Vrikshasana - Tree Pose விருட்சாசனம் Vrikshasana - Tree Pose. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது சான்றோர் வாக்கு. நோயற்ற ஆரோக்கிய பெருவாழ்வை பெற நம் முன்னோர்கள் நமக்கு அளித்த இரு பெரும் பொக்கிஷங்கள்தான் மருத்துவமும், யோக பயிற்சியும் ஆகும். நாம் நம் பதிவில் அவ்வப்போது மருத்துவம் மற்றும் யோக பயிற்சிகள் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பயிற்சி செய்வதற்கு எளிய அதேவேளையில் உடலுக்கு அதிக அளவில் நன்மை செய்யக்கூடிய யோக பயிற்சி ஒன்றை பார்க்க இருக்கிறோம். நாம் இன்றைய பதிவில் பார்க்கப்போகும் பயிற்சி “விருட்சாசனம்” (Vrikshasana). "விருட்சம்" என்பது சமஸ்கிருத சொல். அதற்கு தமிழில் “மரம்” என்றுபொருள். விருட்சாசனம் என்றால் மரம்போல் நிற்கும் ஆசனம் என்று பொருள். Vrikshasana - Tree Pose - Basic information விருட்சாசனம் - அடிப்படைத் தகவல்கள் பெயர் - Vrikshasana. தமிழில் - விருட்சாசனம். சமஸ்கிருதம் - Vrikshasana. ஆங்கிலம் - Tree Pose. வேறுபெயர்கள் - Vrksasana, Vriksasana. ஆசனத்தின் நிலை - Standing, One-Legged. பயிற்சியின் கடின தன்மை - Beginner. உடல் கோணம் - Balance, Stretch, Strength. இது சிரசாசனத்திற்கு மாற்று ஆசனம். அதாவது சிரசாசனம் செய்தபின் அதற்கு அடுத்த ஆசனமாக செய்யவேண்டிய மிக முக்கியமான ஆசனம். ஏனெனில்,.. சிரசாசனம் செய்வதின் மூலம் கண்கள் மற்றும் தலைப்பகுதியில் தேங்கும் குருதி மீண்டும் உடலெங்கும் பரவ இந்த விருட்சாசனம் உதவி செய்கிறது. எனவே, சிரசாசனம் செய்தபின் அதற்கு அடுத்த ஆசனமாக தேர்ந்தெடுத்து செய்ய வேண்டிய ஆசனம் இது ஆகும். சிரசாசனம் செய்து முடித்த உடன் அதற்கு அடுத்த ஆசனமாக இதனை கண்டிப்பாக செய்தால்தான் சிரசாசனத்தின் முழுப்பலனும் கிடைக்கும். ஆகையால் இந்த ஆசனத்தை சிரசாசனத்தின் மாற்று ஆசனம் என குறிப்பிடுகின்றனர். சரி.. இனி விருட்சாசனம் பயிற்சி செய்யும் முறைபற்றி பார்ப்போம்… Practice of Vrikshasana விருட்சாசனம் - செய்முறை ஒரு விரிப்பின்மீது இரு கால்களையும் சேர்த்துவைத்து கைகளை தொங்கவிட்டபடி நேராக நிற்கவும். அதன்பின் வலதுகாலை ஊன்றி இடதுகாலை மடித்து அதன் பாதத்தை வலதுகாலின் தொடைமீது அல்லது முழங்கால் மீது பதித்து இரண்டு கைகளையும் தலைக்கு மேல்தூக்கி கும்பிட்டபடி வைக்கவும். பின் மெதுவாக மூச்சை உள்ளுக்கு இழுத்தபடியே வலது குதிகாலை மேலே தூக்கியபடி கால்விரல்களை தரையில் ஊன்றியபடி பத்து வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரை நிற்கவும். மூச்சை இயல்பாக விடவும். பார்வை நேராக இருக்க வேண்டும். இது சொல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால் பயிற்சி செய்வதென்பது கடினம். ஏனெனில் ஒரு காலில் நிற்கும்போது உடல் சமநிலையில் இருந்து நழுவி உடல் தள்ளாடும். கீழே விழும் சூழ்நிலை ஏற்படலாம். எனவே உடலின் சமநிலையை பேண இதனை சில நாட்கள் சுவரின் அருகில் நின்று பயிற்சி செய்து வரலாம். சிலவார பயிற்சிக்குபின் சுவரின் உதவி இல்லாமல் இதனை செய்ய பழகிக்கொள்ளுங்கள். சரி,.. வலதுகாலை ஊன்றி இடதுகாலை மடித்து அதன் பாதத்தை வலதுகாலின் தொடைமீது அல்லது முழங்கால் மீது பதித்து இரண்டு கைகளையும் தலைக்கு மேல்தூக்கி கும்பிட்டபடி 30 வினாடிகள் நின்றபின் மூச்சை மெதுவாக வெளியேவிட்டபடி குதிகாலை மெதுவாக கீழே இறக்கி நேராக நிற்கவும். கைகளையும் கீழே இறக்கி சகஜ நிலைக்கு வரவும். பத்து விநாடி ஓய்வுக்கு பிறகு இதே பயிற்சியை இடதுகாலில் செய்யவும். அதாவது இடதுகாலை ஊன்றி வலதுகாலை மடித்து அதன் பாதத்தை இடது தொடையில் அல்லது முழங்கால் மீது வைத்து இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்ட நிலையில் வைக்கவும். அதன்பின் மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து இடதுகாலின் குதிகாலை மேலே தூக்கியபடி கால்விரல்களை தரையில் ஊன்றியபடி வைத்து விரல்களால் பேலன்ஸ் செய்து நிற்க முயற்சிக்கவும். மூச்சை இயல்பாக விடவும். இவ்வாறு 10 வினாடி நின்று அதன்பின் மூச்சை வெளியே விட்டபடியே இடது குதிகாலை இறக்கி சகஜ நிலைக்கு வரவும். கைகளை கீழே இறக்கவும். இது ஒரு சுற்று. இவ்வாறு இரு கால்களையும் மாற்றி மாற்றி 5 சுற்று பயிற்சி செய்யவும். Benefits of Training பயிற்சியின் பலன்கள் இப்பயிற்சியால் மன ஒருமைப்பாடு அதிகரிக்கும். கால்கள், இடுப்பு, முதுகு, தொடை, பிட்டம் பலப்படும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். கால்களிலுள்ள தசைகள் வலிமை பெறும். மேலும் இது முதுகுவலியை குணப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாது இப்பயிற்சியானது சுத்த இரத்தம் உடல்முழுக்க பரவ வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது. மேலும் கணையத்தின் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது. செரிமானத்தை தூண்டுகிறது. பசியின்மையை நீக்குகிறது. உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. https://youtu.be/Dic293YNJI8 Important note முக்கிய குறிப்புகள் முழங்கால், கணுக்கால், பாதங்கள், கால்விரல்களில் காயங்களோ, வலிகளோ இருந்தால் இந்த ஆசனத்தை செய்ய முயற்சிக்கவேண்டாம். இடுப்பு, முதுகெலும்புகளில் வலிகள் இருந்தாலும் இந்த பயிற்சியை தவிர்க்கவும். தலைவலி, ஒற்றை தலைவலி, மூட்டுவலி உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். கர்ப்பிணி பெண்களும் இந்த பயிற்சியை தவிர்க்கவேண்டும்.