Swastikasana - Auspicious Pose. ஸ்வஸ்திகாசனம். Swastikasana - Auspicious Pose. ”ஸ்வஸ்திகா” (Swastika) என்றால் வளமையான அல்லது மங்களகரமான என்று பொருள். இந்த ஆசனம் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும், வளத்தையும் தருவதால் ”ஸ்வஸ்திகாசனம்” (Swastikasana) எனப் பெயர் பெற்றது. ஸ்வஸ்திகாசனத்தை பார்ப்பதற்கு முன்னால் முதலில் ”யோகா ஆசனம்’‘ என்றால் என்னவென்று பார்ப்போம். "யோகா" மற்றும் "யோகாசனம்" என்பது இந்தியாவில் நம் முன்னோர்களாகிய ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட உடல் மற்றும் மனவளக்கலை பயிற்சியாகும். பண்டைய ரிஷிகளாலும், முனிவர்களாலும், யோகிகளாலும் உருவாக்கப்பட்ட இந்த பயிற்சி பிற வகையான உடற்பயிற்சிகளைவிட மேன்மையானது. இன்று அதன் மேன்மை கருதி இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பட்டிதொட்டிகளுக்கு எல்லாம் வேகமாக பரவி வருகிறது. இன்று வெளிநாட்டினர் அதன் மேன்மை உணர்ந்து யோகாவை விரும்பி கற்கின்றனர். பொதுவாக யோகா என்றால் மக்களிடையே ஒரு தவறான கருத்து நிலவுகிறது. யோகா பயிற்சி என்பது ஒருவிதமான உடற்பயிற்சி என்ற வரையறைக்குள்ளாகவே அதை வைத்து பலர் பார்க்கின்றனர். அது உண்மைதான் என்றாலும்கூட யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல அதில் மனதிற்கான பயிற்சியும் அடங்கியுள்ளன. யோகப் பயிற்சியானது உடற்பயிற்சியைப்போல உடலுக்கு மட்டும் பயிற்சியளிப்பதில்லை. மனதிற்கும் ஆன்மாவிற்கும் சேர்த்தே பயிற்சியளிக்கின்றன. இதன்மூலம் முழுமையான ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியான மன வளத்தினையும் ஒருசேர பெற முடியும். இன்று மன அழுத்தம், மன சோர்வு போன்ற பிரச்சனைகள்தான் பலபேர்களுடைய வாழ்க்கையில் நிம்மதியின்மையை தருகின்றன என்பதனை நாம் பார்க்கின்றோம். அவ்வாறானவர்கள் யோகாசனம் செய்வதை தம் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வாக கொண்டுவரும் பட்சத்தில் மன அழுத்தம் மற்றும் மன சோர்விலிருந்து எளிதில் விடுபட முடியும். அவ்வாறு உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற்சியளிக்கக் கூடிய ஆசனங்களில் தியானம் செய்வதற்கு உகந்த மனதிற்கு அமைதிதர கூடிய அற்புத பலன் தரும் ஆசனம் ஒன்றை இப்போது பார்க்கலாம். நாம் இப்போது பார்க்கப்போவது “ஸ்வஸ்திகாசனம்”. இது மூச்சு பயிற்சி என்னும் பிரணாயாமம் பயில்வதற்கும், தியானம் பயில்வதற்கும் ஏற்றதொரு ஆசனம். Swastikasana - Auspicious Pose - Basic information. ஸ்வஸ்திகாசனம் - அடிப்படை தகவல்கள். பெயர் - Swastikasana. தமிழில் - ஸ்வஸ்திகாசனம். சமஸ்கிருதம் - Swastikasana. ஆங்கிலம் - Auspicious Pose. வேறுபெயர்கள் - Svastikasana. ஆசனத்தின் நிலை - Sitting. பயிற்சியின் கடின தன்மை - Beginner. உடல் கோணம் - Meditative, Stretch. பத்மாசனத்தில் உட்காருவது போல்தான் இதிலும் உட்காரவேண்டும். