Baddha Padmasana - Bound Lotus பாத பத்மாசனம் நாம் இப்போது பார்க்க இருக்கும் பயிற்சியின் பெயர் பாத பத்மாசனம் (Baddha Padmasana - Bound Lotus). பெயருக்கேற்ப இதுவும் பத்மாசனம் போன்ற தோற்றத்தையே தருகிறது என்றாலும் அதிலிருந்து ஒருசில மாற்றங்களைக் கொண்டுள்ளன. “பத்மாசனம்” பயிற்சியைப்பற்றி நாம் ஏற்கனவே பார்த்துள்ளோம். பிராணாயாமம் என்னும் மூச்சுப்பயிற்சி மற்றும் தியானப்பயிற்சி செய்வதற்கு அமரக்கூடிய அற்புதமான ஆசனம்தான் பத்மாசனம். இது உடலுக்கு உறுதியும் மனதிற்கு அமைதியும் தரவல்லது. ”பத்மம்” என்றால் தாமரையை குறிக்கும். ஆசனம் என்றால் இருக்கையை குறிக்கும். மடக்கி வைக்கப்பட்டிருக்கும் இரு கால்களும் பார்ப்பதற்கு தாமரை பூவின் இதழைப் போன்ற வடிவத்தில் காட்சி தருவதால் அதற்கு "பத்மாசனம்" என்று பெயர். நாம் இப்பொழுது அதே பத்மாசனப்பிரிவைச் சேர்ந்த… ஆனால்,... அதிலிருந்து சிறிது மாறுபட்ட "பாத பத்மாசனம்" என்னும் பயிற்சியை பற்றித்தான் இங்கு பார்க்க இருக்கின்றோம். பத்மாசனத்தில் இருந்துகொண்டு இருகைகளால் இரு பாதங்களை பிடித்த நிலையில் இருப்பதால் இது “பாத பத்மாசனம்” என பெயர் பெற்றுள்ளது. ஆனால்,... சமஸ்கிருதத்தில் இந்த ஆசனம் "பத்தா பத்மாசனம்" என அழைக்கப்படுகிறது. "பத்தா" என்றால் சமஸ்கிருதத்தில் "கட்டுப்பட்டது" அல்லது "கட்டப்பட்டது" என்று பொருள். பத்மாசனத்தில் அமர்ந்தபடி கைகளை முதுகுக்கு பின்னால் கொண்டுசென்று கால்களோடு சேர்த்து கட்டி வைக்கப்பட்டுள்ளது போன்றதொரு தோற்றத்தை தருவதால் இந்த ஆசனம் சமஸ்கிருதத்தில் "பத்தா பத்மாசனம்" என அழைக்கப்படுகிறது. பாத பத்மாசனம் பயிற்சியை திறன்பட செய்யவேண்டுமெனில் முதலில் பத்மாசன பயிற்சியில் நன்கு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், பாதபத்மாசன பயிற்சிக்கு அடிப்படையாக அமைவது பத்மாசனமே… Baddha Padmasana - Bound Lotus - Basic information பாத பத்மாசனம் - அடிப்படைத் தகவல்கள் பெயர் - Baddha Padmasana. தமிழில் - பாத பத்மாசனம். சமஸ்கிருதம் - Baddha Padmasana - பத்தா பத்மாசனம். ஆங்கிலம் - Bound Lotus Pose. வேறுபெயர்கள் - Bound Lotus Posture, Locked-up Lotus Pose. ஆசனத்தின் நிலை - Sitting, Hand to Feet, Binding. பயிற்சியின் கடின தன்மை - Advanced. உடல் கோணம் - Stretch, Twist. சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்....வாருங்கள் பார்க்கலாம்… practice of - Baddha Padmasana பாத பத்மாசனம் - செய்முறை இந்த ஆசனமும் பத்மாசனம் போன்றே பயிற்சி செய்ய வேண்டுமென்றாலும் பத்மாசனத்தில் இரு கைகளையும் இரு தொடைகளின்மீது “சின்முத்திரை” நிலையில் வைத்திருப்போம். ஆனால் இந்த பாத பத்மாசனத்தில் இரு கைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று இரு பாதங்களிலுள்ள பெருவிரல்களை பிடித்தபடி வைக்கவேண்டும். ஒரு விரிப்பின் மீது இரண்டு கால்களையும் நீட்டியபடி உட்காரவும். முதலில் வலதுகாலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி இடது தொடைமீது வைக்கவும். அதே போல் இடதுகாலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக வலது தொடைமீது வைக்கவும். இந்நிலையில் இரு கால்களின் குதிகால்களும் அடிவயிற்றை அழுத்தியபடி இருக்கவேண்டும். இரண்டு