"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

practice for – Eka pada Asana

practice for – Eka pada Asana. “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது சான்றோர் வாக்கு. நோயற்ற ஆரோக்கிய பெருவாழ்வை பெற நம் முன்னோர்கள் நமக்கு அளித்த இரு பெரும் பொக்கிஷங்கள்தான் மருத்துவமும், யோகபயிற்சியும் ஆகும்.

நாம் நம் பதிவில் அவ்வப்போது மருத்துவம் மற்றும் யோக பயிற்சிகள் பற்றி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பயிற்சி செய்வதற்கு எளிய அதேவேளையில் உடலுக்கு அதிக அளவில் நன்மை செய்யக்கூடிய யோக பயிற்சி ஒன்றை பார்க்க இருக்கிறோம். 

நாம் இன்றைய பதிவில் பார்க்கப்போகும் பயிற்சி “ஏகபாத ஆசனம்”. ஏகம் என்றால் “ஒன்று” என்றுபொருள். பாதம் என்றால் கால் மற்றும் பாதங்களை குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் ஒரு காலை மட்டும் பயன்படுத்தி இந்த பயிற்சியை செய்வதால் ஏகபாத ஆசனம் (Eka pada asana) என்னும் பெயரை பெற்றது.

பெயர் – Eka pada Asana.

தமிழில் – ஏகபாத ஆசனம்.

சமஸ்கிருதம் – 

ஆங்கிலம் –

வேறுபெயர்கள் –

ஆசனத்தின் நிலை

பயிற்சியின் கடின தன்மை

உடல் கோணம்

practice for - Eka pada Asana
Egapatha Asanam.

இந்த ஆசனம் ஏகபாத ஆசனம், நின்ற பாத ஆசனம், விருட்சாசனம் என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

இது சிரசாசனத்திற்கு மாற்று ஆசனம். அதாவது சிரசாசனம் செய்தபின் அதற்கு அடுத்த ஆசனமாக செய்யவேண்டிய மிக முக்கியமான ஆசனம். ஏனெனில் சிரசாசனம் செய்வதின் மூலம் கண்கள் மற்றும் தலைப்பகுதியில் தேங்கும் குருதி மீண்டும் உடலெங்கும் பரவ இந்த ஏகபாத ஆசனம் உதவி செய்கிறது.

எனவே, சிரசாசனம் செய்தபின் அதற்கு அடுத்த ஆசனமாக தேர்ந்தெடுத்து செய்ய வேண்டிய ஆசனம் இது ஆகும். சிரசாசனம் செய்து முடித்த உடன் அதற்கு அடுத்த ஆசனமாக இதனை கண்டிப்பாக செய்தால்தான் சிரசாசனத்தின் முழுப்பலனும் கிடைக்கும். ஆகையால் இந்த ஆசனத்தை சிரசாசனத்தின் மாற்று ஆசனம் என குறிப்பிடுகின்றனர்.

சரி.. இனி ஏகபாத ஆசனம் பயிற்சி செய்யும் முறைபற்றி பார்ப்போம்…

ஒரு விரிப்பின்மீது இரு கால்களையும் சேர்த்துவைத்து கைகளை தொங்கவிட்டபடி நேராக நிற்கவும். அதன்பின் வலதுகாலை ஊன்றி இடதுகாலை மடித்து அதன் பாதத்தை வலதுகாலின் தொடைமீது அல்லது முழங்கால் மீது பதித்து இரண்டு கைகளையும் தலைக்கு மேல்தூக்கி கும்பிட்டபடி வைக்கவும்.

பின் மெதுவாக மூச்சை உள்ளுக்கு இழுத்தபடியே வலது குதிகாலை மேலே தூக்கியபடி கால்விரல்களை தரையில் ஊன்றியபடி பத்து வினாடிகள் முதல் 30 வினாடிகள் வரை  நிற்கவும். மூச்சை இயல்பாக விடவும். பார்வை நேராக இருக்க வேண்டும். பின் மூச்சை மெதுவாக வெளியேவிட்டபடி குதிகாலை மெதுவாக கீழே இறக்கி நேராக நிற்கவும். கைகளையும் கீழே இறக்கி சகஜ நிலைக்கு வரவும்.

practice for - Eka pada Asana male.

பத்து விநாடி ஓய்வுக்கு பிறகு இதே பயிற்சியை இடதுகாலில் செய்யவும்.

அதாவது இடதுகாலை ஊன்றி வலதுகாலை மடித்து அதன் பாதத்தை இடது தொடையில் அல்லது முழங்கால் மீது வைத்து இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி கும்பிட்ட நிலையில் வைக்கவும். அதன்பின் மூச்சை மெதுவாக உள்ளே இழுத்து இடதுகாலின் குதிகாலை மேலே தூக்கியபடி கால்விரல்களை தரையில் ஊன்றியபடிவைத்து விரல்களால் பேலன்ஸ் செய்து நிற்க முயற்சிக்கவும். மூச்சை இயல்பாக விடவும்.

இவ்வாறு 10 வினாடி நின்று அதன்பின் மூச்சை வெளியே விட்டபடியே இடது குதிகாலை இறக்கி சகஜ நிலைக்கு வரவும். கைகளை கீழே இறக்கவும். இது ஒரு சுற்று. இவ்வாறு இரு கால்களையும் மாற்றி மாற்றி 5 சுற்று பயிற்சி செய்யவும்.

இப்பயிற்சியால் மன ஒருமைப்பாடு அதிகரிக்கும். கால்கள் பலப்படும். நரம்புத்தளர்ச்சி நீங்கும். கால்களிலுள்ள தசைகள் வலிமை பெறும். அதுமட்டுமல்லாது இப்பயிற்சியானது சுத்த இரத்தம் உடல்முழுக்க பரவ வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது. மேலும் கணையத்தின் இயக்கத்தையும் மேம்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!