Personality Fitting
Parsva Uttanasana
Parsva Uttanasana
பார்ஸ்வ உத்தனாசனம்
Parsva Uttanasana. நாம் நலமுடன் வாழவேண்டுமெனில், ஆரோக்கியமாக திகழ வேண்டுமெனில் உடலுக்கு வெறும் உணவு மட்டும் இருந்தால் போதாது உடலுக்கு நிலையான பராமரிப்பும், முறையான உடற்பயிற்சியும் மிகமிக அவசியம்.
அவ்வாறான உடற்பயிற்சியானது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும்கூட ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் தருவதாக இருத்தல் வேண்டும்.
இதை கருத்தில்கொண்டே நம் முன்னோர்கள் உடலுக்கும், மனதிற்கும் பயிற்சி தரக்கூடிய “யோகாசனம்” (yogasana) என்னும் அற்புத வழிமுறையை நமக்கு வகுத்துத் தந்துள்ளனர்.
பொதுவாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆசனங்கள் உள்ளன என்றாலும் இவற்றில் பயிற்சி செய்வதற்கு கடினமாக உள்ள ஆசனங்களும் நிறையவே உள்ளன. ஆம், பருமனான உடலை கொண்டவர்களால் சில கடினமான குறிப்பாக உடலை வளைத்து செய்யக்கூடிய ஆசனங்களை செய்ய முடிவதில்லை. ஆகவே, அப்படியானவர்கள் பயிற்சி செய்வதற்கு எளிமையான சில ஆசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சியில் ஈடுபடலாம்.
அதை விடுத்து கடினமான ஆசனங்களை செய்ய முற்பட்டால் உடலில் பல விரும்பத்தகாத பிரச்சனைகள் மற்றும் பக்கவிளைவுகள் ஏற்படலாம்.
எனவே, தொடர்ந்து சில மாதங்கள் எளிதான ஆசனங்களை செய்து உடல் நன்கு துவளும் தன்மையை பெற்றபின்பு கடினமான ஆசனங்களை செய்ய முற்படலாம்.
அவ்வாறு பயிற்சி செய்வதற்கு எளிமையான “பார்ஸ்வ உத்தனாசனம்” (Side Forward Fold Pose) என்னும் ஆசனத்தைப் பற்றித்தான் இப்பதிவில் நாம் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.
Parsva Uttanasana – Basic information
பார்ஸ்வ உத்தனாசனம் – அடிப்படை தகவல்கள்
பெயர் – Parsva Uttanasana.
தமிழில் – பார்சவ உத்தனாசனம்.
சமஸ்கிருதம் – Parsva Uttanasana.
ஆங்கிலம் – Side Forward Fold Pose.
வேறுபெயர்கள் –
Pyramid Pose.
Single Leg Forward Bend.
Sideways Facing Forward Bend.
ஆசனத்தின் நிலை – Standing.
பயிற்சியின் கடின தன்மை – Intermediate.
உடல் கோணம் – Forward Bend, Twist.
“உத்தனாசனம்” (Uttanasana) என்னும் பயிற்சியை பற்றி ஏற்கனவே நாம் பார்த்துள்ளோம். உத்தனாசனம் என்பது நேராக நின்று கொண்டு உடலை முன்னோக்கி வளைப்பதைக் குறிக்கும்.
உத்தனாசனத்தைப்போல இப்பயிற்சியிலும் உடல் முன்னோக்கிதான் வளைக்கப்படுகிறது என்றாலும் அப்பயிற்சியிலிருந்து இது சிறிய அளவிலான மாற்றத்தைக் கொண்டுள்ளது.
இரு கால்களையும் சேர்த்து வைப்பதற்கு பதிலாக இரண்டடி முன்னும் பின்னுமாக வைத்தபடி உடலை முன்னோக்கி வளைப்பதால் இது “பார்ஸ்வ உத்தனாசனம்” (Parsva Uttanasana) என பெயர்பெறுகிறது. இதனை ஆங்கிலத்தில் “Intense Side Stretch Pose” எனவும் குறிப்பிடுகின்றனர். இதன் வடிவத்தை பொறுத்து இதனை ”பிரமிடு போஸ்” (Pyramid Pose) எனவும் அழைக்கின்றனர்.
Things to know before training
பயிற்சிக்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை
பொதுவாக அது எந்தவகையான ஆசனமாக இருந்தாலும் அதிவேகமாக இந்த ஆசனங்களை பயிற்சி செய்ய முற்பட வேண்டாம். இது உடற்பயிற்சி அல்ல. யோகசனப் பயிற்சி என்பதனை நினைவில் கொள்ளவும். எனவே, பரபரப்பில்லாமல் நிதானமாகவும், மெதுவாகவும்தான் யோக பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். வேகமாக செய்ய முற்பட்டால் வயிற்றுதசைகளும், முதுகு தசைகளும் பிடித்துக்கொள்ளும்.
சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்….
Practice of Parsva Uttanasana
பார்ஸ்வ உத்தனாசனம் – செய்முறை
முதலில் ஒரு கெட்டியான விரிப்பின்மேல் இரு கால்களையும் சேர்த்து வைத்தபடி நேராக நிற்கவும்.
பின் வலதுகாலை இடது காலில் இருந்து ஒரு இரண்டடி தூரம் இருக்கும்படி முன்னோக்கி நகர்த்தி வைக்கவும்.
இரண்டு கைகளையும் முதுகுக்குப் பின்னால் கொண்டுசென்று முழங்கைகளை மடக்கி கட்டிக்கொள்ளலாம் அல்லது இரு உள்ளங்கைகளையும் குவித்து கும்பிடுவதுபோல முதுகின் பின்னால் வைத்துக்கொள்ளலாம்.
அதன்பின் மெதுவாக இடுப்பை முன்னோக்கி வளைத்து வலது முழங்காலில் உங்கள் முகம் படும்படி 30 வினாடி நிற்கவும்.
பின் மெதுவாக நிமிர்ந்து கால்களை மாற்றி பயிற்சி செய்யவும்.
அதாவது வலது காலுக்கு பதிலாக இடதுகாலை முன்னோக்கி நகர்த்தி வைத்து இரண்டு கைகளையும் முதுகிற்கு பின்னால் கொண்டுசென்று முழங்கைகளைக் கட்டிக்கொண்டோ அல்லது இரு உள்ளங்கைகளையும் குவித்து கும்பிடுவதுபோல வைத்துக்கொண்டோ முன்போல மெதுவாக இடுப்பை முன்னோக்கி வளைத்து இடது முழங்காலில் உங்கள் முகம் படும்படி 30 வினாடி இருக்கவும்.
இவ்வாறு இரு கால்களையும் மாற்றி மாற்றி 3 முதல் 5 தடவை பயிற்சி செய்யவும்.
Benefits of Training
பயிற்சியின் பலன்கள்
இந்த “பார்ஸ்வ உத்தனாசனம்” (Parsva Uttanasana) பயிற்சியை தொடர்ந்து பயின்றுவருவதால் வயிறு, முதுகு, இடுப்பு சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குவதோடு அவைகளுக்கு வலிவையும் தருகின்றன.
மேலும், நரம்புகளுக்கு புத்துணர்வூட்டி மூளையை சுறுசுறுப்பாக்குகின்றன. கழுத்து, தோள்பட்டை, முழங்கை, கால் முதலிய உறுப்புகளுக்கு வலிமை தருவதோடு பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகளையும் களைகின்றன.
Important note
முக்கிய குறிப்பு
கழுத்து, முதுகுத்தண்டு, இடுப்பு, குடல் இறக்கம் உள்ளவர்கள் மற்றும் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் இந்த “பார்ஸ்வ உத்தனாசனம்” (Parsva Uttanasana) ஆசனத்தை பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.
The post Parsva Uttanasana appeared first on Personality Fitting.
Wheel Pose – Chakrasana
Wheel Pose – Introduction
சக்கராசனம் – முன்னுரை
Wheel Pose – Chakrasana. உடலுக்கும் உள்ளத்திற்கும் நலம் தரும் பயிற்சிகளான யோகாசனப் பயிற்சிகளை நாம் தொடர்ந்து பல பதிவுகளாகப் பார்த்துவருகின்றோம். அந்த வகையில் இன்றைய பயிற்சியில் முதுகு மற்றும் வயிற்றுப் பகுதிகளுக்கு அதிக அளவில் நன்மையை ஏற்படுத்தி தரக்கூடிய பயிற்சியான சக்கராசனத்தைப் (Chakrasana) பற்றித்தான் இப்பொழுது பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.
Wheel Pose – Basic information
சக்ராசனம் – அடிப்படை தகவல்கள்
பெயர் – Chakrasana.
தமிழில் – சக்ராசனம்.
சமஸ்கிருதம் – Chakrasana.
ஆங்கிலம் – Wheel Pose.
வேறு பெயர்கள் –
Urdhva Dhanurasand.
Upward Bow Pose.
ஆசனத்தின் நிலை – Supine, Arm Balances.
பயிற்சியின் கடின தன்மை – Intermediate.
உடல் கோணம் – Back-Bend, Inversion, Strength, Balance.
இந்த சக்கராசனத்தை (Chakrasana) பயிற்சி செய்யும்போது உடல் பார்ப்பதற்கு அரை வட்ட சக்கரம்போல் காட்சி தருவதால் இதற்கு “சக்கராசனம்” (Chakrasana) என்று பெயர். அதனாலேயே இதனை ஆங்கிலத்தில் “வீல் போஸ் – Wheel Pose” என அழைக்கின்றனர்.
வாருங்கள்.. சக்ராசனம் (Chakrasana) செய்து சக்தி பெறுவோம். உடலை வளைத்து உவகை கொள்வோம்…
Things to know before training
பயிற்சிக்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை
அதிவேகமாக இந்த ஆசனத்தை செய்ய முற்பட வேண்டாம். நிதானமாகவும், மெதுவாகவும் இப்பயிற்சியை செய்யவும். வேகமாக செய்ய முற்பட்டால் வயிற்றுதசைகளும், முதுகு தசைகளும் பிடித்துக்கொள்ளும். இந்த பயிற்சியில் முதுகுப்பகுதி பின்பக்கமாக வட்டமாக வளைவதால் சிலருக்கு பயிற்சி செய்வது கடினமாக இருப்பதோடு பயிற்சியின் போது தலை கனமாக உணர்தல் அல்லது தலைசுற்றுதல் போன்ற அசௌகரியங்கள் ஏற்பட்டு நிதானம் தவறி ஒருபக்கமாக சாய்ந்து விழுந்துவிடவும் வாய்ப்புள்ளது. எனவே நிதானமாக பயிற்சியை மேற்கொள்ளவும்.
மேற்குறிப்பிட்ட அசௌகரியங்கள் உங்களுக்கு இருந்தால் தொடர்ந்து இதனை பயிற்சி செய்ய வேண்டாம்.
நாம் ஏற்கனவே பார்த்துள்ள “பிறையாசனம்” (Pirai Asana) என்னும் ஆசனத்தை நன்கு பயிற்சி செய்து அதில் தேர்ச்சியடைந்த பின் இந்த சக்கராசனத்தை பயிற்சி செய்ய முற்பட்டால் மேற்குறித்த அசௌகரியங்களைத் தவிர்க்கலாம்.
சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனை பார்ப்போம்….
Practice of Chakrasana
சக்ராசனம் – செய்முறை
மனம் மற்றும் உடலின் ஆரோக்கியத்திற்கு (practice for physical health Chakrasana) மிகவும் துணை நிற்பது இந்த “சக்ராசனம்” எனலாம். நான்காக மடித்து விரிக்கப்பட்டுள்ள ஜமுக்காளத்தின்மீது உடல் மற்றும் கால்களை தளர்வாக வைத்தபடி மல்லாந்து நேராக படுக்கவும்.
பின் இரு கால்களையும் மடக்கி இரு கால்களுக்கும் இடையில் ஒன்றரை அடி இடைவெளி இருக்கும்படி பிருஷ்டத்தின் பக்கத்தில் வைத்து உள்ளங்கைகளை முறையே இரு காதுகளின் பக்கவாட்டில் தரையில் ஊன்றவும். கைவிரல்களை பாதங்களை பார்த்திருக்கும்படி அமைக்கவும்.
பின் மெதுவாக மூச்சை உள்ளுக்கு இழுத்துக்கொண்டே இடுப்பு மற்றும் வயிற்றுப்பகுதியை மேலே மெதுவாக தூக்கி உடலை அரைகோள வடிவில் கொண்டுவரவும்.
இப்போது உங்கள் இரு உள்ளங்கைகள் மற்றும் கால்களின் பாதங்கள் மட்டுமே தரையில் படித்த நிலையில் இருக்கும். எனவே கைகளும் கால்களும் உங்கள் உடல் எடையை சரிசமமாக தாங்கும்படி பார்த்துக்கொள்ளவும். இந்நிலையில் தலை கீழே தொங்கிய நிலையில் இருத்தல் வேண்டும்.
இதே நிலையில் 10 லிருந்து 15 வினாடிகள் இருக்கவும். இயல்பாக சுவாசிக்கவும்.
பின் உடலை மெதுவாக கீழே இறக்கி பழைய நிலைக்கு கொண்டுவரவும். சில வினாடி ஓய்வுக்குப்பின் மீண்டும் இப்பயிற்சியை செய்யவும்.
திரும்ப திரும்ப மூன்றிலிருந்து ஐந்து தடவை இப்பயிற்சியை செய்யவும்.
Benefits of Training
பயிற்சியின் பலன்கள்
ஆரம்பத்தில் சொன்னதுபோல இது மனதையும் உடலையும் உறுதி செய்யும் (practice for physical health Chakrasana) சிறப்பான ஆசனம்.
இப்பயிற்சியால் கால்கள், கைகள், மணிக்கட்டுகளிலுள்ள கொழுப்புகள் கரைந்து மேற்கண்ட உறுப்புகள் விசேஷ பலத்தை பெறுகின்றன. தோள்களும் கவர்ச்சியான தோற்றத்தை பெறுகின்றன. இப்பயிற்சியால் எலும்புகளும் வலு பெறுகின்றன.
இடுப்பு தசைகள் நன்கு பலம் பெறுவதொடு நெடுநாட்களாக உங்களை வாட்டிவந்த அஜீரண கோளாறுகளும், மலச்சிக்கலும் ஒழிந்துபோகும். அதுமட்டுமா,… தொடர்ந்து பயிற்சி செய்துவர தொப்பையும் தொலைந்து போகும்.
முதுகு தண்டிலுள்ள அத்தனை நரம்புகளும் தூண்டப்படுவதோடு முதுகெலும்பானது துவளும் தன்மையையும் பெறுவதால் நீடித்த இளமையைக் கொடுக்கும். முதுகு கூன் விழுந்திருந்தால் அதனையும் நிமிரச் செய்யும் திறன் படைத்தது.
இப்பயிற்சி வயிற்றுப்பகுதியில் சேரும் அதிகப்படியான சதை மற்றும் கொழுப்பு படிமத்தை கரைக்கிறது. உடலில் தங்கி நிற்கும் கெட்ட நீர்களை வெளியேற்றுகிறது.
இதயம், நுரையீரல், மார்பு மற்றும் சுவாச சம்பந்தமான உறுப்புகள் அனைத்திற்கும் நன்கு பலம் சேர்ப்பதோடு சுவாசக்குழாய் பாதைகளை சுத்தப்படுத்தவும் இப்பயிற்சி பேருதவி புரிகிறது.
பெண்களுக்கு கருப்பை கோளாறுகளை சரிசெய்வதோடு மாதவிலக்கு பிரச்சனைகளுக்கும் ஒரு நல்ல தீர்வை கொடுக்கிறது.
குடல் இறக்கம் குணமாவதோடு சிறுநீரகத்திற்கும் புத்துணர்வூட்டுகிறது.
தைராய்டு கோளாறுகளை நிவர்த்தி செய்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலுக்கு நல்லதொரு வளர்சியை கொடுக்கும் சிறப்பான பயிற்சி இது.
Important note
முக்கிய குறிப்பு
இப்பயிற்சியை கண்டிப்பாக வயிறு மற்றும் முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் செய்தல் கூடாது. குடலிறக்கம், தலைவலி, தலைசுற்றல் உள்ளவர்கள் இப்பயிற்சியை செய்தல் கூடாது. கர்ப்பிணி பெண்களும் இதனை கண்டிப்பாக பயிற்சி செய்தல் கூடாது.
கண்நோய் உள்ளவர்கள் இப்பயிற்சியை தவிர்த்தல் வேண்டும். கண்புரை அறுவை சிகிச்சையை மேற்கொண்டவர்கள் கண்கள் சரியாகும் வரை இப்பயிற்சியை தவிர்த்தல் வேண்டும். கண் அழுத்த நோய் உள்ளவர்கள் இப்பயிற்சியை கண்டிப்பாக தவிர்த்தல் வேண்டும்.
இதயநோய், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தகுந்த பயிற்சியாளரின் மேற்பார்வையில் பயிற்சியை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
The post Wheel Pose – Chakrasana appeared first on Personality Fitting.
Talasana – Urdhva Hastasana
Talasana – Urdhva Hastasana
தாளாசனம் – ஊர்த்துவ ஹஸ்தாசனா
Talasana – Urdhva Hastasana. உடலுக்கும், உள்ளத்திற்கும் ஒரு சேர புத்துணர்ச்சி அளிப்பவை யோகாசன பயிற்சிகள்.
நாம் அவ்வப்போது பலவகையான யோகாசன பயிற்சிகளைப் பார்த்துவருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய யோகாசன பயிற்சியாக “தாளாசனம்” (Talasana) என்னும் பயிற்சியைதான் பார்க்க இருக்கின்றோம்.
“தாள்” என்றால் பாதம். உடலின் முழு எடைகளையும் இரு பாதங்களிலும் தாங்கிக்கொண்டு உடலை நேராக அமைத்துக்கொள்ளும் ஆசனம் என்பதால் இந்த ஆசனத்திற்கு “தாளாசனம்” (Talasana) என்று பெயர்.
இதற்கு “ஊர்த்துவ ஹஸ்தாசனா” (Urdhva Hastasana) என்று ஒரு பெயரும் உண்டு.
சமஸ்கிருதத்தில் “ஊர்த்துவம்” என்றால் மேல், மேல்புறம், மேல்நோக்கி என்று பொருள்.
ஒரு பொருள் மேல்திசை நோக்கி இருக்குமானால் அதை குறிப்பிட ஊர்த்துவம் என்னும் பதத்தை உபயோகப்படுத்துவதுண்டு. “ஹஸ்தா” என்றால் கைகளைக் குறிக்கும். பயிற்சி செய்பவரின் கைகள் மேல்நோக்கி இருப்பதால் இதனை “ஊர்த்துவ ஹஸ்தாசனா” (Urdhva Hastasana) எனவும் அழைக்கின்றனர்.
அதாவது, ஊர்த்துவ ஹஸ்தாசனா என்றால் “கைகளை மேல்நோக்கி உயர்த்திய ஆசனம்” என்று பொருள்.
இந்த தாளாசனத்தைப் போலவே மற்றொரு ஆசனமும் இருக்கின்றது. அதன் பெயர் “தடாசனம்” (Tadasana – Mountain pose). இரண்டுமே பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருந்தாலும் இரண்டிற்குமுள்ள வித்தியாசம் யாதெனில், தடாசனத்தில் இரண்டு பாதங்களும்… குதிகால்கள் உட்பட… தரையில் நன்றாக படிந்து உறுதியாக இருக்கும்.
ஆனால், நாம் இப்போது பார்க்கப்போகும் தாளாசனத்தில் இரண்டு பாதங்களின் குதிகால்களும் தரையிலிருந்து உயர்ந்து இருக்கும். இதுவே இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.
இந்த பதிவில் நாம் பனைமரம்போன்று உடலுக்கு உறுதியை தருகின்ற தாளாசனத்தைப்பற்றி மட்டுமே பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.
Talasana – Urdhva Hastasana – Basic information
ஊர்த்துவ ஹஸ்தாசனா – அடிப்படை தகவல்கள்
பெயர் – Talasana – Urdhva Hastasana.
தமிழில் – தாளாசனம்.
சமஸ்கிருதம் – Urdhva Hastasana.
ஆங்கிலம்
Upward Hands Pose
Upward Salute
Volcano Pose
வேறுபெயர்கள்
Urdhva Hastotanasana
Upward Hand Stretch Pose
Raised Hand Pose
Tadasana Urdhva Baddhanguliyasana
ஆசனத்தின் நிலை – Standing Stretch.
பயிற்சியின் கடின தன்மை – Beginner.
உடல் கோணம் – Side Bend, Stretch.
நீங்கள் மிகவும் சோர்வடைந்திருப்பதாக உணர்கிறீர்களா? அப்படி என்றால் இந்த ஆசனத்தை செய்யுங்கள் உங்கள் உடல் சோர்வு நீங்கி சுறுசுறுப்படையும். இந்த பயிற்சியை தொடர்ந்து செய்துவருவதால் கை, கால், முதுகெலும்புகள் நன்கு பலமடைகின்றன. இது தொடை எலும்புகளையும் பலப்படுத்துகின்றன.
இது செய்வதற்கு எளிமையான ஆசனம் என்பதால் ஆரம்ப பயிற்சியாளர்களுக்கு மிகவும் ஏற்றது.
வாருங்கள் இதனை முறையாக பயிற்சி செய்வது எப்படி என்பதனை பார்க்கலாம்.
Talasana – Urdhva Hastasana
தாளாசனம் செய்முறை
“ஊர்த்துவ ஹஸ்தாசனா” (Urdhva Hastasana) என்று அழைக்கப்படும் இந்த “தாளாசனம்” (Talasana) என்னும் பயிற்சியில் மொத்தம் மூன்று வகைகள் (There are a total of three types of this exercise called “Talasana”) உள்ளன. அவைகளை ஒன்றையடுத்து ஒன்றாக வரிசையாக பயிற்சி செய்தல் அவசியம்.
அவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாருங்கள்.
First Type – முதல்வகை
நன்கு கெட்டியான விரிப்பின்மீது இரு கால்களையும் பக்கவாட்டில் 22 சென்டிமீட்டர் அகலத்தில் இருக்கும்படி வைத்து நேராக நிமிர்ந்து நிற்கவும். அதன் பின் மூச்சுக்காற்றை உள்ளுக்கு இழுத்தபடியே வலது கையை மட்டும் தலைக்கு மேலே தூக்கி காதுகளை ஒட்டியபடி வைக்கவும்.
உள்ளங்கையை உள்பக்கம் பார்த்து இருக்கும்படி பார்த்துகொள்ளவும். கையை மேலே தூக்கும்போது இரண்டு குதிகால்களையும் மேலே உயர்த்தி கால்விரல்களை பயன்படுத்தி நிற்கவும்.
இதேநிலையில் 5 முதல் 10 வினாடிகள் நின்றபின் கைகளை பின்னால்சுற்றி உடம்பின் பக்கவாட்டில் கொண்டுவரும் அதேவேளையில் மூச்சுக்காற்றையும் மெதுவாக வெளியேவிட்டு குதிகால்களையும் கீழே இறக்கி இயல்புநிலைக்கு வரவும்.
இது போன்று இடதுகைகளுக்கும் பயிற்சிகொடுக்கவும்.
இது முதல்வகை பயிற்சி.
முதல்வகை பயிற்சி முடிந்ததும் இரண்டாம்வகை பயிற்சி செய்தல் வேண்டும்.
Second Type – இரண்டாம் வகை
இதுவும் முதல்வகையைப்போல்தான் பயிற்சி செய்யவேண்டும் என்றாலும் ஒரு கையை மட்டும் உயர்த்தி பயிற்சி செய்வதற்கு பதிலாக இரண்டு கைகளையும் ஒருசேர மேலே தூக்கி உள்ளங்கைகளை இணைத்து கும்பிட்ட நிலையில் பயிற்சியில் ஈடுபடவேண்டும்.
5 முதல் 10 வினாடிகள் நின்றபின் மூச்சை மெதுவாக வெளிவிட்டபடியே கைகளை மெதுவாக கீழே இறக்கவும். குதிகால்களையும் கீழே இறக்கி இயல்புநிலைக்கு வரவும்.
இதற்கு அடுத்து மூன்றாவது வகையை பயிற்சி செய்யவும்.
Third Type – மூன்றாவது வகை
இதுவும் இரண்டாவது வகையைப்போலவேதான் பயிற்சிசெய்ய வேண்டும் என்றாலும் மேலே தூக்கிய இரு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக நன்கு பின்னி பிணைத்து உள்ளங்கைகள் மேல்நோக்கி இருக்கும்படி வைக்கவேண்டியது அவசியம்.
5 முதல் 10 வினாடிகள் நின்றபின் மூச்சை மெதுவாக வெளிவிட்டபடி கைகளை கீழே இறக்கவும். குதிகால்களையும் கீழே இறக்கி இயல்புநிலைக்கு வரவும்.
Benefits of Training
பயிற்சியின் பயன்கள்
இன்று பலருக்கும் “வெரிகோஸ்” (Varicose Veins) என்று ஒரு பிரச்னை கால்களில் ஏற்படுகிறதல்லவா?…
அதாவது கால் நரம்புகளில் முடிச்சு ஏற்பட்டு நரம்புகளெல்லாம் வீங்கி கால்களை அவலட்சணமாக்குவது மட்டுமல்லாது கால்களில் சொல்லொண்ணா வலிகளையும் ஏற்படுத்துகிறதல்லவா?…
ஆண் பெண் வித்தியாசமின்றி இன்று பலரும் இந்நோயிலிருந்து விடுபடுவது எப்படி என்று தவியாய் தவிக்கிறார்களல்லவா?…
இனி கவலை வேண்டாம்.. முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும்!.
இந்த “தாளாசனம்” (Talasana) பயிற்சி சொல்லொண்ணா துயரத்தை ஏற்படுத்தும் “வெரிகோஸ்” (Varicose Veins) நோய்க்கு சிறந்த தீர்வாக அமையும்.
தொடர்ந்து இந்த பயிற்சியை செய்து வாருங்கள்… “வெரிகோஸ்” (Varicose Veins) பிரச்னை போயே போச்சு. இனி ஊருக்குள் உங்களைப்பற்றிதான் ஒரே பேச்சு. இனி நீங்களும் விடலாம் நிம்மதி பெரு மூச்சு.
மேலும், பல நோய்களுக்கு இந்த பயிற்சி நல்ல தீர்வாக அமைகிறது. பாதம், கணுக்கால், கால் விரல்கள், கெண்டைக்கால் சதைகள் ஆகியன வலுப்பெறுவதால் பாதவலி, வீக்கம், குதிகால் வலி, மூட்டுவலி ஆகியன குணமாகின்றன.
ஆனால், மேற்கண்ட பாதவலி, வீக்கம், குதிகால் வலி, மூட்டுவலி இருக்கும்போது இந்த பயிற்சியினை செய்தல் கூடாது. மேற்கண்ட நோய்கள் வருவதற்கு முன்னால் இந்த பயிற்சியினை செய்துவந்தால் மேற்கண்ட நோய்கள் வராமல் வருமுன் காக்கலாம்.
மேலும், இந்த பயிற்சியால் நரம்பு மண்டலம் முழுவதும் பலம் பெறுகின்றன. உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீரடைந்து புத்துணர்வு கிடைக்கின்றன.
இது கால் நரம்பு மற்றும் கால் தசைகளை மட்டுமல்லாது வயிற்று தசைகளையும் நன்கு வலுவடைய செய்வதோடு உடலையும் நன்கு சுறுசுறுப்படைய செய்கின்றன. செரிமானத்தையும் மேம்படுத்துகிறது.
கல்லீரல், சிறுநீரகம், கணையம் ஆகியவைகளை மென்மையாக மசாஜ் செய்து அவற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
நுரையீரல்களின் திறனை அதிகரிக்கின்றன.
முதுகெலும்பை நேராக்குகிறது. முதுகு வலியை நீக்குகிறது. நிமிர்ந்த தோற்றத்தை கொடுக்கிறது.
மன அழுத்தம், பதட்டம், சோர்வு முதலியவைகளை குறைக்கிறது.
Important Note
முக்கிய குறிப்புகள்
இந்த ஆசனம் செய்யும்போது மயக்கம் ஏற்பட்டால் மெதுவாக கைகளை கீழே இறக்கி ஓய்வு எடுக்கவும்.
பாதவலி, கால்வலி, கால் வீக்கம், குதிகால் வலி, மூட்டுவலி, கால்விரல்களை வலி முதலியன இருக்கும்போது இந்த பயிற்சியினை செய்தல் கூடாது.
தலைவலி மற்றும் ஒற்றைத்தலைவலி உள்ளவர்களும் இந்த ஆசனம் செய்வதை தவிக்கவும்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதனை செய்வதை தவிர்க்கலாம்.
முதுகு, தோள்பட்டை மற்றும் கழுத்துகளில் வலி, காயங்கள் இருக்கும் பட்சத்தில் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் முதல் மூன்று மாதங்கள்வரை இந்த ஆசனத்தை செய்துவரலாம். ஆசனம் செய்யும்போது கால்களை சேர்த்து வைப்பதற்கு பதிலாக கொஞ்சம் அகட்டி வைத்துக்கொண்டு பயிற்சி செய்வது உடல் தள்ளாடாமல் சமநிலையில் நிற்க உதவி செய்யும். மூன்றாவது மாதத்திற்கு பிறகு இந்த ஆசனத்தை செய்வதை தவிர்க்க வேண்டும்.
தாளாசனம் பற்றி (Talasana – Urdhva Hastasana) தெரிந்துகொண்ட நீங்கள் “தடாசனம்” பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்தானே?!! … “தடாசனம்” பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சுட்டுங்கள்.
The post Talasana – Urdhva Hastasana appeared first on Personality Fitting.
Swastikasana – Auspicious Pose
Swastikasana – Auspicious Pose
ஸ்வஸ்திகாசனம்
Swastikasana – Auspicious Pose. ”ஸ்வஸ்திகா” (Swastika) என்றால் வளமையான அல்லது மங்களகரமான என்று பொருள். இந்த ஆசனம் உங்களுக்கு நல்ல உடல் நலத்தையும், வளத்தையும் தருவதால் ”ஸ்வஸ்திகாசனம்” (Swastikasana) எனப் பெயர் பெற்றது.
ஸ்வஸ்திகாசனத்தை பார்ப்பதற்கு முன்னால் முதலில் ”யோகா ஆசனம்’‘ என்றால் என்னவென்று பார்ப்போம்.
“யோகா” மற்றும் “யோகாசனம்” என்பது இந்தியாவில் நம் முன்னோர்களாகிய ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்களால் உருவாக்கப்பட்ட உடல் மற்றும் மனவளக்கலை பயிற்சியாகும்.
பண்டைய ரிஷிகளாலும், முனிவர்களாலும், யோகிகளாலும் உருவாக்கப்பட்ட இந்த பயிற்சி பிற வகையான உடற்பயிற்சிகளைவிட மேன்மையானது.
இன்று அதன் மேன்மை கருதி இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பட்டிதொட்டிகளுக்கு எல்லாம் வேகமாக பரவி வருகிறது. இன்று வெளிநாட்டினர் அதன் மேன்மை உணர்ந்து யோகாவை விரும்பி கற்கின்றனர்.
பொதுவாக யோகா என்றால் மக்களிடையே ஒரு தவறான கருத்து நிலவுகிறது. யோகா பயிற்சி என்பது ஒருவிதமான உடற்பயிற்சி என்ற வரையறைக்குள்ளாகவே அதை வைத்து பலர் பார்க்கின்றனர். அது உண்மைதான் என்றாலும்கூட யோகா என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல அதில் மனதிற்கான பயிற்சியும் அடங்கியுள்ளன.
யோகப் பயிற்சியானது உடற்பயிற்சியைப்போல உடலுக்கு மட்டும் பயிற்சியளிப்பதில்லை. மனதிற்கும் ஆன்மாவிற்கும் சேர்த்தே பயிற்சியளிக்கின்றன. இதன்மூலம் முழுமையான ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியான மன வளத்தினையும் ஒருசேர பெற முடியும்.
இன்று மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பிரச்சனைகள்தான் பலபேர்களுடைய வாழ்க்கையில் நிம்மதியின்மையை தருகின்றன என்பதனை நாம் பார்க்கின்றோம். அவ்வாறானவர்கள் யோகாசனம் செய்வதை தம் வாழ்க்கையின் அன்றாட நிகழ்வாக கொண்டுவரும் பட்சத்தில் மன அழுத்தம் மற்றும் மன சோர்விலிருந்து எளிதில் விடுபட முடியும்.
அவ்வாறு உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற்சியளிக்கக் கூடிய ஆசனங்களில் தியானம் செய்வதற்கும் மனதிற்கு அமைதியை தரக்கூடியதுமான ஆசனம் ஒன்றினை பார்க்கஇருக்கின்றோம்.. வாருங்கள் பார்க்கலாம்.
நாம் இப்போது பார்க்கப்போவது “ஸ்வஸ்திகாசனம்”. இது மூச்சு பயிற்சி என்னும் பிரணாயாமம் பயில்வதற்கும், தியானம் பயில்வதற்கும் ஏற்றதொரு ஆசனம்.
Swastikasana – Auspicious Pose – Basic information
ஸ்வஸ்திகாசனம் – அடிப்படை தகவல்கள்
பெயர் – Swastikasana.
தமிழில் – ஸ்வஸ்திகாசனம்.
சமஸ்கிருதம் – Swastikasana.
ஆங்கிலம் – Auspicious Pose.
வேறுபெயர்கள் – Svastikasana.
ஆசனத்தின் நிலை – Sitting.
பயிற்சியின் கடினத்தன்மை – Beginner.
உடல் கோணம் – Meditative, Stretch.
பத்மாசனத்தில் உட்காருவது போல்தான் இதிலும் உட்காரவேண்டும். ஆனால் ஒரு வித்தியாசம் என்னவென்றால் பத்மாசனத்தில் இரண்டு பாதங்களும் தொடைகள் மீது மலர்ந்தபடி இருக்கும். ஆனால் ஸ்வஸ்திகாசனத்தில் இரு பாதங்களும் கெண்டைக்காலுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கப்பட்டிருக்கும்.
சரி, இனி இந்த ஆசனத்தை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்…
Practice for Swastikasana
ஸ்வஸ்திகாசனம் – செய்முறை
முதலில் விரிப்பில் உட்கார்ந்து இரண்டு கால்களையும் நேராக நீட்டிக்கொள்ளுங்கள்.
வலது காலை மடித்து பாதங்களை இடது தொடை மீது வைக்காமல் தொடையின் பக்கவாட்டில் படும்படி வைக்கவும். அதேபோல் இடது காலை மடக்கி இரண்டு கைகளால் மெதுவாக பிடித்து தூக்கி பாதங்களை வலது கெண்டைக் கால்களுக்கும் தொடைக்கும் இடைப்பட்ட இடைவெளியில் நுழைக்கவும்.
கைகள் இரண்டையும் முழங்கால் மீது சின் முத்திரை பிடித்தபடி வைக்கவும்.
முதுகு கூன்விழாமல் நேராக நிமிர்ந்து உட்காரவும். கூன் விழுந்த நிலையில் உட்கார்ந்தால் அது கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.
மூச்சை மெதுவாக நன்கு இழுத்து ஒரே சீராக சுவாசிக்கவும்.
5 நிமிடம் இந்த ஆசனத்தில் உட்காரவும். அதன்பின் கால்களை மாற்றி செய்யவும். இது தியானம் செய்வதற்கு ஏற்ற நல்லதொரு ஆசனம். தியானத்தில் அமரும் பட்சத்தில் 5 லிருந்து 20 நிமிடங்கள் வரை உட்காரலாம்.
Benefits of Training
பயிற்சியின் பயன்கள்
பத்மாசனத்திற்கான முழு பலன்களும் இந்த பயிற்சியிலும் கிடைப்பதோடு முழங்கால் நன்கு வலுப்பெற்று மூட்டு வலிகள் நீங்கும். கால்வலி நீங்கும். முதுகுவலி குணமாகும். முதுகெலும்பும் பலம் பெறும். நுரையீரல் வளம் பெறும். உடல் இறுக்கத்தை குறைத்து நெகிழ்வு தன்மையை அதிகரிக்கிறது.
தியானம் பயில மிக சிறந்த ஆசனம் இது. மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கிறது. நுரையீரலின் திறனை அதிகப்படுத்தி நரம்புமண்டலத்தை பலப்படுத்துகிறது. உணவு செரிமானத்தையும் அதிகரிக்கிறது.
இந்த ஆசனமானது மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து சிந்தனையை கூர்மைப்படுத்துவதால் பிரணாயாமம், தியானத்திற்கு ஏற்றது.
பிரணாயாமம், தியானப் பயிற்சிக்காக பத்மாசனம் (Padmasana – Kamalasana), சித்தாசனம் ஆகிய ஆசனங்களில் உட்காருபவர்கள் அதில் உட்காருவது சிரமம் என உணர்ந்தால் ஸ்வஸ்திகாசனத்தை தேர்ந்தெடுக்கலாம். இதுவும் சிரமமாக உள்ளதாக உணர்ந்தால் இருக்கவே இருக்கிறது சுகாசனம்.
ஆம்,… சுகாசனத்தில் ஜம்மென்று உட்கார்ந்துவிட வேண்டியதுதான்.
Important Note
முக்கிய குறிப்பு
முழங்கால், இடுப்பு, முதுகு அல்லது கணுக்கால்களில் வலியோ அல்லது காயங்களோ உள்ளவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது.
கர்ப்பிணி பெண்கள் இந்த பயிற்சியை ஆரம்ப காலகட்டத்தில் ஓரிரு மாதங்கள் செய்யலாம். அதன்பின் தவிர்த்தல் வேண்டும். சில கர்ப்பிணி பெண்களுக்கு ஆரம்ப கட்டத்திலிருந்தே கால்களில் வீக்கம் காணப்படும். அப்படியானவர்கள் இந்த பயிற்சியை செய்தல் கூடாது.
The post Swastikasana – Auspicious Pose appeared first on Personality Fitting.
Tadasana – Mountain pose
Tadasana – Mountain pose
தாடாசனம்
Tadasana – Mountain pose. ”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பது நம் முன்னோர்களின் வாக்கு. வெறும் புத்தி சொல்வதோடு நிறுத்தி விடாமல் நோய் அணுகாமல் உடலை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் பலவற்றையும் வகுத்துத் தந்துள்ளார்கள் நம் பெரியோர்கள்.
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நீடித்து இவ்வுலகில் உயிர் வாழ முடியும் என்பதனை “திருமூலர்” தன்னுடைய திருமந்திரம் என்னும் நூலில்…
” உடம்பார்  அழியின்  உயிரார்  அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும்  மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தேன்
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே”
என்று உடலின் மேன்மையை அழகாக சொல்லிச் சென்றுள்ளார்.
உடல் வளமாக இருக்க பலவழிகளை நம் முன்னோர்கள் வகுத்து தந்தாலும் அதில் ”யோகா” என்னும் உடலையும், மனதையும் ஒரே நேரத்தில் வளப்படுத்தும் பயிற்சியே மிக முக்கியமானது எனலாம்.
வாழ்வுக்கு வளம் சேர்க்கும் நம்முடைய பதிவின் வாயிலாக ஆரோக்கியம் தரும் பல யோக ஆசனக்களைப்பற்றி கற்று வருகின்றோம். அந்த வகையில் இன்றைய யோகாசனப் பகுதியில் நோயற்ற வாழ்வுதனைத் தரக்கூடிய உன்னதப் பயிற்சியான அதே நேரத்தில் அனைவராலும் எளிதாகக் கற்றுக்கொள்ளக் கூடியதுமான ”தடாசனம்” என்னும் பயிற்சியைப்பற்றிதான் (Tadasana – Mountain pose) பார்க்க இருக்கின்றோம்.. வாருங்கள் பார்க்கலாம்.
Tadasana – Mountain pose – Basic information
தடாசனம் – அடிப்படை தகவல்கள்
பெயர் – Tadasana.
தமிழில் – தடாசனம்.
சமஸ்கிருதம் – Tadasana.
ஆங்கிலம் – Mountain pose. (மலைபோன்று நிற்கும் ஆசனம்).
வேறுபெயர்கள்
Samasthiti
Eqal Standing Pose.
ஆசனத்தின் நிலை – Standing.
பயிற்சியின் கடின தன்மை – Beginner.
உடல் கோணம் – balance, Strength.
“தடா” என்றால் “மலைக்குன்று“. மலைக்குன்றுபோல் உயர்ந்து நிற்பதால் இதற்கு தாடாசனம் (Tadasana) என்று பெயர். இந்த தடாசனத்திற்கு “சமஸ்திதி ஆசனம்” (Samasthiti Pose) என்று ஒரு பெயரும் உள்ளது. சமஸ்திதி என்றால் “சம நிலைப்பாடு” என்று பொருள். இது மன அமைதி, விழிப்புணர்வு, சமநிலை ஆகியவைகளை பேணிக்காப்பதால் “சமஸ்திதி ஆசனம்” என்று அழைக்கப்படுகிறது.
இந்த தடாசனத்தைப் போலவே மற்றொரு ஆசனமும் இருக்கின்றது. அதன் பெயர் “தாளாசனம்” (Talasana – Urdhva Hastasana). இரண்டுமே பார்ப்பதற்கு ஒன்றுபோலவே இருந்தாலும் இரண்டிற்குமுள்ள வித்தியாசம் யாதெனில், தடாசனத்தில் இரண்டு பாதங்களும்… குதிகால்கள் உட்பட… தரையில் நன்றாக படிந்து உறுதியாக இருக்கும்.
ஆனால், தாளாசனத்தில் இரண்டு பாதங்களின் குதிகால்களும் தரையிலிருந்து உயர்ந்து இருக்கும். இதுவே இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.
இந்த பதிவில் நாம் மலைபோன்று உடலுக்கு உறுதியை தருகின்ற தடாசனத்தைப்பற்றி மட்டுமே பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.
Practice of Tadasana
தடாசனம் – செய்முறை
இது எளிதான அதே வேளையில் மிகச் சிறப்பான ஆசனம் எனலாம். அனைத்து வயதினருக்கும் ஏற்ற சிறப்பான ஆசனம். கணுக்கால், கெண்டைக்கால், இடுப்பு, கைகள், தோள்பட்டை முதலியவைகளுக்கு மிகச் சிறந்த பயிற்சி.
சரி, இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை இப்பொழுது பார்ப்போம்.
தடாசனம் நின்றுகொண்டு பயிற்சி செய்யவேண்டிய ஆசனம் ஆகும்.
இரு கால்களையும் ஒன்றாக சேர்த்து வைத்து நிமிர்ந்து நிற்கவும். பாதம் மற்றும் குதிகால்களை தரையில் நன்றாக பதிக்கவும்.
அதன்பின் இருகைகளையும் பக்கவாட்டில் மெதுவாக தலைக்குமேலே நேராக உயர்த்தவும். பின் இரு கைகளின் விரல்களையும் ஒன்றாக பிணைத்து இரு கைகளின் உள்ளங்கைகளை மேலே பார்த்தபடி வைக்கவும்.
பின் முதுகை நேராக்கி இடுப்பிலிருந்து உச்சந்தலை வரையுள்ள பகுதிகளை மேல்நோக்கி இழுக்கும்படியாக நிமிரவும்.
அதேவேளையில், உங்கள் தொடை மற்றும் முழங்கால் தசைகளை இறுக்கி வயிற்று  தசைகளை உள்ளிழுங்கள். இதே நிலையில் 6 முதல் 10 வினாடி நேரம் நின்று அதன்பின் கைகளை பக்கவாட்டில் மெதுவாக இறக்கி உடலோடு சேர்த்து வைத்துக் கொள்ளவும். இந்த பயிற்சியில் ஈடுபடும்போது மூச்சை இயல்பாக விடவும்.
இதே ஆசனத்தை திரும்ப திரும்ப 5 முதல் 7 தடவை செய்து வரலாம்.
