"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Practice for physical health Tadasana.

நாம் வாழ்வுக்கு வளம் சேர்க்கும் நம்முடைய பதிவின் மூலம் ஆரோக்கியம் தரும் பல யோக ஆசனக்களைப்பற்றி கற்று வருகின்றோம். அந்த வகையில் இன்றைய யோகாசனப் பகுதியில் நோயற்ற வாழ்வுதனைத் தரக்கூடிய உன்னதப் பயிற்சியான அதே நேரத்தில் அனைவராலும் எளிதாகக் கற்றுக்கொள்ளக் கூடியதுமான தடாசனத்தைப் பற்றிதான் (Practice for physical health Tadasana) பார்க்க இருக்கின்றோம்.. வாருங்கள் பார்க்கலாம்.

”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நம் முன்னோர்களின் வாக்கு.

வெறும் புத்தி சொல்வதோடு நிறுத்தி விடாமல் நோய் அணுகாமல் உடலை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பலவற்றையும் வகுத்துத் தந்துள்ளார்கள்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நீடித்து இவ்வுலகில் உயிர் வாழ முடியும் என்பதனை “திருமூலர்” தன்னுடைய திருமந்திரம் என்னும் நூலில்…

” உடம்பார்  அழியின்  உயிரார்  அழிவர்

திடம்பட மெய்ஞானம் சேரவும்  மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்

உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

என்று உடலின் மேன்மையை அழகாக சொல்லி வைத்து சென்றுள்ளார்.

Practice for physical health Tadasana.

உடல் வளமாக இருக்க பலவழிகளை நம் முன்னோர்கள் வகுத்து தந்தாலும் அதில் ”யோகா” என்னும் உடலையும், மனதையும் ஒரே நேரத்தில் வளப்படுத்தும் பயிற்சியே மிக முக்கியமானது எனலாம்.

நாம் உடலுக்கு நலம் சேர்க்கும் பல யோகப்பயிற்சிகளை பார்த்து வருகிறோம் . அந்த வரிசையில் இன்று ”தடாசனம்” என்னும் பயிற்சியைப்பற்றி பார்க்கலாம்.

“தடா” என்றால் மலை. மலைபோல் உயர்ந்து நிற்பதால் இதற்கு தாடாசனம் (Tadasana) என்று பெயர்.

இது எளிதான அதே வேளையில் மிகச் சிறப்பான ஆசனம் எனலாம். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறப்பான ஆசனம். கணுக்கால், கெண்டைக்கால், இடுப்பு, கைகள், தோள்பட்டை முதலியவைகளுக்கு மிகச் சிறந்த பயிற்சி.

Practice for physical health Tadasana yoga

இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை இப்பொழுது பார்ப்போம்.

இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து நிமிர்ந்து நிற்கவும்.

அதன்பின் இருகைகளையும் பக்கவாட்டில் மெதுவாக தலைக்குமேலே நேராக உயர்த்தவும். பின் இரு கைகளின் விரல்களையும் ஒன்றாக பிணைத்து இரு கைகளின் உள்ளங்கைகளை மேலே பார்த்தபடி வைக்கவும்.

பின் மூச்சை உள்ளுக்கிழுத்தபடியே குதிகால்களை தரையில் இருந்து மேலே உயர்த்தவும். இதே நிலையில் 6 முதல் 10 வினாடி நேரம் நின்று அதன்பின் கைகளை பக்கவாட்டில் மெதுவாக இறக்கி உடலோடு சேர்த்து வைத்துக் கொள்ளவும். பின் மூச்சை வெளியில் விட்டுக் கொண்டே மெதுவாக குதிக்கால்களையும் தரையில் படும்படி வைத்து நாம் இயல்பாக நிற்கும் நிலைக்கு வரவும்.

Practice for physical health Tadasana  step

இதே ஆசனத்தை திரும்ப திரும்ப 5 முதல் 7 தடவை செய்து வரலாம்.

இப்பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடலின் அத்தனை தசைகள் மற்றும் நரம்புகள் இயக்கப்பட்டு உடல் வளர்ச்சி, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.

முதுகுவலி, கழுத்துவலி நீங்குவதோடு நுரையீரலும் பலம் பெறும். கணுக்கால், கெண்டைக்கால், தொடைகள், இடுப்பு, கைகள், தோள்பட்டை வலிமை பெறும் .

உடலின் அத்தனை தசைகளுக்கும் சிறந்த பயிற்சியாக இது அமைவதால் உடல் புத்துணர்ச்சி அடைவது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!