Dhanurasana தனுராசனம் மன்மதனின் ஆயுதம் எதுவென்று தெரியுமல்லவா?!... கரும்புவில்... Dhanurasana. அதில் தொடுப்பதற்காக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள சில மலர்க்கணைகள். இந்த இரண்டும்தான் மன்மதனுடைய ஆயுதங்கள்... ஆனால் இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு இவன் பண்ணுகிற அட்ராசிட்டி வேலைகள் இருக்கிறதே... அப்பப்பா... அதுசரி,.. இரும்பு அடிக்கிற இடத்துல "ஈ"க்கு என்ன வேலை என்பது போல் யோகாசனம் படிக்கும் இடத்தில் மன்மதனை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன?! என கேக்கிறீர்களா? அவசியம் இருக்கிறது... இந்த தனுராசனத்தை செய்து கொண்டிருக்கும்போதே மன்மத ராசா கரும்பு வில்லில் மலர்கணைகளை தொடுத்தப்படியே உங்களுக்குள் உயிர்த்தெழுவதை நீங்களே பார்க்கலாம்... சரி... மன்மதனின் காதல் சேட்டைகளைப்பற்றி பயிற்சியின் போது நீங்களே நேரடியாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இப்போது நாம் "தனுராசனம்" பற்றி மட்டும் பார்ப்போம். Dhanurasana - Basic information தனுராசனம் - அடிப்படைத் தகவல்கள் தனுசு என்றால் ”வில்”. இந்த ஆசனத்தில் வில் போன்று நம்முடைய உடல் பின்னோக்கி வளைக்கப்படுவதால் இது ”தனுராசனம்” (Dhanurasana) என பெயர் பெற்றது. இது மிகவும் அற்புதமான ஆசனம். சந்தோஷங்களை அள்ளித்தரும் ஆசனம். வாருங்கள் தனுராசனத்தின் அற்புதங்களை அறிந்துகொள்வோம். பெயர் - Dhanurasana. தமிழில் - தனுராசனம். சமஸ்கிருதம் - Dhanurasana. ஆங்கிலம் - Bow Pose. வேறுபெயர்கள் - Dhanur asana. ஆசனத்தின் நிலை Prone Abdomen Hand-To-Feet பயிற்சியின் கடின தன்மை - Biginner. உடல் கோணம் - Back-Bend, Stretch. Things to know before training பயிற்சிக்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை இந்த பயிற்சியின் மூலம் உங்களின் முதுகுத்தண்டு நன்கு துவளும் தன்மையைப் பெறும். இதனால் இளமை மேலிடும். சுறுசுறுப்பு பெருகும். முதுகு கூன் விழுவதிலிருந்து தடுக்கப்படும். உடலின் உள்ளுறுப்புகளான இதயம், நுரையீரல் முதலியன வலுப்பெறும். இவ்வளவு நன்மைகளைக் கொண்டுள்ளதாலேயே இது எனக்கு மட்டுமல்ல ஆசன பயிற்சிகளில் ஈடுபடும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஆசனமும் கூட. ஆனால்,... சில ”துடிப்பான” இளைஞர்கள் இந்த ஆசனத்தை செய்து முடிக்கும் தருவாயில் அமைதியான காலைப்போழுதை "பிசுபிசுக்க" வைத்து ”வடை போச்சே” என்று பீல் பண்ண வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்திவிடுகிறது... ஏனென்றால் "சிவனே என்று எம்பாட்டுக்கு நான் தூங்கிக்கிட்டு இருந்தேன்... பயிற்சி செய்கிறேன்... முயற்சி செய்கிறேன்னு.... என்னை ஏண்டா தட்டி எழுப்புன" என்று எங்கிருந்தோ ஒரு குரல்வந்து உங்கள் காதில் ரீங்காரமிடுவதை உங்களால் உணர முடியும்... ஹி.. ஹிஹி... இது ஆண்மையை அதிகரிக்கச் செய்யும் அற்புதமான ஆசனம் என்றாலும்கூட இதை பயிற்சி செய்து முடிக்கும் வரையில் கை, கால்களை வைத்துக்கொண்டு கொஞ்சம் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் "வடைபோச்சே" கதைதான்... கூடவே சேலம் "செல்வராஜ் சித்த வைத்திய சாலை"க்கு சென்று தாத்தாவின் ஆலோசனைகளை பெறவேண்டி வரும்... அம்புட்டுதான் சொல்வேன்... சரி... இனி தனுராசனத்திற்கு வருவோம்... தனுராசனத்தினால் மார்பு வலிமை பெறும். கூன் முதுகை நிமிரச்செய்து இளமையை கொடுக்கும். மார்புச்சளி, சைனஸ், ஆஸ்துமா, ஈசினோபீலியா, இருமல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். தனித்துவம் வாய்ந்த இந்த தனுராசனத்தை எப்படி பயிற்சி செய்வது என பார்ப்போம். Practice of Dhanurasana தனுராசனம் - செய்முறை விரிப்பின்மீது கவிழ்ந்த நிலையில் நேராக படுக்கவும். கைகள் இரண்டையும் உடலை ஒட்டினாற்போல் பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். அதன்பின் இரு கால்களையும் மடக்கி இடது கையால் இடது கணுக்காலையும், வலது கையால் வலது கணுக்காலையும் பிடித்துக்கொள்ளவும். மார்பு பகுதி, கழுத்து, தலை முதலியவற்றை மேல்நோக்கி தூக்கி முதுகை வில்போல் வளைக்கவும். குறிப்பாக வயிற்றுப்பகுதி, இடுப்பு தரையில் படும்படியும், வயிறு இடுப்பு தவிர்த்து உடலின் பிற உறுப்புகள் அப்படியே வில்போல் வளைந்து இருக்கும்படியும் உடலை அமைத்துக்கொள்ளுங்கள். இந்நிலையில் இருக்கும்போது மூச்சை அடக்குதல் கூடாது. இயல்பாக மூச்சு விடுங்கள். இந்நிலையில் 10 முதல் 30 வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக சாதாரண நிலைக்கு வரவும். பின் 10 அல்லது 15 வினாடி ஓய்வுக்கு பின் மீண்டும் இப்பயிற்சியை மேற்கொள்ளவும். இதேபோல் திரும்ப திரும்ப 5 அல்லது 6 தடவை இந்த ஆசனத்தை பயிற்சி எடுக்கவும். Benefits of Training பயிற்சியின் பலன்கள் இது ஒரு அற்புதமான ஆசனம். வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். அஜீரணமும், மலச்சிக்கலும் நீங்கும். மார்பு விரிந்து பலம் பெறும். கை, கால், இடுப்பு அத்தனையும் பலம் பெறும். முதுகு வலி வராமல் பாதுகாப்பு கொடுக்கும். மார்புச்சளி, சைனஸ், ஆஸ்துமா, ஈசினோபீலியா, இருமல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். சிறுநீரகம் சுறுசுறுப்பாக வேலை செய்யும். சிறுநீரக கோளாறு அகலும். முதுகுவலி நீங்கும். தொப்பை, ஊளைச்சதை முற்றிலும் குறையும். இளமையும், சுறுசுறுப்பும் உண்டாகும். வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும். ஆண்மை பெருகும். Important note முக்கிய குறிப்புகள் சமீபத்தில் வயிறு மற்றும் முதுகில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது. இதயநோயாளிகள் இதனை பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி தலைசுற்றல், ஒற்றை தலைவலியால் அவதியுறுபவர்கள் இந்த ஆசனத்தை முயற்சி செய்ய வேண்டாம். முதுகெலும்பு, முழங்கால்கள், இடுப்பு இவைகளில் காயம் உள்ளவர்கள் இதனை பயிற்சி செய்தல் கூடாது. https://youtu.be/Tk7BvDnGzug உயர் அல்லது குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், குடலிறக்கத்தால் அவதிப்படுபவர்கள், வயிற்றில் புண் மற்றும் விரைவாதம் உள்ளவர்கள் இப்பயிற்சியை தவிர்க்கவும். பெண்கள் மாதவிடாய் காலங்களில் இப்பயிற்சியை தவிர்க்கவும். கர்ப்பமான பெண்களும் இப்பயிற்சி செய்வதை தவிர்த்தல் வேண்டும். குழந்தை பெற்ற பின்பு 2 மாதங்கள் வரையில் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.