Benefits of Training
பயிற்சியின் பலன்கள்
இப்பயிற்சியை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உடலின் அத்தனை தசைகள் மற்றும் நரம்புகள் இயக்கப்பட்டு உடல் வளர்ச்சி, உடல் வலிமை மற்றும் ஆரோக்கியம் மேம்படும்.
முதுகுவலி, கழுத்துவலி, கால்வலி, குதிகால் வலி நீங்குவதோடு நுரையீரலும் பலம் பெறும். கணுக்கால், கெண்டைக்கால், தொடைகள், இடுப்பு, கைகள், தோள்பட்டை வலிமை பெறும்.
உடலின் அத்தனை தசைகளுக்கும் சிறந்த பயிற்சியாக இது அமைவதால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடலுக்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது.
Important Note
முக்கிய குறிப்பு
தலைவலி உள்ளவர்கள் இந்த தடாசன பயிற்சியை தவிர்க்க வேண்டும்.
இரத்த அழுத்தம் குறைவாக உள்ளவர்களும் இந்த பயிற்சியை தவிர்க்க வேண்டும்.
கர்ப்பமாக இருப்பவர்கள் கால்களை சேர்த்து வைத்து பயிற்சி செய்வதற்கு பதிலாக சிறிது அகட்டிவைத்துக் கொண்டு பயிற்சியில் ஈடுபட வேண்டும். இது உடல் தடுமாற்றம் அடைவதை தவிர்க்கும்.
தடாசனம்பற்றி (Talasana – Urdhva Hastasana) தெரிந்துகொண்ட நீங்கள் “தாளாசனம்” பற்றியும் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள்தானே?!! … “தாளாசனம்” பற்றி தெரிந்துகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியை சுட்டுங்கள்.
The post Tadasana – Mountain pose appeared first on Personality Fitting.
Jyestikaasana – Superior Pose
Jyestikaasana – Superior Pose
ஜெயிஷ்டிகாசனம்
Jyestikaasana – Superior Pose. நோயணுகாமல் உடலைக் காப்பதில் உடற்பயிற்சிக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் அதிக பளு உள்ள கருவிகளைக்கொண்டு செய்யப்படும் உடற்பயிற்சிகளானது உடலின் வெளி உறுப்புகளை மட்டுமல்ல உடலின் உள் உறுப்புகளையும் கரடுமுரடாக்கி விடுகின்றன.
உடலின் உள் உறுப்புகளில் பல உறுப்புகள் துவளும் தன்மையுடன் மென்மையாக இருந்தால்தான் அவைகளின் இயக்கம் தடையில்லாமல் இருக்கும்.
ஆனால்,… கடுமையான பளு உள்ள கருவிகளின் துணைகொண்டு செய்யப்படும் உடற்பயிற்சியானது மென்மையாக இருக்க வேண்டிய உறுப்புகளை கடினத்தன்மையாக மாற்றிவிடுவதால் அவைகளின் இயல்பான இயக்கங்கள் பாதிப்படைகின்றன. எனவேதான் கடினமான உடற்பயிற்சிகளால் சிலநேரங்களில் உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை நாம் கண்கூடாக பார்க்கின்றோம்.
ஆனால்,… யோகாசனப் பயிற்சியில் அப்படியான ஆபத்துக்கள் ஏற்படுவதில்லை. ஏனெனில், யோகாசனப் பயிற்சியானது உடலின் உள், வெளி என அனைத்து உறுப்புகளையும் துவளும் தன்மையுடனேயே வைக்கின்றன. கரடுமுரடாக்குவதில்லை. எனவே யோகாசனப் பயிற்சி செய்வதால் உயிருக்கோ அல்லது உடலின் ஆரோக்கியத்திற்கோ எந்த ஆபத்தும் ஏற்படுவதில்லை.
எனவேதான் உடலை வருத்தி கடினமாக செய்யப்படும் உடற்பயிற்சிகளைவிட உடலை மென்மையாக கையாளும் யோகாசன பயிற்சிகளே சிறப்பானவை என்கின்றோம்.
இவைகள் உடலுக்கு மட்டுமல்லாது மனதிற்கும் பயிற்சி கொடுப்பவையாக இருப்பது மேலும் ஒரு ப்ளஸ் பாயிண்ட்.
உடல், மனம் இரண்டுக்கும் பயிற்சியளிக்கும் யோகப்பயிற்சியை பற்றி தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.
Jyestikaasana – Superior Pose – Basic information
ஜெயிஷ்டிகாசனம் – அடிப்படை தகவல்கள்
பெயர் – Jyestikaasana.
தமிழில் – ஜெயிஷ்டிகாசனம்.
சமஸ்கிருதம் – Jyestikaasana.
ஆங்கிலம் – Superior Pose.
வேறுபெயர்கள் – ஜெயிஷ்டிகா ஆசனம்.
ஆசனத்தின் நிலை – Prone, Abdomen.
பயிற்சியின் கடின தன்மை – Beginner.
உடல் கோணம் – Restorative.
ஆசனங்கள் செய்வதற்கு எளிதுதான் என்றாலும் எடுத்த எடுப்பிலேயே எல்லா ஆசனங்களையும் எல்லோராலும் உடனடியாக செய்துவிட முடியாது. சில ஆசனங்கள் செய்ய கடினமாகத் தோன்றும். அவைகளை பயிற்சி செய்ய உடல் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. ஏனென்றால்… உடல் துவளும் தன்மையை இன்னும் பெறவில்லை என்பதே காரணம்.
எனவே யோகாசன பயிற்சியை புதிதாக துவங்கும் சாதனையாளர்கள் ஆரம்பக்கட்டத்தில் செய்வதற்கு எளிமையாக இருக்கக்கூடிய ஆசனங்கள் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவைகளை தொடர்ந்து செய்துவர ஒரு வருடங்களுக்குள்ளாக கடினமான ஆசனங்களைக்கூட செய்யும் அளவிற்கு உடல் துவளும் தன்மையை பெற்றுவிடும்.
எனவே ஆரம்பகால பயிற்சியாளர்கள் எளிதாக செய்யக்கூடிய ஆசனங்களை தேர்ந்தெடுத்து பயிற்சி செய்தல் வேண்டும். அப்படியான ஒரு மிக மிக எளிமையான ஆசனத்தை பற்றித்தான் நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதுதான் ”ஜெயிஷ்டிகாசனம்” (Jyestika asana).
Jyestika asana
குப்புற படுத்துக்கொண்டு செய்யப்படும் இந்த ஆசனமானது மிக மிக எளிது. ஆனால் பலனோ மிக மிக பெரியது.
சமஸ்கிருத வார்த்தையான “ஜ்யேஷ்டா” என்னும் பதத்திலிருந்து வந்ததே “ஜெயிஷ்டிகாசனம்” என்னும் பெயர். ஜ்யேஷ்டா என்றால் “உயர்ந்தவர்” அல்லது “மேன்மையானவர்” என்று பொருள்.
உடலை வருத்தி பயிற்சி செய்ய முடியாதவர்கள், கடினமான பயிற்சி செய்ய உடல் ஒத்துழைப்பு கொடுக்காமல் கஷ்டப்படுபவர்கள் மற்றும் கடினமான பயிற்சி செய்ய முடியாத அளவுக்கு உடல் பருமனானவர்களுக்கு எளிதாக பயிற்சி செய்வதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள ஆசனம்தான் “ஜெயிஷ்டிகாசனம்”.
அதாவது,… தொந்தியுடன் கூடிய பருமனான உடலைக் கொண்டவர்களால் எந்த பயிற்சியையும் செய்ய முடியாது. அவ்வாறான உடல் அமைப்பைக் கொண்டவர்கள் ”ஜெயிஷ்டிகாசனம்” (Jyestika asana) செய்வதின் மூலம் அதிகப்படியான தொப்பையைக் குறைத்து சீரான உடலமைப்பைப் பெறமுடியும்.
இனி ஜெயிஷ்டிகாசனம் (Jyestika asana) பயிற்சி செய்வது எப்படி என்பதனைப் பார்ப்போம்..
Practice of Jyestika asana
ஜெயிஷ்டிகாசனம் – செய்முறை
ஒரு கெட்டியான ஜமுக்காளத்தை நான்காக மடித்து சமமான தளத்தில் விரித்துக்கொள்ளுங்கள்.
அதன்பின் ஜமுக்காள விரிப்பில் நெற்றி தரையில் தொடும்படி குப்புற படுக்கவும். இரண்டு கால்களையும் சிறிது அகட்டி வைத்துக் கொள்ளலாம். குதிகால்கள் மேல் நோக்கியும் மேல் பாதங்கள் தரையில் படிந்தபடியும் இருக்கட்டும்.
இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்று பிணைத்து தலையின் பின்பகுதியில் வைக்கவும். கையின் மூட்டுப் பகுதி விரிப்பில் படும்படி இருக்கவும். மூச்சை இயல்பாக விடவும்.
இந்த நிலையில் சில நிமிடங்கள் இருக்கவும். பின் மெதுவாக எழுந்து உட்காரவும். அவ்வளவுதான்.
சிறிது ஓய்வுக்கு பின் மீண்டும் இப்பயிற்சியை செய்யவும். இரண்டு மூன்று தடவைகள் இப்பயிற்சியை மீண்டும் மீண்டும் செய்துவர நல்ல பலன்களைப் பெறலாம்.
Benefits of Training
பயிற்சியின் பலன்கள்
இது பார்ப்பதற்கும், பயிற்சி செய்வதற்கும் எளிதான ஆசனமாக இருந்தாலும் உடல் பருமனானவர்களுக்கு இதன் பலன்களோ அற்புதமானது.
கடினமான ஆசனங்களை பயிற்சி செய்ய முடியாதவர்கள் எளிதான ஆசனங்களுடன் இந்த பயிற்சியையும்  தொடர்ந்து செய்வதினால் முக்கியமாக வயிற்றிலுள்ள கொழுப்புகள் கரைந்து தொந்தி குறையும். வயிற்றுப்பகுதி தட்டையாகும். முதுகு வலியை குணப்படுத்தும். கழுத்து இறுக்கமும் நிவர்த்தியாகும்.
பெண்களுக்கு “கருப்பப்பை வாய் ஸ்பான்டைலிடிஸ்” பிரச்சனைகள் மற்றும் “அன்கிலோசிங் ஸ்பான்டைலிடிஸ்” போன்ற முதுகெலும்பு பிரச்சனைகளுக்கு நல்லதொரு நிவாரணத்தை கொடுக்கிறது.
இது எல்லாவற்றையும் விட மன அழுத்தத்தை போக்கும் அற்புதமான ஆசனம்.
Important note
முக்கிய குறிப்பு
இந்த பயிற்சியில் நெற்றி தரையில் அழுத்துவதால் அல்லது உராய்வதினால் சிலருக்கு அது அசௌகரியமாக இருக்கலாம். அப்படியானவர்கள் நெற்றியின் கீழ் நான்காக மடிக்கப்பட்ட ஒரு மிருதுவான துணியை வைத்துக்கொள்ளலாம்.
இது மிக எளிதான ஆசனம்தான் என்றாலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த ஆசனம் ஏற்றதல்ல. எனவே கர்ப்பமான பெண்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.
