்து தசைகள் வலுப்பெறும். தோள்பட்டை, கணுக்கால் , முழங்கால்கள், தொடைகள் மற்றும் பாதங்கள் வலுவாகும்.

உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா நிவர்த்தியாகும்.

குடலின் இயக்கத்தை எளிதாக்கி செரிமானத்தை அதிகரிக்கும். தொப்பையை கட்டுப்படுத்தும். என பார்த்தோம்.

அதேபோல எந்தெந்த நோய்கள் மற்றும் உடல் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல்கூடாது என்ற வகையில் முதுகு வலி, கழுத்து வலி, தொடை எலும்புகளில் காயம் உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்ய முன்வர வேண்டாம். வயிற்றில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் இந்த பயிற்சியை தவிர்க்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் பிரச்சனைக்கு இது நல்லதொரு தீர்வை தரும் என்றாலும் இந்த பயிற்சியை செய்யும்போது தலை சுற்றுவது போல் உணர்ந்தால் தொடர்ந்து இதனை பயிற்சி செய்வதை தவிர்த்தல் வேண்டும் என்பதனையும் தெரிந்துகொண்டோம்.

மாதவிலக்கு உள்ள காலங்களில் பெண்கள் இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதை தவிர்க்கவும். கர்ப்பிணி பெண்கள் நான்காவது மாதங்களுக்குப்பின்பு இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதனையும் பார்த்தோம்.

நோய்களை தெரிந்துகொள்வோம் வரிசையில் மேற்குறிப்பிட்ட நோய்களை தவிர்த்து “பிட்ட தசைகள்” என்னும் உடல் உறுப்பைப்பற்றிய அடிப்படை விஷயங்களை தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

*******

இத படிங்க முதல்ல – Read this first…

நோய்கள் வந்தபின் யோக சிகிச்சையால் பலன் கிடைக்குமா?

Can yoga therapy be beneficial after the onset of a disease?

பொதுவாக ஒவ்வொரு ஆசனங்களைப்பற்றி குறிப்பிடும்போது அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை விளக்கியபின்பு அந்த ஆசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதால் ஏற்படும் பலன்கள் பகுதியில் சில குறிப்பிட்ட கடுமையான நோய்களைக்கூட அதாவது இரத்த அழுத்தம், இதய நோய்கள், மூட்டுவலிகள், வயிற்றில் உள்ள வேதனைதரும் பலவிதமான நோய்களைக்கூட இந்த ஆசனங்கள் குணப்படுத்தும் என்று கோடிட்டு காட்டப்படுகிறதல்லவா?

உண்மையில் அந்த ஆசனங்களில் சொல்லப்பட்டுள்ளதுபோல சம்பந்தப்பட்ட நோய்களை அந்த ஆசனங்கள் குணப்படுத்துமா என்றால்… குணப்படுத்துவதில்லை…

சாதாரண உடல் பிரச்சனைகளை குணப்படுத்தும். மறுப்பதற்கில்லை. ஆனால் நவீன மருத்துவத்திற்கே சவால்விடுகின்ற கடுமையான நோய்களை குணப்படுத்துவதில்லை என்பதே உண்மை.. குணப்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல அதன் பாதிப்புகளை மேலும் அதிகப்படுத்திவிடுகின்றன என்பதுவும் மறுக்க முடியாத உண்மை.

அதாவது நோய்கள் வந்தபின்பு குணப்படுத்துவதில்லை. மாறாக வரும்முன்பாகவே சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் உடலை பாதுகாக்கும். எதிர்ப்பு சக்தியை உடலுக்கு கொடுக்கும் அவ்வளவே!…

எவ்வாறெனில்,… ஒவ்வொரு ஆசனங்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுத்து சுத்தமான இரத்தத்தை பாய்ச்சி அந்தந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் நோய்கள் வராமல் முன்கூட்டியே உடலை பாதுகாக்கும்.

எனவே உங்களுக்கு நவீன மருத்துவத் துறைக்கே சவால் விடுகின்ற கடுமையான நோய்கள் உடலில் இருக்கும் பட்சத்தில் அதனை யோகாசன பயிற்சியால் குணப்படுத்தப் போகிறேன் என்று கோதாவில் இறங்கி மேலும் பல சிக்கல்களை ஏற்படுத்திவிடாதீர்கள்…

ஏற்கனவே உங்கள் உடலில் இருந்துகொண்டு வேதனை அளித்து கொண்டிருக்கும் பாதிப்புகளான இரத்த அழுத்தம், இதயம், நுரையீரல், கணையம், மூளை சார்ந்த பிரச்சனைகள், கடுமையான மூட்டுவலிகள், முதுகு வலிகள் மற்றும் வயிற்றில் உள்ள பலவிதமான நோய்களை முறையான மருத்துவ சிகிச்சைகள்மூலம் குணப்படுத்தியபின் அந்த குறிப்பிட்ட நோய் மீண்டும் ஏற்படாமல் உடலை பாதுகாப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிப்பதற்கும் யோகாசன பயிற்சியை மேற்கொண்டுவரலாம்.

அதாவது, உங்களுக்கு புரியும் படி சொல்லவேண்டுமென்றால் நோய்கள் வருவதற்கு முன்பே குறிப்பிட்ட ஆசனத்தை செய்துவருவதால் சம்பந்தபட்ட கடுமையான விளைவுகளை தரும் நோய்களை வராமலே தடுக்கலாம். வந்தபின்பு அல்ல… நன்றி!

*******

இந்த பதிவு உங்கள் நண்பர்களுக்கு பயன்படலாம். So, Please share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!