"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Somasana.

71 / 100

இன்று யோகாசனப் பயிற்சியானது உலக மக்களிடையே தனிக்கவனம் பெற்று வருகிறது. பல இளம் வயதினர் அழகை மேம்படுத்தவும் ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் யோக பயிற்சியை நாடுகின்றனர்.

யோகாசனப் பயிற்சியானது அழகையும் ஆரோக்கியத்தையும் மட்டுமல்ல. உடலிலுள்ள நாடி, நரம்புகளையெல்லாம் சுத்தப்படுத்தும் வேலையையும் செய்வதால் மன அமைதியையும், நல்ல சிந்தனையையும் தரவல்லது.

Somasana yoga

இன்று மன அமைதியை தரக்கூடிய, தியானம் பயில்வதற்கு உகந்த அதே  வேளையில் ஆரோக்கியத்தையும் தரக்கூடிய ”சோமாசனம்” (Somasana) என்னும் ஆசனத்தை பற்றியும் அதை பயிற்சி செய்யும் முறையை பற்றியும் பார்ப்போம்.

சோமசனம் என்பது ”பத்மாசனம்” போலவே உட்காரவேண்டும். ஆனால் கைகள் இரண்டையும் மடிமீது வைத்தல் வேண்டும்.

ஒரு விரிப்பின் மீது இரண்டு காலையும் நீட்டியபடி உட்காரவும். முதலில் இடது காலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி வலது தொடைமீது வைக்கவும்.

Somasana pose

அதே போல் வலது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும். பிறகு முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும். இரண்டு முழங்கால்களும் தரையை தொட்டபடி இருக்கவேண்டும். கைகள் இரண்டையும் மடியின் மீது ஒன்றன்மேல் ஒன்றாக இருக்கும்படி வைக்கவும். மூச்சை  மெதுவாக நேர்த்தியாக ஒரே சீராக சுவாசிக்கவும்.

இந்த ஆசனத்தில் 2 நிமிடங்கள் இருக்கவும். இரண்டு நிமிடம் இருந்த பின் ஒவ்வொரு காலாக கைகளால் பிடித்து கீழே இறக்கி வைக்கவும். பின் முன்போல் கால்களை நேராக நீட்டிக்கொள்ளவும். சில வினாடிகள் ஓய்வு எடுத்தபின் காலை மாற்றி போட்டு பயிற்சி எடுக்கவும்.

Somasana

அதாவது இடது காலை மடிப்பதற்கு பதிலாக இப்பொழுது வலது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும். அதன்பின் இடது காலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக வலது தொடைமீது வைக்கவும்.

இந்த நிலையில் இரண்டு நிமிடங்கள் இருக்கவும். முதுகு வளையாமல் நேராக அமரவும். இதை திரும்ப திரும்ப 2 முதல் 5 தடவை செய்து வரலாம்.

”சங்கடம் போக்க சம்மணம் இடுங்கள்” என்று ஒரு பழமொழி உண்டு.. சோமாசன பயிற்சியால் சங்கடங்கள் அகலும்.

குதிகால், முழங்கால், தொடை பகுதிகள் நன்கு பலம் பெறும். கால் நரம்புகள் புத்துணர்வு பெறும். பலபேர் முழங்கால் மூட்டுவலியால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு இது சிறந்த ஆசனம் எனலாம்.

இந்த ஆசனத்தில் உடலை நேராக நிமிர்த்தி மூச்சை இழுத்து ஒரே சீராக நேர்த்தியாக விடுவதால் நுரையீரல் வலுபெறுகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!