The post Jyestikaasana – Superior Pose appeared first on Personality Fitting.
Titli Asana – Butterfly Pose
Titli Asana – Butterfly Pose
தித்லி ஆசனம் – பத்ராசனம்
Titli asana – Butterfly Pose. இன்று யோகாசனப் பயிற்சியானது உலக மக்களிடையே தனிக்கவனம் பெற்று வருகிறது. பல இளம் வயதினர் அழகை மேம்படுத்தவும் ஆரோக்கியத்தை பேணுவதற்காகவும் யோக பயிற்சியை நாடுகின்றனர்.
யோகாசனப் பயிற்சியானது அழகையும், ஆரோக்கியத்தையும் மட்டுமல்ல. உடலிலுள்ள நாடி, நரம்புகளையெல்லாம் சுத்தப்படுத்தும் வேலையையும் செய்வதால் மன அமைதியையும், நல்ல சிந்தனையையும் தரவல்லது.
மன அமைதியை தரக்கூடிய அதே  வேளையில் ஆரோக்கியத்தையும் தரக்கூடிய ”தித்லி” ஆசனம் என்னும் பத்ராசனத்தைப்பற்றியும் (Titli Asana – Butterfly Pose)  அதை பயிற்சி செய்யும் முறையை பற்றியும் பார்ப்போம்.
Titli asana – Butterfly Pose Basic information
தித்லி ஆசனம் – அடிப்படை தகவல்கள்
பெயர் – Titli Asana.
தமிழில் -தித்லி ஆசனம், பத்ராசனம்.
சமஸ்கிருதம் – Titli Asana – Bhadrasana.
ஆங்கிலம் – Butterfly Pose.
வேறுபெயர்கள்
Cobbler Pose
Bhadrasana
ஆசனத்தின் நிலை – Meditation Pose, Seated Pose.
பயிற்சியின் கடின தன்மை – Advanced.
உடல் கோணம் – Meditative, Stretch.
Practice of Titli Asana
தித்லி ஆசனம் – செய்முறை
“Titli” என்றால் “வண்ணத்துப்பூச்சி” என்று பொருள். வண்ணத்துப்பூச்சி என்றால் சாதாரண வண்ணத்துப்பூச்சி அல்ல “வண்ணமயமான வண்ணத்துப்பூச்சி” என்று பொருள்.
இந்த ஆசனம் பார்ப்பதற்கு வண்ணத்துப்பூச்சியைப்போல் இருப்பதால் “வண்ணத்துப்பூச்சி ஆசனம்” (Titli Asana) என அழைக்கப்படுகிறது.
சரி, தித்லி ஆசனம் எப்படி பயிற்சி செய்வது என்பதனைப் பார்ப்போம்…
ஒரு கெட்டியான விரிப்பின் மீது இரண்டு கால்களையும் நீட்டியபடி உட்காரவும். அதன்பின் இரு உள்ளங்கால்களையும் ஒன்றாக சேர்த்து கும்பிட்டது போன்ற நிலையில் வைத்து இரண்டு முழங்கால்களையும் மடித்து உங்கள் இடுப்புக்கு அருகில் கொண்டு வாருங்கள். குதிகால்கள் பிறப்புறுப்பை தொட்ட நிலையில் இருக்கவும்.
இரண்டு கை விரல்களையும் ஒன்றாக கோர்த்து இரண்டு பாதங்களையும் ஒன்றாக இணைத்து பிடித்துக்கொள்ளவும். இந்த நிலையில் முழங்கால்கள் தரையில் படிந்தபடி இருக்கவேண்டும். இந்த நிலையில் உங்கள் முதுகு கூன் விழாமல் நேராக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆனால், நீங்கள் பயிற்சி செய்யும்போது பார்த்தீர்கள் என்றால்… முழங்கால்கள் தரையில் படியாமல் வண்ணத்துப்பூச்சியின் இறக்கைபோல சிறிது உயர்ந்து இருப்பதை பார்க்கலாம். அதற்காக கவலைப்பட வேண்டாம்.
வண்ணத்துப்பூச்சி இறக்கைகளை மேலும் கீழும் மெதுவாக அசைக்கும் அல்லவா?!அதுபோல மெதுவாக இரு தொடைப்பகுதிகளை மேலும் கீழுமாக 10 முதல் 15 தடவை அசைத்து அசைத்து கொஞ்சம் கொஞ்சமாக தரையில் பதிக்க முயற்சி செய்துவர சில மாத பயிற்சிக்குப்பின் கால்கள் தரையில் படிய ஆரம்பிக்கும்.
கால்களை மேலும் கீழும் அசைக்கும் பயிற்சியின்போது பட்டாம்பூச்சிகள் அதன் இறக்கைகளை அசைப்பது போன்ற ஒரு தோற்றத்தை தருவதால் இந்த ஆசனத்தை “வண்ணத்துபூச்சி இருக்கை” (Butterfly Pose) எனவும் பெயரிட்டு அழைக்கின்றனர்.
இதற்கு “செருப்பு தைப்பவரின் ஆசனம்” என்று மற்றொரு பெயரும் உள்ளது!.
செருப்பு தைப்பவர்களை பார்த்திருக்கிறீர்கள் அல்லவா?.. அவர்கள் செருப்பு தைக்கும்போது இந்த ஆசனத்தில்தான் அமர்ந்திருப்பார்கள்..
செருப்பு தைப்பவரை ஆங்கிலத்தில் “Cobbler” என்று குறிப்பிடுகின்றனர். எனவேதான் இந்த ஆசனத்தை “செருப்பு தைப்பவரின் ஆசனம்” என்ற அர்த்தத்தில் ஆங்கிலத்தில் “Cobbler Pose” என குறிப்பிடுகின்றனர்.
இதனை “பத்ராசனம்” எனவும் குறிப்பிடுகின்றனர்… “பத்ரா” என்றால் “அதிர்ஷ்டம்” அல்லது “மங்களகரமானது” என்று பொருள். பத்ராசனம் என்றால் “மங்களகரமான இருக்கை” என்று பொருள்.
சரி,… இனி பயிற்சியை தொடர்ந்து பார்ப்போம்…
பயிற்சியின் போது மூச்சை மெதுவாக நேர்த்தியாக ஒரே சீராக சுவாசிக்கவும். மனதையும் அமைதியாக வைத்திருங்கள். தோள்களையும் தளர்வாக வைத்திருங்கள்.
இந்த ஆசனத்தில் 2 நிமிடங்கள் இருக்கவும்.
இந்த பயிற்சியை  திரும்ப திரும்ப 2 முதல் 5 தடவை செய்து வரவும்.
Benefits of Training
பயிற்சியின் பலன்கள்
இந்த பத்ராசனம் (Bhadrasana) என்னும் “தித்லி ஆசனம்” (Titli Asana) பயிற்சியை தொடர்ந்து செய்வதால் என்ன பலன்களெல்லாம் கிடைக்கும் என கேட்கிறீர்களா?..
உங்கள் எதிர்பார்ப்புக்கும் அதிகமாகவே இதில் பலன்கள் கிடைக்கின்றன.
”சங்கடம் போக்க சம்மணம் இடுங்கள்” என்று ஒரு பழமொழி உண்டு.. உண்மைதான்… தித்லி ஆசனம் பயிற்சியால் சங்கடங்கள் அகலும். முக்கியமாக மனதிற்கு அமைதியை கொடுத்து மகிழ்ச்சியைப் பெருக்குகின்றன.
இடுப்பு மற்றும் கணுக்கால்களின் நெகிழ்வு தன்மையை மேம்படுத்துகின்றன. கால் தசைகள் மற்றும் முதுகு பகுதிகளை வலுப்படுத்துகிறது.
குதிகால், முழங்கால், தொடை பகுதிகள் நன்கு பலம் பெறும். கால் நரம்புகள் புத்துணர்வு பெறும். பலபேர் முழங்கால் மூட்டுவலியால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு இது சிறந்த ஆசனம் எனலாம்.
இந்த ஆசனத்தில் உடலை நேராக நிமிர்த்தி மூச்சை இழுத்து ஒரே சீராக நேர்த்தியாக விடுவதால் நுரையீரல் வலுபெறுகின்றன. முதுகெலும்புகள் பலம் பெறுகின்றன. வயிற்றின் உள்ளுறுப்புகள் நன்கு வேலை செய்ய தூண்டுகின்றன.
ஆண், பெண்களின் மலட்டுத்தனம் நீங்கும்.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிகளை நிவர்த்தி செய்கிறது. வயிற்று வலிகளையும் தணிக்கிறது. அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்துகிறது. மேலும் பெண்களின் கர்ப்பப்பையின் ஆரோக்கியத்தையும், பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தையும் மேம்பட செய்கிறது. இயற்கையாக பிரசவம் நடப்பதற்கு வழியையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது.
ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிகளை இது மசாஜ் செய்வதால் அவற்றின் ஆரோக்கியம் மேம்பட்டு செயல்பாடுகள் அதிகரித்து விந்தணுக்களை பெருக்குகிறது. இந்த ஆசனம் செய்யும்போது இதனுடன் “தனுராசனம்” (Dhanurasana) என்னும் ஆசனத்தையும் செய்துகொண்டுவர ஆண்மை பன்மடங்கு அதிகரிக்கும்.
Important note
முக்கிய குறிப்பு
மூட்டுவலி, முழங்கால் மூட்டுவலிகளை வராமல் தடுக்கும் திறன் இதற்கு உண்டு என்பது உண்மைதான் என்றாலும், கணுக்கால்கள், முழங்கால்கள், இடுப்பு ஆகியவைகளில் வலிகளோ, வீக்கங்களோ, காயங்களோ, தசைபிடிப்புகளோ இருக்கும் சமயங்களில் இந்த ஆசனத்தை செய்தல்கூடாது.
இந்த ஆசனம் பெண்களுக்கு இயற்கையாக பிரசவம் நடப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பது உண்மைதான் என்றாலும் கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாதங்களுக்கு இந்த ஆசனத்தை செய்யவே கூடாது. அது கரு சிதைவுக்கு வழிவகுத்துவிடும். கரு தரித்து நான்கைந்து மாதங்களுக்கு பின் இந்த பயிற்சியை செய்யலாம் என்றாலும் வயிறு, இடுப்பு, தொடைகள் மற்றும் கால்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுத்தல் கூடாது. தொடர்ந்தாற்போல அதிக நேரம் உடலை வருத்தி இதனை பயிற்சி செய்தலும் கூடாது. அது ஆபத்தில் முடியலாம்.
கர்ப்ப காலத்தில் அடிக்கடி தலைசுற்று, மயக்கம் உட்பட பல அசௌகரியங்களை சந்திக்கும் பெண்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கலாம்.
உங்களுக்கு சிறுநீரகத்தில் பிரச்னை உள்ளதா?… அப்படி என்றால் இந்த ஆசனம் செய்வதை தவிருங்கள்.
மூட்டுவலி அழற்சி, முடக்குவாதம் உள்ளதா?… அப்படி என்றால் இந்த ஆசனம் செய்வதை தவிருங்கள்.
நீங்கள் சமீபத்தில்தான் முழங்கால், இடுப்பு அல்லது முதுகெலும்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டீர்களா?… அப்படி என்றால் இந்த ஆசனம் உங்களுக்கானது அல்ல.
