"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

vajrasana.

71 / 100

பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடிய ஆசனம் இது. வஜ்ரம் என்றால் ”வைரம்” என்று பொருள். வைரம் போல் உடல் உறுதிபெறும் என்பதால் இதற்கு ”வஜ்ராசனம்” (Vajrasana) என்று பெயர். இது தியானம் பயில்வதற்கும் ஏற்ற ஆசனம்.

உடலை வளைத்து செய்யப்படும் பிற கடினமான ஆசனங்களை செய்ய முடியாத வயதானவர்கள் இந்த ஆசனத்தை செய்துவரலாம். இதனால் முழங்கால்கள் நன்கு வலுப்பெறும். கால்கள் தரையில் உறுத்தாத அளவிற்கு கனமான ஜமுக்காள விரிப்பின் மீது அமர்ந்து இப்பயிற்சியை செய்யவேண்டும்.

vajrasana pose

முதலில் இரு கால்களையும் முன்னால் நேராக நீட்டி உட்காரவும். அதன்பின் முதலில் இடது காலையும்  பின் வலது காலையும் மடக்கி கால்களின் மேல் உடலை நேராக நிமிர்த்தி கால்களில் வலி எதுவும் ஏற்படாத வகையிலும் உறுத்தாத வகையிலும் வசதியாக உட்காரவும்.

vajrasana - step

இரு கால்களின் உள்ளங்கால்கள் மேல்நோக்கியும் இருகால்களின் பெருவிரலும் ஒன்றையொன்று தொட்டபடியும் இருக்க வேண்டும்.

இருகைகளையும் இரு தொடைகளின் மீது சின்முத்திரை செய்தோ அல்லது சாதாரண நிலையிலோ வைத்து கொள்ளலாம். மூச்சை நிதானமாக ஆழமாக இழுத்து விடவும். 5 நிமிடம் இதே நிலையில் அமரலாம்.

முட்டி தேய்மானம், முட்டிவலி, முதுகுவலி இருப்பவர்கள் இப்பயிற்சியை தவிர்க்கவும். கால்களில் அதிக வலியேற்படும்படி இப்பயிற்சியை செய்ய வேண்டாம். 

பார்ப்பதற்கு எளிதான ஆசனமாக தெரிந்தாலும் உடலுக்கு அற்புத பலன் கொடுக்கும் ஆசனம் என்றே சொல்ல வேண்டும். பொதுவாக இது தியானம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

vajrasana yoga

ஒருவரின் ஆரோக்கியம் என்பது அவரின் ஜீரண சக்தியின் திறனைப் பொறுத்தே அமையும். இந்த ஆசனம் ஜீரணசக்தியின் ஆற்றலை மேம்படுத்தும் என்பதால் ஆரோக்கியமும் மேம்படும். உடல் உறுதி பெறும். முதுகுத்தண்டு வலிமை பெறும். தொடை, முழங்கால், இடுப்புப்பகுதிகள் வளம் பெரும்.

வயிற்றுப்பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மலச்சிக்கல், அஜீரணம் அண்டாது. தியானப் பயிற்சிக்கு ஏற்ற ஆசனம்.

இந்த வஜ்ராசனத்தைப்போலவே சோமாசனம், ஸ்வஸ்திகாசனம், கமலாசனம் என்று சொல்லப்படும் பத்மாசனம் முதலிய ஆசனங்களும் தியானப் பயிற்சிகளுக்கு ஏற்ற ஆசனங்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!