"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Utkatasana.

70 / 100

உங்கள் வீடு சாலைகளின் ஓரங்களில் அமைந்துள்ளதா?

அப்படியென்றால் இந்த காட்சியை நீங்கள் கண்டிப்பாக பார்த்திருக்கலாம்.

அதிகாலை 4 அல்லது 5 மணிக்கு எழுந்து ( முறைக்காதீர்கள் இன்று ஒருநாள் மட்டும் சூரிய உதயத்தை பார்ப்பதற்காவது எழுந்து உட்காருங்கள்)  சாலையை எட்டிப் பார்த்தீர்கள் என்றால் வயது வித்தியாசம் இல்லாமல் பலபேர் அரைக்கால் டவுசர் போட்டுக்கொண்டு காதில் எதையோ மாட்டிக்கொண்டு எங்கோ அவசரமாக நடந்து சென்று கொண்டிருப்பார்கள்.

அவர்களை தடுத்து நிறுத்தி எங்கே இவ்வளவு அவசரமாக சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டால் தெரியவில்லை என்பார்கள். கொஞ்சம் வற்புறுத்தி கேட்டால் டாக்டர்தான் இப்படி நடக்க சொன்னதாகவும், நடந்தால் ”ஹார்ட் அட்டாக்” வராது என்று அறிவுறுத்தியதாகவும் சொல்வார்கள்.

Walking exercises

சரி..  உங்கள் டாக்டர் எத்தனை நாள் இப்படி ”பை பாஸ்” ரோட்டில்  நடக்க சொன்னார் என்றால் பதில்கூற தெரியாது.

சரி.. டாக்டரிடமே கேட்டோம் என்றால் ”பைபாஸ் சர்ஜரி” செய்யும் வரை ”பைபாஸ் ரோட்” டில் நடக்க வேண்டும் என்பார். ( போங்கடா நீங்களும் உங்க ”அட்வைஸ்”ம்).

சிறிது காலத்திற்கு பிறகு அதிகமாக நடந்ததால் மூட்டு எலும்பு தேய்ந்து விட்டதாக கூறி அதற்கு தனியாக ஒரு கால் மூட்டு பெல்ட்டும்.. மூட்டுவலி தீர வலிநிவாரண மாத்திரையும் எக்ஸ்ட்ராவாக லிஸ்ட்டில் ஏறும் என்பது வேறு கதை.

பைபாஸ் ரோட்டில் நடப்பதால் இன்னும் ஒரு பிரச்சனை இருக்கிறது. பிரேக் பிடிக்காமல் பின்னால் வரும் ஆட்டோ, மினி பஸ் முதலியன இப்பவே நம்மை பைபாஸ் சர்ஜரிக்கு அனுப்பி வைத்து விடுமோ என்று பயம் வேறு.

சரி இதற்கு வேறு தீர்வே இல்லையா?

கண்டிப்பாக இருக்கிறது.

இதோ நான் சொல்லப்போகும் பயிற்சியை உங்கள் வீட்டிற்குள்ளேயே தினம் காலை, மாலை 5 நிமிட நேரம் பயிற்சி செய்தால் போதும். மூட்டெலும்பு தேய்வு ஏற்படாமலேயே கால் மூட்டிற்கு வலுவை தருவதுடன் 5 km நடந்ததற்கான பலன் கிடைத்து விடும்.

சரி.. இனி பயிற்சி என்ன என்பதை பார்ப்போம்.. இப்பயிற்சியின் பெயர் ”உட்கட்டாசனம்” (Utkatasana).

Utkatasana

முதலில் நேராக நிமிர்ந்து நிற்கவும். பின் இரு கால்களுக்கும் இடையில் 1 அடி இடை வெளி இருக்கும்படி கால்களை விரித்து வைக்கவும். இரு கைகளையும் கிடைமட்டமாக முன்னோக்கி நேராக நீட்டவும்.

பின் உடலை மெதுவாக கிழிறக்கி நாற்காலியில் உட்காருவது போல் உட்காரவும். முன்பக்கமாக உடலை வளைக்கக் கூடாது. முதுகு நேராக மேல்நோக்கி இருக்க வேண்டும். இயல்பாக மூச்சு விடவும்.

udkaddasanam kids

இதே நிலையில் 10 முதல் 30 வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக நேராக நிமிர்ந்து நிற்கவும். சில வினாடிகள் ஓய்வு எடுத்தபின் மீண்டும் முன்போல செய்யவும்.

இதேபோல் 4 அல்லது 5 தடவை இப்பயிற்சியை மேற்கொள்ளலாம்.

கால் மூட்டு பலம் பெறும். இடுப்பு, முதுகெலும்பு பலம் பெறும். கால்வலி, இடுப்புவலி, மூட்டுவலி, முழங்கால், குதிகால் வலிகள் நீங்கும்.

5 நிமிடம் இப்பயிற்சியை செய்ய 5km நடைப்பயிற்சி செய்ததற்கான பலனையும், இன்னும் கூடுதலான நன்மைகளையும் பெறமுடியும்.

இதனுடன் இதயத்திற்கு வலிமை சேர்க்கும் சில எளிய யோக பயிற்சிகளையும் மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்துவர இரண்டு விதமான ”பைபாஸ்” ம் தேவைப்படாததோடு அனைத்து விதமான இதய நோய்களையும் தவிர்த்து விட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!