அதிகமான உடல்வலி அல்லது காயங்களால் உங்கள் காயம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறதா?!.. அப்படி என்றால் அது சரியாகும்வரை இந்த பயிற்சியை கொஞ்சம் தள்ளிப் போடலாமே?…
அதுபோல இதய பிரச்சனை உள்ளவர்களும் தொடர்ந்தாற்போல நெடுநேரம் இந்த ஆசனத்தை செய்தல் கூடாது.
The post Titli Asana – Butterfly Pose appeared first on Personality Fitting.
Yoga Mudra Asana
Yoga Mudra Asana
யோக முத்ரா ஆசனம்
Yoga Mudra Asana. “யோகாசனம்” மற்றும் “யோகா” என்பது இந்தியாவில் உருவான ஒரு அற்புதமான கலை. நம் முன்னோர்களாகிய சான்றோர் மற்றும் ஆன்றோர்களால் உருவாக்கப்பட்ட உடல் மற்றும் மனவளக்கலை பயிற்சியாகும்.
இன்றைய தினம் “யோகா” (Yoga) என்று சொல்லப்படும் இந்த கலையானது இந்தியாவில் மட்டுமல்ல உலகின் பட்டிதொட்டிகளுக்கெல்லாம் வேகமாக பரவி வருகிறது. அதற்கு காரணம் இந்த பயிற்சியானது பிற உடற்பயிற்சிகளைப்போல உடலை கரடுமுரடாக்குவதில்லை. அதற்குப்பதிலாக உடலை மென்மையாக்குகின்றன. இளமையை தக்கவைத்துக் கொள்கின்றன. இதனாலேயே வெளிநாட்டினர் அதன் மேன்மை உணர்ந்து யோகாவை விரும்பி கற்கின்றனர்.
தொப்பைக் கணபதி போன்று உடல் கொண்டவர்களைக்கூட அவன் தம்பி பழனி ஆண்டியைப்போல் மாற்றும் திறன் வாய்ந்த ஆசனமும் உள்ளது என்றால் உங்களுக்கு ஆச்சரியமாக உள்ளது அல்லவா ?
ஆனால், அது உண்மைதான்.. யோகாசன வரிசையில் ” யோக முத்ரா ஆசனம் ” (Yoga mudra Asana) என்று ஒரு பயிற்சி உள்ளது. எவ்வளவு பெரிய தொப்பை வயிற்றையும் கரைத்து விடும் திறன் கொண்டது.
அதுமட்டுமல்ல முதுகுவலி, தண்டுவடத்திலுள்ள பிரச்சனைகள், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் மற்றும் சிறுநீரக கோளாறுகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் திறன் இதற்கு உண்டு. சரி இப்போது இத்துணை சிறப்பு பெற்ற “யோக முத்ரா” ஆசனம் பயிற்சி செய்யும் முறையைப் பற்றி பார்ப்போம்.
Yoga mudra Asana – Basic Information
யோக முத்ரா ஆசனம் – அடிப்படைத் தகவல்கள்
பெயர் – Yoga mudra Asana.
தமிழில் – யோக முத்ரா ஆசனம்.
சமஸ்கிருதம் – Yoga mudra Asana.
ஆங்கிலம் – Psychic Union Pose.
வேறுபெயர்கள் – Yoga mudra.
ஆசனத்தின் நிலை – Sitting, Binding.
பயிற்சியின் கடின தன்மை – Advanced.
உடல் கோணம் – Forward-Bend, Stretch.
Practice of Yoga mudra Asana
யோக முத்ரா ஆசனம் – செய்முறை
முதலில் விரிப்பின் மேல் பத்மாசனத்தில் அமர்வது போல் கால்களை மடக்கி நன்கு நிமிர்ந்து உட்காரவும் .
பின் இருகைகளையும் முதுகுக்கு பின்னால் கொண்டு சென்று மடித்து இடது கையால் வலது காலின் பெருவிரலையும், வலது கையால்  இடது காலின் பெருவிரலையும் பிடித்துக்கொள்ளவும்.
இது சிரமமாக தோன்றினால் இரு கைகளையும் பின்னால் ஒன்றோடு ஒன்று பிடித்துக்கொள்ளவும்.
பின் மூச்சை மெதுவாக வெளியே விட்டவாறு மூக்கு அல்லது வாய்ப்பகுதி தரையில் படும்படி நிதானமாக குனியவும். அதன் பின் மூச்சை இயல்பாக விடலாம்.
இந்நிலையில் 30 வினாடிகள் அப்படியே இருக்கவும். அதன்பின் மூச்சை மெதுவாக உள்ளே இழுத்தபடி எழுந்து பழைய நிலைக்கு வரவும். 20 வினாடி கழித்து மீண்டும் மூச்சை மெதுவாக வெளியே விட்டபடி முன்போல் குனியவும். இவ்வாறு இப்பயிற்சியை 3 முதல் 5 தடவை செய்யவும்.
அதன்பிறகு சிறிது ஓய்வுக்குப்பின் வேறு வகையான ஆசனங்கள் செய்ய வேண்டுமெனில் செய்யலாம். அனைத்து ஆசனங்களையும் செய்த பின் கடைசி ஆசனமாக ”சவாசனம்” கண்டிப்பாக செய்ய வேண்டுமென்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
Benefits of Training
பயிற்சியின் பலன்கள்
இந்த ஆசனமானது எவ்வளவு பெரிய தொப்பை வயிற்றையும் கரைத்து விடும் திறன் கொண்டது.
தோள்பட்டை, முதுகெலும்பு தண்டுகளை வலுப்படுத்துகிறது. கைகள், கழுத்து, மார்பு, இடுப்பு, முழங்கால்கள் ஆகியவைகளை பலப்படுத்துகிறது.
மேலும் முதுகுவலி, தண்டுவடத்திலுள்ள பிரச்சினைகள், வயிறு சம்பந்தப்பட்ட அஜீரண கோளாறுகள் மற்றும் சிறுநீரக பிரச்சனை அனைத்தையும் ஓட ஓட விரட்டும் திறன் இப்பயிற்சிக்கு உண்டு. மேலும் மலச்சிக்கலும் நீங்கும். நீரழிவு நோயையும் கட்டுப்படுத்தும்.
முதுகு தண்டு நன்கு வளைந்து கொடுப்பதால் இளமை மேலிடும். முகப்பொலிவும், வசீகர தோற்றமும் உண்டாகும். நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
மன அழுத்தத்தைப் போக்கும் திறனும் இதற்கு உண்டு. யோக ஆசனங்களில் இது தனி முத்திரை பதிப்பதால் இதற்கு யோக முத்திரை என்று பெயர்.
Important Note
முக்கிய குறிப்புகள்
கழுத்து, தோள்கள், முதுகு பிரச்சனைகள், இடுப்பு, முழங்கால், கணுக்கால் முதலியவைகளில் காயங்களோ அல்லது வலிகளோ இருக்கும் பட்சத்தில் இந்த ஆசனம் செய்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
சமீபத்தில் உள் உறுப்புகளில் அறுவை சிகிச்சை செய்திருந்தால் இந்த ஆசனம் செய்வதை தவிர்க்கவேண்டும்.
இதயத்தில் பிரச்சனை, இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.
பெண்கள் இந்த ஆசனத்தை மாதவிடாய் காலங்கள், கர்ப்பமாக இருக்கும் காலங்கள், பிரசவத்திற்கு பிந்தைய சில மாதங்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்தல் வேண்டும்.
The post Yoga Mudra Asana appeared first on Personality Fitting.
Salaphasana – Locust Pose
Salaphasana – Locust Pose
சலபாசனம்
Salaphasana – Locust Pose. நோயணுகாமல் உடலைக் காப்பதில் யோகாசன பயிற்சிக்கு பெரும் பங்கு உண்டு. அவ்வாறான பயிற்சிகளில் உடலின் வெளி உறுப்புகளை மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளையும் இதமாக மசாஜ் செய்து உடலை நோயணுகாமல் ஆரோக்கியமாக வைத்துக்கொள்வதில் யோக ஆசனங்களே சிறப்பானவை எனலாம்.
நாம் இன்றைய பதிவில் “வெட்டுக்கிளி” ஆசனத்தைப் பற்றி பார்க்க இருக்கிறோம்.
இன்னாது வெட்டுக்கிளி ஆசனமா?!
ஆம்… “வெட்டுக்கிளி” ஆசனமேதான்… இன்னும் உங்களுக்கு புரியும் விதத்தில் சொல்லவேண்டுமென்றால் “சலபாசனம்” என்று சொல்லலாம்.
“சலபம்” என்றால் வெட்டுக்கிளியைக் குறிக்கும். இவ்வாசனத்தில் அமரும்போது உடலானது வெட்டுக்கிளியின் தோற்றத்தை பெறுவதால் இதற்கு “சலபாசனம்” (Salaphasana) என பெயர் ஏற்பட்டது.
Salaphasana – Locust Pose – Basic information
சலபாசனம் – அடிப்படைத் தகவல்கள்
பெயர் – Salaphasana.
தமிழில் – சலபாசனம்.
சமஸ்கிருதம் – Salaphasana.
ஆங்கிலம் – Locust Pose.
வேறுபெயர்கள் –
ஆசனத்தின் நிலை – Prone, Abdomen.
பயிற்சியின் கடின தன்மை – Beginner.
உடல் கோணம் – Strength.
பொதுவாகவே யோகாசனப் பயிற்சியானது செல்களிலும், நரம்பு மண்டலங்களிலும் உயிர் மின்னாற்றலை தூண்டி முதுமையிலும் இளைஞர்களுக்கே உரித்தான உற்சாக மனநிலையை நல்குவது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.
மனதிற்கு உற்சாகத்தை தருவதோடு இளமையையும் தரும் பலவகையான யோகாசனங்களில் நாம் இப்போது பார்க்கப்போகும் சலபசனமும் ஒன்று.
”சலபாசனம்” (Salaphasana) என்னும் இவ்வாசனமானது மூச்சு சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவைக்கும் திறன் படைத்தது.
இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதை காண்போம்..
Practice of Salaphasana
சலபாசனம் – செய்முறை
முதலில் ஒரு கெட்டியான தரைவிரிப்பின்மீது குப்புற படுக்கவும். கைகள் இரண்டும் உடலினை ஒட்டியபடி உள்ளங்கை இரு தொடைகளுக்கும் அடியில் தரையை அழுத்தியபடி வைத்துக்கொள்ளவும்.
இனி மெதுவாக மூச்சை உள்ளிழுத்துக்கொண்டே இருகால்களையும் மடங்காமல் நேராக நீட்டிவைத்தபடியே மெதுவாக மேலே உயர்த்தவும். முகவாய், மார்பு, வயிறு, இடுப்பு வரை உள்ள பகுதி தரையில் நன்கு அழுத்தியபடி இருக்கவும். கால்கள் மட்டும் சாய்வான நிலையில் மேலே தூக்கியபடி இருக்க வேண்டும்.