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் பத்மாசனத்தில் இரண்டு பாதங்களும் தொடைகள் மீது மலர்ந்தபடி இருக்கும். ஆனால் ஸ்வஸ்திகாசனத்தில் இரு பாதங்களும் கெண்டைக்காலுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கப்பட்டிருக்கும். Practice for Swastikasana. ஸ்வஸ்திகாசனம் - செய்முறை. சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்... முதலில் விரிப்பில் உட்கார்ந்து இரண்டு கால்களையும் நேராக நீட்டிக்கொள்ளுங்கள். வலது காலை மடித்து பாதங்களை இடது தொடை மீது வைக்காமல் தொடையின் பக்கவாட்டில் படும்படி வைக்கவும். அதேபோல் இடது காலை மடக்கி இரண்டு கைகளால் மெதுவாக பிடித்து தூக்கி பாதங்களை வலது கெண்டைக் கால்களுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கவும். கைகள் இரண்டையும் முழங்கால் மீது சின் முத்திரை பிடித்தபடி வைக்கவும். முதுகு கூன்விழாமல் நேராக நிமிர்ந்து உட்காரவும். கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்தால் அது கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். மூச்சை மெதுவாக நன்கு இழுத்து ஒரே சீராக சுவாசிக்கவும். 5 நிமிடம் இந்த ஆசனத்தில் உட்காரவும். அதன்பின் கால்களை மாற்றி செய்யவும். இது தியானம் செய்வதற்கு ஏற்ற நல்லதொரு ஆசனம். தியானத்தில் அமரும் பட்சத்தில் 5 லிருந்து 20 நிமிடங்கள் வரை உட்காரலாம். Benefits of Training. பயிற்சியின் பயன்கள். பத்மாசனத்திற்கான முழு பலன்களும் இந்த பயிற்சியிலும் கிடைப்பதோடு முழங்கால் நன்கு வலுப்பெற்று மூட்டு வலிகள் நீங்கும். கால்வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். முதுகெலும்பும் பலம் பெறும். நுரையீரல் வளம் பெறும். உடல் இறுக்கத்தை குறைத்து நெகிழ்வு தன்மையை அதிகரிக்கிறது. தியானம் பயில மிக சிறந்த ஆசனம் இது. மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நுரையீரலின் திறனை அதிகப்படுத்தி நரம்புமண்டலத்தை பலப்படுத்துகிறது. உணவு செரிமானத்தையும் அதிகரிக்கிறது. இந்த ஆசனமானது மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து சிந்தனையை கூர்மைப்படுத்துவதால் பிரணாயாமம், தியானத்திற்கு ஏற்றது. பிரணாயாமம், தியானப் பயிற்சிக்காக பத்மாசனம், சித்தாசனம் ஆகிய ஆசனங்களில் உட்காருபவர்கள் அதில் உட்காருவது சிரமம் என உணர்ந்தால் ஸ்வஸ்திகாசனத்தை தேர்ந்தெடுக்கலாம். இதுவும் சிரமமாக உள்ளதாக உணர்ந்தால் இருக்கவே இருக்கிறது சுகாசனம். சுகாசனத்தில் ஜம்மென்று உட்கார்ந்துவிட வேண்டியதுதான். Important Note. முக்கிய குறிப்பு. முழங்கால், இடுப்பு, முதுகு அல்லது கணுக்கால்களில் வலியோ அல்லது காயங்களோ உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது. கர்ப்பிணி பெண்கள் இந்த பயிற்சியை ஆரம்ப காலகட்டத்தில் ஓரிரு மாதங்கள் செய்யலாம். அதன்பின் தவிர்த்தல் வேண்டும். சில கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப கட்டத்திலிருந்தே கால்களில் வீக்கம் காணப்படும். அப்படியானவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது.