"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Sisupalasana.

70 / 100

”சிசு” என்றால் குழந்தை என்று பொருள். ”சிசுபாலாசனம்” (Sisupalasana) என்றால் குழந்தையை தாலாட்டும் முறையில் இருப்பது என்று பொருள்.

இது ஆண் ,பெண், மற்றும் சிறுவர்களுக்கு பயிற்சி செய்ய ஏற்ற ஆசனம். இது பார்ப்பதற்கு மிக எளிதாக பயிற்சி செய்யக்கூடிய ஆசனம் போல் தெரியலாம்.

ஆனால் ஆரம்பத்தில் இதை பயற்சி செய்ய கொஞ்சம் கடினமாக இருந்தாலும் தொடர்ந்து பயிற்சி செய்து வர உடலுக்கு பல நன்மைகளை அள்ளித்தரும் ஆசனம் எனலாம்.

கால்கள், தொடைகள், இடுப்பு, முதுகு, தோள் பட்டை முதலிய உறுப்புகள் வலுப்பெற வேண்டுமெனில் இப்பயிற்சியை தொடர்ந்து பயிற்சி செய்து வர வேண்டியது அவசியம்.

sisupalasana

இனி இதை எவ்வாறு பயிற்சி செய்வது என்பதைப் பார்ப்போம்.

கால்கள் இரண்டையும் நேராக நீட்டவும். நிமிர்ந்து நேராக உட்காரவும். பிறகு வலது காலை மடக்கி வலது கையால் தூக்கவும். பின் இரு கைகளையும் கோர்த்தபடி ஒரு குழந்தையை தாங்கிப்பிடிப்பதுபோல் தாங்கிப் பிடிக்கவும்.

முதலில் கால்களை தூக்குவது மிக கடினமாக இருக்கும். உங்களால் எவ்வளவு தூக்க முடிகிறதோ அவ்வளவு தூக்கினால் போதுமானது. அதன் பின் ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி எடுத்துவர சில வார இடைவெளியில் ஓரளவு சரியாக செய்யும் அளவிற்கு உடல் பழக்கப்பட்டுவிடும்.

அதை விடுத்து ஒரே நாளில் சரியாக செய்துவிட வேண்டும் என்று உடலை அதிகம் துன்புறுத்த வேண்டாம்.

sisupalasanam gl

பின் குழந்தையை தாலாட்டுவது போல் இடம் வலமாக இடுப்பை லேசாக திருப்பித்திருப்பி மெதுவாக காலை அசைத்துக் கொடுக்கவும்.

பின் மெதுவாக காலை இறக்கி நேராக நீட்டவும். பிறகு இடது காலை மடக்கி வலது கையால் தூக்கி இரு கைகளையும் கோர்த்து பிடித்து முன்போல இடம் வலமாக இடுப்பை லேசாக திருப்பி குழந்தையை தாலாட்டுவதை போல அசைக்கவும்.

இவ்வாறு இரு கால்களையும் மாற்றிமாற்றி ஒவ்வொரு காலிற்கும் ஐந்தைந்து தடவை பயிற்சி எடுக்கவும்.

இதே பயிற்சியை காலை நேராக நீட்டுவதற்குப் பதிலாக மேலே உள்ள படத்தில் காட்டியுள்ளபடி காலை மடக்கி வைத்தபடியும் செய்யலாம். அல்லது காலை நீட்டி செய்யும் பயிற்சியையும் , மடக்கி செய்யும் பயிற்சியையும் அடுத்தடுத்து ஒரு சேர பயிற்சி எடுத்து வரலாம்.

கால்கள், உள்ளங்கால்கள், மூட்டு , தொடைகள் மற்றும் இடுப்பு மற்றும் வயிற்று பகுதிகள் நன்கு பலம் பெறும். கைகள், தோள் பட்டை, முதுகு பகுதிகள் நன்கு வலுப்பெறும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!