"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Parsva Uttanasana.

Parsva Uttanasana. நாம் நலமுடன் வாழவேண்டுமெனில், ஆரோக்கியமாக திகழ வேண்டுமெனில் உடலுக்கு வெறும் உணவு மட்டும் இருந்தால் போதாது உடலுக்கு நிலையான பராமரிப்பும், முறையான உடற்பயிற்சியும் மிகமிக அவசியம்.

அவ்வாறான உடற்பயிற்சியானது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும்கூட ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் தருவதாக இருத்தல் வேண்டும்.

இதை கருத்தில்கொண்டே நம் முன்னோர்கள் உடலுக்கும், மனதிற்கும் பயிற்சி தரக்கூடிய “யோகாசனம்” (yogasana) என்னும் அற்புத வழிமுறையை நமக்கு வகுத்துத் தந்துள்ளனர்.

பொதுவாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆசனங்கள் உள்ளன என்றாலும் இவற்றில் பயிற்சி செய்வதற்கு கடினமாக உள்ள ஆசனங்களும் நிறையவே உள்ளன. பருமனான உடலை கொண்டவர்களால் சில கடினமான குறிப்பாக உடலை வளைத்து செய்யக்கூடிய ஆசனங்களை செய்ய முடிவதில்லை. அப்படியானவர்கள் பயிற்சி செய்வதற்கு எளிமையான சில ஆசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சியில் ஈடுபடலாம்.

அதை விடுத்து கடினமான ஆசனங்களை செய்ய முற்பட்டால் உடலில் பல விரும்பத்தகாத பிரச்சனைகள் மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.

எனவே, தொடர்ந்து சில மாதங்கள் எளிதான ஆசனங்களை செய்து உடல் நன்கு துவளும் தன்மையை பெற்றபின்பு கடினமான ஆசனங்களை செய்ய முற்படலாம்.

அவ்வாறு பயிற்சி செய்வதற்கு எளிமையான “பார்ஸ்வ உத்தனாசனம்” (Side Forward Fold Pose) என்னும் ஆசனத்தைப் பற்றித்தான் இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.

பார்ஸ்வ உத்தனாசனம் – அடிப்படை தகவல்கள்.

பெயர் – Parsva Uttanasana.

தமிழில் – பார்சவ உத்தனாசனம்.

சமஸ்கிருதம் – Parsva Uttanasana.

ஆங்கிலம் – Side Forward Fold Pose.

வேறுபெயர்கள் –

  • Pyramid Pose.
  • Single Leg Forward Bend.
  • Sideways Facing Forward Bend.

ஆசனத்தின் நிலை – Standing.

பயிற்சியின் கடின தன்மை – Beginner.

உடல் கோணம் – Forward Bend, Twist.

Parsva Uttanasana.

உத்தனாசனம்” (Uttanasana) என்னும் பயிற்சியை பற்றி ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். உத்தனாசனம் என்பது நேராக நின்று கொண்டு உடலை முன்னோக்கி வளைப்பதைக் குறிக்கும்.

உத்தனாசனத்தைப்போல இப்பயிற்சியிலும் உடல் முன்னோக்கிதான் வளைக்கப்படுகிறது என்றாலும் அப்பயிற்சியிலிருந்து இது சிறிய அளவிலான மாற்றத்தைக் கொண்டுள்ளது.

இரு கால்களையும் சேர்த்து வைப்பதற்கு பதிலாக இரண்டடி முன்னும் பின்னுமாக வைத்தபடி உடலை முன்னோக்கி வளைப்பதால் இது “பார்ஸ்வ உத்தனாசனம்” (Parsva Uttanasana) என பெயர்பெறுகிறது. இதனை ஆங்கிலத்தில் “Intense Side Stretch Pose” எனவும் குறிப்பிடுகின்றனர். இதன் வடிவத்தை பொறுத்து இதனை ”பிரமிடு போஸ்” (Pyramid Pose) எனவும் அழைக்கின்றனர்.

Things to know before training.

பயிற்சிக்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை.

அதிவேகமாக இந்த ஆசனத்தை பயிற்சி செய்ய முற்பட வேண்டாம். இது உடற்பயிற்சி அல்ல. யோகசன பயிற்சி என்பதனை நினைவில் கொள்ளவும். எனவே பரபரப்பில்லாமல் நிதானமாகவும், மெதுவாகவும்தான் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். வேகமாக செய்ய முற்பட்டால் வயிற்றுதசைகளும், முதுகு தசைகளும் பிடித்துக்கொள்ளும்.

சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்….

Parsva Uttanasana. girl
பார்ஸ்வ உத்தனாசனம் – செய்முறை.

முதலில் ஒரு கெட்டியான விரிப்பின்மேல் இரு கால்களையும் சேர்த்து வைத்தபடி நேராக நிற்கவும்.

பின் வலதுகாலை இடது காலில் இருந்து ஒரு இரண்டடி தூரம் இருக்கும்படி முன்னோக்கி நகர்த்தி வைக்கவும்.

இரண்டு கைகளையும் முதுகுக்குப் பின்னால் கொண்டுசென்று முழங்கைகளை மடக்கி கட்டிக்கொள்ளலாம் அல்லது இரு உள்ளங்கைகளையும் குவித்து கும்பிடுவதுபோல முதுகின் பின்னால் வைத்துக்கொள்ளலாம்.

Parsva Uttanasana. Mutra

அதன்பின் மெதுவாக இடுப்பை முன்னோக்கி வளைத்து வலது முழங்காலில் உங்கள் முகம் படும்படி 30 வினாடி நிற்கவும்.

பின் மெதுவாக நிமிர்ந்து கால்களை மாற்றி பயிற்சி செய்யவும்.

Side Forward Fold Pose
Side Forward Fold Pose 2

அதாவது வலது காலுக்கு பதிலாக இடதுகாலை முன்னோக்கி நகர்த்தி வைத்து இரண்டு கைகளையும் முதுகிற்கு பின்னால் கொண்டுசென்று முழங்கைகளைக் கட்டிக்கொண்டோ அல்லது இரு உள்ளங்கைகளையும் குவித்து கும்பிடுவதுபோல வைத்துக்கொண்டோ முன்போல மெதுவாக இடுப்பை முன்னோக்கி வளைத்து இடது முழங்காலில் உங்கள் முகம் படும்படி 30 வினாடி இருக்கவும்.

Side Forward Fold Pose 3

இவ்வாறு இரு கால்களையும் மாற்றி மாற்றி 3 முதல் 5 தடவை பயிற்சி செய்யவும்.

Parsva Uttanasana.
பயிற்சியின் பலன்கள்.

இந்த “பார்ஸ்வ உத்தனாசனம்” (Parsva Uttanasana) பயிற்சியை தொடர்ந்து பயின்றுவருவதால் வயிறு, முதுகு, இடுப்பு சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குவதோடு அவைகளுக்கு வலிவையும் தருகின்றன.

மேலும்,.. நரம்புகளுக்கு புத்துணர்வூட்டி மூளையை சுறுசுறுப்பாக்குகின்றன. கழுத்து, தோள்பட்டை, முழங்கை, கால் முதலிய உறுப்புகளுக்கு வலிமை தருவதோடு பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளையும் களைகின்றன.

கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு, குடல் இறக்கம் உள்ளவர்கள் மற்றும் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த “பார்ஸ்வ உத்தனாசனம்” (Parsva Uttanasana) ஆசனத்தை பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!