Jyestikaasana - Superior Pose. ஜெயிஷ்டிகாசனம். Jyestikaasana - Superior Pose. நோயணுகாமல் உடலைக் காப்பதில் உடற்பயிற்சிக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் அதிக பளு உள்ள கருவிகளைக்கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சிகளானது உடலின் வெளி உறுப்புகளை மட்டுமல்ல உடலின் உள் உறுப்புகளையும் கரடுமுரடாக்கி விடுகின்றன. உடலின் உள் உறுப்புகளில் பல உறுப்புகள் துவளும் தன்மையுடன் மென்மையாக இருந்தால்தான் அவைகளின் இயக்கம் தடையில்லாமல் இருக்கும். ஆனால்,... கடுமையான பளு உள்ள கருவிகளின் துணைகொண்டு செய்யப்படும் உடற்பயிற்சியானது மென்மையாக இருக்க வேண்டிய உறுப்புகளை கடினத்தன்மையாக மாற்றிவிடுவதால் அவைகளின் இயல்பான இயக்கங்கள் பாதிப்படைகின்றன. எனவேதான் கடினமான உடற்பயிற்சிகளால் சிலநேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம். ஆனால்,... யோகாசனப் பயிற்சியில் அப்படியான ஆபத்துக்கள் ஏற்படுவதில்லை. ஏனெனில், யோகாசனப் பயிற்சியானது உடலின் உள், வெளி என அனைத்து உறுப்புகளையும் துவளும் தன்மையுடனேயே வைக்கின்றன. கரடுமுரடாக்குவதில்லை. எனவே யோகாசனப் பயிற்சி செய்வதால் உயிருக்கோ அல்லது உடலின் ஆரோக்கியத்திற்கோ எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை. எனவேதான் உடலை வருத்தி கடினமாக செய்யப்படும் உடற்பயிற்சிகளைவிட உடலை மென்மையாக கையாளும் யோகாசன பயிற்சிகளே சிறப்பானவை என்கின்றோம். இவைகள் உடலுக்கு மட்டுமல்லாது மனதிற்கும் பயிற்சி கொடுப்பவையாக இருப்பது மேலும் ஒரு ப்ளஸ் பாயிண்ட். உடல், மனம் இரண்டுக்கும் பயிற்சியளிக்கும் யோகப்பயிற்சியை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாருங்கள். Jyestikaasana - Superior Pose - Basic information. ஜெயிஷ்டிகாசனம் - அடிப்படை தகவல்கள். பெயர் - Jyestikaasana. தமிழில் - ஜெயிஷ்டிகாசனம். சமஸ்கிருதம் - Jyestikaasana. ஆங்கிலம் - Superior Pose. வேறுபெயர்கள் - ஜெயிஷ்டிகா ஆசனம். ஆசனத்தின் நிலை - Prone, Abdomen. பயிற்சியின் கடின தன்மை - Beginner. உடல் கோணம் - Restorative. ஆசனங்கள் செய்வதற்கு எளிதுதான் என்றாலும் எடுத்த எடுப்பிலேயே எல்லா ஆசனங்களையும் எல்லோராலும் உடனடியாக செய்துவிட முடியாது. சில ஆசனங்கள் செய்ய கடினமாகத் தோன்றும். அவைகளை பயிற்சி செய்ய உடல் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. ஏனென்றால்... உடல் துவளும் தன்மையை இன்னும் பெறவில்லை என்பதே காரணம். எனவே யோகாசன பயிற்சியை புதிதாக துவங்கும் சாதனையாளர்கள் ஆரம்பக்கட்டத்தில் செய்வதற்கு எளிமையாக இருக்கக்கூடிய ஆசனங்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவைகளை தொடர்ந்து செய்துவர ஒரு வருடங்களுக்குள்ளாக கடினமான ஆசனங்களைக்கூட செய்யும் அளவிற்கு உடல் துவளும் தன்மையை பெற்றுவிடும். எனவே ஆரம்பகால பயிற்சியாளர்கள் எளிதாக செய்யக்கூடிய ஆசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்தல் வேண்டும். அப்படியான ஒரு மிக மிக எளிமையான ஆசனத்தை பற்றித்தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதுதான் ”ஜெயிஷ்டிகாசனம்” (Jyestika asana). Jyestika asana குப்புற படுத்துக்கொண்டு செய்யப்படும் இந்த