மூச்சை அடக்கியபடியே சில வினாடிகள் இதே நிலையில் இருந்த பின் மூச்சை மெதுவாக வெளியே விட்டபடி கால்களை மெதுவாக கீழே இறக்கி பழைய நிலைக்கு வரவும். மூச்சை அடக்கியபடி இருக்கவேண்டும் என்பதற்காக இதயமும், நுரையீரலும் ஆக்சிஜனுக்காக திக்குமுக்காடும் அளவுக்கு மூச்சை பல வினாடிகளுக்கு அடக்கிவிடாதீர்கள்… அப்புறம் உடல் அடக்கத்திற்கு ஊரார்கள் எல்லோரும் ஒன்றுகூடி ஏற்பாடு செய்ய வேண்டி வந்துவிடும். எனவே உடல் பரிதவிக்காத அளவுக்கு சில வினாடிகள் மட்டும் மூச்சை அடக்கினால் போதுமானது.
சில வினாடி ஓய்வுக்குப் பின் மீண்டும் முயற்சி செய்யவும். இப்பயிற்சியை 3 அல்லது 4 தடவை திரும்ப திரும்ப செய்யவும்.
எந்த வகையான யோகாசனப்பயிற்சி செய்தாலும் அன்றைய தின யோகாசனப் பயிற்சியை முடிக்கும் போது கடைசி ஆசனமாக ”சவாசனம்” கண்டிப்பாக செய்யவேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். சவாசனம் செய்யும் முறை பற்றி இத்தளத்தில் பிறிதொரு இடத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது பயின்று பயன் பெறுக.
Benefits of Trainin
பயிற்சியின் பலன்கள்
தினந்தோறும் இப்பயிற்சியை அதிகாலையில் பயின்று வருவது மிகுந்த நன்மையை உண்டு பண்ணும்.
ஆஸ்துமா மற்றும் நீரழிவு நோயாளிகளுக்கான அற்புதமான ஆசனம் இது.
இப்பயிற்சியானது நுரையீரலுக்கு மிகுந்த வலிமையை தருகிறது. இது மூச்சு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் குறிப்பாக ஆஸ்துமா முதலிய நோய்களை துரத்துவதற்கு சிறந்த ஆசனம்.
நுரையீரல், இருதயம் முதலிய உறுப்புகளுக்கு வலிமை தருவதோடு, கல்லீரல் மற்றும் மண்ணீரலையும் பலப்படுத்துகிறது. கணையத்தை பலப்படுத்துவதில் இவ்வாசனம் மிக சிறப்பாக செயல்படுகிறது.
குடல்புண், இரைப்பை புண், உதர விதான இறக்கம், சிறுநீர் கடுப்பு, முதுகு வலி முதலியவற்றை குணப்படுத்துகிறது.
Important Note
முக்கிய குறிப்புகள்
இதய நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் உள்ளவர்கள் இப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம். கர்ப்பிணி பெண்களும் இப்பயிற்சியை கண்டிப்பாக செய்தல் கூடாது.
The post Salaphasana – Locust Pose appeared first on Personality Fitting.
Ardha Matsyendrasana
Ardha Matsyendrasana
அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
உடலுக்கும் மனதிற்கும் ஒருசேர சக்தியூட்டுவது யோகாசனப் பயிற்சி எனலாம். பிற உடற்பயிற்சிகள் உடலுக்கு மட்டுமே பயிற்சியளிப்பன. ஆனால் யோகாசனப் பயிற்சியோ உடல், மனம் இரண்டையும் ஒருசேர இயக்குவதால் (Ardha Matsyendrasana) இப்பயிற்சியின் மூலம் மன வலிமையையும் பெற முடியும் என்பது திண்ணம்.
யோகாசனப் பயிற்சியானது வெளி உறுப்புகளைவிட உள் உறுப்புகளிலேயே தன் ஆளுமையை அதிகம் செலுத்துவதால் குன்றாத இளமையையும் மங்காத ஆரோக்கியத்தையும் தருகிறது.
யோகாசனப் பயிற்சியை ஒருவர் தொடர்ந்து பயின்றுவர நீடித்த ஆயுளையும், ஆரோகியத்தையும் ஒருசேர பெறுவர் என்பது திண்ணம். அவ்வாறான அற்புத பலனை தரக்கூடிய ஒரு ஆசனத்தை பற்றி இப்போது இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.
”மத்ஸ்யேந்திரர்” (Matsyendranath) என்பவர் ஒரு தலைசிறந்த யோகி. அவர் பலவித ஆசனங்களை கற்று தேர்ந்தவர். அவர் ஒரு குறிப்பிட்ட ஆசனத்தில் அதிக அளவு நன்மை இருப்பதாக உணர்ந்தார். அதனால் அந்த யோகாசனத்தின் சிறப்புக்கருதி தன் மாணவர்களுக்கு அதனை போதித்தார். தொடர்ந்து அதனை பயிற்சி செய்துவர மாணவர்களை பணித்தார்.
எனவே, பின்னாளில் அவருடைய பெயராலேயே அந்த ஆசனமானது “மத்ஸ்யேந்திராசனம்” (Matsyendrasana) என அழைக்கப்பட்டுவருகிறது.
மத்ஸ்யேந்திராசனத்தில் உடல் இதற்கு மேலும் திருக்க முடியாது என்ற அளவிற்கு அதிக அளவில் திருகிய நிலையில் காணப்படும். அதனாலேயே அது “பூரண மத்ஸ்யேந்திராசனம்” என அழைக்கப்படுகிறது. ஆனால் இந்த பதிவில் “பூரண மத்ஸ்யேந்திராசனம்” (Poorna Matsyendrasana) பற்றி பார்க்கப்போவதில்லை. அதற்கு பதிலாக பாதி அளவு திருகிய நிலையில் உட்காரும் “அர்த்த மத்ஸ்யேந்திராசனம்”  (Ardha Matsyendrasana) பற்றியே பார்க்கப் போகிறோம்.
Ardha Matsyendrasana – Basic information
அர்த்த மத்ஸ்யேந்திராசனம் – அடிப்படைத் தகவல்கள்
பெயர் – Ardha Matsyendrasana.
தமிழில் – அர்த்த மத்ஸ்யேந்திராசனம்.
சமஸ்கிருதம் – Ardha Matsyendrasana.
ஆங்கிலம் – Half Lord of the Fishes Pose.
வேறுபெயர்கள்
Bound Half Lord of the Fishes Pose
Baddha Ardha Matsyendrasana
ஆசனத்தின் நிலை – Sitting, Binding.
பயிற்சியின் கடின தன்மை – Intermediate.
உடல் கோணம் – Twist, Stretch.
“அர்த்த” என்றால் “பாதி” என்று பொருள். “அர்த்த மத்ஸ்யேந்திராசனம்” என்றால் பாதி அளவு மட்டுமே திருக்கப்பட்ட நிலையில் உட்காரும் மத்ஸ்யேந்திராசனம் என்று பொருள்.
பாதி மத்ஸ்யேந்திராசனம் என்றாலும் பல நோய்களையும் பாழாக்கும் திறன் படைத்தது.
இவ்வாசனமானது இடுப்புவலி, முதுகுவலி மற்றும் நரம்புத் தளர்ச்சி போன்ற பிரச்சனைகளை தீர்ப்பதில் சிறப்பு பெற்றது. இந்த ஆசனத்தை முறையாக பயிற்சி செய்வது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.
Practice of Ardha Matsyendrasana
அர்த்த மத்ஸ்யேந்திராசனம் – செய்முறை
முதலில் விரிப்பில் நேராக உட்கார்ந்து இரு கால்களையும் முன்னோக்கி நேராக நீட்டிக்கொள்ளவும். பின் இடதுகாலை வலது காலின் தொடைப்பகுதிக்கு கீழ்வரும்படி மடக்கிக்கொள்ளவும். அதன் பின் வலது காலை இடதுகாலின் வெளிப்புறத்தில் கொண்டுவந்து முழங்கால் நேராக மேல் நோக்கி இருக்கும்படி மடக்கி ஊன்றவும்.
வலதுகால் பாதத்தை இடதுகையால் பிடித்துக்கொண்டு வலதுகையை பின்புறமாக ஊன்றிக் கொள்ளவும். பின் இடுப்பின் மேல் பாகத்தை வலது பக்கமாய் மெதுவாக திருக்கவும். முதுகு நேராக இருக்கவேண்டியது முக்கியம். மூச்சை இயல்பாக விடவும்.
10 முதல் 30 வினாடிகள் இதே நிலையில் அமர்ந்து இருக்கவும். பின் மெதுவாக இயல்பு நிலைக்கு வரவும். பின் சில வினாடி ஓய்வுக்குப்பின் கால்களை மாற்றி மறுபக்கம் இதுபோல் பயிற்சி செய்யவும்.
இதேபோல் கால்களை மாற்றி மாற்றி திரும்ப திரும்ப இப்பயிற்சியை இரண்டு மூன்று தடவை செய்யவும்.
Benefits of Training
பயிற்சியின் பலன்கள்
கழுத்து மற்றும் தோள்களுக்கு சிறந்ததொரு பயிற்சியை கொடுக்கிறது. மேலும் முதுகு, இடுப்பு, கால்களை வலுப்படுத்துகிறது. முதுகெலும்புகள் நன்கு நெகிழ்வு தன்மை பெறுவதோடு நல்ல பலத்தை பெறுகின்றன.
வயிற்று தசைகளை வலு பெற செய்வதோடு அஜீரணத்தை நீக்கி ஜீரண சக்தியையும் அதிகப்படுத்துகின்றன.
நரம்பு தளர்ச்சியை குணமாக்குகின்றன.
இதயம், கல்லீரல், நுரையீரல், மண்ணீரல், சிறுநீரகம் முதலியன நன்கு பலம் பெறுகின்றன.
தொந்தி குறையும். குடல்கள் நன்கு இரத்த ஓட்டம் பெறுவதோடு ஜீரண மண்டலமும் நன்கு வலிமை பெறும். மலச்சிக்கல் நீங்கும். நீரழிவு குணமாகும்!
பெண்களுக்கு மாதவிடாய் அசௌகரியங்களை போக்குகின்றன. குறிப்பாக மாதவிடாய் சூழற்சியை ஒழுங்குபடுத்துகிறது. ஹார்மோன்களை சமநிலைப்படுத்துகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக மன அமைதியை கொண்டுவரும் அற்புதமான ஆசனம்.
Important note
முக்கிய குறிப்புகள்
கடுமையான முதுகு அல்லது கழுத்துவலி உள்ளவர்கள் இந்த பயிற்சியை தவிர்க்க வேண்டும். உள்ளுறுப்புகளில் எதாவது வலி இருப்பதாக உணர்ந்தால் பயிற்சியை தவிர்க்கவும்.
மூட்டு வலி உள்ளவர்களும், பலவீனமான மூட்டுகளை கொண்டுள்ள முதியவர்களும் இந்த பயிற்சியை கைவிட்டு வேறு எளிமையான பயிற்சிகளை தேர்ந்தெடுத்து செய்துவரலாம்.
மூலநோய், குடலிறக்கம், வயிற்றுப்புண் உள்ளவர்கள் இப்பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.
கர்பிணிப் பெண்கள் இந்த ஆசனத்தை கண்டிப்பாக கைவிட வேண்டும்.
The post Ardha Matsyendrasana appeared first on Personality Fitting.