முழங்கால்களும் தரையை தொட்டபடி இருக்கவேண்டும். அதன்பின் இரண்டு கைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று வலது கையால் இடதுகால் பெருவிரலையும், இடது கையால் வலதுகால் பெருவிரலையும் பிடித்துக்கொள்ள வேண்டும். Bound Lotus Posture_Baddha_Padmasana அதன்பின் இதே நிலையில் முதுகெலும்பு நேராக இருக்கும்படி நிமிர்ந்து உட்காரவும். மூச்சை நன்கு இழுத்து அதே வேளையில் மெதுவாக நேர்த்தியாக ஒரே சீராக விடவும். இந்நிலையில் ஓரிரு நிமிடங்கள் இருந்துவிட்டு அதன்பின் கால்களை மாற்றிப்போட்டு பயிற்சி செய்யவேண்டும். அதாவது வலது காலை மடிப்பதற்கு பதிலாக இப்பொழுது இடது காலை மடித்து இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக வலது தொடைமீது வைக்கவும். அதன்பின் வலதுகாலை மடித்து கணுக்காலை இரு கரங்களாலும் பற்றி தூக்கி மெதுவாக இடது தொடைமீது வைக்கவும். முன்போல கைகளை பின்னால் கொண்டுசென்று பெருவிரலை பற்றிக்கொண்டு ஓரிரு நிமிடம் நிமிர்ந்து உட்காரவும். மூச்சை இயல்பாக விடவும். இவ்வாறு கால்களை மாற்றி மாற்றி 5 அல்லது 6 தடவை பயிற்சி செய்யவும். இது சொல்வதற்கு எளிதாக தோன்றலாம். ஆனால் செய்வதற்கு கொஞ்சம் கடினம். பழக பழக எளிதாகும். Benefits of Training பயிற்சியின் பலன்கள் இந்த ஆசனத்தை தொடர்ந்து பயின்றுவர முழங்கால்கள் நன்கு வலுப்பெறும். குதிகால் நரம்புகள் பலம் பெறும். மூட்டுவலிகள் நீங்கும். தோள்கள், கால்கள், கைகள் மற்றும் முதுகில் ஏற்படும் வலிகள் குணமாகும். வாதநோய், மூச்சுப்பிடிப்பு, சுவாசக்கோளாறுகள் நீங்கும். மார்புக்கூடு விரிவடையும். மலச்சிக்கல் நீங்கும். தொந்தி கரைவதோடு ஜீரணசக்தி அதிகரித்து சுறுசுறுப்பையும் உண்டாகும். https://youtu.be/XkkKfEGnzVQ புஜம், தோள்பட்டை, முதுகு பலம் பெறுவதோடு அந்தந்த உறுப்புகளிலுள்ள வலிகளும் குணமாகும். முழங்கை, மணிக்கட்டு, மார்பு முதலியன நன்கு வலிமை பெறும். இது இடுப்புப் பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுகிறது. இதனால் இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் செரிமான உறுப்புகள் அதிகம் பயனடைவதால் இந்த பயிற்சி பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வாக அமையும். எனவே, இப்பயிற்சியை தொடர்ந்து பயின்றுவர நோயற்ற வளமான வாழ்வை பெறலாம் என்பதில் சிறிதும் ஐயமில்லை!!.. Important note முக்கிய குறிப்புகள் குடலிறக்கம், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும். முதுகுவலி மற்றும் கண்வலி உள்ளவர்களும் இந்த ஆசனத்தை தவிர்த்தல் வேண்டும். பலவீனமான மூட்டுகள் உள்ளவர்கள் அல்லது மூட்டுகளில் வலி, முழங்கால், கணுக்கால்களில் வலி உள்ளவர்கள், இடுப்பு, முதுகு, தோள்பட்டைகளில் காயங்கள் உள்ளவர்கள் இந்த பயிற்சியை முற்றிலுமாக தவிர்க்கவேண்டும். இது வயிற்றுப் பகுதியில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் கர்ப்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை கண்டிப்பாக முயற்சி செய்தல் கூடாது. குழந்தை பிரசவித்த பெண்கள் அதன்பின் 2 முதல் 3 மாதங்கள் வரை இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும். மாதவிடாய் காலங்களிலும் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.