ஆசனமானது மிக மிக எளிது. ஆனால் பலனோ மிக மிக பெரியது. சமஸ்கிருத வார்த்தையான "ஜ்யேஷ்டா" என்னும் பதத்திலிருந்து வந்ததே "ஜெயிஷ்டிகாசனம்” என்னும் பெயர். ஜ்யேஷ்டா என்றால் "உயர்ந்தவர்" அல்லது "மேன்மையானவர்" என்று பொருள். உடலை வருத்தி பயிற்சி செய்ய முடியாதவர்கள், கடினமான பயிற்சி செய்ய உடல் ஒத்துழைப்பு கொடுக்காமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் கடினமான பயிற்சி செய்ய முடியாத அளவுக்கு உடல் பருமனானவர்களுக்கு எளிதாக பயிற்சி செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள ஆசனம்தான் "ஜெயிஷ்டிகாசனம்". அதாவது,... தொந்தியுடன் கூடிய பருமனான உடலைக் கொண்டவர்களால் எந்த பயிற்சியையும் செய்ய முடியாது. அவ்வாறான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் ”ஜெயிஷ்டிகாசனம்” (Jyestika asana) செய்வதின் மூலம் அதிகப்படியான தொப்பையைக் குறைத்து சீரான உடலமைப்பைப் பெறமுடியும். இனி ஜெயிஷ்டிகாசனம் (Jyestika asana) பயிற்சி செய்வது எப்படி என்பதனைப் பார்ப்போம்.. Practice of Jyestika asana. ஜெயிஷ்டிகாசனம் - செய்முறை. ஒரு கெட்டியான ஜமுக்காளத்தை நான்காக மடித்து சமமான தளத்தில் விரித்துக்கொள்ளுங்கள். அதன்பின் ஜமுக்காள விரிப்பில் நெற்றி தரையில் தொடும்படி குப்புற படுக்கவும். இரண்டு கால்களையும் சிறிது அகட்டி வைத்துக் கொள்ளலாம். குதிகால்கள் மேல் நோக்கியும் மேல் பாதங்கள் தரையில் படிந்தபடியும் இருக்கட்டும். இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து தலையின் பின்பகுதியில் வைக்கவும். கையின் மூட்டுப் பகுதி விரிப்பில் படும்படி இருக்கவும். மூச்சை இயல்பாக விடவும். இந்த நிலையில் சில நிமிடங்கள் இருக்கவும். பின் மெதுவாக எழுந்து உட்காரவும். அவ்வளவுதான். சிறிது ஓய்வுக்கு பின் மீண்டும் இப்பயிற்சியை செய்யவும். இரண்டு மூன்று தடவைகள் இப்பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்துவர நல்ல பலன்களைப் பெறலாம். Benefits of Training. பயிற்சியின் பலன்கள். இது பார்ப்பதற்கும், பயிற்சி செய்வதற்கும் எளிதான ஆசனமாக இருந்தாலும் உடல் பருமனானவர்களுக்கு இதன் பலன்களோ அற்புதமானது. கடினமான ஆசனங்களை பயிற்சி செய்ய முடியாதவர்கள் எளிதான ஆசனங்களுடன் இந்த பயிற்சியையும் தொடர்ந்து செய்வதினால் முக்கியமாக வயிற்றிலுள்ள கொழுப்புகள் கரைந்து தொந்தி குறையும். வயிற்றுப்பகுதி தட்டையாகும். முதுகு வலியை குணப்படுத்தும். கழுத்து இறுக்கமும் நிவர்த்தியாகும். பெண்களுக்கு கருப்பப்பை வாய் பிரச்சனைகள் மற்றும் "ஸ்பான்டைலிடிஸ்" போன்ற முதுகெலும்பு பிரச்சனைகளுக்கு நல்லதொரு நிவாரணத்தை கொடுக்கிறது. இது எல்லாவற்றையும் விட மன அழுத்தத்தை போக்கும் அற்புதமான ஆசனம். Important note. முக்கிய குறிப்பு. இந்த பயிற்சியில் நெற்றி தரையில் அழுத்துவதால் அல்லது உராய்வதினால் சிலருக்கு அது அசௌகரியமாக இருக்கலாம். அப்படியானவர்கள் நெற்றியின் கீழ் நான்காக மடிக்கப்பட்ட ஒரு மிருதுவான துணியை வைத்துக்கொள்ளலாம். இது மிக எளிதான ஆசனம்தான் என்றாலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த ஆசனம் ஏற்றதல்ல. எனவே கர்ப்பமான பெண்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.