vajrasana - வஜ்ராசனம். Continue the practice for - Vajrasana. பார்ப்பதற்கு எளிதாக தோன்றினாலும் உடலுக்கு அதிக நன்மை தரக்கூடிய ஆசனம் இது. எளிமைக்குப் பின்னால்தான் இனிமையும், வலிமையும் இருக்கும் என்பார்கள். அந்த கூற்று இந்த ஆசனத்திற்கு மிகவும் பொருந்தும். அதனாலேயே இதற்கு "வஜ்ராசனம்" என்று பெயர். "வஜ்ரம்" என்றால் ”வைரம்” என்று பொருள். இதனை தொடர்ந்து பயிற்சி செய்து வருவதினால் வைரம் போல் உடல் உறுதி பெறும் என்பதினால் இதற்கு ”வஜ்ராசனம்” (Vajrasana) என்று பெயர். பெயர் - Vajrasana. தமிழில் - வஜ்ராசனம். சமஸ்கிருதம் - ஆங்கிலம் - வேறுபெயர்கள் - ஆசனத்தின் நிலை - பயிற்சியின் கடின தன்மை - உடல் கோணம் - இது உடலை உறுதி செய்வதற்கு மட்டுமல்ல மனதை திடம்கொள்ள செய்வதற்கும் ஏற்றது. அதனால் இது தியானம் பயில்வதற்கும் ஏற்ற ஆசனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உடலை வளைத்து செய்யப்படும் பிற கடினமான ஆசனங்களை செய்ய முடியாத வயதானவர்கள் இந்த ஆசனத்தை செய்துவரலாம். இதனால் முழங்கால்கள் நன்கு வலுப்பெறும். கால்கள் தரையில் உறுத்தாத அளவிற்கு கனமான ஜமுக்காள விரிப்பின் மீது அமர்ந்து இப்பயிற்சியை செய்யவேண்டும். சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்.... Continue the practice for - Vajrasana. முதலில் ஒரு கனமான ஜமுக்காளத்தை நான்காக மடித்து போட்டு அதன் மேல் இரு கால்களையும் முன்னால் நேராக நீட்டி உட்காருங்கள். அதன்பின் முதலில் இடது காலையும் பின் வலது காலையும் மடக்கி கால்களின் மேல் உடலை நேராக நிமிர்த்தி கால்களில் வலி எதுவும் ஏற்படாத வகையிலும், உறுத்தாத வகையிலும் வசதியாக உட்காருங்கள். இரு கால்களின் உள்ளங்கால்கள் மேல்நோக்கியும் இருகால்களின் பெருவிரலும் ஒன்றையொன்று தொட்டபடியும் இருக்க வேண்டும். இருகைகளையும் இரு தொடைகளின் மீது சின்முத்திரை செய்தோ அல்லது சாதாரண நிலையிலோ வைத்து கொள்ளலாம். மூச்சை நிதானமாக ஆழமாக இழுத்து விடவும். 5 நிமிடம் இதே நிலையில் அமரலாம். முட்டி தேய்மானம், முட்டிவலி, முதுகுவலி இருப்பவர்கள் இப்பயிற்சியை தவிர்க்கவும். கால்களில் அதிக வலியேற்படும்படி இப்பயிற்சியை செய்ய வேண்டாம். பார்ப்பதற்கு எளிதான ஆசனமாக தெரிந்தாலும் உடலுக்கு அற்புத பலன் கொடுக்கும் ஆசனம் என்றே சொல்ல வேண்டும். பொதுவாக இது தியானம் செய்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. Benefits of Training - பலன். ஒருவரின் ஆரோக்கியம் என்பது அவரின் ஜீரண சக்தியின் திறனைப் பொறுத்தே அமையும். இந்த ஆசனம் ஜீரணசக்தியின் ஆற்றலை மேம்படுத்தும் என்பதால் ஆரோக்கியமும் மேம்படும். உடல் உறுதி பெறும். முதுகுத்தண்டு வலிமை பெறும். தொடை, முழங்கால், இடுப்புப்பகுதிகள் வளம் பெரும். வயிற்றுப்பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் மலச்சிக்கல், அஜீரணம் அண்டாது. தியானப் பயிற்சிக்கு ஏற்ற ஆசனம். இந்த வஜ்ராசனத்தைப்போலவே சோமாசனம், ஸ்வஸ்திகாசனம், கமலாசனம் என்று சொல்லப்படும் பத்மாசனம் முதலிய ஆசனங்களும் தியானப் பயிற்சிகளுக்கு ஏற்ற ஆசனங்களே. எச்சரிக்கை. இந்த பயிற்சியில் முழங்கால்களே மொத்த உடல் எடைகளையும் தாங்குவதால் முட்டிவலி, முழங்கால்வலி, முதுகுவலி, முட்டி தேய்மானம், பாதங்களில் வலிகள் இருப்பவர்கள் இப்பயிற்சியை தவிர்க்கவும். கால்களில் அதிக வலியேற்படும்படி இப்பயிற்சியை செய்ய வேண்டாம். குறிப்பு :- ஆரம்பத்தில் சொன்னதுபோல இந்த வஜ்ராசனம் தியானப் பயிற்சிக்கு மிகவும் ஏற்றது. வஜ்ராசனத்தை போலவே பத்மாசனம், சித்தாசனம், சோமாசனம், ஸ்வஸ்திகாசனம், கோமுகாசனம், சுகாசனம் ஆகியவைகளும் தியானப் பயிற்சிக்கு அமருவதற்கான சிறந்த ஆசனங்களே!. மேற்படி ஆசனங்களைப் பற்றி தெரிய வேண்டுமெனில் அந்தந்த ஆசனங்களுக்கான லிங்க் (Link) கீழே கொடுக்கப்படுள்ளது. அதனை சொடுக்கி (கிளிக் செய்து) தெரிந்து கொள்ளுங்கள். >>Practice for physical health - Swastikasana<< >>Practice for physical health - Somasana<<