"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

janu sirsasana.

71 / 100

நாம் நம் தளத்தில் தொடர்ந்து பல யோகாசன பயிற்சிகளை பார்த்துவருகிறோம் . முதலில் யோக பயிற்சி செய்ய முற்படுவோர் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும். அது என்னவெனில் ஒரு குறிப்பிட்ட யோக பயிற்சியை செய்ய முற்படும் போது இந்த பயிற்சி செய்ய நம்முடைய உடல் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்குமா என்பதனை முதலில் கவனிக்க வேண்டும்.

ஏனெனில், சில யோகாசனங்கள் உடலை நன்கு வளைத்து பயிற்சி செய்யும்படி இருக்கும். ஆனால் எல்லோருடைய உடல்களும் நெகிழும் தன்மையுடன் இருக்காது. அப்படி வளையும் தன்மையற்ற உடல்நிலை உள்ளவர்கள் தங்களின் உடலுக்கு ஏற்ற எளிய ஆசனங்களையே தேர்ந்தெடுத்து செய்து வர வேண்டும். கடினமான ஆசனங்களை செய்ய முயற்சி மேற்கொண்டால் அது உடலுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

எனவே முதலில் எளிமையான ஆசனங்களை செய்து உடல் நெகிழும் தன்மை பெற்ற பின் கடின ஆசனங்களை செய்ய முன் வர வேண்டும்.

இந்த பதிவில் ”ஜானு சீராசனம்” (Janu sirsasana) என்னும் ஆசனத்தை எப்படி பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்.

janu-sirsasana

”பட்சி மோத்தாசனம்” போல்தான் இதுவும் பயிற்சி செய்ய வேண்டுமென்றாலும் இதில் ஒரே ஒரு வித்தியாசம் என்னவெனில் பஸ்திமோத்தாசனத்தில் இரண்டு கால்களும் நீட்டப்பட்டு பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இதில் ஒருகால் நீட்டி மற்றொரு காலை  மடக்கியபடி பயிற்சி செய்தல் வேண்டும்.

இந்த ஜானு சீராசனம் பயிற்சியை தொடர்ந்து செய்வதால் வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் நீங்கும். கணையம், கல்லீரல், மண்ணீரல் முதலியன சிறப்பாக பணிபுரியும்.

இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை இப்போது பார்ப்போம்.

ஒரு விரிப்பின் மீது இரு கால்களையும் நேராக நீட்டியபடி நிமிர்ந்து உட்காரவும். பின் இரு கால்களையும் ”V” வடிவில் விரித்து வைக்கவும். பின் வலதுகாலை மடித்து உள்ளங்கால் இடது காலின் தொடையில் அழுந்தும்படியாக மடித்து வைக்கவும்.

பின்னர் இரு கைகளையும் பக்கவாட்டில் நீட்டி அப்படியே தலைக்கு மேலாக மெதுவாக நீட்டி அதன்பின் உடலை முன்னோக்கி வளைத்து இரு கைகளாலும் இடது காலின் பாதத்தை தொடவும்.

janu sirsasana Postur

தலை இடது காலின் முட்டியை தொட்டபடி இருக்கவேண்டும். இதே நிலையில் 10 முதல் 15 வினாடிகள் இருந்துவிட்டு பின் இரு கைகளையும் நீட்டியபடியே தலைக்கு மேலாக தூக்கி பின் இரு கைகளையும் உடலின் பக்கவாட்டில் மெதுவாக இறக்கி சகஜநிலைக்கு வரவும்.

அதன்பின் கால்களை மாற்றி அதாவது வலது காலை நீட்டி இடதுகாலை மடித்து முன்போலவே செய்யவும்.

இதே போல் 3 முதல் 5 தடவை செய்து வரலாம்.

janu sirsasana -while-Sitting
janu sirsasana -while-Sitting

இது அற்புதமான பலன்களை வாரி வழங்கும் சிறப்பான ஆசனம் எனலாம்.

அஜீரணம், வாயுத்தொல்லை, உப்பிசம் முதலிய அனைத்து வயிறு சார்ந்த பிரச்னைகளையும் தீர்க்கும்.

வயிற்றுத்தசைகள் பலம் பெறும். அது மட்டுமல்ல உள்ளுறுப்புகளான சிறுகுடல், பெருங்குடல் முதலியன நன்கு அழுத்தப்பட்டு அவைகளுக்கு  இரத்தஒட்டம் அதிகரித்து அவைகள் நன்கு வேலை செய்யும்.

இந்த பயிற்சியில் முதுகெலும்பு நன்கு வளைக்கப்படுவதால் உடல் நன்கு நெகிழும் தன்மை அடைவதோடு இளமை மேலிடும்.

மேலும், கணையம், கலீரல், மண்ணீரல் முதலியன சிறப்பாக இயங்கும்.

இப்பயிற்சியில் அடிவயிறு நன்கு உள்நோக்கி அழுத்தப்படுவதால் உறுதியாக தொந்தி கரையும்.

பெண்களுக்கும் இது ஒரு அற்புதமான ஆசனம் எனலாம். ஏனெனில் இப்பயிற்சியை பெண்கள் தினமும் தவறாமல் செய்து வந்தால் மாதவிலக்கு சம்பந்தமாக வரக்கூடிய அத்தனை பிரச்சனைகளும் நீங்கும்.

இந்த ஆசனத்தின் மற்றொரு வகையான “பட்சி மோத்தாசனம்” என்னும் ஆசனத்தை பயிற்சிசெய்வது எவ்வாறு என்பதனை அறிய அடுத்துள்ள லிங்க் ஐ கிளிக்கவும்.

>>பட்சி மோத்தாசனம் – Paschimottanasana.<<

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!