Pirai Asana - Moon Pose பிறையாசனம் Pirai Asana - Moon Pose. மனித உடல் நோயின்றி வாழ கடின உழைப்பு அவசியம். முன்பெல்லாம் அனைவருக்குமே கடின உழைப்பு இருந்தது. இதனால் ஆரோக்கியமும் குறைவில்லாமல் இருந்தது. ஆனால் இப்போதோ உழைப்பு என்றாலே அது பலபேருக்கு கடினமானதாக இருப்பதால் ஆரோக்கியமும் கேள்விக்குறியாகிவிட்டது. எனவே இழந்த ஆரோக்கியத்தை மீண்டும் திரும்ப பெறவேண்டுமெனில் உழைப்புக்கு பதிலாக வேறு ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது. இங்கேதான் நமக்கு கைகொடுக்க வருகிறது உடற்பயிற்சி. பரபரப்பும் மன அழுத்தமும் மலிந்துகிடக்கும் இவ்வேளையில் வெறும் உடலுக்கு மட்டும் பயிற்சி அளிப்பதோடு நிறுத்திவிடாமல் மனதிற்கும் பயிற்சியளிக்க வேண்டியிருப்பதால் இக்கட்டான இந்த சூழ்நிலையில் நமக்கு கைகொடுக்க வருகிறது யோகாசன பயிற்சிகள். யோகாசன பயிற்சியில் பல கடினமான பயிற்சிகள் இருந்தாலும் ஆரம்பக்கட்ட பயிற்சியாளர்கள் பயிற்சி செய்வதற்கென சில எளிமையான பயிற்சிகளும் உள்ளன. முதன்முதலாக பயிற்சியில் ஈடுபடுபவர்கள் அப்படியான எளிமையான ஆசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்வது சிறப்பு. அவற்றில் ஒன்றுதான் நாம் இப்போது பார்க்கப்போகும் “பிறையாசனம்” (Pirai Asana) என்னும் பயிற்சியாகும். இந்த பயிற்சி செய்யும்போது நம்முடைய உடல் வடிவம் "மூன்றாம் பிறை" போன்ற வடிவில் காணப்படுவதால் இதற்கு "பிறையாசனம்" என பெயர் பெற்றது. இந்த ஆசனத்தை "அர்த்த சக்ராசனம்" எனவும் குறிப்பிடுகின்றனர். அர்த்த சக்ராசனம் என்றால் "பாதி சக்ராசனம்" என்று பொருள். Pirai Asana - Moon Pose - Basic information பிறையாசனம் பெயர் - Pirai Asana. தமிழில் - பிறையாசனம். சமஸ்கிருதம் - Pirai Asana. ஆங்கிலம் - Arc of the Moon Pose. வேறுபெயர்கள் - Ardha Chakrasana. ஆசனத்தின் நிலை - Standing. பயிற்சியின் கடின தன்மை - Beginner. உடல் கோணம் - Back-Bend, Stretch. இந்த பிறையாசன பயிற்சியில் உடல் பிறை வடிவில் அமைவதால் இது "பிறையாசனம்" என அழைக்கப்படுகிறது. வாருங்கள் பிறையாசனம் பயிற்சி செய்யும் விதத்தை தெரிந்து கொள்ளலாம். Practice of Pirai Asana பிறையாசனம் - செய்முறை இரு கால்களுக்கிடையேயும் சுமார் இரண்டு அடி இடைவெளி இருக்கும்படி கால்களை அகட்டி வைத்துக்கொண்டு நேராக நிற்கவும். பின் இரு கைகளையும் தலைக்கு மேலாக நேராக உயர்த்தவும். அதன்பின் கைகளையும் உடலையும் மூச்சை உள்ளுக்கிழுத்தபடியே பின்னால் மெதுவாக வளைக்கவும். இந்நிலையில் உள்ளங்கை மேலே பார்த்தபடி இருக்கட்டும். 20 வினாடிகள் இதே நிலையில் இருக்கவும். மூச்சை இயல்பாக விடவும். சுமார் 20 வினாடிகள் கழித்து உடலை நேராக்கவும். சில வினாடிகள் ஓய்வுக்குப்பின் மீண்டும் முன்போலவே உடலை பின்னோக்கி வளைத்து பயிற்சி எடுக்கவும். இந்த ஆசனத்தை இரண்டு அல்லது மூன்று தடவை பயிற்சி செய்யவும். இதற்கு மாற்று ஆசனமாக விளங்குவது “பாத ஹஸ்தாசனம்“ (Patha Hastasana). எனவே பிறையாசன பயிற்சி முடிந்தவுடன் அடுத்த ஆசனமாக பாதஹஸ்த்த ஆசனம் செய்தல் வேண்டும். Benefits of Training பயிற்சியின் பலன்கள் இந்த பிறையாசன பயிற்சியால் முதுகுவலி, கழுத்துவலி நீங்குவதோடு முதுகுத்தண்டு நன்கு நெகிழும் தன்மையை பெறுகிறது. இருதயம் மற்றும் நுரைஈரலிலுள்ள தசைகள் நன்கு இழுக்கப்பட்டு இரத்த ஓட்டத்தைப் பெறுவதால் இரு உறுப்புகளும் நன்கு வலிமையைப் பெறுகின்றன. இப்பயிற்சியால் உடம்பின் இரத்த அழுத்தம் சீராகிறது. சுவாசமண்டலத்தின் இயக்கம் மேம்படுகிறது. முதுகெலும்பு வளையும் தன்மையை பெறுகிறது. இதனால் முதுகு மற்றும் இடுப்பு பலம் பெறுகின்றன. https://youtu.be/qbYoYBVEfe0 உடலிலுள்ள அத்தனை நாடிநரம்புகளும் தூண்டப்படுவதால் அனைத்து உறுப்புகளுக்கும் சுத்தமான இரத்தம் பரவி உடல் புத்துணர்ச்சி பெறுகிறது. இளமை மேலிடும். கூன்முதுகு நிமிரும். மார்புக்கூடுகள் விரிந்து நுரையீரல், சுவாச உறுப்புகள் சுறுசுறுப்படைந்து பலம் பெறுவதால் ஆஸ்துமா பிரச்சனையிலிருந்து விரைவில் விடுபடமுடியும். மேலும், இப்பயிற்சி இடுப்புக்கு நல்ல வனப்பையும், வலிமையையும் அளிக்கக்கூடியது. Important note முக்கிய குறிப்புகள் நம்மால் எவ்வளவு பின்னால் உடலை வளைக்க முடியுமோ அவ்வளவு வளைத்தால் போதுமானது. முதுகில் வலி ஏற்படும் அளவில் உடலை வளைத்தல்கூடாது. ஆரம்பத்தில் இதனை பயிற்சி செய்ய கடினமானதாக இருக்கலாம். தொடர்ந்து பயிற்சி செய்ய எளிதானதாக மாறும். இந்த ஆசனம் பயிலும்போது கால்மூட்டுகள் வளையாமல் இருக்கவேண்டியது அவசியம். கழுத்து பிரச்சனை மற்றும் தோள் வலி உள்ளவர்கள் இந்த பயிற்சி செய்வதைத் தவிர்க்கவேண்டும்.