Talasana - தாளாசனம். Practice for physical health Talasana. உடலுக்கும், உள்ளத்திற்கும் ஒரு சேர புத்துணர்ச்சி அளிப்பவை யோகாசன பயிற்சிகள். Practice for physical health Talasana. நாம் அவ்வப்போது பலவகையான யோகாசன பயிற்சிகளைப் பார்த்துவருகிறோம். அந்த வரிசையில் இன்றைய யோகாசன பயிற்சியாக “தாளாசனம்” (Talasana) என்னும் பயிற்சியைதான் பார்க்க இருக்கிறோம். இந்த பயிற்சியானது பயிற்சி செய்வதற்கு எளிமையான அதேவேளையில் உயரிய பலனைத்தரக்கூடியதாகும். Practice for physical health Talasana. “தாள்” என்றால் பாதம். உடலின் முழு எடைகளையும் இரு பாதங்களிலும் தாங்கிக்கொண்டு உடலை நேராக அமைத்துக்கொள்ளும் ஆசனம் என்பதால் இந்த ஆசனத்திற்கு "தாளாசனம்" (Talasana) என்று பெயர். இன்று பலருக்கும் "வெரிகோஸ்" (Varicose Veins) என்று ஒரு பிரச்னை கால்களில் ஏற்படுகிறதல்லவா?... அதாவது கால் நரம்புகளில் முடிச்சு ஏற்பட்டு நரம்புகளெல்லாம் வீங்கி கால்களை அவலட்சணமாக்குவது மட்டுமல்லாது கால்களில் சொல்லொண்ணா வலிகளையும் ஏற்படுத்துகிறதல்லவா?... ஆண் பெண் வித்தியாசமின்றி இன்று பலரும் இந்நோயிலிருந்து விடுபடுவது எப்படி என்று தவியாய் தவிக்கிறார்களல்லவா?... இனி கவலை வேண்டாம்.. முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்!. இந்த “தாளாசனம்” (Talasana) பயிற்சி சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்தும் "வெரிகோஸ்" (Varicose Veins) நோய்க்கு சிறந்த தீர்வாக அமையும் . வாருங்கள் இதனை முறையாக பயிற்சி செய்வது எப்படி என்பதனை பார்க்கலாம் (Practice for physical health Talasana). Practice for physical health Talasana. செய்முறை :- இந்த “தாளாசனம்” (Talasana) என்னும் பயிற்சியில் மொத்தம் மூன்று வகைகள் (There are a total of three types of this exercise called "Talasana") உள்ளன. அவைகளை ஒன்றையடுத்து ஒன்றாக வரிசையாக பயிற்சி செய்தல் அவசியம். அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாருங்கள். First Type - முதல்வகை. நன்கு கெட்டியான விரிப்பின்மீது இரு கால்களையும் பக்கவாட்டில் 22 சென்டிமீட்டர் அகலத்தில் இருக்கும்படி வைத்து நேராக நிமிர்ந்து நிற்கவும். அதன் பின் மூச்சுக்காற்றை உள்ளுக்கு இழுத்தபடியே வலது கையை மட்டும் தலைக்கு மேலே தூக்கி காதுகளை ஒட்டியபடி வைக்கவும். உள்ளங்கையை உள்பக்கம் பார்த்து இருக்கும்படி பார்த்துகொள்ளவும். கையை மேலே தூக்கும்போது இரண்டு குதிகால்களையும் மேலே உயர்த்தி கால்விரல்களை பயன்படுத்தி நிற்கவும். இதேநிலையில் 5 முதல் 10 வினாடிகள் நின்றபின் கைகளை பின்னால்சுற்றி உடம்பின் பக்கவாட்டில் கொண்டுவரும் அதேவேளையில் மூச்சுக்காற்றையும் மெதுவாக வெளியேவிட்டு குதிகால்களையும் கீழே இறக்கி இயல்புநிலைக்கு வரவும். இது போன்று இடதுகைகளுக்கும் பயிற்சிகொடுக்கவும். இது முதல்வகை பயிற்சி. முதல்வகை பயிற்சி முடிந்ததும் இரண்டாம்வகை பயிற்சி செய்தல் வேண்டும். Second Type - இரண்டாம் வகை. இதுவும் முதல்வகையைப்போல்தான் பயிற்சி செய்யவேண்டும் என்றாலும் ஒரு கையை மட்டும் உயர்த்தி பயிற்சி செய்வதற்கு பதிலாக இரண்டு கைகளையும் ஒருசேர மேலே தூக்கி உள்ளங்கைகளை இணைத்து கும்பிட்ட நிலையில் பயிற்சியில் ஈடுபடவேண்டும். 5 முதல் 10 வினாடிகள் நின்றபின் மூச்சை மெதுவாக வெளிவிட்டபடியே கைகளை மெதுவாக கீழே இறக்கவும். குதிகால்களையும் கீழே இறக்கி இயல்புநிலைக்கு வரவும். இதற்கு அடுத்து மூன்றாவது வகையை பயிற்சி செய்யவும். Third Type - மூன்றாவது வகை. இதுவும் இரண்டாவது வகையைப்போலவேதான் பயிற்சிசெய்ய வேண்டும் என்றாலும் மேலே தூக்கிய இரு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக நன்கு பின்னி பிணைத்து உள்ளங்கைகள் மேல்நோக்கி இருக்கும்படி வைக்கவேண்டியது அவசியம். 5 முதல் 10 வினாடிகள் நின்றபின் மூச்சை மெதுவாக வெளிவிட்டபடி கைகளை கீழே இறக்கவும். குதிகால்களையும் கீழே இறக்கி இயல்புநிலைக்கு வரவும். Practice for physical health Benefits of Training - பயன்கள். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவருவதால் கை, கால், முதுகெலும்புகள் நன்கு பலமடைகின்றன. பாதம், கணுக்கால், கால் விரல்கள், கெண்டைக்கால் சதைகள் ஆகியன வலுப்பெறுவதால் பாதவலி, வீக்கம், குதிகால் வலி, மூட்டுவலி ஆகியன குணமாகும். ஆனால் மேற்கண்ட பாதவலி, வீக்கம், குதிகால் வலி, மூட்டுவலி இருக்கும்போது இந்த பயிற்சியினை செய்தல் கூடாது. மேற்கண்ட நோய்கள் வருவதற்கு முன்னால் இந்த பயிற்சியினை செய்துவந்தால் மேற்கண்ட நோய்கள் வராமல் வருமுன் காக்கலாம். கால்களிலுள்ள நரம்புகள் நன்கு வலுப்பெறுகின்றன. கால் நரம்பு முடிச்சு நோய் என்னும் "வெரிகோஸ்" (Varicose Veins) பிரச்னை போயே போச்சு. இனி ஊருக்குள் உங்களைப்பற்றிதான் ஒரே பேச்சு. இனி நீங்களும் விடலாம் நிம்மதி பெரு மூச்சு. இது கால் நரம்பு மற்றும் கால் தசைகளை மட்டுமல்லாது வயிற்று தசைகளையும் நன்கு வலுவடைய செய்வதோடு உடலையும் நன்கு சுறுசுறுப்படைய செய்கின்றன. எச்சரிக்கை :- பாதவலி, கால்வலி, கால் வீக்கம், குதிகால் வலி, மூட்டுவலி, கால்விரல்களை வலி முதலியன இருக்கும்போது இந்த பயிற்சியினை செய்தல் கூடாது.