Vakrasanam. வக்ராசனம். Continue the practice for - Vakrasanam. ”வக்ரா” என்றால் முறுக்குதல் என்று பொருள்.. இந்த ஆசனத்தில் உடல் திருக்கப்படுவதால் இது ”வக்ராசனம்” (Vakrasanam) என பெயர் பெற்றது. இந்த ஆசனம் அனைத்து வயதினரும் பயிற்சி செய்யும்படி அமைந்துள்ள ஒரு எளிய ஆசனம். பெயர் - Vakrasanam. தமிழில் - வக்ராசனம். சமஸ்கிருதம் - ஆங்கிலம் - வேறுபெயர்கள் - ஆசனத்தின் நிலை - பயிற்சியின் கடின தன்மை - உடல் கோணம் - பொதுவாக யோகாசனம் செய்வதற்கு வயது ஒரு தடை அல்ல. ஐந்து வயதில் தொடங்கி சுமார் எண்பது வயது வரையில் இருபாலரும் இப்பயிற்சியில் ஈடுபடலாம். பருமனான உடலை கொண்டவர்கள் உடலை வளைத்து செய்யக்கூடிய ஆசனங்களை செய்வது என்பது கடினம். இவர்கள் எளிதாக செய்யக்கூடிய ஆசனங்களை செய்து உடல் மெலிந்தபின் பிற ஆசனங்களை செய்ய முன்வரலாம். அதிகாலை உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற நேரம் என்றாலும் மாலையிலும் யோகா செய்துவரலாம் தவறில்லை. காலையில் உடல் நன்கு வளைந்து கொடுப்பதில்லை ஆனால் மாலையில் உடல் நன்கு பயிற்சிக்கு வளைந்து கொடுப்பதை நீங்கள் அனுபவபூர்வமாகப் பார்க்கலாம். காலை, மாலை இரு நேரங்களிலும் யோகாசனப் பயிற்சியை மேற்கொள்ளலாம். காலையோ, மாலையோ யோகா பயிற்சி செய்வதற்குமுன் மலசலம் கழித்து வயிறு காலியாக இருக்க வேண்டியது மிக முக்கியம். உணவு உண்டவுடன் பயிற்சியில் ஈடுபடுதல் கூடாது. உணவு உண்டு நான்கு மணிநேரம் கழித்தே பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதேபோல் பயிற்சி செய்து முடித்த உடன் சாப்பிட கூடாது. பயிற்சி முடிந்து அரைமணிநேரம் கழித்த பின்பே சாப்பிடுவதோ, குளிப்பதோ, குளிர்ந்த நீரால் முகம் கழுவுவதோ செய்தல் வேண்டும். சரி, இனி வக்ராசனத்தை பயிற்சி செய்வது எப்படி என்பதனை பார்ப்போம். Practice of Vakrasanam - செய்முறை. Continue the practice for - Vakrasanam. முதலில் ஒரு விரிப்பின் மீது இரண்டு கால்களையும் நேராக நீட்டி கைகள் இரண்டையும் பிட்டத்தின் இரு பக்கங்களில் தரையில் ஊன்றியபடி நிமிர்ந்து உட்காரவும். வலதுகாலை மடக்கி வலது பாதத்தை இடது முழங்காலின் அருகில் வைக்கவும். உடலை வலது பக்கமாக திருக்கி இடது கையை வலது முழங்காலுக்கு வெளிப்புறமாக கொண்டு சென்று வலது காலின் பெருவிரலை பிடித்துக் கொள்ளவும். வலது உள்ளங்கையை தரையில் ஊன்றவும். இதேநிலையில் 10 முதல் 20 வினாடிகள் இருக்கவும். பின் இடதுகையை விடுவித்து உடலை நேராக கொண்டுவந்து கையை தரையில் ஊன்றிக்கொள்ளவும். வலதுகாலை நேராக நீட்டிகொள்ளவும். அதன்பின் கால்களை மாற்றி உடலை இடதுபக்கமாக திருப்பி இப்பயிற்சியை செய்யவும். இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி 3 முதல் 6 தடவை வரை செய்துவரலாம். Benefits of Training - பலன். முதுகுப்பகுதி நன்றாக திருகப்பட்டு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. முதுகுவலி, இடுப்புவலி முதலியவற்றை நீக்குகிறது. நரம்புத்தளர்ச்சி உள்ளவர்கள் தொடர்ந்து இப்பயிற்சியை செய்துவர நோய் நீங்கி நாடி நரம்புகள் அனைத்தும் வலிமை பெறும். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். கல்லீரல், மண்ணீரல், கணையம், குடல்கள் அனைத்தும் நன்கு அழுத்தப்பட்டு சுறுசுறுப்பாகின்றன. இதனால் மலசிக்கல், அஜீரணம், நீரழிவு, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட கோளாறுகள், உடல் பருமன், தொந்தி முதலியன நீங்கும். குறிப்பு. ”ஹெர்னியா” (Hernia) என்று சொல்லப்படும் குடல் சம்பந்தப்பட்ட நோயுள்ளவர்கள் இப்பயிற்சி செய்தல் கூடாது. இதே பயிற்சியை சிற்சில மாற்றங்களுடன் காலை மடக்கி வைத்துக்கொண்டு செய்யும் பயிற்சி முறையும் உள்ளது. அதற்கு “அர்த்த மத்ஸ்யேந்திராசனம்” என்று பெயர். அதனை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை கீழேயுள்ள சுட்டிதனை சொடுக்கி அறியவும். >>அர்த்த மத்ஸ்யேந்திராசனம் – Ardha Matsyendrasana.<<